Tuesday, January 7, 2020

இந்திய நண்டுகள்! ஒரு கதை! ஒரு நல்ல உதாரணமும் கூட!

இந்தியா எதனால் இன்னமும் முழுமையாக வளர்ந்த நாடாக முடியாமல் இருக்கிறது? இந்தக்கேள்விக்கு பதில் தெரிய வேண்டுமா?  இந்திய நண்டுகளைப் பற்றிய குட்டிக்கதை ஒன்று தெரிந்தாலே போதும் என்பார்கள்! அதென்ன இந்திய நண்டுகள்? கடல் நண்டுகளை விற்பனை செய்யும் ஒரு கடையில் பல நாட்டுக் கடற்புறங்களிலிருந்தும் பிடிக்கப்பட்ட நண்டுகளை கண்ணாடிக் குடுவையில் அடைத்துப் பார்வைக்கு வைத்திருந்தார்கள். மற்றெல்லாக் குடுவைகளும் மூடப்பட்டிருந்த நிலையில் ஒரே ஒரு கண்ணாடிக் குடுவை மட்டும் மூடப்படாமல் திறந்தே இருந்ததாம்! ஏன் அப்படி? அதிலிருக்கும் நண்டுகள் வெளியேறித் தப்பிவிடாதா? இப்படிக் கேட்கப்பட்ட போது கடைக்காரர் சொன்னாராம்! அவை இந்திய நண்டுகள்!  ஏதோ ஒரு நண்டு மேலேறித் தப்ப முயன்றால் மற்ற நண்டுகள் அதன் காலைப்பிடித்து இழுத்துக் கீழே தள்ளிவிடும்! அதனால் கவலை இல்லை என்றாராம்.

டொனால்ட் ட்ரம்ப் பேசும் போது சொலைமானி நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்களில் 2012 இல் புது டில்லியில் இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் மீது  நடத்தப்பட்டதைக் குறிப்பிட்டுச் சொன்னது தற்செயலானது அல்ல. நாட்டின் பாராளுமன்றத்தின் மீதே தாக்குதல் நடத்திய போது கூட  அமைதிகாத்த காங்கிரஸ் ஆட்சியாளர்கள் அன்றைக்கு இஸ்ரேலிய தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மட்டும் என்ன செய்திருப்பார்கள்? சந்தேகம், குறுகிய அரசியல் ஆதாயத்துக்காக சொந்த நாட்டு ராணுவத்தின் மீதே ஆட்சிக்கவிழ்ப்பு புகாரை சொன்னவர்கள் காங்கிரஸ் காரர்கள் என்பதை ஏற்கெனெவே இந்தப்பக்கங்களில் ஒரு தொலைகாட்சி விவாதத்தைத் தொட்டுப் பேசி இருக்கிறோம். 

சவுத் சீனா மார்னிங் போஸ்ட்! இது சீனாவின் அலிபாபா குழுமம் நடத்தும்  ஆங்கில நாளிதழ். இன்றைக்கு இப்படி ஒரு படம்போட்டு மோடி தன்னை ஷி ஜின்பிங் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் போராட்டங்கள் இந்தியா சீனா அல்ல என்று காட்டுகின்றன  என்ற தலைப்பிட்டு ஒரு செய்திப்புரட்டை வெளியிட்டிருக்கிறது. எழுதியது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஒரு வங்காளி தேபசிஷ்  ராய் சவுத்ரி! கொஞ்சம் வேடிக்கையான செய்திக்கட்டுரை என்று இங்கே மூன்று நாட்களுக்கு முன் எழுதியிருந்ததை  மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்தபோது இந்தியநண்டுகள் பற்றிய கிண்டலான கதை தான் நினைவுக்கு வந்தது.


சேகர் குப்தா இந்த 15 நிமிட வீடியோவில், சொலைமானி கொல்லப்பட்டபிறகு அமெரிக்கா உலக நாடுகள் பலவற்றுக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதான பட்டியலில் பாகிஸ்தான் இருந்தது ஆனால் இந்தியா இல்லையே ஏன் என்ற கேள்வியை எடுத்துக் கொண்டு சில அனுமானங்களைச் சொல்கிறார். முக்கியமாக பாகிஸ்தான் இருக்கிற (பூகோள) கேந்திர முக்கியத்துவம் பற்றிச் சொல்கிறார். ஆப்கானிஸ்தான், ஈரான் இருநாடுகளுடனும் எல்லையைப் பகிர்ந்துகொள்கிற நாடாக பாகிஸ்தான் மட்டுமே இருக்கிறது, இந்தியா அல்ல. தவிர ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தும் தாலிபான்களில்  பாகிஸ்தான் ராணுவத்தால் பயிற்சி கொடுக்கப் பட்டவர்கள் ஒரு பகுதி என்றால் ஈரானில் இருக்கிற தாலிபான்கள் மீதி. இப்படியான கேந்திர முக்கியத்துவம் இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டுதான் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இந்தியாவுக்கு எந்தப் பங்கும் இருக்கக்கூடாதென்று  அடம்பிடிக்கிறது.  CPEC என்று சீனாவின் மத்தியப்பகுதியை பாகிஸ்தானின் குவடார் துறைமுகத்துடன் இணைக்கிற ப்ராஜெக்ட்  எந்த முன்னேற்றமுமில்லாமல் இருந்தாலும் (பாகிஸ்தானிடம் காசு இல்லை) சீனாவுக்கும் இந்தியா, இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் ஒரு போட்டி நாடாக வளர்ந்துவிடக் கூடாதென்ற நல்லெண்ணம் நிறையவே இருக்கிறது.  

இந்திய நண்டுகள் என்று இன்றைய context இல் யாரைச் சொல்வது? சில வாரங்களுக்கு முன்னால் பிரதமர் சீனா உள்ளிட்ட சில நாடுகளுடன் RCEP என்று பிராந்திய அளவிலான பொருளாதாரக் கூட்டுறவுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துத் திரும்பிய நிகழ்வு நினைவிருக்கிறதா? அதற்கான காரணங்கள் என்னவென்று நினைவிருக்கிறதா? 

இன்னமும் அரசின் சலுகைகளிலேயே திளைத்துக் கொண்டிருக்கும் இந்தியத் தொழில் துறை, போட்டியை சமாளிக்க முடியாமல் தடுமாறும் விவசாயத்துறை, உலகமெங்கும் கணினித்துறையில் ஊழியர்களாக மட்டுமே இருக்க முடிகிற தன்னம்பிக்கை, தொழில் முனைப்பு இல்லாத இளைஞர்கள், தொழில்வளர்ச்சியை விடக் கொழுத்து வளரும் ஒட்டுண்ணிகளாக தொழிற் சங்கங்கள், இடதுசாரிகள் என்று தேசம் முன்னேற விடாமல் காலைப்பிடித்து இழுக்கிற நண்டுகளாக இருப்பதைப் பார்க்க முடிகிறதா?

அப்புறம் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் தளத்தில் காசுக்காக ஒரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவனே தேசத்தைச் சிறுமைப்படுத்துகிற மாதிரி  ஏன் எழுத மாட்டான்?

மீண்டும் சந்திப்போம்.         
         

Saturday, January 4, 2020

எண்ணெய் அரசியலும் அமெரிக்க அரசியலும்!

டொனால்ட் ட்ரம்ப்பைப் பற்றி இந்தப்பக்கங்களில் பேசுகிற போது வெறும் கோமாளியாகவே சித்தரிக்கப் படுவதாக நண்பர்கள் யாரேனும் நினைத்தால், அப்படி இல்லை என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். ஜிம்மி கார்ட்டர் ஆக இருக்கட்டும்,  ஜார்ஜ் W புஷ் ஆக இருக்கட்டும், அமெரிக்க அதிபர்களுக்கு, மத்திய கிழக்கு நாடுகளின் உள்ளரசியலில் தலையிடுவதென்பது வெறும் பொழுதுபோக்காக இருந்ததில்லை. அங்கே உள்ள எண்ணெய் வளத்தை தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவருவதான ஆதிக்க அரசியல், சுயநலம் பிரதானமாக இன்றும் கூட இருந்து வருகிறது என்பதை மனதில் தெளிவாக வைத்துக் கொள்ள வேண்டுகிறேன். எண்ணெய் அரசியலை அமெரிக்கா தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள ஆரம்பித்தது இரண்டாவது உலகப் போரின் முடிவில் தான் என்பதில் ரஷ்யாவின் ஆதிக்கமும் அதே அளவுக்கு இல்லாவிட்டாலும், கணிசமாக அதே காலகட்டத்திலிருந்து இருக்கிறது.



சீனா எண்ணெய் ஆதிக்க அரசியலில் இன்றுவரை நேரடியாக இறங்கவில்லை என்றாலும் தங்களுடைய எண்ணெய்த் தேவைகளை சிக்கல் எதுவுமில்லாமல் இன்றுவரை பூர்த்தி செய்துகொண்டுவருகிறார்கள்.


மேலே சொன்னவற்றோடு இஸ்லாமிய நாடுகளுக்கு இடையிலான ஆதிக்கப்போட்டியில் முக்கியமாக இருப்பது சன்னி, ஷியா என்ற இருபிரிவுகளுக்கு இடையில் இருக்கும் மோதல்கள்தான்! சன்னி பிரிவு முஸ்லிம்கள் தான் பெரும்பாலானவர்கள் என்றாலும் ஈரான் ஈராக் இந்த இரண்டு நாடுகளிலும் ஷியா பிரிவு முஸ்லிம்கள் முறையே 95% 65% என்று பெரும்பான்மையாக இருப்பது இப்போதைய பிரச்சினைகளுக்கு மூலகாரணம். சன்னி முஸ்லிம்களுடைய ஏகபோகத்தலைமையாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயலும் சவூதி அரேபியா, (ஈரானை) பாம்பின் தலையை அறுத்துவிட வேண்டும் என்று தொடர்ந்து அமெரிக்காவிடம் வலியுறுத்தி வருவதை இந்த நேரத்தில் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். சேகர் குப்தா இந்த 18 நிமிட வீடியோவில், வெள்ளிக்கிழமையன்று பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்கா டிரோன் தாக்குதலில் ஈரானிய ஜெனெரல் காசிம் சொலைமானியை தீர்த்துக் கட்டியது, அதன் பின்னணி பற்றிக் கொஞ்சம் விளக்குகிறார். ஊடகங்களில் படித்துத் தெரிந்து கொள்ளக் கூடிய விஷயங்களுக்கும் மேலதிகத் தகவல் இந்த வீடியோவில் கிடைக்கிறது. பாருங்கள்!


இங்கே தனியார் சேனல்களின் விவாதக் கூச்சல்களுக்கு நடுவே,  வெற்றுப்பரபரப்புச் செய்திகளையே  பேசாமல், முக்கியமான செய்திகளின் பேரில் அர்த்தமுள்ள விவாதங்களை நம்முடைய ராஜ்யசபா டிவி நடத்திக் கொண்டிருப்பதை அறிவீர்களா? பார்த்திருக்கிறீர்களா? 

ஈரான் அமெரிக்கா இருநாடுகளுக்கிடையில் காசிம் சொலைமானி தீர்த்துக்கட்டப்பட்ட விவகாரம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியிருப்பதன் பின்னணியில் ஒரு விவாதம்.  26 நிமிடங்கள். விஷயம் இன்னதென்று புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்  என்று பரிந்துரை சொல்கிறேன்.

மீண்டும் சந்திப்போம். 
             

Friday, January 3, 2020

மீண்டும் டொனால்ட் ட்ரம்ப்! உலக அமைதிக்கு வில்லனாகிறார்!

உள்நாட்டு அரசியலில் சிக்கலைச் சந்திக்கிற அமெரிக்க அதிபர்கள் பலரும் மத்தியகிழக்கில் ஏதோ ஒரு ராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம் பிரச்சினையைத் திசை திருப்புவது வாடிக்கையாகி விட்டது. இன்றைக்கு அமெரிக்கா டிரோன் தாக்குதல் மூலம்  ஈரானிய ஜெனெரல் காசிம் சொலைமானி உட்பட 6 பேரைக் கொன்று போர்ப்பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உடனடி எதிர்விளைவாக கச்சா எண்ணெய் விலை 4% உயர்ந்திருக்கிறது 


பிரிட்டிஷ் நாளிதழ் கார்டியனில் Donald Trump’s assassination of Qassem Suleimani will come back to haunt him என்று தலைப்பிட்டு மொகமது அலி ஷபானி எழுதியிருக்கிற செய்திக்கட்டுரை இப்படி ஆரம்பிக்கிறது: The US has assassinated Qassem Suleimani, the famed leader of Iran’s Quds force, alongside a senior commander of Iraq’s Popular Mobilisation Units, Abu Mahdi al-Muhandis. To grasp what may come next, it is vital to understand not only who these men were but also the system that produced them.

Nicknamed the “Shadow Commander” in the popular press, Suleimani spent his formative years on the battlefields of the Iran-Iraq war during the 1980s, when Saddam Hussein – who at the time enjoyed the support of western and Arab powers – was attempting to destroy the emerging Islamic Republic. But few remember that his first major mission as commander of the Quds force – the extraterritorial branch of Iran’s Revolutionary Guards – was involved in implicit coordination with the United States as it invaded Afghanistan in 2001. The Taliban were, and to some extent remain, a mutual enemy. That alliance of convenience ended in 2002 when US president George W Bush notoriously branded Iran a member of the “Axis of Evil”. காசிம் சொலைமானி படுகொலை செய்யப்பட்டு 12 மணி நேரத்திற்குள் அவரது இடத்தை  இஸ்மாயில் கானி என்கிற நம்பிக்கைக்குரிய துணைவர் நிரப்பிவிட்டார் என்பது படுகொலைகளின் வழியாக ஒருசில விஷயங்களை அழிக்கவோ பலவீனப்படுத்தவோ முடியாது என்கிற பாடத்தை, அவர்கள் கற்றுக்கொள்ளத்தயாராக இல்லை என்றாலும், அமெரிக்கர்களுக்குப் புகட்டி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.  

Soleimani was an enemy of the United States. That’s not a question. The question is this - as reports suggest, did America just assassinate, without any congressional authorization, the second most powerful person in Iran, knowingly setting off a potential massive regional war?
7:19 AM · Jan 3, 2020Twitter for iPhone 
So what comes next? Predictably, the Iranian authorities have promised “severe retaliation”. How that unfolds in practice is anyone’s guess. There is certainly no shortage of US targets in the region. But Suleimani may have, with his death, already have achieved the greatest revenge of all, and without firing a single bullet: namely, his ultimate objective of ending the US military presence in Iraq என்று அபிப்பிராயப்படுகிறார் மொகமது அலி ஷபானி. டொனால்ட் ட்ரம்ப்பின் கடந்த கால ட்வீட்டுகள் இன்றைக்கு அவருக்கு எதிராகவே பல்லிளித்துக் கொண்டு நிற்கின்றன 
Trump continued with the claim during Obama’s second term in office.
In other posts, however, he described the former president as a “friend” to Iran.
The resurfacing of Trump’s old tweets inevitably trended online:
விரும்பியோ விரும்பாமலோ, பாரக் ஒபாமா,  டொனால்ட் ட்ரம்ப் என அமெரிக்க அதிபர்கள் தங்களுடைய அரசியல் ஆதாயத்துக்காக இஸ்லாமிய நாடுகள் மீதான தாக்குதலை நடத்துவதன் மூலம், சீனாவைஒரு பெரிய சக்தியாக வளர்த்து விட்டிருக்கிறார்கள். அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் அடிக்கடி ஏற்படும் குழப்பங்களில், முன்னாள் கூட்டாளிகள் எவரும் அமெரிக்காவை ஒரு நம்பகமான கூட்டாளியாக ஏற்றுக்கொள்ளத் தயங்குவது மட்டும் தொடர்கிறது. சீனா மிகவும் நிதானமாகவும் கவனமாகவும் தன்னுடைய அரசியல், வர்த்தகப் போர்களை நடத்திக்கொண்டிருக்கிறது. அமெரிக்கர்களுடைய முட்டாள்தனத்தால் உலக நாடுகளுடைய நிம்மதி பறிபோய்க் கொண்டிருப்பது ஒன்றுதான் மிச்சம். சீன விவகாரங்களைக் கவனித்தால் சத்தமே இல்லாமல் அமெரிக்க டாலருக்கு அதிகமுக்கியத்துவம் கொடுப்பதைக் குறைத்திருக்கிறார்கள். இதுவரை basket of currencies weightage இல் அமெரிக்க டாலர் 22.4% இலிருந்து 21.59% ஆகக் குறைக்கப் பட்டிருக்கிறது. அமெரிக்க டாலரை நம்பியிருப்பதன் அளவு குறைக்கப் பட்டிருக்கிறது என்பது அதன் பொருள். அதே போல ஒரு அரசியல் பதிலடியாக  ஹாங்காங் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுக்கும் லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுக்கும் இடையிலான தொடர்பை சஸ்பெண்ட் செய்திருப்பதில் HSBC வங்கியும் லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சும் பாதிக்கப்பட்டிருக்கின்றன       
டொனால்ட் ட்ரம்ப் ஒருவரே உலக அமைதியை அழிக்கப் போதுமானவர் என்பதை ஏற்கெனெவே இந்தப் பக்கங்களில் சொல்லியிருந்தது நினைவிருக்கிறதா?
மீண்டும் சந்திப்போம்        

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை