Showing posts with label சீனப் பூச்சாண்டி. Show all posts
Showing posts with label சீனப் பூச்சாண்டி. Show all posts

Saturday, February 20, 2021

இந்திய சீன எல்லைப் பிரச்சினை::: உடனடியாகத் தீர்வு காண முடிகிற விஷயம் தானா?

சேகர் குப்தா நிறைய அனுபவமுள்ள பத்திரிகையாளர் ஒரு பக்கச் சார்பாகவே பேசிவருபவர் என்றாலும்  கூட சீனா  உடனான எல்லைப்பிரச்சினைகள் குறித்த தனது பார்வையை இந்த 25 நிமிட வீடியோவில் பேசுவதைக் கவனமாகக் கேட்டேன்.


ஒரு முழு அளவிலான யுத்தத்தில் போய் முடிவதை இந்தியா விரும்பவில்லை, சீனாவும் கூட அதற்குத் தயாராக இல்லை என்பது அவர்களுடைய தம்பட்டம், ராணுவ ரீதியான பில்டப்புகள் எல்லாவற்றையும் தாண்டி 1962 இல் இருந்ததுபோல பலவீனமான அரசியல் தலைமை இப்போது இல்லை என்பதால், இந்திய ராணுவம் இந்த முறை சீனர்களை எதிர்கொள்ளத் தயாராகவே இருந்ததால், சர்வதேச அளவில் இந்தியா ஒரு வலுவான கூட்டணியை அமைத்திருக்கிறது என்பதால், சீனர்கள் தங்களுடைய அட்வென்ச்சரிலிருந்து பின்வாங்கவேண்டி வந்தது. இருமுனைப்போரை இந்தியா என்றில்லை, எந்த நாடுமே சமாளிக்க முடியாது என்று சேகர் குப்தா சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அதுஉருவான வும் இந்திய வெறுப்பிலேயே உருவான பாகிஸ்தான் ஏறத்தாழ  client state / சீனாவின் விருப்பத்துக்கேற்ப ஆட்டுவிக்கப்படுகிற பொம்மை அரசுதான் என்றாகிவிட்ட  நிலையில் அவர்களுடன் சமாதானமாகப்போவது சாத்தியமா?  

The Modi government is our most political of all. In the sense that it weighs all policy in electoral terms. If so, it would need hostility with Pakistan to persist. Because Pakistan and pan-Islamic terrorism are the warp and weft in which electoral polarisation at home comes gift-wrapped.That is the fundamental issue the Modi government will need to weigh. Will it let domestic political compulsions limit its strategic options, or have the confidence to change? இப்படி சேகர் குப்தா சொல்வது எந்த வகையில் சரியாக இருக்கும்? 


StratNewsGlobal தளத்தில் நிதின் கோகலே இந்த 12 நிமிட வீடியோவில் சொல்வதையும் கொஞ்சம் கேளுங்களேன்! எழுபது வருடங்களுக்கும் மேலாக, தீர்வு காணப்படாமல் ஒத்திபோடப்பட்டுக் கொண்டே வந்த ஒரு சிக்கல், இப்போது பிராந்தியத்தில் இருநாடுகளுமே வலிமையான சக்திகளாக வளர்ந்து நிற்கையில், யார்  யாருக்கு அடங்கிப்போவது என்பதாக மாறிவிடாமல் பார்த்துக்கொள்வதே முக்கியம் ஆட்டத்தில் எதிர்த் தரப்புடன் சேர்ந்து ஆட்டம்போடுகிற ஒரு சில்லறை உடன் இணக்கமாகப் போவது அல்ல பாகிஸ்தான் தரப்பில் உண்மையாகவே இணக்கமாகப்போகிற ஒரு சூழ்நிலை எழுமேயானால், அப்போது பார்த்துக் கொள்ள வேண்டிய விஷயம்! இப்போது அல்ல.

இந்த ஆட்டத்தில் சீனா, பாகிஸ்தான் மட்டுமே இல்லை. மியான்மர், ஸ்ரீலங்கா போன்ற நாடுகளும் இருக்கின்றன. முத்தண்ணன் அந்தஸ்தைப் பறிகொடுத்துவிட்ட அமெரிக்காவும் இருக்கிறதே!     

மீண்டும் சந்திப்போம்.  

Thursday, February 18, 2021

இந்திய சீன எல்லையில் போர்ப்பதற்றம் குறைகிறதா?

ராகுல் காண்டி மாதிரி முழு  மங்குணியாக இல்லாமல் கொஞ்சம் விவரங்களைத் தெரிந்து கொண்டு பேசலாம் என்று நினைக்கிறேன் என்று முந்தைய பதிவில் சொல்லி இருந்ததன் தொடர்ச்சியாக! இந்தியா சீனா இருநாடுகளும் தங்களுடைய படைகளை 1920 ஏப்ரலில் இருந்த மாதிரியே வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒப்புக்கொண்டதைப் பற்றிய அதிக விவரங்கள் இப்போது வெளிவரத் தொடங்கி இருக்கின்றன. 


இந்த 5 நிமிட வீடியோவில் சில தகவல்கள் இருக்கின்றன. China wanted to humiliate Modi, but was forced to withdraw as military stalemate was going nowhere' என்ற தலைப்பிட்டு The Print தளத்தின் ஜ்யோதி மல்ஹோத்ரா, StratNews Global தளத்தின் தலைமை ஆசிரியர் நிதின் கோகலே மற்றும் ஹிந்து நாளிதழின் சீனா கரெஸ்பாண்டென்ட் அனந்த் கிருஷ்ணன் இருவருடனும் உரையாடுகிற 36 நிமிட காணொளியில்   சீனத்துச் சண்டியர் தனது உதார்களை சுருட்டிக் கொண்டதன் பின்னணியை நிதின் கோகலே அழுத்திச் சொல்கிறார். 


வீடியோ 18 நிமிடம். இதில் இன்னும் விரிவான தகவல்கள் இருக்கின்றன. இப்போது நடந்து கொண்டிருப்பது படைகளை பழைய நிலைக்குக் கொண்டுபோவதான disengagement மட்டுமே,PLA’s gradual withdrawal from Galwan and other locations in eastern Ladakh is just the start of what is likely to be a long-winding complicated process, which from an Indian standpoint must end at complete de-escalation across the Line of Actual Control. De escalation  என்பதற்கும் disengagement என்பதற்கும் வித்தியாசம் இருப்பதைப் புரிந்து கொண்டால், அங்கே எல்லைப் பகுதியில் என்ன நடக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியும். 


அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா,ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளுடைய 
மந்திரிகள் அளவிலான  QUAD பேச்சுவார்த்தை இன்று மாலை நடந்து முடிந்திருக்கிறது. ஜோ பைடன் நிர்வாகம் எந்த அளவுக்கு இந்த முயற்சியை முன்னுக்கு எடுத்துச் செல்லும் என்பதில் இன்னமும் ஒரு தெளிவு இல்லை. அமெரிக்காவை நம்பிப் பயனில்லை என இஸ்ரேல்,சவூதி அரேபியா, பிரான்ஸ் முதலான நாடுகள் ஏற்கெனெவே தன் கையே தனக்குதவி என்று முடிவெடுத்துச் செயல்பட ஆரம்பித்திருப்பதையும் இந்தநேரத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.  
 
மீண்டும் சந்திப்போம்.    

Friday, February 12, 2021

#டொனால்ட்ட்ரம்ப் தகுதிநீக்க விசாரணை! #ராஜ்நாத்சிங் அறிக்கை! #சேகர்குப்தா !

அமெரிக்க டெமாக்ரட்டுகளின் கோமாளித்தனங்களில் மிகவும் உறுத்தலாக இருப்பது டொனால்ட் ட்ரம்ப் பதவி விலகிய பிறகும் கூட கடு, ம் வன்மத்துடன் இரண்டாவது முறையாக தகுதி நீக்கம் செய்கிற தீர்மானம், குற்றச் சாட்டுக்களை வரையறுத்து காங்கிரசில் நிறைவேற்றி செனெட்டுக்கு அனுப்பியிருப்பது 

வீடியோ 6 நிமிடம் 

இங்கே இதை வாசிக்கவரும் நண்பர்களுக்காக தகுதி நீக்கம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்ப.தைச் சுருக்கமாகச் சொல்லியாக வேண்டும்! அமெரிக்க காங்கிரஸ் என்பது நம்மூர் மக்களவை மாதிரி! என்ன என்ன குற்றச்சாட்டுகளின் பேரில் தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதைதீர்மானம்  வரையறுத்து, அதை செனேட் சபைக்கு ((நம்மூர் மாநிலங்களவை மாதிரி) அனுப்புகிற அதிகாரம் மட்டுமே உண்டு. அங்கே impeachment தீர்மானம் மெஜாரிடி உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டதால் மட்டுமே தகுதிநீக்கம் செய்யப்பட்டதாகி விடாது. செனேட் சபை உறுப்பினர்கள் ஜூரர்களாகவும், உச்ச நீதிமன்றத் தலைமைநீதிபதி, விசாரணை நீதிபதியாகவும் இருந்து ஒரு நீதிமன்றமாகவே செயல்பட்டு, வழக்கு விசாரணை நடந்து,  வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டுபங்கு செனேட் உறுப்பினர்கள் ஆதரித்து  வாக்களித்தால் மட்டுமே தகுதி நீக்கம் நிறைவேறும். டெமாக்ரட்டுகளுக்கு இது தெரியாதா? காங்கிரசின் ஸ்பீக்கர் நான்சி பெலோசி இது நிறைவேறாது என்று தெரியும் என வெளிப்படையாகவே சொன்னார் 

ஆனாலும் டொனால்ட் ட்ரம்ப் மீதான பயம், அவர் மறுபடியும் அதிபர் பதவிக்குப் போட்டியிடவே கூடாது என்கிற வன்மத்தில் டெமாக்ரட்டுகள் 16 மணிநேர விசாரணையில் ஒரு முழுமையான சாட்சியம் எதுவும் இல்லாமலேயே முடித்திருக்கிறார்கள் அடுத்து ட்ரம்ப் தரப்பு வாதங்கள், விசாரணை நடக்க வேண்டும்.. நாட்டைப் பிளவுபடுத்தி விட்டார் ட்ரம்ப் என்று கூவிக் கொண்டே டெமாக்ரட்டுகள் அந்த வேலையைத் தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.


2020 ஏப்ரல் மாதத்தில் இருந்தபடியே சீனா, இந்தியா இரு நாடுகளும் படைகளை வைத்திருக்கவேண்டும் என இரு தரப்பும் ஒப்புக்கொண்டு, அதன்படி படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் அறிவித்ததில், வழக்கம் போல ராகுல் காண்டி, விஷயத்தைப் புரிந்து கொள்ளாமலேயே பிரதமர் மோடியைக் கோழை என்று ஏசியிருக்கிறார்.     

 


சேகர் குப்தா நேற்றைக்குப் பேசியது. வீடியோ 26 நிமி. ரஷ்யாவின் இஸ்வேஸ்தியாவோடு Tass செய்தி நிறுவனத்தைப் போட்டுக் குழப்பிக்கொண்டது ஒரு சின்னச் சறுக்கல்.  ஆனாலும் ராஜ்நாத் சிங்கின் அறிக்கையைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகவே சொல்கிறார்.  

இந்த விவகாரத்தில் ராகுல் காண்டி மாதிரி முழு  மங்குணியாக இல்லாமல் கொஞ்சம் விவரங்களைத் தெரிந்து கொண்டு பேசலாம் என்று நினைக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.

Monday, February 1, 2021

#மியான்மர் ஆட்சிக்கவிழ்ப்பு! மாறிவரு!ம் சீனத்தந்திரங்கள்!

இன்று அதிகாலை மியான்மர் ராணுவத்தலைமை (Tatmadaw) தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூச்சி அரசை நீக்கிவிட்டு, ஆட்சியைத் தன்வசமே வைத்துக் கொண்டு இருக்கிறது .ஆங் சான் சூச்சியும் வேறுசிலரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப் பட்ட அரசு  என்றாலும் ராணுவத்தலைமையால் கட்டுப் படுத்தப்படுகிற அரசாகவே ஆங் சான் சூச்சி அரசு இருந்து வருகிற நிலையில் இந்த ஆட்சிக்கவிழ்ப்பு எதற்காக?  இப்போது நிகழக்காரணம் என்ன?  


ஆட்சிக்கவிழ்ப்புடன் ஓராண்டுக்கு நெருக்கடி நிலைமை அறிவிப்பும் சேர்ந்தே வந்திருக்கிறது. அரசு டிவி  சில தொழில்நுட்பக்கோளாறுகளால் ஒளிபரப்ப முடியாது என்று அறிவித்திருப்பது ஒருபக்கம் காமெடி! இன்னொரு பக்கம் மியான்மர் நீண்டகாலமாகவே வெளியுலகுடன் தொடர்புகளே இல்லாமல் தானே தன்னைத்தனிமைப் படுத்திக் கொண்ட  நாடாகவே இருந்தது. (மா சேதுங் காலத்துச் சீனாவும் கூட இப்படித்தான்  வெளியுலகுடன்  தொடர்பு இல்லாமல் இருந்தது)  மியான்மர் ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னால் சீனா இருப்பது உலகறிந்த ரகசியம்.

 

மியான்மரில் நடந்த ஆட்சிக்கவிழ்ப்புக்கு வழக்கம் போல கண்டனங்கள் எழுந்தாலும், அவைகளால் என்ன ஆகிவிடப்போகிறது? 

மியான்மர் விவகாரத்தில் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்களை இங்கே அவினாஷ் பாலிவால் சொல்கிறார்.  இவர் சொல்வது ராணுவத் தலைமைக்குள்ளேயே இரண்டுவிதமான பிரிவுகள் இருப்பதனால் தான் இப்படி என்கிற மாதிரி! 

Military Takeover Of Myanmar: China Suspected To Have Orchestrated Coup To Re-Establish Its Grip On The Country And Its Resources என எல்லாப்புகழும் சீனர்களுக்கே என்கிறார் ஜெய்தீப் ம.ஜூம்தார் 



செலானி வேறு இப்படிப் படுத்துகிறார்!! 

கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம். 

Tuesday, January 5, 2021

2021 இன் விடைதெரியாத கேள்விகள்! உலகம் எதிர்நோக்கும் சவால்கள்!

இந்தியக்குடியரசு தினச் சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டிருந்த பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இந்திய விஜயத்தை ரத்து செய்திருக்கிறார். பிரிட்டனில் வெகுவேகமாகப் பரவிவரும் புதிய வகைக் கொரோனா, நாட்டின் பொருளாதாரத்தை அசைத்துப்பார்த்துக் கொண்டிருக்கிற நேரத்தில்,  இந்திய விஜயம் ரத்துசெய்யப் பட்டிருப்பது ஆச்சரியம் தருகிற செய்தி அல்ல.


ஆனால் உலகம் முழுக்க கொரோனா வைரசைப் பரப்பி லட்சக்கணக்கானவர்களுடைய உயிரைப் பறித்த சீனா, பொருளாதாரச் சீரழிவையும் ஏற்படுத்திவிட்டு, இந்த அவலத்தில் பலவிதமான ஆதாயங்களையும் அடைந்து இருக்கிறது. போதாக்குறைக்கு, ராணுவ மிரட்டல்களோடு இந்தியா, தைவான், ஜப்பான் ஆகிய நாடுகளை சீண்டிப்பார்த்துக் கொண்டும்  இருக்கிறது தட்டிக்கேட்க ஆளில்லேன்னா தம்பி சண்டப்ரசண்டன் என்றொரு திரைப்படப் பாடல் ஒன்றுண்டு. அமெரிக்க நாட்டாமையை அகற்றிவிட்டு, தாங்களே உலகத்தின் நாட்ட நடுநாயகம் என்று அறிவித்துக்கொள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும், அதிபர் ஷி ஜின்பிங்கும் மிகவும் அவசரப்படுவது தெரிகிறதா? 

ஒரேநேரத்தில் பலமுனைகளில் போரிடுவதைத் தவிர்க்க வேண்டுமென்பது யுத்த தந்திரங்களுள் முக்கியமானது. ஆனால் சீனக்  கட்சியும், அதிபர் ஷி ஜின்பிங்கும் அதைப் பற்றிய கவலை ஏதுமில்லாமல் அமெரிக்காவைச் சீண்டுகிறார்கள், ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள்! RCEP ஒப்பந்தத்தின் அங்கமான ஆஸ்திரேலியாவுடன் ஒரு நிழல் யுத்தத்தை நடத்துவதோடு, இந்தியா, தைவான், ஜப்பான் ஆகிய நாடுகள் மீது அப்பட்டமான ராணுவ மிரட்டல்களைத் தொடர்ந்து அரங்கேற்றவும் செய்கிறார்கள். உள்நாட்டில் ஒரு அச்சத்தை ஏற்படுத்துகிற மாதிரி, சீன வங்கிகளை வெறும் அடகுக்கடைகள் என்று உடைத்துப்பேசிய அலிபாபா குழுமத்தின் தலைவர் ஜாக் மா மீது கடும் நடவடிக்கைகளை எடுத்த்தில், இரண்டுமாதமாக மனிதர் எங்கே போனார் என்ன ஆனார் என்பதே தெரியவில்லை. இப்படி எட்டுத்திக்கிலும் மதம்பிடித்த யானைபோல சீன் அதிபர் ஷி ஜின்பிங்கின் செயல்பாடுகள் இருக்கின்றன.

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜோ பைடன் ஒரு இரண்டுங்கெட்டான். சீனா மீதான அவருடைய அபிப்பிராயங்கள் இதுவரை மிகவும் குழப்பமான ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. இனி வரும் நாட்களிலாவது அது மாறும் என்று நம்புவதற்குக் கொஞ்சமும் இடமில்லாதபடிதான் அமெரிக்க அரசியலில் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.




கேள்விகள் நிறைய இருக்கத்தான் செய்கின்றன.ஆனால் தெளிவான பதில் சொல்வாரைத்தான் காணோம்!

#2021 விடைதெரியாத கேள்விகளோடு பிறந்திருக்கிறது.  

Thursday, December 24, 2020

#பேராசைபெருநஷ்டம் துருக்கியின் எர்துவான் சரிவைச் சந்திக்கிறார்! அடுத்தது சீனாவிலா?

உலகத்தையே கட்டியாளவேண்டும் என்கிற பேராசை நிறையப் பேரைக் கவிழ்த்திருப்பதை வரலாறு திரும்பத் திரும்பச் சொன்னாலும் பாடம் கற்றுக் கொண்டதாக எவரும் இருந்ததில்லை. மிகச் சமீப காலத்தைய வரலாறு கூட ஹிட்லர், முசோலினியின் கனவுகள் எல்லாம் தரை மட்டமானதைத்தான் அழுத்தமாகச் சொல்கிறது. அவ்வளவு ஏன்? சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என்று மாற்ரதட்டிக் கொண்ட பிரிட்டனும் கூட இரண்டு உலகப் போர்களைத் தொடர்ந்து சாம்ராஜ்யத்தைத் தொலைத்ததுடன், கடலோடிக் கொள்ளையடித்த பெரும் செல்வத்தைத் தின்றே தீர்த்தது. 


துருக்கியின் எர்துவான் கூட இஸ்லாமியர்களின் caliph ஆகக் கனவுகண்டு, இருப்பதையும் கோட்டை விடுகிற பரிதாபத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். என்றோ கலைந்துபோன ஒட்டோமான் சாம்ராஜ்யத்தை மீண்டும் உயிர்ப்பிக்க எர்துவான் கண்ட கனவு அற்ப ஆயுளிலேயே கரைந்துபோய்க்கொண்டிருப்பது பேராசை பெருநஷ்டம் என்பதைத்தான் மீண்டுமொரு முறை படிப்பினையாக! முதலாம் உலகப்போர் முடிவில் ஒட்டோமான் சாம்ராஜ்யம் கரைந்து போனது போல, இரண்டாம் உலகப்போர் முடிவில் பிரிட்டனின் சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யமும் காணாமல் போனது.

Hitler dreamt of ruling the world, Mussolini wanted to be the leader of a new Roman empire. Saddam Hussein wanted to be the next Nebuchad Nezzar - the longest-ruling, and the most powerful leader of the neo-Babylonian empire, however, Saddam's life and regime ended tragically..  

Turkey's President Recep Tayyip Erdogan wants to be the Caliph - the ruler of the Muslim world. The Turkey president's stint too seems to be staring at an end.  என்கிறது WION செய்தி.அப்படி என்னதான் நடந்து கொண்டிருக்கிறது துருக்கியில்?

எர்துவான் வீழ்ச்சி தவிர்க்கமுடியாதது என்பதை நடப்பு நிலவரங்கள் தெளிவாகவே காட்டுகின்றன. அரசின் கஜானா அனேகமாகக் காலி! மெக்கா, மதீனா என இரு புனிதத்தலங்களின் காவலனாக சவூதி அரேபியா இஸ்லாமியர்களின் தலைமைப் பீடம் மாதிரி இருந்ததை எர்துவான் மாற்ற முயன்றார். அவர்களது  நம்பிக்கைக்குரிய caliph ஆக நினைத்ததில் ஐரோப்பிய நாடுகள், அமேரிக்கா என எல்லோரையும் பகைத்துக் கொண்டார். இதில் பாகிஸ்தான், மலேசியா என சில சில்லறைகளையும் சேர்த்துக் கொண்டார். இந்தியாவின் உள்விவகாரங்களில் மூக்கை நுழைத்து, காஷ்மீர் விவகாரத்தையும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஐநா சபையில் எழுப்பி, இந்தியாவையும் பகைத்துக் கொண்டார். உள்ளூரில் வாக்குகளுக்காக இஸ்தான்புல் நகரில் ஹேகியா சோபியா என்கிற, ஒருகாலத்தில் கிறித்தவ சர்ச்சாகவும் பின்.னர் மியூசியமாகவும் இருந்த இடத்தை மசூதியாக அறிவித்தார். ஆனால் எதிர்பார்த்த வாக்குகள், மதரீதியான ஆதரவு கிடைக்கவில்லை மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தன.  எர்துவான் கட்சியோடு கூட்டணி வைத்திருந்த இருபெரும் கூட்டாளிகள் பொருளாதார மந்தநிலையைக் காரணம் காட்டி ஒதுங்கி கொண்டதில்  அங்காரா, இஸ்தான்புல் இருபெரும் நகரங்களிலும் எர்துவான் கட்சி தோல்வியைத் தழுவ நேரிட்டது. 2020 ஜூலையில் அவருக்கு முன்னம் வாக்களித்தவர்களில் 18% ஆதரவு மட்டுமே இருந்ததாகக் கருத்துக் கணிப்புகள் சொன்னது கடந்த 5 மாதங்களில் மேலும் சரிவடைந்திருக்கிறது. 

சமீபத்தில் ரஷ்யாவிடமிருந்து S-400 ஏவுகணை எதிர்ப்புத் தொகுதிகளை வாங்க துருக்கி முனைப்பாக இருந்ததால் அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்தது, எர்துவான் கனவுகளின் மீது விழுந்த கடைசி அடியாகவும் இருந்ததில், கதற ஆரம்பித்திருக்கிறார்.

Turkey's currency, the Lira has tanked since the beginning of this year. The Lira has lost nearly 30 per cent of its value against the dollar and more than 30 per cent against the Euro.

According to reports, Turkey is spending far beyond its means. The pandemic has widened the cracks in the Turkish economy. It has exposed a $25 billion hole that the Erdogan government was trying to hide.

சீனத்துச் சண்டியர் ஷி ஜின்பிங்கின் கதை ஒன்றும் வித்தியாசமானதில்லை. எர்துவான் இஸ்லாமியர்களின் முடிசூடா மன்னனாக மட்டும்தான் விரும்பினார். ஆனால் சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் கனவோ இந்த உலகையே கட்டியாள வேண்டுமென்பது. (Tianxia என்ற குறியீட்டுச் சொல்லில் இந்தப்பக்கங்களில் தேடினால் மேலதிகத் தகவல்கள் கிடைக்கும்) 

யானையை ஒரே வாயில் மென்று விழுங்கிவிட வேண்டும் என்று எலி, (சீனாவைப் பெருச்சாளி என்றே வைத்துக் கொள்ளுங்களேன்!) விரும்பினால் முடியுமா? சீரணிக்க முடியுமா என்பது ஆதிக்கக்கனவுகளில் மிதந்து கொண்டிருக்கிற பெருச்சாளிகளுக்குக் காலம் முன்வைத்திருக்கிற கேள்வி!

மீண்டும் சந்திப்போம்.      

Saturday, December 12, 2020

#சீனப்பெருமிதம் CPEC போல வெறும் மாயை தானா?

நண்பர் ஸ்ரீராம் சிலமாதங்களுக்கு முன்னால் ஒரு வாட்சப் வீடியோவை என்னுடன் பகிர்ந்து கொண்டிருந்தார். அதில் ஒரு சீன வங்கி கணக்கில் இருப்பாகக் காட்டிய தங்கக் கட்டிகள் அனைத்துமே போலியானவை என்பது அதன் சாரம்! இங்கே சீனாவைப் பற்றி வெளிவரும் செய்திகளில் எவ்வளவு உண்மை அல்லது நம்பத்தகுந்தவை? எவ்வளவு சதவீதம் காசு கொடுத்து அடிக்கப்படும் வெட்டித் தம்பட்டம்? சீனப் பொருளாதாரம் உண்மையிலேயே காசு கொழிக்கிற ஒன்றுதானா? இந்தக்கேள்விகளுக்கு விடை காண்பது மிகக் கடினமானதுதான்! ஆனால் சில வாரங்களுக்கு முன்னால் Ant Group இன் ஜாக் மா சீன வங்கிகள் பெரும்பாலும் நகை அடகுக்கடைகள் போலத் தான் செயல்படுவதாக ஒரு கருத்தைப் பொதுவெளியில் வைத்தார். சர்வதேச நடைமுறைகள் எதுவுமே பின்பற்றப் படாத, நம்புவதற்கு எந்த அளவுகோலுமே இல்லாத most unprofessional ரகம் என்பதுதான்  ஜாக் மா சொன்னதன் பொருள்.  34 பில்லியன் டாலர் அளவுக்கு பங்குச் சந்தையில் IPO வெளியிட இருந்த Ant Group இன் முயற்சி சீன அரசால் தடுத்து நிறுத்தப்பட்டது. சீன அதிபர் ஷி ஜின்பெங்கின் நேரடித்தலையீடு அதிலிருந்தது என்று செய்திகளும் வெளிவந்ததை நம்மில் எத்தனை பேர் கவனித்திருப்போம்?   


இந்த 48 நிமிட வீடியோவில் முதல் ஒன்பதரை நிமிட தலைப்புச் செய்திகளைத் தள்ளிவிட்டால், 10வது நிமிடத்தில் இருந்து சீன அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் எவையெல்லாம் வாங்கிய கடனைத் திருப்பித் தர முடியாமல் தள்ளாடுகின்றன என விரிவாகச் சொல்வதைப் பார்க்கலாம் சீன அரசு இந்த நிறுவனங்களைக் கைகழுவ முடிவெடுத்து விட்டதாகவே செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.   இவைகளில் முதலீடு செய்திருக்கும் உள்நாட்டு /வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கதி என்ன? 



அதுவும் போக எதியோப்பியாவில் நடக்கும் உள்நாட்டுக் கலவரங்களில் டிக்ரே பகுதியில் #BRI ஒரே பெல்ட் ஒரே ரோடு திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட சீன முதலீடுகள் அநேகமாகக் காணாமல் போன மாதிரித்தான்! அங்கே வேலை செய்துகொண்டிருந்த சீன ஊழியர்கள் 600 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்கள் என்பது செய்தியின் ஒருபக்கம் மட்டுமே! மேலும் விரிவாக இந்தப் பிரச்சினையைத் தெரிந்துகொள்ள 

ஏற்கெனெவே பாகிஸ்தானில் #CPEC இந்த கீழ் செய்யப்பட்ட  செலவுகள், திட்டங்கள் அப்படியே அந்தரத்தில் நிற்கிற கதை தெரியுமில்லையா? பாகிஸ்தானுக்கு இந்தக் கடனை அடைக்கிற சக்தி அறவே இல்லை. மேலும் மேலும் சீனாவிடம் ரொக்கக் கடனுக்காக பாகிஸ்தான் கையேந்திநிற்பது தனிக்கதை. 

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கிரஸ் அடுத்த வருடம் ஜூனில் நடக்க இருக்கிறது. அதில் ஷி ஜின்பெங் என்ன செய்யப்போகிறார்? சேர்மன் மாவோ மாதிரி சேர்மன் ஷி ஜின்பெங் ஆக ஆயுட்காலத் தலைவராகப் போகிறாரா? அதிரடி மாற்றங்கள் ஏதேனும் வருமா என்பது ஒரு பக்கம்! சீன விவகாரங்களில் இதுவரை குழப்பமான நிலைபாட்டையே எடுத்து வந்திருக்கும் ஜோ பைடன் அமெரிக்க அதிபர் பொறுப்பேற்ற பிறகும் அதே மாதிரித் தான் இருக்கப்போகிறாரா?

மனிதர்களால் ஒரு சரியான தீர்வைக் காண முடியாத தருணங்களில் எல்லாம் காலம் தான் முடிவான   தீர்வைக் கொண்டு வந்திருக்கிறது. இந்தியா மட்டும் தான் சீனாவை எதிர்த்து நிற்க வேண்டுமென்று சீனர்களால் வெவ்வேறு வகையில் சீனாவால் பாதிக்கப் பட்ட தெற்காசிய நாடுகளும், அமெரிக்க ஒன்றியமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிற இந்த நிலையில் காலம் மட்டுமே ஒரு சரியான தீர்வைக் கொண்டு வர முடியுமோ என்னவோ?

மீண்டும் சந்திப்போம். 

Friday, April 10, 2020

இது சீனாவின் நூற்றாண்டா? அல்லது பகல்கனவா?

#Tianxia #AmericanTianxia #இதுசீனாவின்நூற்றாண்டா என்று சீனாவின் ஆதிக்கக் கனவுகளைப் பற்றி இந்தப்பக்கங்களில் எழுதி வந்த விஷயத்துக்கு காலமும் கொரோனா வைரசும் ஸ்பீட் ப்ரேக்கராக வந்திருக்கிறதோ? #சீனாஎழுபது என்று 2019 அக்டோபரில்  ஷி ஜின்பிங் அடுத்த 30 ஆண்டுகளுக்குள் சீனா முழுவலிமையுள்ள நாடாகிவிடும் என்பதற்கான blue print போட்டுச் சொன்னதை இங்கேயே எழுதியிருந்ததை கொஞ்சம் நினைவு படுத்திக் கொண்டு, இன்றைக்கு நிலவரம் எப்படி சீனர்களுக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது என்பதைப் பார்க்கலாமா?


அல் ஜஸீராவின் இன்றைய 26 நிமிட வீடியோ சொல்வதென்ன? கொரோனா வைரஸ் தொற்றைக் குறித்து சீனா இதுவரை உண்மைகளை மறைத்தே வந்திருப்பதில் பல நாடுகளுக்கும் சீனாவின் மீதான நம்பிக்கை சுத்தமாகக் காலி! உலகெங்கும் கொரோனா வைரசுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிற இந்த சமயத்தில், அதற்கான விலையைச் சீனா கொடுத்தே ஆக வேண்டும் என்கிற குரல்கள் பெருக ஆரம்பித்திருக்கிறது  

 
 

ப்ரம்ம செலானி மேற்கோள் காட்டுகிற இந்தச் செய்தியில் என்ன சொல்லியிருக்கிறார்கள்?

There are many lessons to be learned from the Wuhan coronavirus pandemic. But one is already clear: China needs to be isolated from the civilized world until its behavior improves. We are in the current situation, with deaths and economic devastation worldwide, because China handled this outbreak with its trademark mixture of dishonesty, incompetence and thuggery. Were China a more civilized nation, this outbreak would have been stopped early, and with far less harm, inside and outside of China.

As Marion Smith wrote in these pages on Sunday, China’s first response was to clamp down on reports of the then-new disease that had appeared in Wuhan. The brave doctor, Li Wenliang, who first reported the disease to fellow physicians was silenced by police. Chinese media reports of the disease were censored by the government. So were ordinary citizens reporting on social media.

As Smith writes: “Beijing denied until Jan. 20 that human to human transmission was occurring. Yet at the same time, Chinese officials and state-owned companies were urgently acquiring bulk medical supplies — especially personal protective equipment like masks and gloves — from AustraliaEurope, and around the world. Put simply, Beijing hoarded the world’s life-saving resources while falsely claiming that people’s lives weren’t at risk.”  இங்கே நீலவண்ணத்தில் இருப்பவை தொடர்புடைய சுட்டிகள். சீனாவில் வைரஸ் தொற்று பரவிக்கொண்டிருந்த தருணத்தில், அவர்கள் PPE என்கிற பாதுகாப்பு உபகரணங்களை வாங்கிப் பதுக்கிக் கொண்டிருந்தார்கள் என்றும் குற்றம் சாட்டுகிறார் மரியோன் ஸ்மித். சீனர்களுக்குப் பாடம் புகட்டியே ஆகவேண்டும் என்கிற ரீதியில் போகிற இந்தச் செய்திக் கட்டுரையைப்  படிக்க.  ஜப்பான் சீனாவிலிருந்து தனது உற்பத்திக் கூடங்களை வேறு நாடுகளுக்கு மாற்றுவதில் முதலடி எடுத்துவைத்துவிட்டது என்பது தற்போதைய நிலவரம். இதே முடிவுக்கு வேறு பல மேற்கத்திய நாடுகளும் வரலாம். சீனர்கள் மீதான trust deficit இன்னும் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவரப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.     

அதிபர் ஷி ஜின்பிங் தலைமையின் பலவீனம், சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் சறுக்கல் என்று இந்தக் குளறுபடிகளுக்குப் பின்னால் நிறையக் காரணங்கள் இருக்கின்றன. ஒபாமாவின் எட்டு ஆண்டுகள், அதற்கப்புறம் டொனால்ட் ட்ரம்பின் நான்கு ஆண்டுகள் எனத்தொடர்ந்து 12 ஆண்டுகள் அமெரிக்கா சீனத்துச் சண்டியர்கள் எதிர்ப்பார் எவருமில்லாமல், கொம்புசீவி வளர விட்டுவிட்டது. இரண்டாம் உலகப்போருக்குப்பிந்தைய நூற்றாண்டு அமெரிக்காவுடையதாக இருந்தது, அடுத்து வருகிற நூற்றாண்டு சீனாவுடையதாகத் தானிருக்கும் என்கிற கற்பிதத்தின் மீதே ஷி ஜின்பிங் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிமீதும், சீனாமீதும்  தன்னுடைய பிடியை இறுக்கிவைத்திருந்த நிலைமை மாறக் கூடியதான சூழ்நிலை இப்போது உருவாகியிருக்கிறதென்றே சொல்ல வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கைகள், திட்டங்கள் எல்லாம்   கனவுகாண்பதற்கு வேண்டுமானால் உதவியாக இருக்கலாம்! நடைமுறைக்கு உதவுமா? நம்பிக்கரை சேர முடியாது என்பதை சோவியத் யூனியன் சிதறியதில் நிரூபணமானது நினைவிருக்கிறதா?

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட அதேமாதிரி நிரூபணத்தைத் தரப்போகிறதா என்ன?! 

Monday, March 30, 2020

#சீனாவைரஸ் சீன அதிபரின் களிமண் கால்கள்!

ஒருபக்கம் உலகின் பலபகுதிகளிலும் சீனவைரஸ் தொற்று ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் சீனக் கம்யூனிஸ்ட்  கட்சிக்கும், சீன அதிபர் ஷி ஜின்பிங்குக்கும் செல்வாக்கு மிகவும் சரிந்து போயிருப்பதாக ANI செய்தித்தளம் இன்று பிற்பகல் ஒரு விரிவான செய்திக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது.
கட்டுரைக்கு வைத்திருக்கிற தலைப்பே Virus exposes Xi's feet of clay வடிவேலு காமெடியாக சொல்வதானால் கட்டடம் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்கு! ஆனால் தலைப்பு நேரடியாகச் சொல்வது மண் குதிர்!


  
இந்த 2 நிமிட வீடியோவில் சொல்கிற மாதிரி நாங்கள் வூஹான் வைரஸ் பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டு விட்டோம்! உலகத்தைக் காப்பாற்றவும் உதவி செய்யவும் தயாராக இருக்கிறோம் என்ற சவடால், பிரசாரம் எந்த அளவுக்கு உண்மை? எதற்கும் இந்த ட்வீட்டர் செய்தியைப் பார்த்துவிடுங்கள்! வூஹானில் வைரஸ் தொற்றால் இறந்தவர்களுடைய அஸ்தியைப் பெற்றுக் கொள்வதற்காக நீண்ட கூட்டம்.

Massive deliveries of urns in Wuhan have raised fresh skepticism of China’s coronavirus reporting.As families in the central Chinese city began picking up the cremated ashes of those who have died from the virus this week, photos began circulating on social media and local media outlets showing vast numbers of urns at Wuhan funeral homes.



China has reported 3,299 coronavirus-related deaths, with most taking place in Wuhan, the epicenter of the global pandemic. But one funeral home received two shipments of 5,000 urns over the course of two days, according to the Chinese media outlet Caixin.It’s not clear how many of the urns were filled.Workers at several funeral parlors declined to provide any details to Bloomberg as to how many urns were waiting to be collected, saying they either did not know or were not authorized to share the number. என்கிறது நியூயார்க் போஸ்ட் செய்தி.  ஆக, வைரஸ் தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கையை மட்டுமல்ல பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையையும் சீனா ஆரம்பத்திலிருந்தே குறைத்தே சொல்லிவருகிறது என்ற விஷயம் ஊர்ஜிதமாகியிருக்கிறது. ஆனால் இந்திய ஊடகங்களில் சிலநாட்களாகவே சீனா மீண்டு வந்த வெற்றிக்கதையைப் பற்றிய பிரசார தம்பட்டம் கொஞ்சம் கூடுதலாகவே அடிக்கப்பட்டு வருகிற வேளையில் ANI செய்திநிறுவனத்தின் இந்தச் செய்திக் கட்டுரை சீன அதிபரும் சீனக்கம்யூனிஸ்ட்  கட்சியும் மக்களிடையே பரவலாக செல்வாக்கிழந்து நிற்பதைப் படம்பிடித்துக் காட்டுகிறது. 

ஆஸ்திரேலியத்தலைநகர் கான்பெராவில் சீனா பாலிசி சென்டரின் இயக்குனரான ஆடம் நீ பிரச்சினையை இருவிதமாகப் புரிந்துகொள்ளலாம் என்கிறார். ஒன்று சீன அதிகாரிகளின் தவறான கையாளுதல். அடுத்தது பிரச்சினை பெரிதாகிக் கொண்டே போன காலத்தில் ஷி ஜின்பிங்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் மேல்மட்டத் தலைவர்களும் வெளியே வராமல் பாதுகாப்பாகப் பதுங்கிக் கொண்டது. இந்த இரண்டிலும் கம்யூனிஸ்ட் கட்சி, பாரமௌன்ட் லீடர் ஷி ஜின்பிங் இருதரப்புடைய இமேஜும் கணிசமாக அடிவாங்கியிருக்கிறது என்பது சாராம்சம். சீனாவுக்கு கடந்த ஒருவருடமாகவே பல்வேறு விஷயங்கள் பெரும் சவாலாக இருந்தன. பொருளாதார மந்தநிலை, அமெரிக்காவுடனான வர்த்தகப் போர், ஹாங்காங் போராட்டங்கள் வரிசையாக சமாளிக்க வேண்டியவைகளாக இருந்ததோடு வூஹான் வைரஸ் தொற்றும் சேர்ந்து கொண்டதில் அதுவரை கேள்வி கேட்க முடியாததாக இருந்த சீனாவின் அரசியல் தலைமை (ஒப்பாரும் மிக்காரும் இல்லாத paramount leader ஷி ஜின்பிங்) அத்தனை குளறுபடிகளுக்கும் பதில் சொல்லியாக வேண்டிய நிலைமை!

ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியின் எழுதப்படாத கோட்பாடுகளில் அடுத்தவர் மீது பழிசுமத்தி அதன் பின்னே ஒளிந்து கொள்வது, மிக முக்கியமானது! கோளாறுகளுக்குப் பதில் சொல்வதோ பொறுப்பேற்றுக் கொள்வதோ இல்லை! சித்தாந்தம் கோட்பாடு விமரிசனம் சுயவிமரிசனம் என்பதெல்லாம் ஏட்டளவோடு சரி! பிரசாரம் ஒன்றே இன்றைய கம்யூனிஸ்டுகளுக்கு முழுவேதம்! சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முந்தைய காலத்தில் மாசேதுங் ஒருவரே மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் இப்படி எல்லாமுமாக ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாபெரும் தலைவராக இருந்தார். அவருக்குப் பின் ஷி ஜின்பிங் தான் அந்த இடத்தைப் பிடித்தார் என்றாலும் சாயம் சீக்கிரமாகவே வெளுத்துப் போய் விட்டது.

ANI கட்டுரையைலிங்கில் முழுமையாகப் படித்துப் பாருங்களேன்! சீனத்து உதார்கள் எப்படிப்பட்டவை என்பதைக் கொஞ்சமாவது புரிந்துகொள்ள வேண்டாமா?

மீண்டும் சந்திப்போம்.              

Friday, February 28, 2020

மீண்டும் முன்னுக்கு வரும் Quad Initiative! உயிர் பெறுமா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த மாதம் 24. 25 ஆகிய இருநாட்களில் இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணமாக வந்து போயிருப்பது பற்றி இந்தப்பக்கங்களில் எழுதுவதற்கு எதுவுமே இல்லையா என்று  இரண்டுநாட்களாகத் தகவல்களைத் தேடிச் சரி பார்த்துக் கொண்டிருந்தேன். இந்திய ஊடகங்களில் அதிகம் கண்டு கொள்ளப்படாமல் விடப்பட்ட பல விஷயங்கள் இருந்தன என்பது இந்திய ஊடகங்களின் போதாமை என்பதற்கு மேல் சொல்ல அதிகமில்லை, Quad Initiative என்பது அதில் ஒன்று. 


அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு குறித்த உரையாடல் Quadrilateral Security Dialogue (QSD, also known as the Quad நடக்கவேண்டும் என்பதை முதலில் 2007 இலேயே முன்மொழிந்தவர் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே. அமெரிக்கத் துணை அதிபர் டிக் செனி, ஆஸ்திரேலியப் பிரதமர் ஜான் ஹோவர்ட், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மூவரும் ஆரம்பத்தில் ஆதரவு நிலையெடுத்தார்கள். மலபார் கடற்பயிற்சி என்று இந்தியப்பெருங்கடல் பகுதியில் 1992 இல் இந்திய அமெரிக்க கடற்படைகளின் கூட்டுப்பயிற்சியாக ஆரம்பித்தது 2007 இல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய ஐந்து நாடுகளின் கூட்டுப் பயிற்சியாக வங்காள விரிகுடா பகுதியில் விரிவடைந்தது. இந்திய இடது சாரிகள் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்தையும் இந்த கடற்படைக் கூட்டுப்பயிற்சியையும் மிகக் கடுமையாக எதிர்த்தார்கள். சீனா இந்தப் பயிற்சிகளைக் குறித்து அதிகாரபூர்வமாக எந்தவொரு கருத்தையும் சொல்லவில்லை என்றாலும் வங்காள விரிகுடா பிராந்தியத்தில் காலையூன்ற வங்காள தேசம், மியன்மார் இருநாடுகளுடனும் அதிக நெருக்கத்தைக் காண்பித்தது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் நான்கு  நாடுகளுக்கும் Quadrilateral Initiative மீதான விளக்கம் கோருகிற demarche என்கிற கண்டனத்தை சீனா தெரிவித்ததில் ஆஸ்திரேலியா முதலில் அடுத்து இந்தியா இருநாடுகளும்  Quad விஷயத்தில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி கொண்டன என்பது பழைய கதை.

2017 ASEAN Summits மணிலாவில் நடந்தபோது மறுபடியும் இந்த நான்கு நாடுகளின் கூட்டணி மீதான பேச்சு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே ஆகிய நால்வருக்குள்ளும் நடந்ததில் இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை உயிர்ப்பிப்பது என்று முடிவானது. The initiation of an American, Japanese, Australian and Indian defense arrangement, modeled on the concept of a Democratic Peace, has been credited to Japanese Prime Minister Shinzo Abe.. The Quadrilateral was supposed to establish an "Asian Arc of Democracy," envisioned to ultimately include countries in central Asia, Mongolia, the Korean peninsula, and other countries in Southeast Asia: "virtually all the countries on China’s periphery, except for China itself  என்று சொல்லப் பட்டாலும் அதிகாரிகள் மட்டத்தில் 2017 - 2019 இரண்டு ஆண்டுகளில் ஐந்து முறை கூடிப்பேசி இருப்பது , கடந்த ஆண்டு செப்டம்பரில் அமைச்சர் மட்டத்தில் கூடிப்பேசியது என்ற அளவோடு நிற்கிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தன்னுடைய பேச்சில்  Quad Initiative பற்றிக் குறிப்பிட்டிருப்பது மிகவும் முக்கியமான விஷயமாகப் பார்க்க முடிகிறது.


“Together, the Prime Minister and I are revitalizing the Quad Initiative with the United States, India, Australia, and Japan,” Trump said, speaking after Modi at a joint press conference in New Delhi on the second day of his visit to India. “Since I took office, we have held the first Quad ministerial meeting — I guess you would call it a meeting, but it seems like so much more than that — and expanded cooperation on counterterrorism, cybersecurity, and maritime security to ensure a free and open Indo-Pacific,” he added. 
ஆசியாவின் NATO என்று ஈசியாகக் கடந்துபோய்விட முடியாதபடி, இந்த நான்கு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப் படுமானால், சீனாவின் கடலாதிக்கத் திட்டமான புதிய பட்டுப்பாதை BRI / OBOR திட்டத்துக்கு  செக் வைக்கக் கூடியதாகவிருக்கும் என்பது உறுதி.  

மீண்டும் சந்திப்போம். 

Monday, October 21, 2019

சீனப் பூச்சாண்டி! ஒரு பகுதி நிஜம் தான்! ஆனால் ......?

கொஞ்சம் சொல்லுங்கள்! சீனாவைப் பற்றி எந்த அளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறோம்? கம்யூனிஸ்ட் நாடாகச் சொல்லிக் கொண்டாலும், நம்மூரில் கம்யூனிஸ்ட்கள் மிகக் கடுமையாக எதிர்த்த WTO, Globalisation இவைகளைப் பயன் படுத்திக் கொண்டு சீனா, இன்றைக்கு உலகத்தில் உள்ள முதலாளித்துவ நாடுகளைத் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு, பகாசுர நிறுவனங்களை வளர்த்துக் கொண்டிருப்பதை பற்றிக் கொஞ்சமாவது அறிந்திருக்கிறோமா? ஒரு சாம்பிளுக்கு....  
    

இந்த ஆண்டுத் துவக்கம் முதலே அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப்போரில் முதலில் சிக்கிக் கொண்டது சீனாவின் Huawei வாவே தொலைத் தொடர்பு நிறுவனம் தான்!  ஸ்மார்ட் போன்களைத் தயாரிப்பதில் உலகின் இரண்டாவது பெரிய நிறுவனம் என்று சொல்வதை விட 5G தொலைத்தொடர்பு கட்டுமான  சாதனங்களை தயாரிப்பதில் உலகிலேயே முதல் பெரிய நிறுவனமாகவும் இருக்கிறது! வருட வருமானம் நூறு பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 7 லட்சம் கோடிரூபாய்கள்!) அமெரிக்க வர்த்தகத்தடைகளுக்குப் பின்னாலும் கூட இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் 86 பில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டியிருக்கிறது என்பதோடு உள்நாட்டுச் சந்தையிலும் 40% என விற்பனையில் முதலிடம் பிடித்திருக்கிறது. 


இந்த 24 நிமிட வீடியோவைக் கொஞ்சம் கவனமாகப் பாருங்கள் ஐந்தாம் தலைமுறை தொலைதொடர்பு சாதனங்களை உற்பத்தி செய்வதில் மட்டுமல்ல, 5G சேவைகளுக்கான கட்டுமானம், தொழில்நுட்பம் இவைகளிலும் வாவே உலகின் முதல் இடத்தில் இருக்கிறது. அதுவும் போக ஆறாம் தலைமுறை தொலைத்தொடர்பு குறித்தும் இப்போதே தீவீர ஆராய்ச்சியிலும் வாவே முன்னிலை வகிக்கிறது. Backdoor பின்வாசல் வழியாக வாவே சீன அரசுக்காக உளவுபார்க்கிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வாவே  நிறுவனத்துக்குத் தடைவிதித்திருக்கிறது! (கூகிள் முதற் கொண்டு அமெரிக்க நிறுவனங்களும் அதைத்தான் ஆரம்பத்திலிருந்தே செய்து கொண்டிருக்கின்றன என்பதைக் கொஞ்சம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!) ஆஸ்திரேலியா, தைவான் போன்ற நாடுகளும்  கூட Huawei நிறுவனத்தின் தயாரிப்புகளுக்குத் தடை விதித்திருக்கின்றன.
  

மலிவான எலெக்ட்ரானிக்ஸ். செல்போன் தயாரிப்பு, இவை தான் சீனா என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? இந்த 13 நிமிட வீடியோவை அவசியம் பார்த்தே ஆக வேண்டும்.

சீனப் பூச்சாண்டி என்றே எப்போது பார்த்தாலும் பயம் காட்டிக் கொண்டே இருப்பதாக, அலுப்பாக இருக்கிறதா?

சீனா எழுபது! நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. சிறிது சிறிதாகவாவது பார்க்கலாம் இல்லையா? மீண்டும் சந்திப்போம்.   
  

Wednesday, October 9, 2019

#சீனாஎழுபது உலகைப் பாதிக்கும் முன்னேற்றமா?

சீனா எழுபது! என்று சீன வரலாற்றைப் பேசப்புகுந்தால் “what’s past is prologue.” என்று ஷேக்ஸ்பியர் The Tempest நாடகத்தில் சொல்கிற ஒருவரி தான் நினைவுக்கு வருகிறது. (And by that destiny, to perform an act Whereof what’s past is prologue; what to come, In yours and my discharge. எனவரும் வரிகள்) சீன வரலாறும் கூட சௌகரியத்துக்கேற்ற மாதிரி அவ்வப்போது மாற்றி எழுதப்பட்டவை என்பது மட்டுமல்ல, கடந்த மூன்று நூற்றாண்டுகளாக இன்று வரையிலும்  கூட மாற்றி மாற்றி எழுதப்பட்டுக் கொண்டிருப்பவை தான்! 

Mr Xi urged loyalty to the Communist Party’s leadership and again vowed that Beijing will abide by the "one country, two systems" model to ensure Hong Kong and Macau’s continued prosperity, as well as promote the peaceful development of cross-strait relations."Yesterday’s China has been written into the history books. Today’s China is being created by more than one billion people. Tomorrow’s China will be even better," he said, urging unity and the fulfilment of the two centennial goals.The Chinese leader had vowed to restore the country to greatness – by making China a "moderately prosperous society" by 2021, and for it to become a "fully developed, rich and powerful nation" by 2049.  
இங்கே படிக்க என்று அக்டோபர் மூன்றாம் தேதி இந்தப் பக்கங்களில் எழுதியதையும் சேர்த்துப் பாருங்கள்!  



வெவ்வேறு காலகட்டங்களில் சீனா இப்படி குறுகியும் விரிந்தும் மறுபடி குறுகியும் இருந்ததாக விக்கிபீடியா தளத்தில் ஒரு உத்தேசமான குறிப்புப்படம்  எப்போது எந்தெந்த ஆண்ட பரம்பரை என்ற விவரங்களுடன்! 


அதனால் தானோ என்னவோ கையில் அகப்பட்ட பகுதிகள் எல்லாவற்றையும் ஆக்கிரமித்துக் கொண்டது மட்டுமல்லாமல் சீனாவின் ஆதிக்க விஸ்தரிப்புக் கனவுகள் இன்னமும் விரிந்து கொண்டே வருகின்றன.  ஹான் இனத்தவர்களே இன்றைய சீனாவில் ஆதிக்கம் செலுத்துகிறவர்களாக இருப்பதையும் கொஞ்சம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.  இன்றைய சீனா Kangxi காங்சி காலத்தைய பழம்பெருமையை அப்படியே சுவீகரிப்பதுடன், இழந்ததை மீட்டெடுப்பது என்ற முனைப்பில் எதெல்லாம் தங்களுடையது என்று இன்னமும் உரிமை கொண்டாடுவதையும் புரிந்து கொள்ள முடியும். உதாரணமாக திபெத், ஜின் ஜியாங் என்ற உய்கர் முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் பிரதேசம் எல்லாவற்றையும் அடாவடியாகத் தனது என்றாக்கிக் கொண்டு விட்டது. சீனர்கள் புழங்காத தைவான் தீவையும் உரிமை கொண்டாடி வருகிறது  என்பதையும் முந்தைய பதிவுகளில் ஒரு சிறு வீடியோவாகப் பார்த்திருக்கிறோம். 


அமெரிக்கர்களுக்கு எப்போதுமே தங்களைவிட வேறெவரும் ஒசத்தியில்லை என்கிற மனோபாவம் உண்டென்பது இந்த 8 நிமிட வீடியோவிலும் வெளிப்பட்டிறுக்கிறது. என்றாலும் சில தகவல்களை நிராகரிக்க முடியாது. அமெரிக்காவுடன் சரிக்குச் சமமாக சீனா ஒரு வளர்ந்த நாடாக, ராணுவ வல்லரசாக மாறி விட்டது என்று சொல்ல முடியாதே தவிர, சீனா இடைவெளியை வெகு வேகமாகக் குறைத்து வருகிறது என்பதை மறுக்க முடியாது.   


சால்வடோர் பாபோன்ஸ் 2017 இல் எழுதிய இந்த 88 பக்கப் புத்தகம் அமெரிக்கா தான் இன்னமும் உலகின் நடுநாயகம் என்று உறுதியாகச் சொல்கிறது. இதன் ஆசிரியர் இப்போது என்ன சொல்கிறார் என்று தேடியதில் China’s all-embracing Belt and Road Initiative—its master plan for reorienting the economic networks of Afro-Eurasia around a Chinese core—turns six this week. Belt and Road is ubiquitous; it’s everywhere China is, and then some. But it almost never was.

The first half of the Belt and Road formula, the Silk Road Economic Belt, was accidentally launched in 2013 in Kazakhstan. The second half, the 21st-Century Maritime Silk Road, was created to assuage the jealousies of countries such as Indonesia and Sri Lanka that felt left out of the first. Neither was much more than a public relations gimmick, but both have captured the world’s imagination as no other foreign-policy program since the Marshall Plan has. என்று தன்னுடைய பழைய கருத்திலேயே நக்கலாக இங்கே சென்றமாதம் எழுதியிருப்பதைப் பார்த்தேன். ஆனால் சீனர்களை மிகவும் குறைத்து மதிப்பிடுகிற மாதிரித்தான் எனக்குத் தோன்றுகிறது. கீழே ஒரு 6 நிமிட வீடியோ! ஐந்து மாதப்பழையதுதான்!அதிலுள்ள தகவல்களுக்காக. இன்னொரு சிறு வீடியோ இங்கே  

  
Huawei வாவே ஒரு சீனத் தொலைத்தொடர்பு சாதன தயாரிப்பு நிறுவனம். டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகத்தடையை மீறி நிமிர்ந்து நிற்கிறது. அரசின் கட்டாயத்தால் கூகிள் பிளே ஸ்டோர், ஆண்டிராய்ட் செயலிகள் என்று   எதையுமே பயன் படுத்தமுடியாதபடி கூகிள் தடுத்துவிட்டது என்பதுகூட ஒரு தற்காலிகமான பின்னடைவே! வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் செல்போன்கள் மட்டுமே இதனால் பாதிப்புக்கு உள்ளாகும் என்றாலும் அதனுடைய லேட்டஸ்ட் மாடல் சீனாவில் 40%  சந்தையைப் பிடித்துவிட்டது என்பதில் சீனாவின்  உள்நாட்டு சந்தை மிகவலுவாக இருக்கிற செய்தி வெளிப்படுகிறது. கட்டுமானத்தொழில் உட்பட சில தொழில் துறைகளில் சிக்கல், ஹாங்காங் போராட்டம் பெரும் தலைவலியாக மாறிவருவது போன்ற பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

சீனாவின் கதையைக் கொஞ்சம் கொஞ்சமாக அடுத்துவரும் பதிவுகளில் பார்க்கலாம்.

மீண்டும் சந்திப்போம்.     

Wednesday, October 2, 2019

சீனா எழுபது! சில குறிப்புக்கள்! #02

சீனா எழுபது என்று சொன்னாலும், அதன் கம்யூனிச சிந்தனைகளுக்கான அடித்தளம்  May Fourth Movement 1919 வாக்கிலேயே  போடப் பட்டுவிட்டது. 1921 இல் தான் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி முறைப்படி தொடங்கப்பட்டது. ஆரம்ப நிலையில் வெறும் 50 உறுப்பினர்களே இருந்தார்கள். குவோமின்டாங் கட்சிக்குள் இடதுசாரிகளாக ஆரம்பகாலத்தில் கம்யூனிஸ்டுகள் இருந்தார்கள், தலைவர் சன்யாட் சென் 1925 மார்ச் மாதம் இறந்தபிறகு  குவோமின்டாங் கட்சிதலைவராக சியாங் கே ஷேக் தலைவரானார். சியாங் கே ஷேக் தலைவரான பிறகு கம்யூனிஸ்டுகளும் ஆதரவாளர்களும் பல இடங்களில் வேட்டையாடப்பட்டார்கள் என்றாலும் கம்யூனிஸ்டுகள் குவோமின்டாங்குடன் (KMT) இணக்கமாக ஒரு அரசில் (Republic of China சுருக்கமாக ROC)   அங்கம் வகித்தார்கள். 1927 இல்  KMT கம்யூனிஸ்டுகளை கட்சியிலிருந்து வெளியேற்றிய பிறகு KMT அரசுக்கும் கம்யூனிஸ்டுகள் வசமிருந்த பகுதிகளுக்கும் இடையில் ஒரு உள்நாட்டு யுத்தம் தொடங்கியது. கம்யூனிஸ்டுகளிடம் தோற்று சியாங் கே ஷேக் தைவான் தீவுக்குத் தப்பியோடி அங்கே ROC தான் உண்மையான சீனக்குடியரசு என்று அறிவித்தார்.இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரணடைந்ததும் அமெரிக்கா சீனாவை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாததும் சீனக் கம்யூனிஸ்டுகளுக்கு வரலாற்று ரீதியாக, மிகவும் சாதகமாக அமைந்த விஷயங்கள். 1949 அக்டோபர் 1 அன்று  மாசேதுங் Peoples Republic of China  அமைக்கப்பட்டதாக  அறிவித்தது மட்டுமே தற்கால சீன வரலாறாகத் தொடங்குகிறது. 



1976 செப்டெம்பரில் மாவோ மரணமடைகிற வரையில், சீன மக்கள் அனுபவித்த துயரம் சந்தித்த பேரழிவு சொல்லி மாளாது.Great Leap Forward என்றும் கலாசாரப் புரட்சி என்று மாசேதுங் அடித்த கூத்துகளில் பலகோடி சீனர்கள் காவு கொடுக்கப் பட்டார்கள் என்பது ரஷ்யாவின் ஸ்டாலினை மிகவும் மிஞ்சிய சாதனை என்றால் தன்னுடைய அண்டைநாடுகள் அத்தனையோடும் எல்லைப் பிரச்சினைகளை சீனா இன்றும் உயிரோடு வைத்திருக்கிறது என்பது அண்டைநாடுகளைப் பிடித்த சோதனை! மற்றப்படி மாவோ காலத்தைய சீனா உலக அரசியலில் தலையிடவும் இல்லை, பெரிய சக்தியாகவும் அச்சுறுத்தலாகவும் வளரவில்லை என்பது சீனா எழுபது என்று சொல்வதில் முதல் 29 வருடகால சரித்திரச் சுருக்கம்!  


1978  முதல் 1992 வரையிலான டெங் சியாவோ பிங் காலம் தான் சீனா எழுபதில் பொற்காலம். ஏழை, விவசாயிகளுடைய பிரச்சினை எதுவும் தீராமல், தொழில்கள் எதுவும் வளராமல் வறுமையின் பிடிவிலகாமல் இருந்த  மாவோ காலத்தைய தேக்கங்களை உடைத்து, அன்னிய மூலதனத்தைச் சீனாவுக்குள் அனுமதித்து தொழில்மயமாக்கிய  காலம். வர்த்தக உபரியாக ஒன்றேமுக்கால் லட்சம் கோடி அமெரிக்க டாலர்களை அமெரிக்க அரசின் ட்ரஷரி பத்திரங்களிலேயே முதலீடு செய்கிற அளவுக்கு சீனப்பொருளாதாரம் மிகவேகமாகப் புலிப்பாய்ச்சலில் வளர்ந்தகாலம். சீனமக்களுக்கு  இதனால் பாலாறும் தேனாறுமாக ஓடிக்கொண்டு இருப்பதாக அர்த்தமல்ல. 1989 டியனான்மன் சதுக்கத்தில் மாணவர் போராட்டம் முப்பதாண்டுகளுக்கு முன்னால் நசுக்கப்பட்ட ஒற்றைச் சம்பவம் தவிர இந்த காலகட்டத்தில் வேறு கறைகள் இல்லை.கம்யூனிஸ்ட் கட்சி தொழில் விவகாரங்களில் தலையிடாமல் இருந்ததும் அடக்கியே வாசித்ததும் டெங் சியாவோ பிங் காலத்தின் மிகப் பெரிய சாதனை என்று சொல்லலாம். தவிர  மாவோ காலத்து கம்யூனிஸ்ட் கட்சி சீனமக்களுடைய அதிகபட்ச வெறுப்பைச் சம்பாதித்து வைத்திருந்ததும் கூட, அடக்கி வாசித்ததற்கான காரணமாக இருக்கலாம் என்பது சீனா எழுபதின் 2ஆம் கட்டம்! சுருக்கமாக. 

   
டெங் சியாவோ பிங் மறைவுக்குப் பிந்தைய சீனா எப்படி இருக்கும் என்ற கேள்வியோடு வெளியான டைம் இதழின் அட்டைப்படம்!  எப்படி இருக்கிறது என்று சீனா எழுபதின் 3வது கட்டமான   சமகால நிகழ்வுகளைப் பார்ப்பதற்கு முன்னால், டெங் சியாவோ பிங் இன்றைக்கு நினைக்கப்படுகிறாரா? மதிக்கப்படுகிறாரா? இந்தக் கேள்விகள் தற்போதைய அரசியல் தலைமைக்கு அத்தனை உகப்பானது இல்லை என்பது சில செய்திகளில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. சென்ற ஆகஸ்ட் 22 அன்று டெங் சியாவோ பிங்கின் 115 வது பிற்ந்த தினம்.அவருடைய பிறந்த ஊரில் அவரது வெண்கலச் சிலைக்கு மரியாதை செய்யப்பட்ட கையோடு சில ஊடகங்களிலும் wechat வழியாகவும்  சீன மக்கள் அவருடைய எழுத்துக்களைத் தேடிப்படிக்க ஆரம்பித்தது சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அத்தனை  உகப்பானதாக இல்லையாம்!

In some media, the birthday was an occasion to revisit Deng’s ideas and writings.But a discussion soon bloomed across social media that the authorities found unacceptable, and a hasty wave of deletions across WeChat, Weibo and other platforms ensued.

At issue was a post made to “People’s Reading” and “People’s Daily Press”  both official WeChat public accounts operated by the People’s Daily, the flagship newspaper of the Chinese Communist Party. That post, called “Deng Xiaoping Abolishes the Lifelong Tenure System for Leaders”  dealt with the now very sensitive issue of term limits for national leaders.  


Sensitive why? Because while Deng Xiaoping, still greatly respected as a reformer, had made it a priority to ensure that national leaders did not serve indefinitely and run the risk of over-concentrating power in their hands and sapping vitality from the system, Xi Jinping oversaw the removal of constitutional term limits in March 2018, which some within China regard as a dangerous slide back into the painful past முழுச்செய்தியும் இங்கே 

DF-41 ஏவுகணை பற்றி ஒரு வீடியோ 

சீனா எழுபது! நிகழ்ச்சியில் சீனா தனது ராணுவ வலிமையைப் பறை சாற்றிக் கொள்கிற விதமாகவே அமைந்திருந்தது. நேற்றைய நிகழ்ச்சியில் 12000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கக் கூடிய DF-41 கண்டம் வீட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையும்(ICBMs)   அதன் முந்தைய வெர்ஷன்களும் பங்கு  கொண்டது அமெரிக்காவுக்கு விடப்பட்ட சவாலா? 


இருக்கலாம்! சீனத்தின் சீடரான  வடகொரியச் சண்டியர் வேறு, அமெரிக்காவுடன் வருகிற 5ஆம் தேதி அடுத்த சுற்றுப்பேச்சுவார்த்தை என்று அறிவித்துவிட்டு நேற்று நீர்மூழ்கிக்கப்பல்களில் இருந்து ஏவக்  கூடிய  அணு ஆயுதங்களோடு கூடிய ஏவுகணை ஒன்றைப் பரிசோதனை செய்து பார்த்திருக்கிறார் .

சீனா எழுபது! பேசுவதற்கு நிறைய இருக்கிறது. தொடர்ந்து பார்க்கலாம்!

மீண்டும் சந்திப்போம்.    
      
    

Tuesday, October 1, 2019

சீனா எழுபது! சில குறிப்புக்கள்! #01

சீனப் பூச்சாண்டி  என்று இந்தப்பக்கங்களில் ஒரு நான்கு பதிவுகளில் கொஞ்சம் எழுதியதைத் தொடர்ந்து இன்று ஐந்தாவதாக ஒன்றையும் எழுதவேண்டியிருக்கிறது. அக்டோபர் முதல் தேதியன்று  மக்கள் சீனக் குடியரசு (PRC) அமைக்கப்படுவதாக மாசேதுங் அறிவித்த நாளே இன்றைய சீனாவின் தேசிய நாளாக அனுசரிக்கப்பட்டு வருவதில் இன்று மக்கள் சீனாக குடியரசுக்கு 70 வயது ஆகிறது! #சீனாஎழுபது 

  
இது இன்று சீனத்தலைநகர் பெய்ஜிங்கில் டியனான்மன் சதுக்கத்தில் கொஞ்சம் மிரட்டலாகவே நடந்த நிகழ்ச்சியின் ஒரு 9 நிமிடச் சுருக்கமான காணொளி. முழுதும் பார்க்க ஒரு மூன்று மணிநேரக் காணொளியாக இங்கே    

மக்கள் சீனம், குடியரசு என்ற வார்த்தைகள் எல்லாம் வெறும் அலங்காரத்துக்குத் தான்! கம்யூனிஸ்ட் கட்சியும்(CPC) அதன் ஒருபிரிவான மக்கள் விடுதலை சேனையும் (PLA) தான் முழு அதிகாரத்தையும் கைகளில் வைத்துக் கொண்டிருக்கின்றன.Tiananmen என்ற சீன வார்த்தைக்கு தெய்வீக அமைதியின்   கதவு என்று அர்த்தமிருந்தாலும் இன்றைய சீனாவில் மாசேதுங் சமாதி இருக்கிற மிகப்பெரிய பொட்டல் வெளியின் மயான அமைதிக்கான கதவுதான் என்பது 30 ஆண்டுகளுக்கு முன்னால் இதே டியனான்மன் சதுக்கத்தில் ஜனாநாயகத்துக்காகக் கிளர்ந்தெழுந்த இளம் மாணவர்களைப்  படுகொலை செய்த  போதே நிரூபிக்கப்பட்டு விட்டது.              இன்றைய நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட விருந்தாளிகளுக்கு மட்டும்தான் அனுமதி, அருகாமையில் உள்ளவர்கள் தங்கள் வீட்டு ஜன்னல் திரைகளை மூடி வைத்து வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டுமென்ற உத்தரவு. டியனான்மன் சதுக்கத்தில் போராடிய இளைஞர்களின் தாய்தந்தையர் திடீரெனப் போராட்டத்தில் குதிக்கலாம் என்ற சந்தேகத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டது  முதலானவைகளை பிரிட்டனின் கார்டியன் தளச் செய்தி ஒன்று நேற்றே வெளியிட்டிருந்தது.

இருபதாம் நூற்றாண்டின் முதல் ஐம்பதாண்டுகளில் இரண்டு உலகப்போர்கள் நடந்த சமயத்தில்தான்    1911 முதல் 1958 வரையிலும் நடந்த குழப்பங்கள், உள்நாட்டுப் போராட்டங்கள் என்பதில்தான் இன்றைய சீனத்தின் வரலாறு தொடங்குகிறது.மாசேதுங் இருந்த  வரையில் சீனா உலக விவகாரங்களில் பெரிதாகத் தலையிட்டதுமில்லை, பெயர் அடிபட்டதுமில்லை.  இந்தியாவுடனான 1962 போரை உலகநாடுகள் எதுவும் கண்டுகொள்ளவில்லை என்பதற்கான காரணமும் அதுதான், ஆனால் உள்நாட்டில் Great Leap Forward  என்ற முன்னேற்றத்துக்கான பாய்ச்சலில் ஒருசில கோடி சீனர்கள் காவு வாங்கப்பட்டதும் அடுத்து கலாசாரப் புரட்சியில்  இன்னும் சிலகோடி சீனர்கள் பலியானதும் மாவோ காலத்து சாதனைகள். சீனக் கம்யூனிஸ்ட்  கட்சி, ரஷ்யாவைப் போல தொழிலாளர்கள் காட்சியாகத் தொடங்கி விவசாயிகளையும் சேர்த்துக் கொண்ட கட்சியாக அல்லாமல் முழுக்க முழுக்க குடியானவர்களின் கட்சியாகவே தொடங்கியது என்ற பின்னணியில் பார்த்தால் ஏழைகள் விவசாயிகளுடைய பிரச்சினைகள் எதுவும் முதல் முப்பது ஆண்டுகளில் தீர்க்கப்படவே இல்லை.


மாசேதுங்குக்கு அடுத்தபடியாக சீனாவின் மாபெரும் தலைவர் என்றழைக்கப்பட்ட டெங் சியாவோ பிங்!    மாவோ சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சேர்மனாக இருந்த நாட்களில் சூ என் லாயும் டெங் சியாவோ பிங்கும் வைஸ் சேர்மன்களாக இருந்தார்கள். கலாசாரப் புரட்சி சமயத்தில்  மாவோவின் சந்தேகத்துக்கு ஆளான டெங் சியாவோ பிங் கட்சிபி பொறுப்புகளில் இருந்து  நீக்கப்பட்டதோடு  அவரது  குடும்பம் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டதும் ஒரு சாதாரண தொழிலாளியாக 1969 முதல் 4 ஆண்டு  காலம் இருக்கவும்   வேண்டி வந்தது. பிரதமராக இருந்த சூ என்லாய் கேன்சர் நோய் தாக்கியதில் தனக்கடுத்து பொறுப்புக்கு வரவேண்டியவர் என்று மாசேதுங்கை கன்வின்ஸ் செய்தபிறகே 1974 இல் மீண்டும் திருப்பி அழைக்கப்பட்டார் First Vice Premier ஆனார் மறுவாழ்வு பெற்றார் Hua Guofeng wanted to rid the Party of extremists and successfully marginalised the Gang of Four. On 22 July 1977, Deng was restored to the posts of Vice-Chairman of the Central Committee, Vice-Chairman of the Military Commission and Chief of the General Staff of the People's Liberation Army என்பது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் எப்போதும் கண்டிராத அதிசயம்.  1976 இல் சூ என்லாய் மரணத்துக்குப் பிறகு மீண்டும்  மாவோவின் சந்தேகத்துக்கு ஆளானதில் கட்சியை விட்டே நீக்கப்பட்டார்.     1978 முதல் 1992 வரை தலைமைப்பொறுப்பில் இவர் இருந்த காலத்தில் தான் இன்றைக்கு சீனா ஒரு வலிமையான பொருளாதாரமாகவும், ராணுவ சக்தியாகவும் உருவானதன் அடித்தளமே போடப்பட்டது. 1989 டியனான்மன் சதுக்கத்தில் மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்கிய ஒரே விஷயம் மட்டும் இவர்காலத்தின் கறையாகச் சொல்லமுடியும். இவர் செய்த மாற்றங்களில் socialism with Chinese characteristics தான் சீனாவுக்குள் அன்னிய மூலதனம் அனுமதிக்கப்பட்டு, சீனா இன்றைக்கு ஒரு வலிமையான பொருளாதாரமாக ஆவதற்கு அடித்தளமாக இருந்தது. இவர்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தனது வறட்டுத் தத்துவங்களை முன்னிறுத்தியதில்லை என்பதோடு கட்சியின் தலையீடு அதிகமாக இல்லாமல் இருந்தது என்றே சொல்ல வேண்டும்.
     
நாளையும் தொடர்ந்து இந்த விஷயத்தைப் பார்க்கலாம்.          

   

Saturday, September 14, 2019

சீனப் பூச்சாண்டிகளில் எந்த அளவு உதார்? எந்த அளவு உண்மை?

சீனாவைக் குறித்து நான் படித்த முதல் புத்தகம் வெ.சாமிநாத சர்மா எழுதிய சீனாவின் வரலாறு தான்! என்னுடைய பள்ளிப் பருவ வாசிப்பு அது. அந்தப்புத்தகமும் கூட 1949 சீனப்புரட்சி உடன் முற்றுப்பெறுவதாக! முந்தைய காலகட்டங்களைப் பற்றி உபயோகமான வரலாற்றுக்கு குறிப்புக்களுடன் இருந்ததா என்பது இன்றைக்கு எனக்கு நினைவில் இல்லை. சரித்திரக் கதைகளில் சீனக்  கடற்கொள்ளைக்காரர்கள் பற்றியும் கொஞ்சம் படித்ததுண்டு. இன்றைக்கும் சீனக்  கம்யூனிஸ்ட் கட்சி, தன்னுடைய ஆதிக்கக் கனவுகளுக்காக கடற் கொள்ளையர் என்று சொல்ல முடியாத சண்டியர்களை பயன்படுத்திவருவதைப் பற்றி எந்த சரித்திர புத்தகம் நமக்கு சொல்லிக் கொடுக்கப் போகிறது?


இணையத்தைவிட மிகச் சிறந்த உபாயம் இருக்கிறதா? இந்த 8 நிமிட வீடியோவில், வழக்கமான கடற்படை, கம்யூனிஸ்ட் கட்சியின் சென்ட்ரல் மிலிட்டரி கமிஷன் கீழ் இயங்கும் coast guard மாதிரி ஒரு படை, அதுபோக ஒரு விதமான கடல் பிராந்திய சண்டியர்களையும் பயன்படுத்திவருவதை சுருங்கச் சொல்வதைப் பாருங்கள்!  இவர்களுடைய பிரதான வேலையே சீன போடுவது, வம்புச்சண்டைக்கு வலிய இழுப்பது மட்டும் தான்! இப்போதைக்கு சீனத்துச் சண்டியர் வெட்டி உதார் விடுவதாய்ப் புரிந்துகொள்ள முடிந்தாலும்,அது  எப்படி எப்போது மாறும் என்பதைக் கணிக்க முடியாது இல்லையா?

  
Soldiers of the Indian Army and People’s Liberation Army (PLA) of China, on Wednesday, were engaged in a confrontation near the border in Ladakh. The faceoff between the soldiers of the two armies occurred near the northern bank of the Pangong lake, reported the news agency ANI.
The tensions, however, eased after the delegation-level talks between two sides there. De-escalated and disengaged fully after delegation-level talks yesterday. சீனா இப்படி அத்துமீறி நடந்து கொள்வது ஒன்றும் புதிதல்ல. இந்தோ சீனி பாய் பாய் என்று கோஷம் எழுப்பிக் கொண்டிருந்த நேரு காலத்தில் இருந்தே தொடர்வதுதான்! இங்கே ஒரிஜினல் ராணுவத்தினருடன் கைகலப்பு என்றிருப்பது எல்லா இடங்களிலும் அப்படியே இருப்பதில்லை. சீனர்கள் எங்கிருந்தாலும் அவர்களைத் தங்களுடைய கைப்பாவையாக ஆட்டிப்படைப்பதில் சீன அரசுக்கு இருக்கிற சௌகரியம் உலகில் வேறெந்த நாட்டிற்காவது இருக்குமா என்பதும்  சந்தேகமே! வரலாற்று ரீதியாக கிழக்கத்திய நாடுகளில் ஒரு பொதுவான அம்சம், முன்னோர்களுக்கு கட்டுப்படுவது, அரசுக்கு கட்டுப்படுவது என்பது. சீனர்களிடம் 2 வது குணம் கொஞ்சம் தூக்கல் என்று வைத்துக் கொள்ளலாமா?  

இன்றைய சீனா எப்படி ஒரு கந்துவட்டி ஏகாதிபத்தியம் என்று  மாறியிருக்கிறது என்பதை ஒரு சின்னப் பதிவில் சொல்லி முடித்து விடமுடியாது. #BRI ஒரேபெல்ட் ஒரே ரோடு என்கிற #OBOR ஒருலட்சம் கோடி டாலர் கனவுத்திட்டம் முட்டுச் சந்தில் நிற்கிற கதையைக் கொஞ்சம் தெரிந்து கொண்டால், ஒரு மாதிரிக் குன்சாவாக புரிந்துகொள்ள முடியலாம். இந்த 44 நிமிட வீடியோவில் ஸ்டீவ் பானன் சீன டிராகனின் கொடூரமான நகங்கள் “Claws of the Red Dragon” என்று அவர் எடுத்திருக்கிற படத்தைப்பற்றி பேசுகிறார். சிலகாலத்துக்கு முன்னால் Huawei  நிறுவன நிர்வாகி கனடாவில் கைது செய்யப் பட்டது, அதைத்தொடர்ந்து சீன அரசு செய்த அடாவடி என்னவென்று நினைவிருக்கிறதா? மேரி ஷெல்லி எழுதிய நாவல் Frankenstein (புதுமைப்பித்தனின் அற்புதமான மொழிபெயர்ப்பில் பிரேதமனிதன் ஆக வந்தது) கதையில் வருகிற மாதிரி கிளிண்டன், ஒபாமா,  என்று தொடர்ச்சியாக அமெரிக்கா வளர்த்துவிட்ட  பூதமாக சீனா இன்றைக்கு வளர்ந்திருக்கிறது என்கிறார் ஸ்டீவ் பானன்!
இன்று அமெரிக்காவுக்கு  மட்டுமல்ல, ஆசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக சீனத்துச் சண்டியர் உதார் மேல் உதாராக வீட்டுக் கொண்டிருக்கிறார். ஆனாலும் ஸ்டீவ் பானன் சீனக்  கம்யூனிஸ்ட் கட்சியும், சீன அரசும் காகிதப்புலி தான் என்கிறார்! டொனால்ட் ட்ரம்ப்பை ஆதரிக்கிற மாதிரிப் பேசினாலும், இந்த விவகாரங்களில் பரிச்சயமும் அனுபவமும் உள்ளவர் என்பதால் கொஞ்சம் கவனித்துக் கேளுங்களேன்!
மீண்டும் சந்திப்போம்.         

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை