Sunday, September 29, 2019

எண்ணெய்க்கொழுப்பு அரசியலின் மீது இன்னொரு தாக்குதல்!

இந்தமாதத்தில் இரண்டாவது முறையாக, இரண்டே வார இடைவெளியில் சவூதி அரேபியா ஏமன் ஹவுத்தி கிளர்ச்சிப் படையினரால் நேற்று மீண்டும் தாக்கப்பட்டிருக்கிறது. 6800 கோடி டாலர்கள் வருடாந்திர பாதுகாப்பு பட்ஜெட், அதிநவீன அமெரிக்க விமானங்கள் மற்றும் ஆயுதங்கள் லேட்டஸ்ட் ட்ரோன்கள் இப்படி எல்லா வசதிகளோடும் இருக்கிற சவூதி ராணுவத்தால் 14 நாட்களுக்கு முன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீதும், எண்ணெய் வயல் மீதும்  ட்ரோன்கள் தாக்கியதில் அவை எங்கிருந்து ஏவப்பட்டது, ஏமனிலிருந்தா, ஈரானில் இருந்தா அல்லது ஈராக்கின் எல்லைப் பகுதியிலிருந்தா என்பதை நிர்ணயிக்கக் கூட முடியவில்லை!  ஏமன் ஹவுத்தி நிலைகள் மீது சவூதி அரேபியக் கூட்டுப்படை தாக்குதல் நடத்திவரும் நிலையில் அதிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் UAE  தனது படைகளை விலக்கிக் கொண்டிருக்கிறதென்ற தகவலை முந்தைய பதிவுகளில் பார்த்திருக்கிறோம். பதிலாக, அமீரகத்தில் உள்ள எந்தவொரு எண்ணெய் வயலும் தாக்கப்படவில்லை என்ற செய்தியும் வருகிறது.   
     

இப்போது The Houthis' military spokesman said in a statement that three “enemy military brigades had fallen” in the attack, which he said was launched 72 hours ago and supported by the group's drone, missile and air defence units.Yemen's Houthi movement said on Saturday it had carried out a major attack near the border with the southern Saudi region of Najran and captured many troops and vehicles, but there was no immediate confirmation from Saudi Arabian authorities என்று செய்திகள் வருவதில், சவூதி ராணுவம் ஒரு  போருக்கு சற்றும் லாயக்கானதில்லை என்பது மறுபடி நிரூபிக்கப் பட்டிருப்பதாகவே தெரிகிறது. இந்த இரண்டு தாக்குதல்களில், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையும் கூட நிறையவே பஞ்சர் ஆகியிருப்பதாக, இரு  செய்தி அலசல்களில் பார்த்தேன். 

  படத்துக்கு நன்றி thesun.co.uk  
பிரிட்டனின் சன் நாளிதழ் என்னமோ  அமெரிக்கா shock and awe என்று ஒரே முறையில் ஈரான் மீது தாக்குதல் நடத்தி நசுக்கிவிடத் தயாராக இருக்கிறது என்று தொடர்ந்து பீலா விட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் அமெரிக்க ஊடகங்களில் இந்தத் தாக்குதல் குறித்து எந்தவிதமான செய்தி, அரசு அறிக்கை என்று எதையுமே காணோம். நேற்று foreign policy dot com மற்றும் fpif dot org என்று அமெரிக்க வெளியுறவுக் கொள்கை பற்றி அலசும் இருதளங்களில் வெளியான, நேற்றைய தாக்குதலுக்கு முந்தி எழுதப்பட்ட செய்தி அலசல்களில் 1979 காலகட்டத்தில் உருவான Jimmy Carter doctrine ஐ   டொனால்ட் ட்ரம்ப்  அடியோடு கைவிட்டு விட்டதாக, ஈரான் மீது வர்த்தகத் தடைகளை அறிவித்துக் கொண்டே இருந்தாலும் அதற்குமேல் ஒருதுரும்பைக் கூடக் கிள்ளிப்போடத் தயாராக இல்லாத மாதிரி ஒரு சித்திரத்தைத் தருகிறார்கள்.

At the same time, however, the Iranian attacks have succeeded wildly in a way that Tehran probably never imagined. Because the United States has barely responded at all—only applying more fatuous sanctions and a single cyberattack that Iran seems to have shaken off—and because senior U.S. officials starting with the president have trumpeted that they will not employ force unless Iran attacks American citizens or property directly, the Iranian attacks have driven a lethal wedge between the United States and the GCC.

Although this has been part of a larger, longer process of the Sunni Arab states losing faith in their long-standing relationship with the United States, recent developments have had an outsized impact, dramatically accelerating that process. We may well have reached a tipping point, as Foreign Policy’s Steven A. Cook has insightfully argued என்கிறார் கென்னத் எம் பொல்லாக்.

எண்ணெய்க்கொழுப்பும் வஹாபி அரசியல் மப்பும் கரைக்கப் படுகிறதா அல்லது வீம்பும் வீராப்பும் அதிகரிக்கிறதா என்று தொடர்ந்து பார்க்கலாம்.

மீண்டும் சந்திப்போம்.        

Wednesday, September 18, 2019

புகையும் #எண்ணெய்க்கொழுப்பு அரசியல்!

சனிக்கிழமை அதிகாலை சவூதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும், எண்ணெய் வயலும் drone தாக்குதலில் புகைந்து கொண்டிருப்பதுபோலவே #எண்ணெய்க்கொழுப்பு அரசியலும், அமெரிக்கா அடுத்து என்ன செய்யப்போகிறது என்பதை எதிர்பார்த்திருப்பதில் வெறுமனே புகைந்து கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். டொனால்ட் ட்ரம்ப் ஒவ்வொருநேரமும் ஒவ்வொருவிதமாக மாற்றி மாற்றிப் பேசிக் கொண்டிருப்பது, இப்போது இந்த ஒரு விஷயத்தில் மட்டுமே அல்ல என்பதை இங்கே வரும் நண்பர்கள் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
      


இங்கே இங்கே என்று எங்கெல்லாம் அமெரிக்கா எங்கெல்லாம் ஈரானைத் தாக்கத் தயாராக இருக்கிறது என்று பிரிட்டனின் The Sun இப்படிப் படம்போட்டும் காண்பித்திருக்கிற நேரத்தில்  
4 மணி நேரத்துக்கு முன்னால் Los Angel Times நாளிதழின் கலையங்கம் Trump says he’s in ‘no rush’ to respond to the attacks in Saudi Arabia. Let’s keep it that way என்று ஆரம்பித்துச் சில விஷயங்களைச் சொல்கிறது. 


Trump has sent maddeningly mixed messages about relations with Iran. Despite his repudiation of the Iran nuclear agreement negotiated during the Obama administration and his administration’s “maximum pressure” campaign of crushing economic sanctions, the president has expressed an off-and-on interest in dialogue with Iran என்று இந்தத் தலையங்கம்  Above all, the top US goal should be to stop this regional rivalry from spinning out of control.என்று ஒரு முத்தாய்ப்புடன் முடிக்கிறது.


Because we have done so well with Energy over the last few years (thank you, Mr. President!), we are a net Energy Exporter, & now the Number One Energy Producer in the World. We don’t need Middle Eastern Oil & Gas, & in fact have very few tankers there, but will help our Allies!
5:02 PM · Sep 16, 2019Twitter for iPhone

Replying to
When you say allies...are you referring to the nation that sent us the 9/11 hijackers, dismembered a journalist who worked for an American newspaper, and whose leader high-fives Putin at global summits?
20
21
181
இரண்டு நாட்களுக்கு முன் இப்படி ஒரு ட்வீட் என்றால் ஜூன் 24 அன்று ட்வீட்டிய செய்தி இப்படி: “China gets 91% of its Oil from the Straight, Japan 62%, & many other countries likewise. So why are we protecting the shipping lanes for other countries (many years) for zero compensation. All of these countries should be protecting their own ships on what has always been a dangerous journey.” என்று ஹோர்முஸ் ஜலசந்தி ஈரான் வசம் இருந்தால் எங்களுக்கென்ன என்ற மாதிரி! 

The Saudis seem to sense the credibility problem Even they have not yet publicly followed Mr. Pompeo in accusing Iran of responsibility. In a statement on Monday, the Saudi government urged an international investigation, led by the United Nations, to determine responsibility.That move, unusual for a country that disdains the United Nations almost as much as the Trump administration does, seemed an acknowledgment that the world would not take Mr. Trump’s word, nor that of the Saudi crown prince, Mohammed bin Salman.

Over the past year, the crown prince has encountered credibility problems of his own. He has repeatedly denied that he sent or had knowledge of the Saudi team that killed the Washington Post columnist and Saudi dissident Jamal Khashoggi. The evidence suggests otherwise.


For Mr. Trump, the suspicions about any American assessment of responsibility will be colored by another problem: European officials blame him, as much as the Iranians, for creating the circumstances that led to the attack. In their telling, it was Mr. Trump’s decision, soon after he fired Mr. Tillerson, to abandon the 2015 nuclear deal that set in motion the events that culminated in the crippling of the two Saudi oil fields.என்று செய்தியை அலசுகிற ஒன்றாக நியூ யார்க் டைம்ஸில் வெளியாகி இருக்கும் செய்திக்கட்டுரை அமெரிக்க அதிபர் மட்டுமல்ல  சவூதிகளுமே நம்பகத்தன்மையை இழந்து இருப்பதாக சொல்கிற நிலையில், விவகாரம் இன்னும் சில காலத்துக்குப் புகையும், ஆனால் எரியாது என்றமாதிரியான சித்திரம் கிடைக்கிறது. ராஜீய உறவுகள், சச்சரவுகள் எல்லாமே இப்படி தெளிவில்லாத சித்திரங்கள் தானே!

மீண்டும் சந்திப்போம்.    

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை