Monday, March 30, 2020

#சீனாவைரஸ் சீன அதிபரின் களிமண் கால்கள்!

ஒருபக்கம் உலகின் பலபகுதிகளிலும் சீனவைரஸ் தொற்று ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் சீனக் கம்யூனிஸ்ட்  கட்சிக்கும், சீன அதிபர் ஷி ஜின்பிங்குக்கும் செல்வாக்கு மிகவும் சரிந்து போயிருப்பதாக ANI செய்தித்தளம் இன்று பிற்பகல் ஒரு விரிவான செய்திக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது.
கட்டுரைக்கு வைத்திருக்கிற தலைப்பே Virus exposes Xi's feet of clay வடிவேலு காமெடியாக சொல்வதானால் கட்டடம் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்கு! ஆனால் தலைப்பு நேரடியாகச் சொல்வது மண் குதிர்!


  
இந்த 2 நிமிட வீடியோவில் சொல்கிற மாதிரி நாங்கள் வூஹான் வைரஸ் பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டு விட்டோம்! உலகத்தைக் காப்பாற்றவும் உதவி செய்யவும் தயாராக இருக்கிறோம் என்ற சவடால், பிரசாரம் எந்த அளவுக்கு உண்மை? எதற்கும் இந்த ட்வீட்டர் செய்தியைப் பார்த்துவிடுங்கள்! வூஹானில் வைரஸ் தொற்றால் இறந்தவர்களுடைய அஸ்தியைப் பெற்றுக் கொள்வதற்காக நீண்ட கூட்டம்.

Massive deliveries of urns in Wuhan have raised fresh skepticism of China’s coronavirus reporting.As families in the central Chinese city began picking up the cremated ashes of those who have died from the virus this week, photos began circulating on social media and local media outlets showing vast numbers of urns at Wuhan funeral homes.



China has reported 3,299 coronavirus-related deaths, with most taking place in Wuhan, the epicenter of the global pandemic. But one funeral home received two shipments of 5,000 urns over the course of two days, according to the Chinese media outlet Caixin.It’s not clear how many of the urns were filled.Workers at several funeral parlors declined to provide any details to Bloomberg as to how many urns were waiting to be collected, saying they either did not know or were not authorized to share the number. என்கிறது நியூயார்க் போஸ்ட் செய்தி.  ஆக, வைரஸ் தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கையை மட்டுமல்ல பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையையும் சீனா ஆரம்பத்திலிருந்தே குறைத்தே சொல்லிவருகிறது என்ற விஷயம் ஊர்ஜிதமாகியிருக்கிறது. ஆனால் இந்திய ஊடகங்களில் சிலநாட்களாகவே சீனா மீண்டு வந்த வெற்றிக்கதையைப் பற்றிய பிரசார தம்பட்டம் கொஞ்சம் கூடுதலாகவே அடிக்கப்பட்டு வருகிற வேளையில் ANI செய்திநிறுவனத்தின் இந்தச் செய்திக் கட்டுரை சீன அதிபரும் சீனக்கம்யூனிஸ்ட்  கட்சியும் மக்களிடையே பரவலாக செல்வாக்கிழந்து நிற்பதைப் படம்பிடித்துக் காட்டுகிறது. 

ஆஸ்திரேலியத்தலைநகர் கான்பெராவில் சீனா பாலிசி சென்டரின் இயக்குனரான ஆடம் நீ பிரச்சினையை இருவிதமாகப் புரிந்துகொள்ளலாம் என்கிறார். ஒன்று சீன அதிகாரிகளின் தவறான கையாளுதல். அடுத்தது பிரச்சினை பெரிதாகிக் கொண்டே போன காலத்தில் ஷி ஜின்பிங்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் மேல்மட்டத் தலைவர்களும் வெளியே வராமல் பாதுகாப்பாகப் பதுங்கிக் கொண்டது. இந்த இரண்டிலும் கம்யூனிஸ்ட் கட்சி, பாரமௌன்ட் லீடர் ஷி ஜின்பிங் இருதரப்புடைய இமேஜும் கணிசமாக அடிவாங்கியிருக்கிறது என்பது சாராம்சம். சீனாவுக்கு கடந்த ஒருவருடமாகவே பல்வேறு விஷயங்கள் பெரும் சவாலாக இருந்தன. பொருளாதார மந்தநிலை, அமெரிக்காவுடனான வர்த்தகப் போர், ஹாங்காங் போராட்டங்கள் வரிசையாக சமாளிக்க வேண்டியவைகளாக இருந்ததோடு வூஹான் வைரஸ் தொற்றும் சேர்ந்து கொண்டதில் அதுவரை கேள்வி கேட்க முடியாததாக இருந்த சீனாவின் அரசியல் தலைமை (ஒப்பாரும் மிக்காரும் இல்லாத paramount leader ஷி ஜின்பிங்) அத்தனை குளறுபடிகளுக்கும் பதில் சொல்லியாக வேண்டிய நிலைமை!

ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியின் எழுதப்படாத கோட்பாடுகளில் அடுத்தவர் மீது பழிசுமத்தி அதன் பின்னே ஒளிந்து கொள்வது, மிக முக்கியமானது! கோளாறுகளுக்குப் பதில் சொல்வதோ பொறுப்பேற்றுக் கொள்வதோ இல்லை! சித்தாந்தம் கோட்பாடு விமரிசனம் சுயவிமரிசனம் என்பதெல்லாம் ஏட்டளவோடு சரி! பிரசாரம் ஒன்றே இன்றைய கம்யூனிஸ்டுகளுக்கு முழுவேதம்! சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முந்தைய காலத்தில் மாசேதுங் ஒருவரே மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் இப்படி எல்லாமுமாக ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாபெரும் தலைவராக இருந்தார். அவருக்குப் பின் ஷி ஜின்பிங் தான் அந்த இடத்தைப் பிடித்தார் என்றாலும் சாயம் சீக்கிரமாகவே வெளுத்துப் போய் விட்டது.

ANI கட்டுரையைலிங்கில் முழுமையாகப் படித்துப் பாருங்களேன்! சீனத்து உதார்கள் எப்படிப்பட்டவை என்பதைக் கொஞ்சமாவது புரிந்துகொள்ள வேண்டாமா?

மீண்டும் சந்திப்போம்.              

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை