Showing posts with label இந்தியா பாகிஸ்தான் சீனா. Show all posts
Showing posts with label இந்தியா பாகிஸ்தான் சீனா. Show all posts

Sunday, March 14, 2021

#QUAD வெறும் வெட்டி ஜம்பம் தானா? வெளியுறவுத்துறை அமைச்சருக்கு உபதேசமா?

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒரே நேரத்தில் சீனா எதிர்ப்புக்காக QUAD அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய நான்குநாடுகளின் கூட்டு அமைப்பை முன்னெடுத்துச் செல்கிற மாதிரி ஒரு தோற்றம். இன்னொரு பக்கம் சீனாவுடன் இருக்கும் பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்வதற்கான முயற்சிகள் என்று இரண்டுவிதமாக விளையாடுகிற மாதிரி இருக்கிறது.



கொரோனா தடுப்பூசிகளை அமெரிக்கா மிக அதிக எண்ணிக்கையில் பதுக்கி வைத்துக் கொண்டிருக்கிற அதே வேளையில், இந்தோ பசிபிக் பிராந்திய நாடுகளுக்கு உதவ ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியை தயாரிப்பதில் இந்தியாவுக்கு உதவி செய்யப் போகிறார்களாம்!



அமெரிக்கர்களுடைய வெட்டி ஜம்பத்தை பிரம்ம செலானி சற்று முன் ட்விட்டரில் போட்டுடைத்து இருக்கிறார். ஆனால் ராஜீய உறவுகளில் செலானி மாதிரி வெளிப்படையாகச் சொல்ல முடியாதுதான் என்றாலும் ஜோ பைடனுக்கு இஸ்ரேலும், UAE, சவூதி அரேபியா போன்ற நாடுகள் தண்ணி காட்டிய மாதிரி இந்தியாவும் செய்ய வேண்டியதுதான் போல. 

Someone tell Jaishankar his only job is to maintain India’s external relations. And, he’s a spectacular failure at if with the giant chip he has on his shoulder என்று மோடி எதிர்ப்பாளர் சுவாதி சதுர்வேதி ட்வீட்டரில் உபதேசம் செய்கிற அளவுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் என்ன சொல்லிவிட்டாராம்?


சுவாதி சதுர்வேதி பொருமலுக்கு விடையை இந்த 46 நிமிட விவாதத்தின் முதல் 7வது நிமிடத்திலிருந்தே திரு ஜெய் சங்கர் சொல்லிவிடுகிறார்.கண்ணிருந்தும் குருடர்களாய், காதிருந்தும் செவிடர்களாய் இருக்கும் Paid Mediaவுக்கு எதுவும் ஏறாதே, என்ன செய்ய?

திரு ஜெய் சங்கர் இந்திய சீன உறசால்களைக் குறித்து தெளிவாகவே கருத்துக்களை முன்வைக்கிறார். இது வரை இருந்த வெளியுறவுத்துறை அமைக்ச்சரோ, அல்லது பாதுகாப்புத்துறை அமைச்சரோ, பிரதமரோ எவருமே எதிர்கொண்டிராத சிக்கலான கேள்விகளை அனாயாசமாக எதிர்கொண்டு பதில் சொன்ன பாங்கு இருக்கிறதே, அதற்காகவே ஒரு சல்யூட்!

கொஞ்சம் இந்த 46 நிமிட விவாதத்தைக் கவனித்துப் பாருங்கள்!

மீண்டும் சந்திப்போம்

Saturday, February 27, 2021

அக்கம் பக்கம் என்ன சேதி? நம்மைச் சுற்றி நடப்பவை!

சீன அதிபர் ஷி ஜின்பிங் சீனாவில் வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக அறிவித்திருக்கிறார். நம்புகிற மாதிரி இருக்கிறதா? அந்தநாட்களில் இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காண்டி கரீபி ஹடோ வறுமையே வெளியேறு என்று கண்ணில் படுகிற இடங்களில் எல்லாம் ஸ்டிக்கர், போஸ்டர் ஒட்டியவுடன் வறுமை வெளியேறி விட்டது என்பதை நம்ப முடிந்த மாதிரி இருந்தால், இதுவும் கூட நம்பக்கூடியதுதான்!


சீனா கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளில் உலகின்  வலிமையான பொருளாதாரமாக உருவெடுத்திருப்பது நிஜம்தான் என்றாலும் கிராமப்புறங்களில் வறுமை அறவே ஒழிக்கப்பட்டுவிட்டதாகச் சொல்லிப் பெருமை கொள்ள முடியாது என்கிறார்கள்.


Practice what you preach', this is India's message to Turkey. Ankara at the behest of Islamabad raised the Kashmir issue once again at UNHRC. But this time India pulled no punches & responded without mincing any words என்கிறது செய்தி. இஸ்லாமியக் கலீஃபாகவே தன்னை நினைத்துக் கொண்டிருக்கிற துருக்கியின் எர்துவான் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பாகிஸ்தானுக்கு ஆதரவுக் குரல் எழுப்புவதும், காஷ்மீர் விவகாரத்தைக் குறித்துப் பேசுவதும் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். ஐநா மனித உரிமை ஆணையத்தில் இந்தியா துருக்கிக்கு சரியான மூக்குடைப்பைச் செய்து காட்டியிருக்கிறது.


சிரியாவின் சோகம் முடிவே இல்லாமல் தொடர்கிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முந்தைய மனநிலையில் ரஷ்யாவை மட்டுமே ஒரே எதிரியாகப் பார்க்கிற விதம் தெளிவாகி இருக்கிறது. சீனப்பூச்சாண்டி நிஜமாகவே பெரிதாக வளர்ந்து நிற்பது கண்ணுக்குத் தெரியவில்லை என்பது சர்வதேச அரசியலில் அமெரிக்காவின் ஆளுமை குறைந்து வருவது டெமாக்ரட்டுகளுக்கு உண்மையாகவே புரியவில்லையா அல்லது புரியாத மாதிரி நடிக்கிறார்களா?


2022 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளை நிராகரிப்பது சீனர்களுக்கு நல்லதொரு எச்சரிக்கையாக இருக்கும் என்று முந்தைய ட்ரம்ப் நிர்வாகத்தில் secretary of state ஆக இருந்த மைக் பாம்பியோ கருத்து தெரிவித்திருக்கிறார்.

மீண்டும் சந்திப்போம்;

Wednesday, February 24, 2021

இந்தியா பாகிஸ்தான் சீனா ::: ஸ்ரீலங்காவும் சேர்ந்து கொள்கிறதா?

இந்திய சீன எல்லைப்பிரச்சினையில் உண்மையான தகவல்களை நம்மூர் ஊடகங்கள் வெளியிடுவதில்லை என்கிற ஆதங்கம் எனக்கு நிறையவே உண்டு முந்தைய ஆட்சியாளர்கள்'செய்துவிட்டுப்போன குளறுபடிகள், சிடுக்கல்களை சரிசெய்வதில் இப்போதைய அரசு மும்முரமாக இருந்தாலும், அரசிடமிருந்தும் கூட விரிவான விளக்கங்கள் எதுவுமில்லை. ஆனால் இந்திய ராணுவ அதிகாரிகள் தரப்பிலிருந்து, சில வெளிச்சங்கள் நமக்குக் கிடைத்து வருகின்றன.  



நமது ராணுவத்தின் வடக்குப்பகுதி கமாண்டர், லெப்டினன்ட் ஜெனெரல் யோகேஷ் குமார் ஜோஷி இந்திய சீன எல்லை உரசல்களில், களத்தில் இருக்கும் உயர் அதிகாரி! இருதரப்பும் தங்களது படைகளை சென்ற ஆண்டு நிலவரத்தில் இருந்தபடி, விலக்கிக் கொள்வது என்rறு ஏற்பட்ட ஒப்பந்தம் குறித்தும், அடுத்து பேச்சுவார்த்தையில் இருக்கும் இதர பகுதிகள் குறித்தும் பேசிய வீடியோக்கள் முந்தைய பதிவிலேயே இருக்கின்றன.அதில் டெப்சாங் பகுதி முந்தைய (ஆட்சியாளர்கள்) காலத்தில் இருந்து சுவீகரிக்கப்பட்டது legacy issue என்பதைத் தெளிவாகச் சொல்கிறார். விஷயத்தைப் புரிந்துகொள்ளக் கொஞ்சம் பொறுமையாகப் பார்க்க வேண்டிய விஷயம் இது.


டாக்டர் சுப்ரமணியன் சுவாமி இந்த tweet இல் சொல்கிற மாதிரி கொஞ்சம் சிக்கலானதுதான். இந்தக் கீச்சுக்கு வழி என்ன என்று ஒருவர் கேட்டதற்கு சுவாமியின் ஒரு வார்த்தை பதில்:: யுத்தம் இன்றைய நிலையில் உடனடி சாத்தியமா? தாங்கள் விட்டுவிட்டுப்போன சிடுக்கல் இன்னதென்று தெரிந்தே வயநாடு தொகுதி எம்பி, நாடாளுமன்றத்தில் பிரதமரைக் கோழை என்று அழைத்தார்.இவரைமாதிரியானவர்கள் தேசத்துக்கே பெரும் தலைகுனிவு என்பதை வருத்தப்பட்டுச் சொல்லி என்ன செய்ய?       


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசுமுறை விஜயமாக ஸ்ரீலங்காவுக்கு நேற்றைக்கு வந்து சேர்ந்து இருக்கிறார். இன்றைக்கு அங்கே நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தியாவின் அதிருப்திக்குள்ளாக நேரிடும் என்பதால் ரத்து செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. முடிந்துபோன (குழிதோண்டிப்புதைக்கப்பட்ட) காஷ்மீர் பிரச்சினை தவிர பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கு வேறு அஜெண்டா இல்லை என்பதை வந்த இடத்திலும்  இம்ரான் கான் பேசி நிரூபித்திருக்கிறார். ராஜபக்ச சகோதரர்கள் மிகவும் தந்திரமாகச் செயல் படுவதாக நினைத்துக்கொண்டு, சீனக்கடன் வலையில் விழுவதற்குத் தயாராக இருக்கிறார்கள். 

மீண்டும் சந்திப்போம்.      


          

Monday, February 22, 2021

இந்தியா சீனா பாகிஸ்தான் ::: #CPEC #OBOR என்ன நிலையில் இருக்கிறது?

ஐந்தாண்டுகளுக்கு முன்னால் சீனா பாகிஸ்தான் எகனாமிக் காரிடார் CPEC, ஷி ஜின்பிங்கின் கனவுத் திட்டமான ஒரே பெல்ட் ஒரே ரோடு CPECஇன் முக்கியமான பகுதியாகத் தம்பட்டம் அடிக்கப்பட்டதே! நினைவிருக்கிறதா? இப்போது அந்தக்கனவுத் திட்டம் என்ன நிலையில் இருக்கிறது? 

  

The Khan government has been now striving hard to work hand in hand with their Chinese counterparts, hoping to overcome any damage done from past criticisms of CPEC. But unfortunately, more than the current ruling party’s unaddressed reservations about CPEC, it is their inefficiency and incompetence that is becoming the cause of bottlenecks in the implementation of the multibillion dollar projects, coming precisely at a time when Chinese investors are growing less interested in unprofitable but politically correct projects. This is why the road to CPEC becomes longer and longer by the day என்று டிப்ளமாட் தளத்தில் எழுதி இருக்கிறார் ஒரு லாகூர் பத்திரிகையாளர். காசுக்கு ஏங்கித் தவிக்கும் நாடாக, சீனாவை மட்டுமே எல்லாவற்றிற்கும் எதிர்பார்த்துக்கிடக்கும் client state ஆகக் குறுகிப்போனபிறகு பாகிஸ்தான் செய்வதற்கு வேறென்ன இருக்கிறது?


சீனா கந்துவட்டி ஏகாதிபத்தியமாக வளர்ந்து நிற்கிற  நிலையில், கடன்படுகிற நாடுகளின் கதி என்னவாகும்? ரொம்பதூரம் 
தேடவேண்டியதே இல்லை. வெகு அருகாமையிலேயே இருக்கிறது. 


ஸ்ரீலங்கா
 அனுபவம் கண்முன்னால் இருக்கவே இருக்கிறது. கெட்டபிறகும் கூட சீனாவின் காலடியில் விழுந்து கிடக்கவே விரும்புகிற ஸ்ரீலங்கா ராஜபட்சே சகோதரர்கள் போலவே, கிடப்பதைப் போல, மீள முடியாமல் கிடக்க வேண்டியதுதான்! இந்தியாவிடம் வாங்கிய 3000 கோடி ரூபாய் கடனை எங்கிருந்து வாங்கித் திருப்பிக் கொடுத்தார்களாம்? ராஜபட்சே சகோதரர்கள் கொஞ்சம் புத்திசாலித்தனமாக, சீனக் கடன் புதைகுழிக்குள் அவர்கள் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டுமானால், இந்தியா அதை இலவசமாகக் கொடுத்துவிட வேண்டுமென பேரம் பேசுவதைக் கூட சீனா சகித்துக் கொள்ள முடியாமல் எச்சரித்திருக்கிறது.

இன்னொருபக்கம் ....

அமெரிக்க வர்த்தகத் தடைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று சீனா கோரிவருவதன் பின்னணியில் ;;; ஹுவாவே: டிரம்ப் விதித்த அமெரிக்கத் தடைகளால் பன்றி வளர்ப்பில் கவனம் செலுத்தும் சீன செல்பேசி நிறுவனம் என்று பிபிசி தமிழ் செய்தித்தளம் சொல்கிறதே, அதையும் பார்த்துவிடலாமா?

மீண்டும் சந்திப்போம்.  

Saturday, February 20, 2021

இந்திய சீன எல்லைப் பிரச்சினை::: உடனடியாகத் தீர்வு காண முடிகிற விஷயம் தானா?

சேகர் குப்தா நிறைய அனுபவமுள்ள பத்திரிகையாளர் ஒரு பக்கச் சார்பாகவே பேசிவருபவர் என்றாலும்  கூட சீனா  உடனான எல்லைப்பிரச்சினைகள் குறித்த தனது பார்வையை இந்த 25 நிமிட வீடியோவில் பேசுவதைக் கவனமாகக் கேட்டேன்.


ஒரு முழு அளவிலான யுத்தத்தில் போய் முடிவதை இந்தியா விரும்பவில்லை, சீனாவும் கூட அதற்குத் தயாராக இல்லை என்பது அவர்களுடைய தம்பட்டம், ராணுவ ரீதியான பில்டப்புகள் எல்லாவற்றையும் தாண்டி 1962 இல் இருந்ததுபோல பலவீனமான அரசியல் தலைமை இப்போது இல்லை என்பதால், இந்திய ராணுவம் இந்த முறை சீனர்களை எதிர்கொள்ளத் தயாராகவே இருந்ததால், சர்வதேச அளவில் இந்தியா ஒரு வலுவான கூட்டணியை அமைத்திருக்கிறது என்பதால், சீனர்கள் தங்களுடைய அட்வென்ச்சரிலிருந்து பின்வாங்கவேண்டி வந்தது. இருமுனைப்போரை இந்தியா என்றில்லை, எந்த நாடுமே சமாளிக்க முடியாது என்று சேகர் குப்தா சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அதுஉருவான வும் இந்திய வெறுப்பிலேயே உருவான பாகிஸ்தான் ஏறத்தாழ  client state / சீனாவின் விருப்பத்துக்கேற்ப ஆட்டுவிக்கப்படுகிற பொம்மை அரசுதான் என்றாகிவிட்ட  நிலையில் அவர்களுடன் சமாதானமாகப்போவது சாத்தியமா?  

The Modi government is our most political of all. In the sense that it weighs all policy in electoral terms. If so, it would need hostility with Pakistan to persist. Because Pakistan and pan-Islamic terrorism are the warp and weft in which electoral polarisation at home comes gift-wrapped.That is the fundamental issue the Modi government will need to weigh. Will it let domestic political compulsions limit its strategic options, or have the confidence to change? இப்படி சேகர் குப்தா சொல்வது எந்த வகையில் சரியாக இருக்கும்? 


StratNewsGlobal தளத்தில் நிதின் கோகலே இந்த 12 நிமிட வீடியோவில் சொல்வதையும் கொஞ்சம் கேளுங்களேன்! எழுபது வருடங்களுக்கும் மேலாக, தீர்வு காணப்படாமல் ஒத்திபோடப்பட்டுக் கொண்டே வந்த ஒரு சிக்கல், இப்போது பிராந்தியத்தில் இருநாடுகளுமே வலிமையான சக்திகளாக வளர்ந்து நிற்கையில், யார்  யாருக்கு அடங்கிப்போவது என்பதாக மாறிவிடாமல் பார்த்துக்கொள்வதே முக்கியம் ஆட்டத்தில் எதிர்த் தரப்புடன் சேர்ந்து ஆட்டம்போடுகிற ஒரு சில்லறை உடன் இணக்கமாகப் போவது அல்ல பாகிஸ்தான் தரப்பில் உண்மையாகவே இணக்கமாகப்போகிற ஒரு சூழ்நிலை எழுமேயானால், அப்போது பார்த்துக் கொள்ள வேண்டிய விஷயம்! இப்போது அல்ல.

இந்த ஆட்டத்தில் சீனா, பாகிஸ்தான் மட்டுமே இல்லை. மியான்மர், ஸ்ரீலங்கா போன்ற நாடுகளும் இருக்கின்றன. முத்தண்ணன் அந்தஸ்தைப் பறிகொடுத்துவிட்ட அமெரிக்காவும் இருக்கிறதே!     

மீண்டும் சந்திப்போம்.  

Thursday, February 18, 2021

இந்திய சீன எல்லையில் போர்ப்பதற்றம் குறைகிறதா?

ராகுல் காண்டி மாதிரி முழு  மங்குணியாக இல்லாமல் கொஞ்சம் விவரங்களைத் தெரிந்து கொண்டு பேசலாம் என்று நினைக்கிறேன் என்று முந்தைய பதிவில் சொல்லி இருந்ததன் தொடர்ச்சியாக! இந்தியா சீனா இருநாடுகளும் தங்களுடைய படைகளை 1920 ஏப்ரலில் இருந்த மாதிரியே வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒப்புக்கொண்டதைப் பற்றிய அதிக விவரங்கள் இப்போது வெளிவரத் தொடங்கி இருக்கின்றன. 


இந்த 5 நிமிட வீடியோவில் சில தகவல்கள் இருக்கின்றன. China wanted to humiliate Modi, but was forced to withdraw as military stalemate was going nowhere' என்ற தலைப்பிட்டு The Print தளத்தின் ஜ்யோதி மல்ஹோத்ரா, StratNews Global தளத்தின் தலைமை ஆசிரியர் நிதின் கோகலே மற்றும் ஹிந்து நாளிதழின் சீனா கரெஸ்பாண்டென்ட் அனந்த் கிருஷ்ணன் இருவருடனும் உரையாடுகிற 36 நிமிட காணொளியில்   சீனத்துச் சண்டியர் தனது உதார்களை சுருட்டிக் கொண்டதன் பின்னணியை நிதின் கோகலே அழுத்திச் சொல்கிறார். 


வீடியோ 18 நிமிடம். இதில் இன்னும் விரிவான தகவல்கள் இருக்கின்றன. இப்போது நடந்து கொண்டிருப்பது படைகளை பழைய நிலைக்குக் கொண்டுபோவதான disengagement மட்டுமே,PLA’s gradual withdrawal from Galwan and other locations in eastern Ladakh is just the start of what is likely to be a long-winding complicated process, which from an Indian standpoint must end at complete de-escalation across the Line of Actual Control. De escalation  என்பதற்கும் disengagement என்பதற்கும் வித்தியாசம் இருப்பதைப் புரிந்து கொண்டால், அங்கே எல்லைப் பகுதியில் என்ன நடக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியும். 


அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா,ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளுடைய 
மந்திரிகள் அளவிலான  QUAD பேச்சுவார்த்தை இன்று மாலை நடந்து முடிந்திருக்கிறது. ஜோ பைடன் நிர்வாகம் எந்த அளவுக்கு இந்த முயற்சியை முன்னுக்கு எடுத்துச் செல்லும் என்பதில் இன்னமும் ஒரு தெளிவு இல்லை. அமெரிக்காவை நம்பிப் பயனில்லை என இஸ்ரேல்,சவூதி அரேபியா, பிரான்ஸ் முதலான நாடுகள் ஏற்கெனெவே தன் கையே தனக்குதவி என்று முடிவெடுத்துச் செயல்பட ஆரம்பித்திருப்பதையும் இந்தநேரத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.  
 
மீண்டும் சந்திப்போம்.    

Friday, February 12, 2021

#டொனால்ட்ட்ரம்ப் தகுதிநீக்க விசாரணை! #ராஜ்நாத்சிங் அறிக்கை! #சேகர்குப்தா !

அமெரிக்க டெமாக்ரட்டுகளின் கோமாளித்தனங்களில் மிகவும் உறுத்தலாக இருப்பது டொனால்ட் ட்ரம்ப் பதவி விலகிய பிறகும் கூட கடு, ம் வன்மத்துடன் இரண்டாவது முறையாக தகுதி நீக்கம் செய்கிற தீர்மானம், குற்றச் சாட்டுக்களை வரையறுத்து காங்கிரசில் நிறைவேற்றி செனெட்டுக்கு அனுப்பியிருப்பது 

வீடியோ 6 நிமிடம் 

இங்கே இதை வாசிக்கவரும் நண்பர்களுக்காக தகுதி நீக்கம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்ப.தைச் சுருக்கமாகச் சொல்லியாக வேண்டும்! அமெரிக்க காங்கிரஸ் என்பது நம்மூர் மக்களவை மாதிரி! என்ன என்ன குற்றச்சாட்டுகளின் பேரில் தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதைதீர்மானம்  வரையறுத்து, அதை செனேட் சபைக்கு ((நம்மூர் மாநிலங்களவை மாதிரி) அனுப்புகிற அதிகாரம் மட்டுமே உண்டு. அங்கே impeachment தீர்மானம் மெஜாரிடி உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டதால் மட்டுமே தகுதிநீக்கம் செய்யப்பட்டதாகி விடாது. செனேட் சபை உறுப்பினர்கள் ஜூரர்களாகவும், உச்ச நீதிமன்றத் தலைமைநீதிபதி, விசாரணை நீதிபதியாகவும் இருந்து ஒரு நீதிமன்றமாகவே செயல்பட்டு, வழக்கு விசாரணை நடந்து,  வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டுபங்கு செனேட் உறுப்பினர்கள் ஆதரித்து  வாக்களித்தால் மட்டுமே தகுதி நீக்கம் நிறைவேறும். டெமாக்ரட்டுகளுக்கு இது தெரியாதா? காங்கிரசின் ஸ்பீக்கர் நான்சி பெலோசி இது நிறைவேறாது என்று தெரியும் என வெளிப்படையாகவே சொன்னார் 

ஆனாலும் டொனால்ட் ட்ரம்ப் மீதான பயம், அவர் மறுபடியும் அதிபர் பதவிக்குப் போட்டியிடவே கூடாது என்கிற வன்மத்தில் டெமாக்ரட்டுகள் 16 மணிநேர விசாரணையில் ஒரு முழுமையான சாட்சியம் எதுவும் இல்லாமலேயே முடித்திருக்கிறார்கள் அடுத்து ட்ரம்ப் தரப்பு வாதங்கள், விசாரணை நடக்க வேண்டும்.. நாட்டைப் பிளவுபடுத்தி விட்டார் ட்ரம்ப் என்று கூவிக் கொண்டே டெமாக்ரட்டுகள் அந்த வேலையைத் தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.


2020 ஏப்ரல் மாதத்தில் இருந்தபடியே சீனா, இந்தியா இரு நாடுகளும் படைகளை வைத்திருக்கவேண்டும் என இரு தரப்பும் ஒப்புக்கொண்டு, அதன்படி படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் அறிவித்ததில், வழக்கம் போல ராகுல் காண்டி, விஷயத்தைப் புரிந்து கொள்ளாமலேயே பிரதமர் மோடியைக் கோழை என்று ஏசியிருக்கிறார்.     

 


சேகர் குப்தா நேற்றைக்குப் பேசியது. வீடியோ 26 நிமி. ரஷ்யாவின் இஸ்வேஸ்தியாவோடு Tass செய்தி நிறுவனத்தைப் போட்டுக் குழப்பிக்கொண்டது ஒரு சின்னச் சறுக்கல்.  ஆனாலும் ராஜ்நாத் சிங்கின் அறிக்கையைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகவே சொல்கிறார்.  

இந்த விவகாரத்தில் ராகுல் காண்டி மாதிரி முழு  மங்குணியாக இல்லாமல் கொஞ்சம் விவரங்களைத் தெரிந்து கொண்டு பேசலாம் என்று நினைக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.

Sunday, January 31, 2021

#சீனவைரஸ் #இந்தியவாக்சின்கள் #அண்ணாத்த அம்பேரிக்கா

புதிய அமெரிக்க அதிபர்,  ஜோ பைடன் இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் உரையாடியிருப்பது ஆரம்ப சூரத்தனமா? அல்லது நிஜமானதுதானா? ஜோ பைடன் தனது நிர்வாகம் ஒபாமாவின் 8 ஆண்டு கால ஆட்சியின் (சொதப்பல்களின்) தொடர்ச்சியாக இருக்காது என்று வேறு சொல்லியிருக்கிறாரா? அது இன்னும் அதிக அவநம்பிக்கையைத் தோற்றுவிக்கிற மாதிரியே இருக்கிறது!


சேகர் குப்தா அனுபவமுள்ள பத்திரிகையாளர்தான்! ஆனால் அமெரிக்க டெமாக்ரட்டுகளை ந.ன்கு புரிந்து கொண்டுதான் இந்த 20 நிமிட வீடியோவில் பேசுகிறார் என்று சொல்வதற்கான சிறிதளவு தடையமும் இல்லை. இந்தியாவைப் பொறுத்தவரை, ஜோ பைடன் நிர்வாகம் நம்பத்தகுந்தது தானா என்பது ரஷ்யாவிடமிருந்து வாங்க உத்தேசித்திருக்கிற S 400 ஏவுகணைத் தொகுதிகளைக் குறித்து என்ன செய்யப்போகிறது என்பதில் ஓரளவு அனுமானிக்க முடியும். 


நேட்டோ ராணுவக் கூட்டணியில் இருக்கும் துருக்கி மீது 2020 டிசம்பரில் இதே ஆயுதக் கொள்முதல்  காரணமாகப் பொருளாதாரத் தடை விதித்தது நினைவிருக்கிறதா? 2018 இல் இந்தியா 500 கோடி டாலர்கள் மதிப்பில் ஐந்து தொகுதி S 400 ஏவுகணைத் தொகுதிகளை வாங்க  ஆர்டர் கொடுத்தது நினை,விருக்கிறதா? டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் அதிருப்தியைப் பொருட்படுத்தாமல் இந்தியா தனது பாதுகாப்புக்காரணங்களுக்காக இந்த ஏவுகணைத் தொகுதியை வாங்குவதில் இன்னமும் உறுதியாக இருக்கிறது.


வூஹான் வைரசை உலகெங்கும் சீனா பரப்பியதில்  உலகெங்கும் பத்து கோடிப்பேருக்கும் மேலானோர் தொற்றுக்களா, கி, 22 லட்சத்து 31 ஆயிரம் பேர் இன்று வரை உயிரிழந்திருக்கிறார்கள். நோயைப் பரப்பியதோடு அதைவைத்து ஆதாயமும் தேடமுயன்ற கேவலமான நாடு சீனா. ஆனால் சீன வாக்சின்கள் நிறைய பக்க விளைவுகளை உண்டாக்கியதும்,, அவற்றின் செயல்திறன் நிரூபிக்கப்படாததாலும்., உலகச் சந்தையில் கொள்வாரில்லை. ஆனாலும் இந்தியத் தயாரிப்புக்கள் மீது வன்மம் கலந்த விஷமப் பிரசாரத்தை சீனா தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது.

அதையும் தாண்டி இந்தியாவின் சாதனைகள் ஒரு நல்ல தொடக்கத்தோடு 2021 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறது.

மீண்டும் சந்திப்போம்.

Thursday, July 2, 2020

இந்தியா பாகிஸ்தான் சீனா! திரண்டு வரும் போர்மேகங்கள்!

இந்தப்பக்கங்களில் சீனா எழுபது என்று சென்ற வருட அக்டோபர் மாதத்தில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சி, சீனத்தை ஆள ஆரம்பித்த எழுபதாவது ஆண்டுக் கொண்டாட்டங்களைப் பற்றி எழுதிய பதிவுகளில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும், சீன அதிபருமான ஷி ஜின்பிங் தனது கனவுத்திட்டத்தை முன்வைத்துப் பேசியதை கொஞ்சம் பார்த்திருக்கிறோம். 2049 ஆம் ஆண்டுக்குள் சீனாவை உலகின் வலிமையான பொருளாதாரமாகவும், சக்தியாகவும் உருவாக்குவதற்கு சபதம் எடுத்துக் கொண்ட மாதிரி மேலோட்டமாக இருந்தாலும், ஷி ஜின்பிங்  தன்னுடைய ஆயுள் காலத்திலேயே சீனாவை உலகின் நட்ட நடுநாயகமாக (Tianxia) ஆக்க முயற்சிக்கிறாரா அல்லது உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் சரிந்து கொண்டிருக்கிற தனது இமேஜைக் காப்பாற்றிக் கொள்ள தடாலடி நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறாரா? சீனாவின் அண்மைக்கால நடவடிக்கைகளில்  இப்படி சந்தேகம் எழுந்திருப்பதென்னவோ நிஜம்! 


The Print  தளத்தில் சேகர் குப்தா சீனாவைக் குறித்து  உலகநாடுகளிடம் அதிகரித்துவரும் எச்சரிக்கை உணர்வு குறித்து சில முக்கியமான விஷயங்களை இந்த 25 நிமிட வீடியோவில் சொல்கிறார். சீனாவுடன் நெருக்கம் காட்டுவதற்காக, தங்களுடைய நீண்ட காலக் கூட்டாளியான அமெரிக்காவை உதறிய ஆஸ்திரேலியா, பிரிட்டன் இவைகளுடன் நியூசிலாந்து, கனடாவும் சேர்ந்து சீனாவைக் குறித்தான தங்களுடைய கொள்கை அணுகுமுறையில் தலைகீழ் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றன. இந்த நாடுகள் மறுபடியும் அமெரிக்க நிலையை ஆதரிக்க ஆரம்பித்திருப்பதற்கு, ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு காரணம் இருந்தாலும், ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய சீனாவுடன் நெருக்கம் என்கிற நிலைமை இப்போது இல்லை என்பதில் சீனாவுடைய பேராசையுடன் கூடிய ஆதிக்க விஸ்தரிப்புக் கனவுகள் தான் என்பது மிக முக்கியமான காரணம். சீனாவுடன் நெருக்கம் காட்டியதற்காக இப்போது மிகவும் வருத்தப் படுவது ஆஸ்திரேலியா தான்! தனது பாதுகாப்பு பட்ஜெட்டை 40% அதிகரித்து, தனது வருத்தத்துக்குப் பரிகாரம் தேட ஒரு ஆரம்பத்தைத் தொடங்கி வைத்து இருக்கிறது.

பிரிட்டனுக்கு வேறுவிதமான பிரச்சினை! ஹாங்காங் கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்குச்  சீனா, கடுமையான சட்டத்தை சிலநாட்களுக்கு முன் அமல் படுத்தியதில், விரும்புகிற ஹாங்காங் குடிமக்களுக்கு பிரிட்டிஷ் குடியுரிமை வழங்க முன்வந்திருக்கிறது. ஆங்கிலம் பேசும் நாடுகள்தான் இப்படி என்றில்லாமல் 
இத்தனைகாலம் பின்னுக்குத் தள்ளி வைக்கப்பட்டு இருந்த தைவான் விஷயமும் கூட இப்போது முன்னுக்கு வர ஆரம்பித்திருக்கிறது என்பதில் சீனத்துப்பூனைக்கு மணிகட்ட  உலகநாடுகள்  பலவும் ஒன்று சேர ஆரம்பித்திருக்கின்றன.

ஆனால் சீனத்துச் சண்டியர் தன்னுடைய உதார்களைக் கொஞ்சமும் குறைத்துக் கொள்ளவில்லை. இந்திய எல்லையில் தனது படைகளைக் குவித்து வருவதோடு, பாகிஸ்தான், நேபாளம் இவைகளையும் இந்தியாவுக்கு எதிராகக் கொம்புசீவிவிட்டுக் கொண்டிருக்கிறது. இந்தத் துண்டு துக்காணிகளோடு, வங்காளதேசம், இலங்கை நாடுகளும் சீனாவுடன் கைகோர்க்கலாம். இன்னமும் இவ்விரு நாடுகளுடைய நிலைபாடும் தெளிவாகத் தெரியவில்லை.

ஒரு முழு அளவிலான யுத்தம் இந்தியா சீனாவுக்கிடையே வருமா என்பது சந்தேகமே. ஆனால் முட்டலும் உரசலும் இன்னும் நீண்டநாட்களுக்கு நீடிக்கும். ஒப்பீட்டளவில் சீனாவுடைய ராணுவபலம் இந்தியாவை விட அதிகம் தான் என்றாலும், தன்னுடைய முழுபலத்தையும் காட்டுகிற நிலையில் சீனா இல்லை. முன்னர் 1962 இல் இந்தியாவுக்கு இருந்த பலவீனமான அரசியல் தலைமை மாதிரி  இப்போது இல்லை என்பதோடு இந்திய ராணுவம் இப்போது முழுமையாகத் தயார் நிலையில் இருக்கிறது.

துப்பாக்கி, பீரங்கிகளை விட சீனாவை உயிர்போகிற மாதிரி வலிக்கிற இடமாகப் பொருளாதாரரீதியிலான அடியை இந்தியா கொடுத்திருக்கிறது. டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளை இந்தியா தடை செய்திருப்பதில், டிக்டாக் நிறுவனம் ஒன்றுக்கு மட்டுமே 45000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படலாம் என்கிறார்கள். Huawei  நிறுவனத்துக்கான தடையை அமெரிக்கா மட்டுமே இதுநாள்வரை வலியுறுத்தி வந்தது. இப்போது வேறுபல நாடுகளும் சீனத்தயாரிப்புகளுக்குத் தடை விதிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.  
 
பாகிஸ்தானியர்கள் பாடு திண்டாட்டம்தான்! சீனாவுடன் சேர்ந்து கும்மியடிக்கலாம் என்கிற கனவும் கூட நீண்ட  நாட்களுக்கு நிலைக்காது என்கிறமாதிரித்தான் நிலவரம் இருக்கிறது. நேபாளத்துக் கம்யூனிஸ்ட் அரசின் நிலைமைகூட பரிதாபம்தான்! அண்ணன் மகிந்த மாதிரி கோத்தபய ராஜபட்சே சீன ஆதரவு நிலை எடுப்பாரா என்பது கூட 9 ரூபாய் நோட்டு மாதிரியான கேள்விதான்!  

மீண்டும் சந்திப்போம்.   
         

Monday, March 30, 2020

#சீனாவைரஸ் சீன அதிபரின் களிமண் கால்கள்!

ஒருபக்கம் உலகின் பலபகுதிகளிலும் சீனவைரஸ் தொற்று ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் சீனக் கம்யூனிஸ்ட்  கட்சிக்கும், சீன அதிபர் ஷி ஜின்பிங்குக்கும் செல்வாக்கு மிகவும் சரிந்து போயிருப்பதாக ANI செய்தித்தளம் இன்று பிற்பகல் ஒரு விரிவான செய்திக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது.
கட்டுரைக்கு வைத்திருக்கிற தலைப்பே Virus exposes Xi's feet of clay வடிவேலு காமெடியாக சொல்வதானால் கட்டடம் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்கு! ஆனால் தலைப்பு நேரடியாகச் சொல்வது மண் குதிர்!


  
இந்த 2 நிமிட வீடியோவில் சொல்கிற மாதிரி நாங்கள் வூஹான் வைரஸ் பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டு விட்டோம்! உலகத்தைக் காப்பாற்றவும் உதவி செய்யவும் தயாராக இருக்கிறோம் என்ற சவடால், பிரசாரம் எந்த அளவுக்கு உண்மை? எதற்கும் இந்த ட்வீட்டர் செய்தியைப் பார்த்துவிடுங்கள்! வூஹானில் வைரஸ் தொற்றால் இறந்தவர்களுடைய அஸ்தியைப் பெற்றுக் கொள்வதற்காக நீண்ட கூட்டம்.

Massive deliveries of urns in Wuhan have raised fresh skepticism of China’s coronavirus reporting.As families in the central Chinese city began picking up the cremated ashes of those who have died from the virus this week, photos began circulating on social media and local media outlets showing vast numbers of urns at Wuhan funeral homes.



China has reported 3,299 coronavirus-related deaths, with most taking place in Wuhan, the epicenter of the global pandemic. But one funeral home received two shipments of 5,000 urns over the course of two days, according to the Chinese media outlet Caixin.It’s not clear how many of the urns were filled.Workers at several funeral parlors declined to provide any details to Bloomberg as to how many urns were waiting to be collected, saying they either did not know or were not authorized to share the number. என்கிறது நியூயார்க் போஸ்ட் செய்தி.  ஆக, வைரஸ் தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கையை மட்டுமல்ல பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையையும் சீனா ஆரம்பத்திலிருந்தே குறைத்தே சொல்லிவருகிறது என்ற விஷயம் ஊர்ஜிதமாகியிருக்கிறது. ஆனால் இந்திய ஊடகங்களில் சிலநாட்களாகவே சீனா மீண்டு வந்த வெற்றிக்கதையைப் பற்றிய பிரசார தம்பட்டம் கொஞ்சம் கூடுதலாகவே அடிக்கப்பட்டு வருகிற வேளையில் ANI செய்திநிறுவனத்தின் இந்தச் செய்திக் கட்டுரை சீன அதிபரும் சீனக்கம்யூனிஸ்ட்  கட்சியும் மக்களிடையே பரவலாக செல்வாக்கிழந்து நிற்பதைப் படம்பிடித்துக் காட்டுகிறது. 

ஆஸ்திரேலியத்தலைநகர் கான்பெராவில் சீனா பாலிசி சென்டரின் இயக்குனரான ஆடம் நீ பிரச்சினையை இருவிதமாகப் புரிந்துகொள்ளலாம் என்கிறார். ஒன்று சீன அதிகாரிகளின் தவறான கையாளுதல். அடுத்தது பிரச்சினை பெரிதாகிக் கொண்டே போன காலத்தில் ஷி ஜின்பிங்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் மேல்மட்டத் தலைவர்களும் வெளியே வராமல் பாதுகாப்பாகப் பதுங்கிக் கொண்டது. இந்த இரண்டிலும் கம்யூனிஸ்ட் கட்சி, பாரமௌன்ட் லீடர் ஷி ஜின்பிங் இருதரப்புடைய இமேஜும் கணிசமாக அடிவாங்கியிருக்கிறது என்பது சாராம்சம். சீனாவுக்கு கடந்த ஒருவருடமாகவே பல்வேறு விஷயங்கள் பெரும் சவாலாக இருந்தன. பொருளாதார மந்தநிலை, அமெரிக்காவுடனான வர்த்தகப் போர், ஹாங்காங் போராட்டங்கள் வரிசையாக சமாளிக்க வேண்டியவைகளாக இருந்ததோடு வூஹான் வைரஸ் தொற்றும் சேர்ந்து கொண்டதில் அதுவரை கேள்வி கேட்க முடியாததாக இருந்த சீனாவின் அரசியல் தலைமை (ஒப்பாரும் மிக்காரும் இல்லாத paramount leader ஷி ஜின்பிங்) அத்தனை குளறுபடிகளுக்கும் பதில் சொல்லியாக வேண்டிய நிலைமை!

ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியின் எழுதப்படாத கோட்பாடுகளில் அடுத்தவர் மீது பழிசுமத்தி அதன் பின்னே ஒளிந்து கொள்வது, மிக முக்கியமானது! கோளாறுகளுக்குப் பதில் சொல்வதோ பொறுப்பேற்றுக் கொள்வதோ இல்லை! சித்தாந்தம் கோட்பாடு விமரிசனம் சுயவிமரிசனம் என்பதெல்லாம் ஏட்டளவோடு சரி! பிரசாரம் ஒன்றே இன்றைய கம்யூனிஸ்டுகளுக்கு முழுவேதம்! சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முந்தைய காலத்தில் மாசேதுங் ஒருவரே மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் இப்படி எல்லாமுமாக ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாபெரும் தலைவராக இருந்தார். அவருக்குப் பின் ஷி ஜின்பிங் தான் அந்த இடத்தைப் பிடித்தார் என்றாலும் சாயம் சீக்கிரமாகவே வெளுத்துப் போய் விட்டது.

ANI கட்டுரையைலிங்கில் முழுமையாகப் படித்துப் பாருங்களேன்! சீனத்து உதார்கள் எப்படிப்பட்டவை என்பதைக் கொஞ்சமாவது புரிந்துகொள்ள வேண்டாமா?

மீண்டும் சந்திப்போம்.              

Wednesday, March 4, 2020

முடங்கிப்போன #CPEC பாகிஸ்தான் #பொருளாதாரம் - 01

இன்றைக்கு NDTV இன்னொரு தளத்தில் (Bloomberg) இருந்து இரவல் வாங்கிப்போட்டிருக்கிற ஒரு செய்தி சீனா பாகிஸ்தான் எகனாமிக் காரிடார் என்கிற CPEC முற்றிலுமாக முடங்கிப்போயிருக்கிற கதையைக் கொஞ்சம் விரிவாகவே சொல்லியிருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. பெல்ட் & ரோடு இனிஷியேடிவ் சுருக்கமாக BRI சீனாவின் OBOR ஆதிக்கக் கனவுகளின் ஒருபகுதியாக மிகுந்த ஆரவாரத்துடன் ஆரம்பிக்கப் பட்ட CPEC, இன்று களையிழந்து அப்படியே அந்தரத்தில் நிற்கிறதாம்!

2018 சீனத் தம்பட்டம் என்னவானது? 
   
ஒரு விரிவாக்கப்பட்ட ஆழ்கடல் துறைமுகம், விமான நிலையம், சீனாவின் மேற்குப்புற மாகாணக்கடைசி வரை இணைக்கிற தரமான சாலைகள், ரயில்வே பாதைகள்,தொழிற்சாலைகள், பைப்லைன்கள், மின் உற்பத்தி நிலையங்கள் என்று கனவென்னவோ மிகப் பெரியதாகத்தான் இருந்தது. 62 பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு இது வரை 19 பில்லியன் டாலர்கள் வரை ஆகியிருக்கிறது என்பதில், பாகிஸ்தான் திரும்பிச் செலுத்தவேண்டிய தவணை, வட்டி எவ்வளவு என்கிற விவரம் அவ்வளவாக வெளியே வரவில்லை. கெஞ்சிக் கூத்தாடி சவூதி அரேபியாவிடமிருந்து கொஞ்சம், IMF இன் கடுமையான நிபந்தனைகளை ஏற்றபிறகு ஒரு 6 பில்லியன் டாலர் வாங்கி, அடுத்த தவணைக்கடனாக இன்னொரு 6 பில்லியன் டாலர் கடனுக்காகக் கையேந்திக் கொண்டு இருக்கிற பாகிஸ்தான் மீது சீனா நம்பிக்கை இழந்து விட்டதன் வெளிப்பாடா இது? CPEC ஆர்ப்பாட்டமாக ஆரம்பித்து ஏழாண்டுகளாகின்றன என்பதில்  எதனால் திட்டமிட்டபடி வேலைகள் மளமளவென்று நடக்காமல் அந்தரத்தில் தொங்கவிடப்பட்டிருக்கிறது.

திட்டத்தின் ஒரிஜினல் நோக்கப்படி, OBOR என்பது சீனாவின் புதிய பட்டுப்பாதை! சீனர்களுடைய கடலாதிக்கத்தை தங்குதடையில்லாமல் விரிவு படுத்துகிற கனவோடு ஆரம்பிக்கப்பட்டது தான்! தற்போதைய நாட்களில் குறுகிய மலாக்கா ஜலசந்தி வழியாகவே சீன வர்த்தகக் கப்பல்கள் பயணிக்கின்றன. இந்தக் கடல்பாதை, பல்வேறு தரப்புகளில் இருந்து மறிக்கப்படலாம் என்பதான சினேரியோவை மாற்றுவதோடு, தூரம் குறைவான அரேபியக்கடல் பிராந்தியம் சீன வணிகம் தங்குதடை இல்லாமல் நடப்பதற்கு தற்போதைக்கு பாகிஸ்தானில் இருக்கிற  க்வாடார் துறைமுகம் மிகவும் உதவியாக இருக்கும் என்பதோடு வர்த்தகத்தைப் பாதுகாக்கும் சாக்கில் இந்தியாவுக்கு மிக அருகே சீனக்கடற்படை உலாவலாம்! தேவைப்பட்டால் கடற்படை தளமாகவும் மாறலாம்! பொருளாதாரத்தில் போட்டியாக வளர்ந்துவரும் இந்திய நாட்டுக்கு  உபத்திரவமும் கொடுக்கலாம் என்பது அதன் கேந்திர முக்கியத்துவம்.


திட்டத்தில் ஒரு பழுதுமில்லை! ஆனால் பாகிஸ்தான் சீனாவுடன் அமைக்கவிருக்கும் க்வாடார் பகுதி முழுவதும் சர்ச்சைக்குரிய ஒரு பகுதி! 


பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரின் ஒருபகுதி வழியாக இந்த சாலை அமைக்கப்படுகிறது என்பது ஒருபக்கம். பலூச் இன மக்கள் வாழ்கிற பிராந்தியம். பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு எதிராகத் தொடர்ந்து போராடும் பலூச் மக்கள் பாகிஸ்தானிடமிருந்து விடுதலைவேண்டி வன்முறைகளில் இறங்கிவருவது சீனாவுக்குப் பெரும் தலைவலி! அந்த மக்களுக்கு மருத்துவமனைகள், கல்விக் கூடங்கள் அமைத்துத்தருகிறோம் என்று சீனா முயற்சித்தது கொஞ்சமும்  எடுபடவில்லை. 

அடுத்து வரும் பதிவுகளில் இன்னும் கொஞ்சம் விரிவாகப் பேசலாம்.

மீண்டும் சந்திப்போம்.                               

Tuesday, March 3, 2020

தாலிபான்களோடு ஒப்பந்தம்! ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்புமா?

அதென்னவோ கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளில் அமெரிக்கா உலகத்தின் போலீஸ்காரனாக, ஒவ்வொரு புதைகுழியாகப்போய் சிக்கிக் கொள்வதும், அப்புறம் ஆளைவிட்டால் போதுமடா சாமி என்று எதிரிகளுடன்/ சாத்தானுடன் சமாதானம் செய்து கொண்டு, அதுவரை கூட்டாளிகளாக இருந்தவர்களை அம்போவென விட்டு விடுவதும் ஒரு தொடர்கதையாகவே ஆகிக் கொண்டு வருவது வரலாற்று சோகம்!

  
Start with the Taliban’s commitment to crack down on international terrorist organizations. Douglas London, a former CIA officer who was its head of counterterrorism in South and Southwest Asia, told Foreign Policy that the United States had little reason to trust the Taliban’s leadership would carry out its promises. There’s also reason to doubt Abdul Ghani Baradar, the mullah who signed the agreement on behalf of the Taliban (after having been released from a Pakistani prison in October 2018 after a push by the United States to get the talks going), is in a position to make commitments or grant concessions. “Doha-based representatives [Mohammad Abbas] Stanakzai and Baradar have little sway,” London said. அவர் சொன்ன மாதிரியே காந்தகார் மாகாணத்தின் தென்பகுதியில் இரு மாவட்டங்களில் உள்ளூர் போலீஸ் மீது தாக்குதலை தாலிபான் ஆரம்பித்து விட்டது. ஆப்கானிஸ்தான் ராணுவம், போலீஸ் என்று அமெரிக்கர்களோடு யார்யார் ஆதரவாக நின்றார்களோ அத்தனைபேர்களையும் தீர்த்துக் கட்டுவதில் தான் அவர்களுடைய முனைப்பு இருக்கும் என்பது தெரிந்த விஷயம் தான்! 

The partial truce between the US, the insurgents and Afghan forces lasted for the week running up to the signing of the US-Taliban accord in Doha on Saturday, and was extended over the weekend. “The reduction in violence... has ended now and our operations will continue as normal,” Taliban spokesman Zabihullah Mujahid told AFP.


ஆப்கானிஸ்தானில் பலத்த காவலில் இருக்கும் 5000 தாலிபான்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று ஒப்பந்தம் சொன்னாலும் அவர்களை விடுவிக்கப்போவதில்லை என்று ஆப்கானிஸ்தானின் அதிபர் அஷ்ரப் கனி தெரிவித்திருக்கிறார்.

இந்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்கர்கள் என்ன நினைக்கிறார்கள்? இதே மாதிரித்தான் 1973 இல் வியட்நாம் புதைகுழியில் இருந்து விடுபட அமெரிக்கர்கள் வட வியட்நாமோடு ஒப்பந்தம் செய்து கொண்டதில், அமெரிக்கர்களுக்கு ஆதரவாய் நின்ற தெற்கு வியட்நாமைக் கைகழுவிய கதை இருந்தது என்று ஒரு கருத்து வலுவாக இருக்கிறது. இப்போது சமீபத்தில் கூட, சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் என்று அறிவித்ததில் அமெரிக்கர்களோடு தோளோடு தோள் நின்ற குர்துப் போராளிகள் கைகழுவப்பட்டார்கள். நல்லவேளையாக வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுடன் டொனால்ட் ட்ரம்ப் நடத்திய அமைதிப்பேச்சு வெறும்பேச்சாகவே முடிந்துபோனதில் தற்போதைக்கு தென்கொரியா தப்பித்தது என்று கூடச் சொல்லலாம்.  


 

The Print தளத்தில் சேகர் குப்தாவும், ஜோதி மல்கோத்ராவும், தாலிபான்களோடு பேசுவதில்லை என்று இந்தியா முடிவெடுத்ததால், ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அரசு கோட்டை விட்டுவிட்டது என்ற மாதிரி எழுதுகிறார்கள். இந்த 27 நிமிட வீடியோவில் ஒரு முன்னாள் தூதர், ஒரு பத்திரிகை ஆசிரியர், மற்றும் ஒரு மேஜர் ஜெனெரல் (ஓய்வு) மூவரும் கொஞ்சம் விவரங்களைச் சொல்கிறார்கள்.

அமெரிக்கர்கள் விட்டால் போதுமென்று ஓடத்தயாராக இருக்கிறார்கள் என்பதுவரை சரி. அதனால் தாலிபான்களால் ரணகளமாகியிருக்கும் ஆப்கானிஸ்தான் அமைதியைச் சந்திக்கும் என்பதற்கு ஒரு உத்தரவாதமும் இல்லை. அதே சமயம் தாலிபான்கள் ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுமில்லை. என்ன நடக்கப்போகிறது என்பதைக் கொஞ்சம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். இந்த விஷயத்தை இன்னும் விரிவாகத் தொடர்ந்து இங்கே பேசுவோம். தொடர்புடைய பதிவுகளாக தாலிபான், இந்தியா பாகிஸ்தான் சீனா என்ற குறியீட்டுச் சொற்களில் உள்ளவற்றைப் பார்க்கலாம். 

   

மீண்டும் சந்திப்போம்.             

Tuesday, January 7, 2020

இந்திய நண்டுகள்! ஒரு கதை! ஒரு நல்ல உதாரணமும் கூட!

இந்தியா எதனால் இன்னமும் முழுமையாக வளர்ந்த நாடாக முடியாமல் இருக்கிறது? இந்தக்கேள்விக்கு பதில் தெரிய வேண்டுமா?  இந்திய நண்டுகளைப் பற்றிய குட்டிக்கதை ஒன்று தெரிந்தாலே போதும் என்பார்கள்! அதென்ன இந்திய நண்டுகள்? கடல் நண்டுகளை விற்பனை செய்யும் ஒரு கடையில் பல நாட்டுக் கடற்புறங்களிலிருந்தும் பிடிக்கப்பட்ட நண்டுகளை கண்ணாடிக் குடுவையில் அடைத்துப் பார்வைக்கு வைத்திருந்தார்கள். மற்றெல்லாக் குடுவைகளும் மூடப்பட்டிருந்த நிலையில் ஒரே ஒரு கண்ணாடிக் குடுவை மட்டும் மூடப்படாமல் திறந்தே இருந்ததாம்! ஏன் அப்படி? அதிலிருக்கும் நண்டுகள் வெளியேறித் தப்பிவிடாதா? இப்படிக் கேட்கப்பட்ட போது கடைக்காரர் சொன்னாராம்! அவை இந்திய நண்டுகள்!  ஏதோ ஒரு நண்டு மேலேறித் தப்ப முயன்றால் மற்ற நண்டுகள் அதன் காலைப்பிடித்து இழுத்துக் கீழே தள்ளிவிடும்! அதனால் கவலை இல்லை என்றாராம்.

டொனால்ட் ட்ரம்ப் பேசும் போது சொலைமானி நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்களில் 2012 இல் புது டில்லியில் இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் மீது  நடத்தப்பட்டதைக் குறிப்பிட்டுச் சொன்னது தற்செயலானது அல்ல. நாட்டின் பாராளுமன்றத்தின் மீதே தாக்குதல் நடத்திய போது கூட  அமைதிகாத்த காங்கிரஸ் ஆட்சியாளர்கள் அன்றைக்கு இஸ்ரேலிய தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மட்டும் என்ன செய்திருப்பார்கள்? சந்தேகம், குறுகிய அரசியல் ஆதாயத்துக்காக சொந்த நாட்டு ராணுவத்தின் மீதே ஆட்சிக்கவிழ்ப்பு புகாரை சொன்னவர்கள் காங்கிரஸ் காரர்கள் என்பதை ஏற்கெனெவே இந்தப்பக்கங்களில் ஒரு தொலைகாட்சி விவாதத்தைத் தொட்டுப் பேசி இருக்கிறோம். 

சவுத் சீனா மார்னிங் போஸ்ட்! இது சீனாவின் அலிபாபா குழுமம் நடத்தும்  ஆங்கில நாளிதழ். இன்றைக்கு இப்படி ஒரு படம்போட்டு மோடி தன்னை ஷி ஜின்பிங் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் போராட்டங்கள் இந்தியா சீனா அல்ல என்று காட்டுகின்றன  என்ற தலைப்பிட்டு ஒரு செய்திப்புரட்டை வெளியிட்டிருக்கிறது. எழுதியது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஒரு வங்காளி தேபசிஷ்  ராய் சவுத்ரி! கொஞ்சம் வேடிக்கையான செய்திக்கட்டுரை என்று இங்கே மூன்று நாட்களுக்கு முன் எழுதியிருந்ததை  மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்தபோது இந்தியநண்டுகள் பற்றிய கிண்டலான கதை தான் நினைவுக்கு வந்தது.


சேகர் குப்தா இந்த 15 நிமிட வீடியோவில், சொலைமானி கொல்லப்பட்டபிறகு அமெரிக்கா உலக நாடுகள் பலவற்றுக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதான பட்டியலில் பாகிஸ்தான் இருந்தது ஆனால் இந்தியா இல்லையே ஏன் என்ற கேள்வியை எடுத்துக் கொண்டு சில அனுமானங்களைச் சொல்கிறார். முக்கியமாக பாகிஸ்தான் இருக்கிற (பூகோள) கேந்திர முக்கியத்துவம் பற்றிச் சொல்கிறார். ஆப்கானிஸ்தான், ஈரான் இருநாடுகளுடனும் எல்லையைப் பகிர்ந்துகொள்கிற நாடாக பாகிஸ்தான் மட்டுமே இருக்கிறது, இந்தியா அல்ல. தவிர ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தும் தாலிபான்களில்  பாகிஸ்தான் ராணுவத்தால் பயிற்சி கொடுக்கப் பட்டவர்கள் ஒரு பகுதி என்றால் ஈரானில் இருக்கிற தாலிபான்கள் மீதி. இப்படியான கேந்திர முக்கியத்துவம் இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டுதான் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இந்தியாவுக்கு எந்தப் பங்கும் இருக்கக்கூடாதென்று  அடம்பிடிக்கிறது.  CPEC என்று சீனாவின் மத்தியப்பகுதியை பாகிஸ்தானின் குவடார் துறைமுகத்துடன் இணைக்கிற ப்ராஜெக்ட்  எந்த முன்னேற்றமுமில்லாமல் இருந்தாலும் (பாகிஸ்தானிடம் காசு இல்லை) சீனாவுக்கும் இந்தியா, இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் ஒரு போட்டி நாடாக வளர்ந்துவிடக் கூடாதென்ற நல்லெண்ணம் நிறையவே இருக்கிறது.  

இந்திய நண்டுகள் என்று இன்றைய context இல் யாரைச் சொல்வது? சில வாரங்களுக்கு முன்னால் பிரதமர் சீனா உள்ளிட்ட சில நாடுகளுடன் RCEP என்று பிராந்திய அளவிலான பொருளாதாரக் கூட்டுறவுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துத் திரும்பிய நிகழ்வு நினைவிருக்கிறதா? அதற்கான காரணங்கள் என்னவென்று நினைவிருக்கிறதா? 

இன்னமும் அரசின் சலுகைகளிலேயே திளைத்துக் கொண்டிருக்கும் இந்தியத் தொழில் துறை, போட்டியை சமாளிக்க முடியாமல் தடுமாறும் விவசாயத்துறை, உலகமெங்கும் கணினித்துறையில் ஊழியர்களாக மட்டுமே இருக்க முடிகிற தன்னம்பிக்கை, தொழில் முனைப்பு இல்லாத இளைஞர்கள், தொழில்வளர்ச்சியை விடக் கொழுத்து வளரும் ஒட்டுண்ணிகளாக தொழிற் சங்கங்கள், இடதுசாரிகள் என்று தேசம் முன்னேற விடாமல் காலைப்பிடித்து இழுக்கிற நண்டுகளாக இருப்பதைப் பார்க்க முடிகிறதா?

அப்புறம் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் தளத்தில் காசுக்காக ஒரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவனே தேசத்தைச் சிறுமைப்படுத்துகிற மாதிரி  ஏன் எழுத மாட்டான்?

மீண்டும் சந்திப்போம்.         
         

Wednesday, January 1, 2020

இன்று கவனிக்க வேண்டிய செய்திகள்!

How Pakistan's foreign policy pendulum swung in 2019 இப்படி ஒரு வேடிக்கையான செய்திக்கட்டுரை ஒன்றை பாகிஸ்தானிய நாளிதழ் ட்ரிபியூனில் வாசித்ததில் கொஞ்சம் வேடிக்கையாகப் பொழுது போனது. வெளியுறவுக்கொள்கை என்பது கடிகாரப் பெண்டுலம் போல ஒரே சீராக இங்கும் அங்கும் ஆடிக் கொண்டிருப்பதல்ல என்ற ஒரு அடிப்படையைச் சுட்டிக் காட்டுவதற்காக மட்டுமே மேற்கோள் காட்ட விரும்பினேன். For former ambassador Abdul Basit, the biggest gains Pakistan made in 2019 were with regards to ties with Gulf states and the UN summit. “It is very difficult to measure foreign policy success. Especially, in a year’s time frame, you can’t see any tangible results. But the two main gains that we made this year are regaining Saudi and UAE trust, which we lost somewhat after our decision not to support the Yemen intervention, and Imran Khan’s UN speech. Both of these have helped Pakistan gain some space.”


Shamshad also suggested Imran and his government have had a positive impact on the China-Pakistan Economic Corridor and by extension, ties with Beijing. “Previous rulers tried to milk CPEC for political dividends. It was also initially confined to energy and infrastructure, but Imran has broadened it to incorporate schemes in Pakistani public interest, such as those that would generate employment.” என்று சொல்வதெல்லாம் நகைப்பதற்காக மட்டுமே என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.  

த்ஸ் 


சேகர் குப்தா இந்த 16 நிமிட வீடியோவில் துருக்கியின் எர்துகானும் மலேசியப்பிரதமர் மஹாதிரும் கோலாலம்பூரில் OICக்குப் போட்டியாக இன்னொரு இஸ்லாமிய அமைப்பை உருவாக்க முனைந்ததில் பாகிஸ்தானும் ஆவலாக உள்ளேநுழைந்தது.  சவூதி அரேபியா பின்னாலிருந்து கையை முறுக்கவும் பாகிஸ்தான் வாலறுந்த நரி கதையாக  கோலாலம்பூர் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தவிர்த்ததை சேகர் குப்தா கொஞ்சம் விரிவாகவே விளக்குகிறார். 

   

ஜெனெரல் பிபின் ராவத் இந்தியாவின் முப்படைகளின் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டு இருக்கிறார். வழக்கம்போல காங்கிரஸ் கட்சி இதற்கும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது என்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

   
ராஜ்யசபா டிவியில் கடந்த 25 ஆம் தேதியன்று Chief of Defence Staff என்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெறும் யோசனை பேச்சாகவே இருந்த விஷயத்துக்கு 2019 சுதந்திரதின உரையின் போது பிரதமர் நரேந்திர மோடி செயல் வடிவம் கொடுத்துப் பேசியதை அடுத்து, அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல், பதவிக் காலம் மூன்றாண்டுகள்/ அல்லது 65 வயது நிறைவு என விதிகளில் திருத்தம் என்பதோடு தலைமைத் தளபதியின் பணி என்ன என்பதும் தெளிவாக வரையறை செய்யப்பட்டது. இந்த விஷயங்களைக் குறித்து ஒரு தெளிவான விவாதம், பாதுகாப்பு விவகாரங்களில் அனுபவம் உள்ளவர்களோடு நடத்தப் பட்டது என்றால் அது ராஜ்ய சபா டிவியில் மட்டுமே. விவாதநேரம் 26 நிமிடங்கள்.

உலக அளவில் 4வது பெரிய ராணுவத்தை வைத்திருக்கும் நாடு இந்தியா. முப்படைகளை காலத்துக்கேற்றபடி நவீனப்படுத்தவேண்டும், செயல் திறனை மேம்படுத்தவேண்டும் என்பதன் முன்னோட்டமாக சில பரீட்சார்த்த முயற்சிகள் ஏற்கெனெவே தொடங்கி விட்டன அதன் ஒருபகுதி தான் CDS என்றொரு பதவி, ராணுவ விவகாரத்துறை என்று ஏற்கெனெவே இருக்கும் 4 துறைகளோடு 5வதாக உருவாக்கப்பட்டிருப்பது.

வெளியுறவுத்துறை விவகாரங்களைப் பேசுகிற இந்தப் பக்கங்களில் ராணுவ விவகாரங்களைப் பேசுவானேன்? ஒரு அரசு, நிர்வாகம், பொருளாதாரம், உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதி  என்றெல்லாம் பேசுகிற இடங்களில் ராணுவம் செயல்திறனுடன் தயார்நிலையில் இருக்க வேண்டியதைப்  பேசாமல் இருக்க முடியாது. ஏன் என்று காரணங்களை யோசித்து வையுங்கள், தொடர்ந்து பேசலாம்.

மீண்டும் சந்திப்போம்.            

Saturday, August 31, 2019

சீனபூச்சாண்டியும் மாறிவரும் ஆசியக்கள நிலவரமும்!

ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் நேற்றைக்கு பிரம்ம செலானி எழுதியிருக்கும் இந்தக் களநிலவர அலசல் கொஞ்சம் கவனித்துப் பார்க்கவேண்டிய தகவலாகவும்  இருக்கிறது. பிரம்ம செலானி சொல்கிற மாதிரி ஆசியக் கள நிலவரம் எப்படியிருக்கிறது? இன்றைக்கு ஆசியாவில் கள நிலவரத்தைத் தீர்மானிக்கும் சக்திகளாக அமெரிக்கா, சீனா,
ரஷ்யா, இந்தியா, ஜப்பான் இந்த ஐந்துநாடுகள் இருப்பதில், அமெரிக்க சீன வர்த்தகப்போர் புதுப்புது உச்சங்களைத் தொட்டு வருவதை முந்தைய பதிவில் கொஞ்சம் பார்த்து இருக்கிறோம் இல்லையா?  அதேபோல ஜப்பானுக்கும் தென் கொரியாவுக்கும், உலகப்போர்களின் எச்சசொச்சமாகத் தொடரும் வன்மம், பிராந்தியத்தில் கொஞ்சம் டென்ஷனைக் கூட்டிக் கொண்டிருக்கிறது. ஹாங்காங்கில் மூன்று மாதமாகத் தொடரும் போராட்டங்களை மிருகபலத்தோடு நசுக்குவதற்கு சீனா தருணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. இந்திய நிலைமை இன்னும் கொஞ்சம் சிக்கலானதாக! பாகிஸ்தான், சீனா என்று வன்மத்தோடு  இரு அணு ஆயுதவல்லமையோடு அண்டைநாடுகள் என்று ஆசிய அமைதியைக் குலைக்கும் நான்கு விதமான சிக்கல்கள்.


மேலே சொன்ன காரணிகளின் பின்னணியோடு அடுத்தவாரம் ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் கிழக்கத்தியப் பொருளாதார ஃபோரம் அமைப்பின் கூட்டத்தில்  ரஷ்ய அதிபர் புடினுடன் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவிருப்பதை குறித்து, அதன் முக்கியத்துவம் பற்றி பேசுவதோடு பிரம்ம செலானி தன் களநிலவர அலசலைத் தொடங்குகிறார்.   அண்டைநாடுகள் எல்லாவற்றுடனும் எல்லைப்பிரச்சினையைத் தொடர்ந்து கொண்டிருக்கிற ஒரே நாடு சீனா என்றால், தனிநாடு கேட்டுப் பிரிந்து போனபிறகும் கூட எதற்கெடுத்தாலும் இந்தியாவோடு கச்சைகட்டிக் கொண்டு வெறுப்பில் எரியும் மனங்களோடு பாகிஸ்தான் சீனாவோடு சேர்ந்து கொண்டு, பயங்கரவாதத் தாக்குதல்களை இந்திய எல்லைக்குள் நடத்தத் தவியாய்த் தவித்துக் கொண்டிருக்கிறது. முழு அளவிலான போர்நடத்த பாகிஸ்தானுக்குத் தெம்பில்லை என்றால் சீனாவுக்கோ தன் வர்த்தக நலன்கள் தான் பிரதானம். காஷ்மீர்  விவகாரத்தில் சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினாலும்   Huawei நிறுவனத்தை 5G சேவை கட்டுமானங்களில் தடை செய்தால் என்று மிரட்டல் தொனியோடு எச்சரிக்கை செய்ததையும் கவனிக்க வேண்டும். ஆசியாவில் சமநிலையை சீர்குலைக்கிற பெரிய காரணியாக சீனா இருப்பதில் எல்லைப்பிரச்சினைகளோடு அதன் ஆதிக்கக் கனவுகளுக்காக இந்தியாவின் நிலப்பரப்பை கோருகிற காரணம் புரியும்.

மோடியின் முதல் ஐந்தாண்டுகளில் பெரிதும் பேசப்பட்ட நான்கு நாடுகளின் கூட்டணி இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கர்களுடைய  அலட்சியத்தால் ஆரம்பக்கட்டத்தைக் கூடத்தாண்டாமல் கிடப்பில் போடப்பட்டு விட்டதில் இந்தியா தன்னுடைய பாதுகாப்பு, பொருளாதார விஷயங்களில், ஒரு நம்பகமான கூட்டாளியைத் தேடியாகவேண்டிய நிலையில் வெகு கவனமாகச் செயல்பட்டு வருகிறது.
A joint grand strategy to manage a muscular China could aim to put discreet checks on the exercise of Chinese power by establishing counterbalancing coalitions around that country’s periphery. However, US President Donald Trump, with his unilateralist and protectionist priorities, has still to provide strategic heft to his “free and open Indo-Pacific” strategy. Consequently, China still pursues aggression in the South China Sea, as exemplified by its ongoing coercion against Vietnamese oil and gas activities within Vietnam’s own exclusive economic zone (EEZ). என்று சொல்கிறார் பிரம்ம செலானி மேலும் சொல்வது இது: 

Modi’s visit underscores that Russia, with its strategic capabilities and vantage position in Eurasia, remains a key country for India’s geopolitical interests. Russia shares India’s objective for a stable power balance on a continent that China seeks to dominate.
Modi’s visit will yield a military logistics pact with Russia of the kind that India has already concluded with America and France, and is negotiating with Japan and Australia. The visit will also seek to diversify India-Russia cooperation by going beyond the four traditional areas — defence, energy, space and nuclear. With all like-minded powers, India seeks close friendship without dependence.  

ரேந்திர மோடியின் அரசு இந்த ஆறாண்டுகளில் வெளியுறவு, பாதுகாப்பு விவகாரங்களில் திறம்படச்  செயல்படுவதைப் பார்க்கிறோம். பின்னணியில்   நமது வெளியுறவுத்துறை மிகுந்த முதிர்ச்சியோடு செயல்பட்டு வருவதையும் பார்க்கிறோம்.  செலானி போல ஜியோ ஸ்ட்ராட்டஜிஸ்ட் ஆக வேண்டுமானால் இல்லாமல்  இருக்கலாம், ஆனால் விஷயங்களைக் கொஞ்சம் கவனித்தால் நம்மாலும் புரிந்துகொள்ள முடிகிற வெளியுறவு விவகாரம் தான் இது!

மீண்டும் சந்திப்போம்.
   

.      
        

Thursday, August 29, 2019

சீனப்பூச்சாண்டி! அமெரிக்கப் பூச்சாண்டி! எது பெஸ்ட்?

ராஜீய உறவுகள் என்பது என்னமோ வெறுமனே போட்டோவுக்கு போஸ் கொடுத்துச் சிரிப்பதோடோ  கை குலுக்கிக் கட்டிப்பிடிப்பதோடோ முடிந்துவிடுகிற சமாசாரமில்லை! பலசமயங்களில் கீசிடுவேன் என்று பட்டணத்து ரவுடிகள் சும்மா உதார் கொடுப்பது மாதிரி, சில சமயங்களில் நிஜமாகவே கீசிவிடுகிற மாதிரிக் கூட ஆகிவிடுவதுமுண்டு! External Affairs என்று நம் பக்கத்திலும் Foreign Affairs என்று வேறு சில நாடுகளிலும் அழைக்கப் படுகிற வெளியுறவு சமாசாரங்கள்  கொஞ்சம் சிக்கலானவை என்று ஒருவிதத்தில் சொன்னாலும், முக்கியமாக art of negotiations  என்கிற ரகம்தான்! ஒரேயடியாகக் கிராக்கி அல்லது வீம்பு பிடித்துக் கொண்டே இருக்க முடியாது. நீ எவ்வளவு இறங்கி வருவாய் சொல்லு! நான் எவ்வளவு இறங்கிவருவேன் என்று சொல்கிறேன்! மாதிரியான பேரங்கள் தான்! இதை மனதில் வைத்துக் கொண்டீர்களானால், வெளியுறவு விவகாரங்கள் புரிந்துகொள்வதற்கு சிரமமானவை அல்ல!


காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா இறங்கிவிடுமோ என்று சில உள்ளூர் அரசியல்வாதிகள் கவலைப் படுகிற மாதிரி, சீனப்பூச்சாண்டி ஒன்றும் சமாளிக்க முடியாத அச்சுறுத்தலே அல்ல! அவர்கள் காஷ்மீர் விஷயத்தைக் கையிலெடுத்தால் நாமும் ஹாங்காங் விஷயத்தை கையிலெடுக்க முடியும் என்பது அவர்களுக்கும் தெரியும்! அதனால் சீனத்து உதார் வெற்று எச்சரிக்கைகள், ஐநா பாதுகாப்பு சபையில் எழுப்ப முயன்று பலனற்றுப் போனது என்பதைப் பார்த்திருக்கிறோம், இல்லையா? டோக்லாம் பகுதியிலும் இதற்குமுன்னால்  ஒரு மல்லுக்கட்டு நடந்ததே, நினைவுக்கு வருகிறதா? இது ஒருவிதம்! 


ல்ஜசீரா! பாகிஸ்தான் குரலாகவே கத்தாரிலிருந்து ஒலிக்கும் ஒருபக்கச்சார்புள்ள சேனல் என்பதை ஞாபகம் வைத்துக் கொண்டு என்ன சொல்கிறார்கள் என்பதை இந்த 24 நிமிட வீடியோவில் பாருங்கள்! பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிலாவல் புட்டோ இம்ரான் கானுக்கு என்ன சொல்கிறார் என்று தெரிந்து கொள்ள முடிவதில், போர், யுத்தம் ஒரு தீர்வல்ல என்ற ஞானோதயம் வந்து  ஆக்கிரமித்து வைத்துக் கொண்டிருக்கிற காஷ்மீரையாவது காப்பாற்றிக் கொள்ள முடிகிறதா பாருங்கள் என்று பாகிஸ்தானின் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகிற செய்தியும் தெரிய வருகிறது. இம்ரான் கான் தவிக்கிறார், குமுறுகிறார் தனித்து விடப்பட்டாலும் காஷ்மீருக்காக நாடுதழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த ஒரு வேண்டுகோள் விடுத்திருப்பதாக ஒரு மணி நேரத்துக்கு முந்தைய (1750hrs IST)செய்தி சொல்கிறது.  இவர்களுக்காக ஒரு போரில் இறங்க சீனர்களுக்கு என்ன, பைத்தியமா பிடித்திருக்கிறது? 

மூன்று மாதங்களாக, ஹாங்காங்கில் போராட்டங்கள் வலுத்து வருவதில், சீனர்களுக்குப் புதிய தலைவலி பெரிதாகிக் கொண்டே வருகிறது. டியநான்மன் சதுக்கத்தில் முந்தையநாட்களில் மாணவர் போராட்டத்தை நசுக்கிய மாதிரி இப்போது ஹாங்காங் போராட்டத்தையும் நசுக்க சீன ராணுவம் தயார்நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது.ஆனாலும் சர்வதேச அளவில் வர்த்தகம் முதலானவற்றைப் பாதிக்குமே என்று கொஞ்சம் பொறுமையாக இருக்கிறார்கள் போல!  ஹாங்காங் மேற்கத்திய உலகை இணைக்கும் பாலமாக இருந்ததாகச் சொல்வார்கள்!இன்றைய நிலையில் மேற்கத்திய உலகோடு இணைக்கும் புதிய பாலத்தைத் தேடவேண்டி வந்து விட்டதாக ஒரு செய்தி.

China is using Shenzhen to hedge its bets and reduce its reliance on Hong Kong, the gateway to the West that is caught up in political turmoil, according to Mr Water Cheung, Asia-Pacific chief executive for Storm Harbour Securities, a global markets and financial advisory firm.“If I am Beijing, I would definitely try to hedge this situation, in terms of promoting Shenzhen as another international city,” said Mr Cheung, who has 30 years of experience in investment banking. “I think they have no choice [but to reduce reliance on Hong Kong] – this is still the door to the Western world”.

Hong Kong will, however, remain an Asian financial hub that cannot be replicated by Shenzhen, argued Mr Cheung. என்கிறது டுடே ஆன்லைன் தளச்செய்தி  ஷென்ஜென் நகரம் 40 ஆண்டுகளுக்கு முன்பே பொருளாதார மாற்றங்களுக்குத் தயார் செய்யப்பட்டு சீனாவின் 18 சுதந்திரமான வர்த்தகப் பிரதேசங்களில் ஒன்றாக வளர்ந்திருக்கிறது வர்த்தகரீதியில் டிரோன்களைத் தயார் செய்கிற DJI, உலகிலேயே பெரிய கேம்ஸ் தயாரிப்பாளரான Tencent, முக்கியமாக அமெரிக்காவோடு முட்டல் மோதலுக்கு மையப்புள்ளியாக ஆகி இருக்கிற  டெலிகாம் சாதனங்களின் மிகப்பெரிய சப்ளையரான Huawei (வாவே ) நிறுவனம் எல்லாம் இந்த ஷென்ஜென்னில் தான் இருக்கின்றன. ஆக,  அமெரிக்காவும்  வந்தாச்சா?


Conversation

Hong Kong protests have crossed the 80-day mark, officially surpassing the 2014 Umbrella Movement in length.
8:10 PM · Aug 28, 2019   


Thursday China rotates new troops into Hong Kong amid mass protests
HONG KONG (AP) — Chinese state media has published photos of the country's Hong Kong-based troops' armored carriers and a patrol boat
   
டொனால்ட் ட்ரம்ப்புக்குப் பிடித்தமான அரசியல் பொழுது போக்கு, சீனாவுடன் மட்டுமல்ல, எல்லாநாடுகளுடனும் ஒரு வர்த்தகப் போரில் இறங்குவதுதான்! America First என்ற தேர்தல் கோஷத்தை இன்னமும் விடாமல் பிடித்துக்கொண்டு மல்லுக கட்டிக்கொண்டே இருக்கிறார். சீனா வருகிற  செப்டெம்பரில் அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையைப்பற்றி விவாதித்துக் கொண்டிருக்கையில் The US trade agency has confirmed President Donald Trump's higher tariffs on $US300 billion worth of Chinese goods will proceed as previously announced.என்ற செய்தியும் வந்தால் என்ன செய்வார்கள்? சீனத்துச் சண்டியர் யார் யாரிடம் தன்னுடைய உதார் எடுபடும் அல்லது எடுபடாது என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்! வெட்டி உதாரெல்லாம் அமெரிக்காவிடம் பலிக்காது என்பதால் மிகவும் பொறுமையாகப் போகிறமாதிரியே போக்குக்காட்டி அப்புறம் வாய்ப்புக் கிடைக்கிற நேரத்தில் நிதானமாக வைத்துச் செய்வார் .பூச்சாண்டி காட்டுவதில் அமெரிக்கர்களை விடச் சீனர்கள் அனுபவசாலிகள் என்பதை மறந்துவிட வேண்டாம்!

எந்தப்பூச்சாண்டி பெஸ்ட் என்று இதற்குமேலும் விவரித்துச் சொல்லவேண்டுமா என்ன? !!

மீண்டும் சந்திப்போம்.

                    

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை