அதென்னவோ கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளில் அமெரிக்கா உலகத்தின் போலீஸ்காரனாக, ஒவ்வொரு புதைகுழியாகப்போய் சிக்கிக் கொள்வதும், அப்புறம் ஆளைவிட்டால் போதுமடா சாமி என்று எதிரிகளுடன்/ சாத்தானுடன் சமாதானம் செய்து கொண்டு, அதுவரை கூட்டாளிகளாக இருந்தவர்களை அம்போவென விட்டு விடுவதும் ஒரு தொடர்கதையாகவே ஆகிக் கொண்டு வருவது வரலாற்று சோகம்!
Start with the Taliban’s commitment to crack down on
international terrorist organizations. Douglas London, a former CIA officer who
was its head of counterterrorism in South and Southwest Asia, told Foreign
Policy that the United States had little reason to trust the Taliban’s
leadership would carry out its promises. There’s also reason to doubt Abdul
Ghani Baradar, the mullah who signed the agreement on behalf of the Taliban
(after having been released from a Pakistani prison in October 2018 after a
push by the United States to get the talks going), is in a position to make
commitments or grant concessions. “Doha-based representatives [Mohammad Abbas]
Stanakzai and Baradar have little sway,” London said. அவர் சொன்ன மாதிரியே காந்தகார் மாகாணத்தின் தென்பகுதியில் இரு மாவட்டங்களில் உள்ளூர் போலீஸ் மீது தாக்குதலை தாலிபான் ஆரம்பித்து விட்டது. ஆப்கானிஸ்தான் ராணுவம், போலீஸ் என்று அமெரிக்கர்களோடு யார்யார் ஆதரவாக நின்றார்களோ அத்தனைபேர்களையும் தீர்த்துக் கட்டுவதில் தான் அவர்களுடைய முனைப்பு இருக்கும் என்பது தெரிந்த விஷயம் தான்!
The partial truce between the US, the insurgents and Afghan forces lasted for the week running up to the signing of the US-Taliban accord in Doha on Saturday, and was extended over the weekend. “The reduction in violence... has ended now and our operations will continue as normal,” Taliban spokesman Zabihullah Mujahid told AFP.
The partial truce between the US, the insurgents and Afghan forces lasted for the week running up to the signing of the US-Taliban accord in Doha on Saturday, and was extended over the weekend. “The reduction in violence... has ended now and our operations will continue as normal,” Taliban spokesman Zabihullah Mujahid told AFP.
ஆப்கானிஸ்தானில் பலத்த காவலில் இருக்கும் 5000 தாலிபான்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று ஒப்பந்தம் சொன்னாலும் அவர்களை விடுவிக்கப்போவதில்லை என்று ஆப்கானிஸ்தானின் அதிபர் அஷ்ரப் கனி தெரிவித்திருக்கிறார்.
இந்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்கர்கள் என்ன நினைக்கிறார்கள்? இதே மாதிரித்தான் 1973 இல் வியட்நாம் புதைகுழியில் இருந்து விடுபட அமெரிக்கர்கள் வட வியட்நாமோடு ஒப்பந்தம் செய்து கொண்டதில், அமெரிக்கர்களுக்கு ஆதரவாய் நின்ற தெற்கு வியட்நாமைக் கைகழுவிய கதை இருந்தது என்று ஒரு கருத்து வலுவாக இருக்கிறது. இப்போது சமீபத்தில் கூட, சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் என்று அறிவித்ததில் அமெரிக்கர்களோடு தோளோடு தோள் நின்ற குர்துப் போராளிகள் கைகழுவப்பட்டார்கள். நல்லவேளையாக வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுடன் டொனால்ட் ட்ரம்ப் நடத்திய அமைதிப்பேச்சு வெறும்பேச்சாகவே முடிந்துபோனதில் தற்போதைக்கு தென்கொரியா தப்பித்தது என்று கூடச் சொல்லலாம்.
The Print தளத்தில் சேகர் குப்தாவும், ஜோதி மல்கோத்ராவும், தாலிபான்களோடு பேசுவதில்லை என்று இந்தியா முடிவெடுத்ததால், ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அரசு கோட்டை விட்டுவிட்டது என்ற மாதிரி எழுதுகிறார்கள். இந்த 27 நிமிட வீடியோவில் ஒரு முன்னாள் தூதர், ஒரு பத்திரிகை ஆசிரியர், மற்றும் ஒரு மேஜர் ஜெனெரல் (ஓய்வு) மூவரும் கொஞ்சம் விவரங்களைச் சொல்கிறார்கள்.
அமெரிக்கர்கள் விட்டால் போதுமென்று ஓடத்தயாராக இருக்கிறார்கள் என்பதுவரை சரி. அதனால் தாலிபான்களால் ரணகளமாகியிருக்கும் ஆப்கானிஸ்தான் அமைதியைச் சந்திக்கும் என்பதற்கு ஒரு உத்தரவாதமும் இல்லை. அதே சமயம் தாலிபான்கள் ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுமில்லை. என்ன நடக்கப்போகிறது என்பதைக் கொஞ்சம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். இந்த விஷயத்தை இன்னும் விரிவாகத் தொடர்ந்து இங்கே பேசுவோம். தொடர்புடைய பதிவுகளாக தாலிபான், இந்தியா பாகிஸ்தான் சீனா என்ற குறியீட்டுச் சொற்களில் உள்ளவற்றைப் பார்க்கலாம்.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!