Saturday, August 31, 2019

சீனபூச்சாண்டியும் மாறிவரும் ஆசியக்கள நிலவரமும்!

ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் நேற்றைக்கு பிரம்ம செலானி எழுதியிருக்கும் இந்தக் களநிலவர அலசல் கொஞ்சம் கவனித்துப் பார்க்கவேண்டிய தகவலாகவும்  இருக்கிறது. பிரம்ம செலானி சொல்கிற மாதிரி ஆசியக் கள நிலவரம் எப்படியிருக்கிறது? இன்றைக்கு ஆசியாவில் கள நிலவரத்தைத் தீர்மானிக்கும் சக்திகளாக அமெரிக்கா, சீனா,
ரஷ்யா, இந்தியா, ஜப்பான் இந்த ஐந்துநாடுகள் இருப்பதில், அமெரிக்க சீன வர்த்தகப்போர் புதுப்புது உச்சங்களைத் தொட்டு வருவதை முந்தைய பதிவில் கொஞ்சம் பார்த்து இருக்கிறோம் இல்லையா?  அதேபோல ஜப்பானுக்கும் தென் கொரியாவுக்கும், உலகப்போர்களின் எச்சசொச்சமாகத் தொடரும் வன்மம், பிராந்தியத்தில் கொஞ்சம் டென்ஷனைக் கூட்டிக் கொண்டிருக்கிறது. ஹாங்காங்கில் மூன்று மாதமாகத் தொடரும் போராட்டங்களை மிருகபலத்தோடு நசுக்குவதற்கு சீனா தருணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. இந்திய நிலைமை இன்னும் கொஞ்சம் சிக்கலானதாக! பாகிஸ்தான், சீனா என்று வன்மத்தோடு  இரு அணு ஆயுதவல்லமையோடு அண்டைநாடுகள் என்று ஆசிய அமைதியைக் குலைக்கும் நான்கு விதமான சிக்கல்கள்.


மேலே சொன்ன காரணிகளின் பின்னணியோடு அடுத்தவாரம் ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் கிழக்கத்தியப் பொருளாதார ஃபோரம் அமைப்பின் கூட்டத்தில்  ரஷ்ய அதிபர் புடினுடன் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவிருப்பதை குறித்து, அதன் முக்கியத்துவம் பற்றி பேசுவதோடு பிரம்ம செலானி தன் களநிலவர அலசலைத் தொடங்குகிறார்.   அண்டைநாடுகள் எல்லாவற்றுடனும் எல்லைப்பிரச்சினையைத் தொடர்ந்து கொண்டிருக்கிற ஒரே நாடு சீனா என்றால், தனிநாடு கேட்டுப் பிரிந்து போனபிறகும் கூட எதற்கெடுத்தாலும் இந்தியாவோடு கச்சைகட்டிக் கொண்டு வெறுப்பில் எரியும் மனங்களோடு பாகிஸ்தான் சீனாவோடு சேர்ந்து கொண்டு, பயங்கரவாதத் தாக்குதல்களை இந்திய எல்லைக்குள் நடத்தத் தவியாய்த் தவித்துக் கொண்டிருக்கிறது. முழு அளவிலான போர்நடத்த பாகிஸ்தானுக்குத் தெம்பில்லை என்றால் சீனாவுக்கோ தன் வர்த்தக நலன்கள் தான் பிரதானம். காஷ்மீர்  விவகாரத்தில் சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினாலும்   Huawei நிறுவனத்தை 5G சேவை கட்டுமானங்களில் தடை செய்தால் என்று மிரட்டல் தொனியோடு எச்சரிக்கை செய்ததையும் கவனிக்க வேண்டும். ஆசியாவில் சமநிலையை சீர்குலைக்கிற பெரிய காரணியாக சீனா இருப்பதில் எல்லைப்பிரச்சினைகளோடு அதன் ஆதிக்கக் கனவுகளுக்காக இந்தியாவின் நிலப்பரப்பை கோருகிற காரணம் புரியும்.

மோடியின் முதல் ஐந்தாண்டுகளில் பெரிதும் பேசப்பட்ட நான்கு நாடுகளின் கூட்டணி இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கர்களுடைய  அலட்சியத்தால் ஆரம்பக்கட்டத்தைக் கூடத்தாண்டாமல் கிடப்பில் போடப்பட்டு விட்டதில் இந்தியா தன்னுடைய பாதுகாப்பு, பொருளாதார விஷயங்களில், ஒரு நம்பகமான கூட்டாளியைத் தேடியாகவேண்டிய நிலையில் வெகு கவனமாகச் செயல்பட்டு வருகிறது.
A joint grand strategy to manage a muscular China could aim to put discreet checks on the exercise of Chinese power by establishing counterbalancing coalitions around that country’s periphery. However, US President Donald Trump, with his unilateralist and protectionist priorities, has still to provide strategic heft to his “free and open Indo-Pacific” strategy. Consequently, China still pursues aggression in the South China Sea, as exemplified by its ongoing coercion against Vietnamese oil and gas activities within Vietnam’s own exclusive economic zone (EEZ). என்று சொல்கிறார் பிரம்ம செலானி மேலும் சொல்வது இது: 

Modi’s visit underscores that Russia, with its strategic capabilities and vantage position in Eurasia, remains a key country for India’s geopolitical interests. Russia shares India’s objective for a stable power balance on a continent that China seeks to dominate.
Modi’s visit will yield a military logistics pact with Russia of the kind that India has already concluded with America and France, and is negotiating with Japan and Australia. The visit will also seek to diversify India-Russia cooperation by going beyond the four traditional areas — defence, energy, space and nuclear. With all like-minded powers, India seeks close friendship without dependence.  

ரேந்திர மோடியின் அரசு இந்த ஆறாண்டுகளில் வெளியுறவு, பாதுகாப்பு விவகாரங்களில் திறம்படச்  செயல்படுவதைப் பார்க்கிறோம். பின்னணியில்   நமது வெளியுறவுத்துறை மிகுந்த முதிர்ச்சியோடு செயல்பட்டு வருவதையும் பார்க்கிறோம்.  செலானி போல ஜியோ ஸ்ட்ராட்டஜிஸ்ட் ஆக வேண்டுமானால் இல்லாமல்  இருக்கலாம், ஆனால் விஷயங்களைக் கொஞ்சம் கவனித்தால் நம்மாலும் புரிந்துகொள்ள முடிகிற வெளியுறவு விவகாரம் தான் இது!

மீண்டும் சந்திப்போம்.
   

.      
        

Thursday, August 29, 2019

சீனப்பூச்சாண்டி! அமெரிக்கப் பூச்சாண்டி! எது பெஸ்ட்?

ராஜீய உறவுகள் என்பது என்னமோ வெறுமனே போட்டோவுக்கு போஸ் கொடுத்துச் சிரிப்பதோடோ  கை குலுக்கிக் கட்டிப்பிடிப்பதோடோ முடிந்துவிடுகிற சமாசாரமில்லை! பலசமயங்களில் கீசிடுவேன் என்று பட்டணத்து ரவுடிகள் சும்மா உதார் கொடுப்பது மாதிரி, சில சமயங்களில் நிஜமாகவே கீசிவிடுகிற மாதிரிக் கூட ஆகிவிடுவதுமுண்டு! External Affairs என்று நம் பக்கத்திலும் Foreign Affairs என்று வேறு சில நாடுகளிலும் அழைக்கப் படுகிற வெளியுறவு சமாசாரங்கள்  கொஞ்சம் சிக்கலானவை என்று ஒருவிதத்தில் சொன்னாலும், முக்கியமாக art of negotiations  என்கிற ரகம்தான்! ஒரேயடியாகக் கிராக்கி அல்லது வீம்பு பிடித்துக் கொண்டே இருக்க முடியாது. நீ எவ்வளவு இறங்கி வருவாய் சொல்லு! நான் எவ்வளவு இறங்கிவருவேன் என்று சொல்கிறேன்! மாதிரியான பேரங்கள் தான்! இதை மனதில் வைத்துக் கொண்டீர்களானால், வெளியுறவு விவகாரங்கள் புரிந்துகொள்வதற்கு சிரமமானவை அல்ல!


காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா இறங்கிவிடுமோ என்று சில உள்ளூர் அரசியல்வாதிகள் கவலைப் படுகிற மாதிரி, சீனப்பூச்சாண்டி ஒன்றும் சமாளிக்க முடியாத அச்சுறுத்தலே அல்ல! அவர்கள் காஷ்மீர் விஷயத்தைக் கையிலெடுத்தால் நாமும் ஹாங்காங் விஷயத்தை கையிலெடுக்க முடியும் என்பது அவர்களுக்கும் தெரியும்! அதனால் சீனத்து உதார் வெற்று எச்சரிக்கைகள், ஐநா பாதுகாப்பு சபையில் எழுப்ப முயன்று பலனற்றுப் போனது என்பதைப் பார்த்திருக்கிறோம், இல்லையா? டோக்லாம் பகுதியிலும் இதற்குமுன்னால்  ஒரு மல்லுக்கட்டு நடந்ததே, நினைவுக்கு வருகிறதா? இது ஒருவிதம்! 


ல்ஜசீரா! பாகிஸ்தான் குரலாகவே கத்தாரிலிருந்து ஒலிக்கும் ஒருபக்கச்சார்புள்ள சேனல் என்பதை ஞாபகம் வைத்துக் கொண்டு என்ன சொல்கிறார்கள் என்பதை இந்த 24 நிமிட வீடியோவில் பாருங்கள்! பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிலாவல் புட்டோ இம்ரான் கானுக்கு என்ன சொல்கிறார் என்று தெரிந்து கொள்ள முடிவதில், போர், யுத்தம் ஒரு தீர்வல்ல என்ற ஞானோதயம் வந்து  ஆக்கிரமித்து வைத்துக் கொண்டிருக்கிற காஷ்மீரையாவது காப்பாற்றிக் கொள்ள முடிகிறதா பாருங்கள் என்று பாகிஸ்தானின் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகிற செய்தியும் தெரிய வருகிறது. இம்ரான் கான் தவிக்கிறார், குமுறுகிறார் தனித்து விடப்பட்டாலும் காஷ்மீருக்காக நாடுதழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த ஒரு வேண்டுகோள் விடுத்திருப்பதாக ஒரு மணி நேரத்துக்கு முந்தைய (1750hrs IST)செய்தி சொல்கிறது.  இவர்களுக்காக ஒரு போரில் இறங்க சீனர்களுக்கு என்ன, பைத்தியமா பிடித்திருக்கிறது? 

மூன்று மாதங்களாக, ஹாங்காங்கில் போராட்டங்கள் வலுத்து வருவதில், சீனர்களுக்குப் புதிய தலைவலி பெரிதாகிக் கொண்டே வருகிறது. டியநான்மன் சதுக்கத்தில் முந்தையநாட்களில் மாணவர் போராட்டத்தை நசுக்கிய மாதிரி இப்போது ஹாங்காங் போராட்டத்தையும் நசுக்க சீன ராணுவம் தயார்நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது.ஆனாலும் சர்வதேச அளவில் வர்த்தகம் முதலானவற்றைப் பாதிக்குமே என்று கொஞ்சம் பொறுமையாக இருக்கிறார்கள் போல!  ஹாங்காங் மேற்கத்திய உலகை இணைக்கும் பாலமாக இருந்ததாகச் சொல்வார்கள்!இன்றைய நிலையில் மேற்கத்திய உலகோடு இணைக்கும் புதிய பாலத்தைத் தேடவேண்டி வந்து விட்டதாக ஒரு செய்தி.

China is using Shenzhen to hedge its bets and reduce its reliance on Hong Kong, the gateway to the West that is caught up in political turmoil, according to Mr Water Cheung, Asia-Pacific chief executive for Storm Harbour Securities, a global markets and financial advisory firm.“If I am Beijing, I would definitely try to hedge this situation, in terms of promoting Shenzhen as another international city,” said Mr Cheung, who has 30 years of experience in investment banking. “I think they have no choice [but to reduce reliance on Hong Kong] – this is still the door to the Western world”.

Hong Kong will, however, remain an Asian financial hub that cannot be replicated by Shenzhen, argued Mr Cheung. என்கிறது டுடே ஆன்லைன் தளச்செய்தி  ஷென்ஜென் நகரம் 40 ஆண்டுகளுக்கு முன்பே பொருளாதார மாற்றங்களுக்குத் தயார் செய்யப்பட்டு சீனாவின் 18 சுதந்திரமான வர்த்தகப் பிரதேசங்களில் ஒன்றாக வளர்ந்திருக்கிறது வர்த்தகரீதியில் டிரோன்களைத் தயார் செய்கிற DJI, உலகிலேயே பெரிய கேம்ஸ் தயாரிப்பாளரான Tencent, முக்கியமாக அமெரிக்காவோடு முட்டல் மோதலுக்கு மையப்புள்ளியாக ஆகி இருக்கிற  டெலிகாம் சாதனங்களின் மிகப்பெரிய சப்ளையரான Huawei (வாவே ) நிறுவனம் எல்லாம் இந்த ஷென்ஜென்னில் தான் இருக்கின்றன. ஆக,  அமெரிக்காவும்  வந்தாச்சா?


Conversation

Hong Kong protests have crossed the 80-day mark, officially surpassing the 2014 Umbrella Movement in length.
8:10 PM · Aug 28, 2019   


Thursday China rotates new troops into Hong Kong amid mass protests
HONG KONG (AP) — Chinese state media has published photos of the country's Hong Kong-based troops' armored carriers and a patrol boat
   
டொனால்ட் ட்ரம்ப்புக்குப் பிடித்தமான அரசியல் பொழுது போக்கு, சீனாவுடன் மட்டுமல்ல, எல்லாநாடுகளுடனும் ஒரு வர்த்தகப் போரில் இறங்குவதுதான்! America First என்ற தேர்தல் கோஷத்தை இன்னமும் விடாமல் பிடித்துக்கொண்டு மல்லுக கட்டிக்கொண்டே இருக்கிறார். சீனா வருகிற  செப்டெம்பரில் அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையைப்பற்றி விவாதித்துக் கொண்டிருக்கையில் The US trade agency has confirmed President Donald Trump's higher tariffs on $US300 billion worth of Chinese goods will proceed as previously announced.என்ற செய்தியும் வந்தால் என்ன செய்வார்கள்? சீனத்துச் சண்டியர் யார் யாரிடம் தன்னுடைய உதார் எடுபடும் அல்லது எடுபடாது என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்! வெட்டி உதாரெல்லாம் அமெரிக்காவிடம் பலிக்காது என்பதால் மிகவும் பொறுமையாகப் போகிறமாதிரியே போக்குக்காட்டி அப்புறம் வாய்ப்புக் கிடைக்கிற நேரத்தில் நிதானமாக வைத்துச் செய்வார் .பூச்சாண்டி காட்டுவதில் அமெரிக்கர்களை விடச் சீனர்கள் அனுபவசாலிகள் என்பதை மறந்துவிட வேண்டாம்!

எந்தப்பூச்சாண்டி பெஸ்ட் என்று இதற்குமேலும் விவரித்துச் சொல்லவேண்டுமா என்ன? !!

மீண்டும் சந்திப்போம்.

                    

Tuesday, August 27, 2019

ஆர்டிகிள் 370 abrogation! இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு!

Pakistan saw Article 370 as Indian acceptance that Kashmir is a disputed territory. The constitutional change can help India to more ably counter the China-Pakistan nexus என்று தன்னுடைய அலசலை ஆரம்பிக்கிறார் பிரம்ம செலானி. ஜம்மு காஷ்மீர் என்பதை எந்த அளவுக்கு நாம் தெரிந்து வைத்திருக்கிறோம்?


காஷ்மீர் என்பது இந்தியா பாகிஸ்தான் என்று இரண்டு நாடு மட்டும் சம்பந்தப் பட்டிருப்பது அல்ல. சீனாவும் 1950 ஆம் ஆண்டு முதலே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அக்சாய் சின் பகுதியைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து, அப்புறம் பாகிஸ்தான் தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதியில் கொஞ்சம் தானமாகக் கொடுத்ததோடு சேர்த்து சீனா ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 20% நிலப்பரப்பைத் தன் கைவசம் வைத்து இருப்பதைத் தெரிந்து வைத்திருக்கிறோமா? இங்கே கமல் காசர் போன்ற சில மேதாவிகள் ஐநா சபை சொன்னபடி பொது வாக்கெடுப்பை ஏன் நடத்தவில்லை என்று கேட்பதை அடடே! அப்படியா என்று ஆச்சரியப்பட்டுக் கேட்கிற நேரத்தில் அது எப்படி ஒரு அர்த்தமற்ற கேள்வி என்பது பற்றி கொஞ்சமாவது கேள்வியெழுப்பித் தெரிந்து கொள்ள முயற்சித்திருக்கிறோமா? 

Standing up to China-Pak Nexus

China’s strategy is to attack India’s weak points and stymie its rise to the extent possible. Beijing views the Indian portion of J&K as India’s Achilles Heel என்று சீனா பார்வையில் ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பலவீனமான மர்மஸ்தானமாகவே இருப்பதைத்தொட்டு ஒரு விரிவான அலசலை இந்த செய்திக் கட்டுரையில் சொல்கிறார். 

CONTROL OF THE original princely state of Jammu and Kashmir (J&K) is divided among India, Pakistan and China, but only India was maintaining special powers and privileges for its portion, which makes up 45 per cent of the erstwhile kingdom. Take Pakistan, which seeks to redraw borders in blood by grabbing the Muslim-dominated Kashmir Valley from India: Far from granting autonomy or special status to the parts of J&K it holds (the sprawling Gilgit-Baltistan and the so-called Azad Kashmir), Pakistan has treated them as its colonies, exercising arbitrary control over them, recklessly exploiting their natural resources and changing their demographic profiles. In fact, Pakistan unlawfully ceded a strategically important slice of the increasingly restive Gilgit-Baltistan to China in 1963.இப்படி சீனாவிடம் 20%,
பாகிஸ்தானிடம் 35%, மீதமுள்ள 45% மட்டும் இந்தியாவிடம் என்று பிரிந்து கிடக்கிற ராஜா ஹரிசிங் காலத்து ஜம்மு காஷ்மீர் பற்றி நமக்கு முழுவிவரமும் தெரியுமா?


ந்த 28 நிமிட வீடியோ  Foreign Correspondents Club , New Delhi என்ற அமைப்பில் KASHMIR:THE WAY FORWARD என்ற தலைப்பில் ஆகஸ்ட் 22 அன்று பேசியது. ஆர்டிகிள் 370 abrogate செய்யப்பட்டதை ஆதரித்து டாக்டர் சுப்ரமணியன் சுவாமியும் அதை மறுதலித்து ஜனங்களிடம் கருத்து கேட்டிருக்க வேண்டும் என்று போகாத ஊருக்கு இல்லாத வழி சொல்லியே பழக்கப்பட்ட வலது கம்யூனிஸ்ட் கட்சியின் D ராஜாவும், அதே மாதிரி வாதாடும் வழக்கறிஞர் KTS துளசியும் பேசுகிறார்கள். ஆர்டிகிள் 370 இருந்து என்ன சாதித்தது? இந்தக் கேள்விக்கு சரியான பதில் அவர்களிடம் இல்லை.

பிரம்ம செலானி தன்னுடைய செய்திக்கட்டுரையில் மேலும் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா? China has increasingly played the J&K card against India in the past decade. China fomented the Naga and Mizo insurgencies, taught its ‘all-weather’ client Pakistan how to wage proxy war against India. ஒசாமா பின் லேடனைத் தீர்த்துக் கட்டியதோடு அமெரிக்கா பயங்கரவாதத்துக்கெதிரான போரையும் முடித்துக் கொண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளைத் திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டிய அவசரம் அடுத்த ஆண்டு தேர்தலைச் சந்திக்கவேண்டி இருக்கிற டொனால்ட் ட்ரம்புக்கு நிறையவே இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அரசைக் கைகழுவிவிட்டு தாலிபான்களிடமே ஒப்படைத்துவிட்டுக் கிளம்ப  பாகிஸ்தானுடைய உதவியை அமெரிக்கா நாடுவதில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இம்ரான் கானுக்குக் கொஞ்சம் ஐஸ், கொஞ்சம் சலுகை என்று கொஞ்சியதோடு நிற்காமல் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று அறிவித்ததே, ஆகஸ்ட் 5, 6 இரண்டுதேதிகளில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆர்டிகிள் 370 abrogate செய்யப்படுவதான ஜனாதிபதி அறிவிப்பும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதற்கான ஒப்புதலை 2/3 பங்குக்கும் கூடுதலான மெஜாரியுடன் நிறைவேற்றியதற்குமான காரணமாக இருந்தது.
After suffering its worst ever terrorist attack, the US turned against the Taliban and drove it from power in Kabul in 2001. Now, in search of a face-saving exit from the Afghanistan war, America has embraced the Taliban in high-level deal-making, which risks handing over Afghanistan to the same thuggish group that the US ousted from power. And seeking to appease Pakistan, Washington recently facilitated a $6-billion International Monetary Fund bailout for Pakistan and relaxed its suspension of military aid by clearing $125 million in assistance for Pakistan’s F-16 fleet.Pakistan—through its brutal proxies, the Taliban and the Haqqani network—has compelled the US to negotiate the terms of its surrender in Afghanistan and seek Pakistani support for a face-saving exit. This explains why the US, while sidelining the elected Afghan government in its deal-making with the Taliban, has openly signalled its readiness to accept Pakistan’s primacy in Afghanistan.  

ன்னொரு அறிவிக்கப்படாத முக்கியமான காரணமாக சீனாவின் சில்மிஷங்கள் வடகிழக்கு மாநிலங்களிலும் காஷ்மீர் விவகாரத்திலும் தொடர்ந்துகொண்டே இருப்பது! 2010 வாக்கில் ஜம்மு காஷ்மீர் மற்றும் அருணாசலப்பிரதேச மக்களுக்கு stapled-visa policy என்று அறிவித்ததற்கு சீன வெளியுறவு அமைச்சகம் சொன்ன காரணம் இது :: "Since the Indian government keeps an eye on your foreign visits and after checking your passport the Government of India may come to know the detail of your trips to China. So the Indian government may ask you to explain the reason of your trip to China. Hence Chinese government has decided to issue stapled visa to you."
In summary, it can be said that the Stapled Visa Policy of China is a conspiracy to invite anti India elements in their country and conspire the strategy to divide the united India       

ந்தப்பின்னணியில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து லடாக் பகுதியைப் பிரித்து யூனியன் பிரதேசமாகத் தனது நேரடிக் கண்காணிப்பின் கீழ் வைத்துக் கொண்டதும் , ஜம்மு காஷ்மீர் பகுதியை சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக அறிவித்திருப்பதிலும் ஒரு உறுதியான முன்னெடுப்பு இருக்கிறது.காஷ்மீர் பள்ளத்தாக்கில் முப்பது வருடங்களுக்கும் மேலாக பாகிஸ்தானின் ஜிஹாதி போராளிகள் இஷ்டம்போல உலாவிக் கொண்டிருந்ததற்கு முற்றுப்புள்ளி வைக்கத் தொடங்கியாகிவிட்டது.  

சீனப்பூச்சாண்டிகளுக்கு மயங்கிநின்று விடாமல், சீனாவுக்கு பொருளாதார ரீதியாகவும், சீனத்து உதார்களுக்கு ஈடுகொடுத்தும் பதிலடி கொடுக்கவேண்டும் என்ற கருத்தை பிரம்ம செலானி வலியுறுத்திச் சொல்கிறார். காஷ்மீர் விவகாரம் இன்னும் சிலகாலத்துக்கு வலிதருவதாக இருக்கலாம். ஆனால் காலப்போக்கில் இந்தியா வலிமையோடு விளங்குவதற்கு, இந்தவலியைப் பொறுத்துக் கொண்டு தான் ஆக வேண்டும் என்பது அவர் சொல்வதில் முக்கியமான விஷயம்! மேலே சுட்டியில் பிரம்ம செலானியின் விரிவான அலசலை ஒருமுறை படித்துப் பாருங்கள்!

மீண்டும் சந்திப்போம்.
         

Saturday, August 10, 2019

இந்தியா! பாகிஸ்தான்! சீனா! புதிய சவால்கள்! #3

இந்தப் பக்கங்களில் இந்தியா பாகிஸ்தான் சீனா! புதிய சவால்கள்! எனத் தலைப்பிட்டு ஐந்து மாதங்களுக்கு முன் இரண்டு பதிவுகளாக எழுதியதற்குப் பிறகு, மாற்றமுடியாத சில நிகழ்வுகள் இந்திய அரசியலில் சென்ற ஆகஸ்ட் 5.6, தேதிகளில் நடந்திருக்கிறது. 2020 இல் தேர்தலைச் சந்திக்கவிருக்கிற அமெரிக்க அதிபர் டொனால்ட்  ட்ரம்ப், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற சென்ற ஜனவரியில் இருந்தே தாலிபான்களோடு பேச்சு நடத்தி வருவதைப் பற்றியும் கூட  இங்கே எழுதியதையும் சேர்த்துப் பார்த்தால், காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசு எடுத்திருக்கும் முடிவு இந்தியா, பாகிஸ்தான், சீனா மூன்று நாடுகளுக்கிடையே பல புதிய சவால்களைத் தொடங்கி வைத்திருக்கிறது என்பது புரியும்! ஆக இது ஒரு ஆரம்பம் மட்டும் தான்! ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கிற ஆர்டிகிள் 370 abrogate செய்யப்பட்டிருப்பதும், இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஆக்கப்பட்டு அது  நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் 2/3 மெஜாரிட்டியில் சட்டம் ஆகவும் ஜனாதிபதி ஒப்புதலைப் பெற்றிருப்பதும் வெறும் உள்நாட்டு அரசியல் ஸ்டன்ட் தானா? நிச்சயமாக இல்லை. ஒரு விதத்தில் இந்த முடிவை எடுப்பதற்கு டொனால்ட் ட்ரம்ப்பும் காரணமாக அல்லது தூண்டுகோலாய் இருந்திருக்கிறார்!


இது வெறுமனே காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் சன்னி முஸ்லிம்களைப் பற்றியது மட்டுமல்ல. ஜம்மு காஷ்மீர் என்று சொல்லும் போதே வேறென்னவெல்லாம் சேர்ந்திருக்கிறது என்று கொஞ்சம் புரிந்துகொள்வதற்கு உதவியாக The Print தளத்தில் சேகர் குப்தா இந்த 28 நிமிட வீடியோவில், இந்தியா சீனா பாகிஸ்தான் என்று 3 அணு ஆயுத நாடுகளுக்கிடையில் இருக்கும் எல்லை பிரச்சினைகள், எனது உனது என்கிற பஞ்சாயத்துக்கள் இவைகளைச் சுருக்கமாக சொல்கிறார். மேலே உள்ள வரைபடத்தைப் பார்த்துக் கொண்டே அவர் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்! பிரிட்டிஷ் குள்ளநரிகள் விதைத்துவிட்டுப்போன அரைகுறையான பொய்கள் எப்படி இன்றைக்கு இவ்வளவு பெரிய பிரச்சினை ஆனது என்பதை ஒரே நடையில் புரிந்துகொண்டுவிடமுடியாது என்பதால் சிறிது சிறிதாகப் புரிந்துகொள்ள முயற்சி செய்வோம்!


In fact, Trump’s looming Faustian bargain with the Taliban was an important factor behind India’s change of the constitutional status of Jammu and Kashmir (J&K). A resurgent Pakistan-Taliban duo controlling Afghanistan would spell greater trouble for J&K, including through increased cross-border entry of armed jihadists என்று தன்னுடைய அலசலை ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் நேற்று முன்தினம் பிரம்ம செலானி எழுதியிருக்கிற ஒரு கட்டுரை, இது விஷயத்தில் இந்தியா சந்திக்க வேண்டிய சில சவால்கள் என்னென்ன என்பதை ஒரு கோடி காட்டுகிறது. 

J&K’s reorganization effectively compartmentalizes India’s territorial disputes with Pakistan and China centred in that region. China’s protestation that India’s inclusion of Chinese-held Ladakhi areas in the new Ladakh union territory “hurts Chinese sovereignty” underscores that there will be no let up in Chinese incursions. In recent years, China — which occupies the Switzerland-size Aksai Chin Plateau and lays claim to several other Ladakh areas — has stepped up its military forays and incursions into Ladakh’s Demchok, Chumar, Pangong Tso, Spanggur Gap and Trig Heights. சீனா உடனடியாக ஒரு மோதலில் இறங்குமா அல்லது வெற்று உதார்களோடு நிறுத்திக் கொள்ளுமா என்பது சீரியசாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விஷயம். இப்போது லடாக் விஷயத்தில் ஒரு சம்பிரதாயமான அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கும் சீனா வேறொன்றில் ஒரு எச்சரிக்கையாகச் சொல்லியிருக்கிறது.


India’s ambassador in Beijing was called to the Chinese foreign ministry on July 10 to hear China’s concerns about the US campaign to keep Huawei out of 5G mobile infrastructure worldwide என்று சீனா தனது வர்த்தக நலன்களை மட்டுமே முன்னிறுத்தியிருப்பதில் உங்களால் என்ன புரிந்து கொள்ள முடிகிறது?

மீண்டும் சந்திப்போம்.
   

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை