Showing posts with label ISIS. ஆப்கானிஸ்தான். Show all posts
Showing posts with label ISIS. ஆப்கானிஸ்தான். Show all posts

Sunday, February 23, 2020

டொனால்ட் ட்ரம்ப் வருடங்கள்! #தாலிபான் #AmericaFirst

வெளியுறவு விவகாரங்களில் இன்னதென்று விவரிக்க முடியாத X factor ஏதாவது இருக்குமானால், இன்றைக்கு  அது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தானென்று தயங்காமல் சொல்லிவிடலாம்! முன்னெல்லாம் அது கம்யூனிச நாடுகளின் இரும்புத்திரைக்குப் பின்னால் என்னவாக இருக்கும் என்றிருந்த காலம் 1990 களிலேயே மலையேறி விட்டது. சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு சோவியத் முகாமுக்கும் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளுக்கும் இடையிலான பனிப்போர் முற்றிலும் முடிவுக்கு வந்து முப்பதாண்டுகள் ஆகிற நேரம் இது. ஆனாலும் இருமுகாம்களுக்கும் இடையில் நிலவிய பகைமை, அவநம்பிக்கையின் எச்சங்களாக ரஷ்யா சிக்கிக் கொண்டுதவித்து ஒருவழியாக வெளியே வந்த புதைகுழிகளுக்குள் அமெரிக்கா தேவையே இல்லாமல் சிக்கிக் கொண்டு தவிப்பது அமெரிக்கா தொடர்ந்து சறுக்கி வருவதன் அடையாளமாக முந்தின நாட்களில் வியட்நாம், இப்போது ஆப்கானிஸ்தான் இருக்கிறது. தான் ஆதரித்து வரும் உள்ளூர் அரசையும் ஒதுக்கிவிட்டு அங்கே எதிரிகளான தாலிபான்களோடு நேரடியாக சமாதானம் பேசி, அமெரிக்கப்படைகளை  முற்றிலும் விலக்கிக்கொள்ள இப்போதிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் முயற்சித்து வருவதை ஏற்கெனெவே இந்தப் பக்கங்களில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம்.

Feb 10, ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட  இரு 
அமெரிக்கப் போர்வீரர்களின் சவப்பெட்டிகள்
டோவல், டெலாவேர் விமானப்படை தளத்தில் 
வேனில் ஏற்றப்படுகிற காட்சி AFP Getty images   
       
பயங்கரவாதத்துக்கெதிரான போர் என்ற முழக்கத்தோடு  முதலில் அக்டோபர், 2001 இல் அமெரிக்கப்படைகள் ஆப்கானிஸ்தானில், அல்கொய்தாவுக்கு ஆதரவாகத் தளங்கள் அமைத்து உதவிக்கொண்டிருந்த  தாலிபான்களுக்கெதிராகப் போரில்  இறங்கியதென்று  ஆரம்பித்தது, அதற்கடுத்த 18 ஆண்டுகள் ஆப்கானிஸ்தான் புதைகுழிக்குள் சிக்கிக்கொண்டதாக ஆகிப்போனது.
On 11 September 2001, attacks in America killed nearly 3,000 people. Osama Bin Laden, the head of Islamist terror group al-Qaeda, was quickly identified as the man responsible. The Taliban, radical Islamists who ran Afghanistan and protected Bin Laden, refused to hand him over. So, a month after 9/11, the US launched air strikes against Afghanistan. As other countries joined the war, the Taliban were quickly removed from power. But they didn't just disappear - their influence grew back and they dug in. Since then, the US and its allies have struggled to stop Afghanistan's government collapsing, and to end deadly attacks by the Taliban என்று 100 வார்த்தைகளுக்குள் பிபிசி செய்தி இந்தப்பிரச்சினை ஆரம்பமான கதையைச்  சொன்னாலும் புதைகுழிக்குள் சிக்கிக்கொண்டவர்கள் அவஸ்தையை வெறும் வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியுமா? ஆனால் 100 வார்த்தைகள் என்று ஆரம்பித்து அப்புறம் 300, 600, 800 வார்த்தைகளில் அடுத்தடுத்து நிலவரத்தைக் கொஞ்சம் எளிமையாகச் சொல்ல மேலே இருக்கும் சுட்டியில் முயற்சித்திருக்கிறார்கள்.
டொனால்ட் ட்ரம்ப் தன்னுடைய 2016 அதிபர் தேர்தல் பிரசாரங்களில் அதிகம் பேசியது #AmericaFirst அமெரிக்க வெளியுறவுக்கொள்கையில் துருப்பிடித்தவைகளை அகற்றுவது.அப்புறம் முடிவே இல்லாத போர்களில் இருந்து அமெரிக்கப்படைகளை விலக்கிக் கொள்வது, சீனாவுடனான வர்த்தகம் அமெரிக்காவுக்கு சாதகமாக இல்லை, IPR அறிவுசார் சொத்துக்காப்புரிமை இப்படிப் பல. இதில் எல்லாவற்றிலும் கொஞ்சம்கொஞ்சம் வாயைவைத்து எதிலும் ஒரு முழுமை இல்லாமல் அரைகுறையாக அந்தரத்தில் தொங்கிக்கொண்டி ருப்பதுதான் டொனால்ட் ட்ரம்பின் முதல் நாலாண்டுகால ரிபோர்ட் கார்ட். வருகிற நவம்பரில் இன்னொருமுறையும் தானே அதிபர் வேட்பாளர் என்று களத்தில் இறங்கத் தயாராகவும் இருக்கிறார்.
அமெரிக்கா முதலில் என்கிற கொள்கை முழக்கம் என்ன நிலைமையில் இருக்கிறது? அமெரிக்கத் தொழில் நிறுவனங்களே அதில் அதிக ஆர்வமோ, நம்பிக்கையோ கொண்டு செயல்படுவதில்லை என்பது களயதார்த்தம்! கடும் சந்தைப்போட்டியில், லாபம் என்பது செலவினங்களை எந்த அளவுக்குத் திறமையாகக் குறைக்கிறோம் என்பதில் தான் உள்ளது. இதை அமெரிக்க நிறுவனங்கள் மிகத்தெளிவாகவே புரிந்து கொண்டிருக்கின்றன. இதனால் தான் சீனாவில் காப்புரிமை மீறல், ரிவர்ஸ் என்ஜினீயரிங்கில் சந்தையில் அதிக மதிப்புள்ள பொருட்களை அப்படியே காப்பியடித்துத் தயாரிப்பது, உள்ளூர்ச் சந்தை திறந்து விடப்படாதது என்று ஏகப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும் சீனாவில் தொழிற்சாலைகள் நிறுவித் தங்களுடைய உற்பத்தியை நடத்தி வருகின்றன. மிகக்குறைவான கூலியில் சீனத் தொழிலாளர்கள் கிடைக்கிற போது, அதிகச்செலவு பிடிக்கும் உள்ளூர்த் தொழிலாளிகள் எதற்கு? சீனாவுடன் வர்த்தகப்போர் என்று கொஞ்சநாள் உதார் காட்டிவிட்டு டொனால்ட் ட்ரம்ப் இப்போது இந்தியா,  தென்கொரியாவுடன் வார்த்தைப்போர் ஆரம்பித்து இருக்கிறார் என்பது நல்ல வேடிக்கை! 
Nobody seemed fully prepared, though, for Trump’s bull-in-a-china-shop approach to foreign relations — picking fights with allies, embracing Russia, announcing via Twitter an abrupt withdrawal of U.S. troops from Syria and rattling nuclear sabers with North Korea’s Kim Jong Un என்று ரத்தினச் சுருக்கமாக AP News தளத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு சொன்னது இன்றைக்கும் பொருத்தமாக இருக்கிறது. ஆனால் டொனால்ட் ட்ரம்ப் தன்னுடைய ஊசலாட்டங்களில் இருந்து கொஞ்சமும் மாறுவதாயில்லை! அதே பழைய பல்லவிகளை வைத்து இன்னுமொரு நாலாண்டுகள் தனக்குச் சான்ஸ் கொடுக்கவேண்டுமென்று அமெரிக்க ஜனங்களிடம் ஆரம்பித்துவிட்டார்! அப்படி அமெரிக்க ஜனங்களும் கொடுத்துவிடுவார்கள் போலத்தான் நிலவரங்கள் சொல்கின்றன என்பது அமெரிக்கர்களுடைய போதாத காலம்! அதற்குமேல் என்ன சொல்ல?  
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுடனான சமாதானப் பேச்சு வார்த்தை சென்ற வருடம் செப்டெம்பரில் மிகத் தீவீரமாக நடந்து கொண்டிருந்தபோது டொனால்ட் ட்ரம்ப் திடீரென சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் என்று அந்தப்பக்கம் திரும்பியதில் நின்றுபோனது. இப்போது விட்ட இடத்தில் இருந்து மறுபடியும் ஆரம்பித்திருக்கிறார்கள். தாலிபான்கள் ஒருவாரம் குறைவான வன்முறை என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்களாம்! மைக் பாம்பியோ சென்ற வெள்ளிக்கிழமை அறிவித்திருக்கிறார்.         

The most important task now is to start and generate traction in intra-Afghan negotiations, without getting distracted by those who might seek to capitalize on the fragility of the “reduction in violence” pledge or any cease-fire agreements that follow. It is nearly certain there will be continued violence during the talks.Patience is an absolute necessity. A peace process won’t be done as fast as long-suffering Afghans hope, nor quickly enough to produce a definitive political win before the American presidential election என்று இந்த பேச்சுவார்த்தையைக் குறித்து நியூ யார்க் டைம்ஸ் செய்தி சொல்வதென்னவோ வாஸ்தவம்.

பயங்கரவாதத்துக்கான நிதியைக் குறித்து ஆராயும் FATF பாகிஸ்தானுக்கு ஜூன் மாதம் வரை மறுபடியும் அவகாசம் கொடுத்து grey list இலேயே தொடர்வதன் பின்னணி என்ன என்பதை இந்தப்பக்கங்களுக்கு வரும் நண்பர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள் என்றே நினைக்கிறேன். தாலிபான்களுடன் பேசுவதில் அமெரிக்காவுக்கு பாகிஸ்தானுடைய உதவி தேவைப்படுகிறதென்பது தெளிவு. அதனால் இந்தியாவுக்கு எல்லைப்புறங்களில் கொஞ்சம் சிக்கல் தொடரலாம்! அமெரிக்க உறவு கசந்து விட்டது போல முடிவுசெய்ய வேண்டியதுமில்லை. 

ராஜீய உறவுகள் என்றாலே சிக்கல்களும் சிடுக்கல்களும் நிறைந்தது தான்! இங்கே காங்கிரஸ் கட்சியின் ரந்தீப் சிங் சுர்ஜீவாலா சவடால் பேசுவது போல எதையும் ஒரேயடியாகக் கத்தரித்துப் பேசுவது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. டொனால்ட் ட்ரம்ப் இந்திய வருகையைக் குறித்து மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம் இதுமட்டும் தான்! டொனால்ட் ட்ரம்ப் இன்னொரு முறை அதிபராக வருவதால் புதிதாக எதுவும் மாறிவிடாது. 

மீண்டும் சந்திப்போம். 
   

Tuesday, October 8, 2019

மீண்டும் டொனால்ட் ட்ரம்ப் குளறுபடி! சிரியாவின் சாபம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் விசேஷமான குணாதிசயமே எந்த நேரத்தில் என்னமாதிரி முடிவுகளை எடுப்பார் என்பதை எவராலுமே அனுமானிக்க முடியாதது தான்! பதவிக்கு வந்த இந்த மூன்றாண்டுகளில் எடுத்த திடீர் முடிவுகளோடு ஒத்துப்போக முடியாமல், கூட இருந்தவர்களே ஒவ்வொருவராக விலகினார்கள்! சிலரை ட்ரம்ப்பே நீக்கினார்! அமெரிக்காவை ஒரு நம்பகமான கூட்டாளியாக நேசநாடுகள் பார்க்க முடியாதபடி ஏகப்பட்ட குளறுபடிகள் ஒருபக்கம்! சீனாவே கூட இவரை எப்படி சமாளிப்பது என்று புரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறதென்றால், என்ன சொல்வது?    


ஞாயிறு இரவு  டொனால்ட் ட்ரம்ப் இன்னொரு அதிரடி முடிவை அறிவித்தருக்கிறார்.  துருக்கி அதிபர் எர்தோகனுடன் தொலைபேசியில் பேசியபிறகு, சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகளை உடனடியாக வாபஸ் பெறுவதாக அறிவித்திருப்பதில், மறுபடியும் ஒரு இஸ்லாமிய காலிபேட் அமைக்கிற கனவில் இருக்கும் துருக்கி, வடசிரியாவில் அதிரடி தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா மறைமுகமான ஒப்புதலை அளித்துவிட்டதான் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இந்த முடிவுக்கு ட்ரம்ப் நிர்வாகத்தில் இருப்பவர்களே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததையும் மீறி டொனால்ட் ட்ரம்ப் தன்னிச்சையாக இந்த முடிவை அறிவித்திருக்கிறார்.
Erdoğan’s collusion with the Islamic State goes much deeper. About 90% of foreign fighters entering Iraq and Syria to fight with al Qaeda or the Islamic State traversed the Turkish border, often with the facilitation of Turkish security forces. So too did weaponry. While the Washington Post appears intent to whitewash Erdoğan’s crimes against journalists, many of those in prison or exile are there for exposing collusion between Turkey and the Islamic State.

Trump considered dining with the Taliban on the week of Sept. 11 this year, but wisely canceled his summit. What he is doing in Syria is even worse, however, because he is ensuring the Islamists have a safe haven unlike any enjoyed by radical Islamists since the Clinton administration trusted Taliban promises to curtail promises two decades ago.Domestically, Trump’s legacy may be impeachment. Internationally, his Sunday night decision guarantees an Islamic State 2.0 and future attacks on Americans, American interests, and the homeland.  இப்படி  வாஷிங்டன் எக்ஸாமினரில் மைக்கேல் ரூபின் சொல்வது சரியான மதிப்பீடாகத்தான் இருக்கிறது.


இந்த 26 நிமிட  வீடியோ 4 வருடப்பழையதுதான்! சிரியாவில் நடப்பது என்ன என்று சிரியா அதிபர் BBC க்கு அளித்த பேட்டி இது. ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நடக்கும் ஆதிக்கப்போரில்  உள்நாட்டில் இஸ்லாமியத் தீவீரவாதிகள், ISIS இவர்களுடைய தாக்குதல்களும் சேர்ந்துகொண்டு, ஒரு இழுபறியாகவே நடந்துகொண்டிருந்ததை, சுருக்கமாகத் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும். 

T
குர்து இன மக்கள் மக்கள் வசிக்கிற பிரதேசங்கள் துருக்கி, ஈராக்,சிரியா, ஈரான், ஆர்மீனியாவின் இருபுறமும்! ஈராக், சிரியாவில் குர்து மக்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகள் ஒரு தனிநாடாக ஆகிவிடலாம் என்ற அச்சமே துருக்கியை ஆட்டுவிப்பதாகச் சொன்னாலும் கூட பழைய ஒட்டோமான் சாம்ராஜ்ய கனவுகள் தான் (Ottoman Empire என்று தேடிப்பாருங்கள்) பிரதான காரணம்.டொனால்ட் ட்ரம்ப்பின் இந்த திடீர் முடிவைப்பற்றி  பிரிட்டனின் டெய்லி மெயில் நாளிதழ் இப்படி  சில உபதலைப்புக்களில்  சுருங்கச் சொல்லியிருக்கிறது:    
One official labelled the president 'spineless' and said his actions has left the US in 'a state of increased danger for decades to come'

The National Security Council source, who called Turkey 'playground bullies', told Newsweek President Trump 'was definitely out-negotiated' 

Trump issued an order to withdraw to the United States Sunday evening.  It's a move that marks a major shift in U.S. policy, and effectively abandons the Kurds, who were Washington's main ally in the years-old battle against ISIS

The White House statement is said to have 'stunned' the Pentagon, sources say.One said top officials at the Defense Department were 'completely blindsided'

Even Trump's staunchest allies have expressed outrage at the prospect of abandoning Syrian Kurds who had fought ISIS with American arms and advice  

Turkey regards Kurdish forces within the SDF as a terror threat because it maintains ties to Kurdish militants inside Turkey, and has vowed to crush them.Ankara says it wants to establish a 'safe zone' on the Syrian side of the border where it could send back some of the 3.6 million refugees from the eight-year civil war.Kurds argue that Ankara's goal is to dilute their dominance in the region with an influx of mostly Sunni Arab refugees now living in southwestern Turkey.


துருக்கி குர்து இனமக்களை மனிதாபிமானமற்ற வகையில் நடத்தினால்  அதன் பொருளாதாரத்தை அழித்து விடுவோம் என்று டொனால்ட் ட்ரம்ப் பேசியது சும்மா லுலுலாயிக்கு!   

   
இது BBC விவாதம்! ட்ரம்பின் முடிவால் ISIS மீண்டும் உயிர்த்து எழுமா? அது உயிர்த்தெழுகிறதோ இல்லையோ அமெரிக்கா ஒரு நம்பகமான கூட்டாளியாக எவருக்கும் இருக்கமுடியாது என்பதை டொனால்ட் ட்ரம்ப் அழுத்தமாகப் பதிவுசெய்து விட்டார் என்பது மட்டும் தெளிவு.

மீண்டும் சந்திப்போம்.    

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை