முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய இருக்கிறது. 70000 பார்வையாளர்களுடன் டியனான்மன் சதுக்கத்தில் நடந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சி எதைச் சொன்னது? சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றுச் சுவடுகளையா? கட்சிப்பெருமிதத்தையா? இவை எதுவுமே இல்லையாம்! ஷி ஜின்பிங்! என்கிற ஒற்றைப்புள்ளியை மகிமைப்படுத்துகிற மாதிரியே கொண்டாட்டம் நடந்தது, முடிந்தது!
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர், நாட்டின் அதிபர் ஷி ஜின்பிங் ஒருமணிநேரம் பேசினார். பேச்சின் முக்கிய அம்சமாக உலகநாடுகளை மிரட்டுவது இருந்தது. அமெரிக்கர்களை நேரடியாக எச்சரிப்பதாக மட்டுமே இருந்தது என்பதன் பின்னால் என்னென்ன இருந்ததாம்? இங்கே இந்திரா காலத்தில் தேவகாந்த் பரூவா என்கிற காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கான் இந்திரா தான் இந்தியா இந்தியாதான் இந்திரா என்று உளறிய மாதிரி ஷி ஜின்பிங் தான் கட்சி! சீனக் கம்யூனிஸ்ட் கட்சிதான் ஷி ஜின்பிங் என்று மாபெரும் தலைவர் மாவோவையும் மிஞ்சிய தலைவருக்கெல்லாம் தலைவராக உள்ளூர் மக்களுக்கும் உலகத்துக்கும் விளம்பரப்படுத்திக் கொள்ள நடத்திய நிகழ்ச்சியாக மட்டுமே இந்த நிகழ்ச்சி இருந்ததாம்!
வேறு யார் ஒப்புக்கொள்கிறார்களோ இல்லையோ, கடன்வலையில் முழுமையாகச் சிக்கிக்கொண்டு சீனா ஆட்டுவிக்கிறபடியெல்லாம் ஆடவேண்டிய நிலையில் இருக்கிற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், உய்கர் முஸ்லிம்களுடைய விஷயமாகத் தனக்கு எதுவும் தெரியாது என்று சிறிதுகாலத்துக்கு முன்புவரை சொல்லிக் கொண்டிருந்தவர், இப்போது சீன அரசு சொல்வதை அப்படியே நம்புகிறாராம்! ஏற்றுக் கொள்கிறாராம்! வேறு வழி?
ஷி ஜின்பிங் உள்ளூர்க் கூட்டத்துக்கு முன் வீர உரை நிகழ்த்திக் கொண்டிருந்த அதேநேரம், அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட், அதை மேற்கோள் காட்டி CNN முதலானவை சாட்டிலைட் படங்களைக் காட்டி சீனா யூமென் பிராந்தியத்தில் நூற்றுக்கணக்கான கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை Silo எனப்படும் பதுங்குகுழிகளில் தயார்நிலையில் வைத்திருப்பதாக, அதேமாதிரி இன்னொரு இடத்திலும் வைத்திருப்பதாக செய்தியைப் பரபரப்பாகப் பரப்பிக் கொண்டிருந்ததை மேலே 6 நிமிட வீடியோவில் நையாண்டி செய்கிறார்கள். இரண்டாவது உலகப்போரில் இங்கிலாந்து இதேமாதிரி அட்டையினால் செய்த நூற்றுக்கணக்கான டாங்குகளை படம்பிடித்து ஜெர்மனியைக் குழப்பியது நினைவுக்கு வருமேயானால் ஏய்ப்பதில் கலைஞர்களான பிரிட்டிஷ் அரசியல்வாதிகளையும் சீனர்கள் மிஞ்சிவருகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஏய்ப்பதில், திசை திரும்புவதில், வெற்றுக்கோஷங்களிலேயே எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடும் வல்லமை கொண்டது கம்யூனிஸ்ட் கட்சி என்பதை இப்போதாவது ஒப்புக் கொள்கிறீர்களா?
ஜூலை 1 சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு! இது குறித்து ஏராளமான செய்திக்குறிப்புக்கள், கட்டுரைகள் என்று வந்து கொண்டே இருக்கின்றன. கம்யூனிஸ்ட்டுகளைக் கவனிப்பவர்களுக்கு, அவர்களுடைய கிளர்ச்சியூட்டும் கோஷங்கள் மிகவும் பரிச்சயமாகியிருக்கும். இப்படி வெறும் கோஷங்களே மிகப்பெரிய அரசியல் செயல்பாடுகளைத் தீர்மானிப்பதாக ஆரம்பமானதே சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து தான், அதன் பிதாமகர் மா சேதுங் தான் என்பதைப் புரிந்துகொள்ள பிபிசி தளத்தில் இன்று வெளியாகி இருக்கும் இந்தச் செய்திக் கட்டுரை கொஞ்சம் உதவியாக இருக்கும். கடந்துவந்த நூற்றாண்டில் மா சேதுங் முதல் தற்போதைய ஷி ஜின்பிங் வரை எப்படி கோஷங்களே அரசியலானது (பல சமயங்களில் படுஅபத்தமாகவும்) என்பதை ஒரு 11 கோஷங்களை எடுத்துக்கொண்டு சுருக்கமாகப்பேசும் கட்டுரை இது.
இந்த 6 நிமிட வீடியோவில் ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியின் இரு பிரதிநிதிகளுடன் மிகச் சிறிய அளவிலான சீனர்களுடன் 1821 ஜூலை 1 அன்று துவங்கிய சீனக்கம்யூனிஸ்ட் கட்சி நாற்பது வருடங்களுக்குக்காகவே ரஷ்யர்களையும் மிஞ்சிய அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையாவாக மாறியது என்பது சரித்திர விசித்திரம். இந்த விசித்திரத்தை இந்து தமிழ்திசை நாளிதழில் மு ராமநாதன் கொஞ்சம் பிரமிப்புடன் எழுதியிருக்கிறார்.
எல்லாப் பேரியக்கங்களின் பயணமும் சிறிய அடிவைப்பில்தான் தொடங்கியிருக்கிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பயணமும் அப்படித்தான் ஆரம்பமானது. நூறாண்டுகளுக்கு முன்னால், இதே நாளில் (ஜூலை 1, 1921) ஷாங்காய் நகரில், ஒரு ஓட்டு வீட்டில் கட்சி நிறுவப்பட்டது. மூன்று வாரங்களுக்குப் பிறகு, அங்கே நடந்த கூட்டத்தில் 57 பேராளர்கள் கலந்துகொண்டனர். அதில் ஹூனான் விவசாயி மகன் ஒருவரும் இருந்தார். பீஜிங் பல்கலைக்கழகத்தில் நூலக உதவியாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த அந்த இளைஞரின் பெயர் மா சேதுங். அவரது படம்தான் இப்போது தியானென்மென் சதுக்கத்தின் முகப்பை அலங்கரித்துவருகிறது.
முன்கதை: பல சாம்ராஜ்ஜியங்களின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் பிறகு ஜனவரி 1, 1912 அன்று சீனக் குடியரசு பிறந்தது. புதிய குடியரசை உருவாக்கிய அமைப்புகள் டாக்டர் சன் யாட் சென்-ஐத் தலைவராக நியமித்தன. சன் ஒரு அறிவுஜீவி. திறமான அரசியலர் அல்லர். சீனா போன்ற பெரிய தேசத்தை அவரால் ஒரு குடையின் கீழ் கொண்டுவர முடியவில்லை. நாடெங்கிலும் யுத்த பிரபுக்கள் போராட்டங்களிலும் கலகங்களிலும் ஈடுபட்ட வண்ணம் இருந்தனர். மறுபுறம் வெளிநாட்டு ஆக்கிரமிப்பும் இருந்தது. இதனால், சினமுற்ற சீன இளைஞர்கள் மே 4, 1919 அன்று தியானென்மென் சதுக்கத்தில் கூடினார்கள். ‘மே 4 இயக்கம்’ என்று வரலாறு குறித்து வைத்திருக்கும் இந்தப் போராட்டம்தான், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தொடக்கம் குறித்தது. இந்த இயக்கத்தை முன்னின்று நடத்திய லீ தாவ்ஜவ், சென் து சியூ எனும் இருவர்தான் 1921-ல் கம்யூனிஸ்ட் கட்சியையும் நிறுவினார்கள். இதில் முன்னவர் மாவோவின் குரு.
முதல் உள்நாட்டு யுத்தம் (1927-1937) ::சன் 1925-ல் மறைந்தார். அடுத்து, சீனக் குடியரசின் ஆட்சியையும் ஆளுங்கட்சியாக இருந்த கோமிங்டாங் கட்சியையும் கைப்பற்றினார் சியாங் கை ஷேக். சோவியத் ஒன்றியம் கோமிங்டாங்குக்கு ஆதரவாக இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சியையும் கோமிங்டாங்குக்கு இசைவாக இருக்கும்படி வலியுறுத்தியது. ஆனால், சியாங் கம்யூனிஸ்ட்டுகளை எதிரிகளாகப் பாவித்தார். அவர்களை ஒழித்துக்கட்டத் தொடங்கினார். அதற்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி தனக்கான ராணுவத்தைக் கட்டியது. அதற்கு ஆகஸ்ட் 1, 1927-ல் மக்கள் விடுதலை ராணுவம் என்று பெயரிட்டது. அதுதான் இன்று உலகத்தின் மிகப் பெரிய ராணுவமாக வளர்ந்திருக்கிறது.
கோமிங்டாங்குடனான யுத்தத்தின்போது ஒரு கட்டத்தில் மாவோ பின்னேறும் தந்திரத்தைப் பயன்படுத்தினார். கோமிங்டாங் பலவீனமாக இருக்கும் இடங்கள் வழியாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடைப்பயணத்துக்கு ‘நெடும் பயணம்’ (1934-35) என்று பெயர். பயணத்தின்போது பசியிலும் பனியிலும் பலியானவர்கள் பலர். என்றாலும், அந்தப் பயணத்தில் எண்ணற்ற கிராமங்கள் வழியாக ராணுவம் முன்னேறியது. இதன் மூலம் கட்சி மக்களுக்கு நெருக்கமாகியது. மாவோ மக்கள் தலைவரானார்.
ஜப்பானிய ஆக்கிரமிப்பு (1937-1945)::வல்லரசாகும் கனவில் இருந்த ஜப்பான், சீனாவின் பல பகுதிகளை ஆக்கிரமித்துவந்தது. உச்சமாக 1937-ல் நான்ஜிங் நகரில் ஜப்பான் நிகழ்த்திய வன்கொடுமைகள் வரலாற்றைக் கரிய பக்கங்களால் நிறைத்தன. இந்தக் காலகட்டத்தில் கோமிங்டாங்கும் கம்யூனிஸ்ட்டுகளும் ஒன்றிணைந்து தங்களது பொது எதிரியான ஜப்பானை எதிர்த்தனர். சீனர்கள் இழந்தது அதிகம். எனினும் விடாப்பிடியாகப் போராடினார்கள். இரண்டாம் உலகப் போரின் (1939-45) முடிவு ஜப்பானுக்குச் சாதகமாக இல்லை. அது நேச நாடுகளிடம் சரணடைந்தது, சீனாவிலிருந்தும் வெளியேறியது.
இரண்டாம் உள்நாட்டு யுத்தம் (1945-1949)::பொது எதிரி வெளியேறியதும் உள்நாட்டு யுத்தம் தொடர்ந்தது. இந்த முறை கோமிங்டாங்குக்கு அமெரிக்கா உதவியது. எனில், கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்கள் ஆதரவு பெருகியிருந்தது. ஆயுத பலமும் கூடியிருந்தது. ஆகவே, வெற்றி வசமானது. கோமிங்டாங்கின் தலைவர் சியாங், தைவானுக்குத் தப்பியோடினார். அக்டோபர் 1, 1949 அன்று தியானென்மென் சதுக்கத்தின் முகப்பில் மக்கள் சீனக் குடியரசை நிறுவினார் மாவோ.
மாவோவின் காலம் (1949-1976)::பெரும் கனவுகளோடு தொடங்கியது கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி. ‘நூறு பூக்கள் மலரட்டும்’ என்பது மாவோவின் புகழ்பெற்ற மேற்கோள்களில் ஒன்று. எல்லாக் கருத்துகளும் முட்டிமோதித் தெளியட்டும் என்பது பொருள். ஆனால், அவரது ஆட்சியில் விமர்சனங்கள் சகித்துக்கொள்ளப் படவில்லை. கூட்டுப் பண்ணைகளையும் தொழில் உற்பத்தியையும் இலக்காகக் கொண்டு மாவோ தொடங்கிய பெரும் பாய்ச்சல் திட்டமும் (1958-1962), பழமையைத் தகர்ப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட கலாச்சாரப் புரட்சியும் (1966-1976) பலன் தரவில்லை. மாறாக, பஞ்சம் வந்தது. மக்கள் மடிந்தனர், அச்சுறுத்தலுக்கு உள்ளாயினர். பின்னாளில் கட்சி இந்த இரண்டு முன்னெடுப்புகளும் பிழையானவை என்று ஒப்புக்கொண்டது. அதே வேளையில், மாவோவின் காலத்தில்தான் சீனா ஒரு தேசமாகத் திரண்டது, மக்களின் கல்வியறிவும் ஆரோக்கியமும் வளர்ந்தது.
தாராளமயத்தின் காலம் (1978-2013)::1976-ல் மாவோ காலமானார். அடுத்து, தலைமை ஏற்ற டெங் சியோ பிங்,1978-ல் அந்நிய முதலீடுகளுக்கு வாசல் திறந்தார். சீனாவின் அபரிமிதமான மனித வளத்தைப் பயன் படுத்தி நாட்டைத் தொழில்மயமாக்கினார். செல்வம் சேர்ந்தது. அந்த அதிவேக வளர்ச்சியின் காலத்தில் டெங் தனது சகாக்களை சர்வதேச அரங்கில் அடக்கி வாசிக்கச் சொன்னார். ‘உன் சக்தியை வெளிக்காட்டிக்கொள்ளாதே’ என்றார். தனது பாதைக்கு டெங் வைத்த பெயர் சீனா பாணியிலான சோஷலிஸம். டெங் சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்காக மட்டுமல்ல, 1989-ல் தியானென்மென் அடக்குமுறைக்காகவும் நினைவுகூரப் படுகிறார். 1919-ஐப் போலவே 1989-லும் தியானென்மென்னில் போராடியவர்கள் இளைஞர்கள். அவர்கள் ஜனநாயக உரிமைகளுக்காகவும் ஊழலுக்கு எதிராகவும் குரல் கொடுத்தார்கள். இந்த முறை தன் மக்களின் போராட்டத்தை ஒடுக்கியது ‘மக்கள் விடுதலை ராணுவம்’. மாணவர்கள் மட்டுமல்ல; சாலையோரம் வேடிக்கை பார்த்தவர்களும் துருப்புகளால் கொல்லப்பட்டார்கள். சீனாவின் வரலாற்றில் அழிக்க முடியாத கறுப்புப் பக்கங்களில் ஒன்றானது தியானென்மென் படுகொலைகள்.
ஷி ஜின்பிங் காலம் (2013- இன்றுவரை)::ஷி ஜின்பிங் 2012-ல் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலரானார். பிறகு, அதே ஆண்டு முப்படைகளின் தலைவரானார். அடுத்து, 2013-ல் நாட்டின் அதிபரானார். இந்த வரிசை எதேச்சையானதல்ல. கட்சி (1921), ராணுவம் (1927), ஆட்சி (1949) என்பதுதான் வரலாற்றின் வரிசை; முக்கியத்துவத்தின் வரிசையும் அதுதான். ராணுவமும் ஆட்சியும் கட்சிக்குக் கட்டுப் பட்டவை. இந்த நூற்றாண்டு விழாவில் இதை ஷி மீண்டும் நிறுவுவார். தனக்கு முந்தைய தலைவர்களிலிருந்து ஷி வேறுபட்டவர். ஷி-க்கு முன்பு அதிபராக இருந்த ஜியாங் ஜெமின் (1993-2003), ஹு ஜின்டாவ் (2003-2013) இருவரின் பதவிக்காலமும் பத்தாண்டுகள். இந்த விதியை ஷி மாற்றப்போகிறார். அவரது பதவிக்காலம் 2023-ஐத் தாண்டியும் நீடிக்கும். அடுத்து, சீனா அடக்கி வாசிக்க வேண்டும் என்று டெங் கருதினார். ஆனால், காத்திருப்பின் காலம் முடிந்து விட்டது என்பது ஷி-யின் கருத்து. தென்சீனக் கடலிலும், இந்திய எல்லையிலும், அமெரிக்க வணிகத்திலும் சீனா தனது ஆக்ரோஷமான முகத்தை வெளிப்படுத்துகிறது. இந்தியா இதற்கு ஏற்றவாறு காய் நகர்த்த வேண்டும்.
டெங்குக்கு மாவோவின் மீது விமர்சனங்கள் இருந்தன. எனில், மாவோவிடம் குற்றத்தைவிடக் குணமே அதிகம் என்றார் டெங். கட்சியின் அடையாளமாக மாவோவைத் தான் நிறுத்தினார் டெங். ஷி-யும் அதையேதான் செய்கிறார். ஆனால், ஒரு படி மேலே போகிறார். மாவோவின் நெடும் பயணமும், ஜப்பானிய எதிர்ப்பும் வரலாற்றில் இடம்பெறும். ஆனால், பெரும் பாய்ச்சல் திட்டமும் கலாச்சாரப் புரட்சியும் வரலாற்றில் அவசியமற்றவை என்பது ஷி ஜின்பிங்கின் கருத்து. அதாவது மாவோவின் குணம் மட்டும் வரலாற்றில் இடம்பெறும். கூடவே, சீனாவின் அடையாளமாக மாவோ மட்டுமில்லை, அடுத்த இடத்தில் ஷி-யும் இருப்பார் என்று எதிர்பார்க்கலாம். வருங்காலத்தில் தியானென்மென் சதுக்கத்தின் முகப்பில் மாவோவின் படத்துக்கு அருகில் ஷி-யின் படமும் இடம்பெறக்கூடும்.
ஒரு நூறு ஆண்டுகளின் கதையை இதற்கும் குறைவாக சுருக்கிவிட முடியாதுதான். ஆனால் முக்கிய நிகழ்வுகள், விளைவுகள், தலைவர்கள் உருவான விதம், அவர்களின் தாக்கம் இவைகளை இப்படி எழுத்தில் கொண்டுவந்து விட முடியாது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஜப்பான் மிகவும் பலவீனப்பட்டு, உள்ளூரிலும் போட்டி இல்லாமல் சண்டியரானவர் மா சேதுங். அவருடைய காலம் சீனமக்களுக்குப் பெரும் சோதனையும் அழிவும் தந்த காலம் என்பதைக் கட்டுரை சொல்ல மறந்தது, டியானன்மென் சதுக்கத்தில் மாணவர் போராட்டம் நசுக்கப்பட்டதை மட்டும் மிகைப்படுத்தி டெங் சியாவோ பிங் காலத்தில்தான் கம்யூனிஸ்ட் கட்சியின் அலப்பறை, வெற்றுக்கோஷங்கள் எல்லாம் அடக்கிவைக்கப்பட்டு பொருளாதார வளர்ச்சியில் தான் மக்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வும் இருந்தது என்பதை மெய்ப்பித்த காலம் என்பதை ராமநாதன் சௌகரியமாகக் கடந்து போய்விடுகிறார். ஷி ஜின்பிங் கம்யூனிஸ்ட் கட்சியை மாவோ காலத்தைய வெறியூட்டப் பட்ட நிலைக்குக் கொண்டுபோவதில் பெருமளவு வெற்றி பெற்று விட்டார் என்ற பிம்பம் தொடர்ந்து கட்டமைக்கப் படுவதன் உண்மை நிலவரத்தைக் காலம் தான் சொல்ல வேண்டும்.
சீன வரலாறு மிகவும் நெடியது. அதன் கம்யூனிஸ்ட் கட்சி, ஆட்சியின் வரலாறு முழுக்க முழுக்க மிகைப்படுத்தப் பட்டது என்பது ஒரு பார்வை.
உலகின் நட்டநடுநாயகம் என்று பொருள்படும் Tianxia என்கிற சொல்லை வைத்து சீனாவின் உலகளாவிய ஆதிக்கக் கனவுகளை இந்தப்பக்கங்களில் பலமுறை பார்த்திருக்கிறோம். 1950 முதல் தொடங்கும் நூற்றாண்டு அமெரிக்காவுடையதாக இருந்தது. 2050 முதல் தொடங்கும் நூற்றாண்டு சீனாவுடையதாக இருக்கும் என்ற கனவும் கருத்தும் 2013 இல் உருவாக்கப்பட்டது. அதேநேரம் சீன அதிபர் ஷி ஜின்பிங் அந்தக்கனவுக்குச் செயல்வடிவம் கொடுக்கத் தொடங்கியதில் Belt and Road Initiative என்கிற ஒரே பெல்ட் ஒரே ரோடு (OBOR) வேகம் எடுத்து இன்றைக்கு அங்கங்கே முட்டுச்சந்தில் போய் நிற்கிறது. அமெரிக்கா உடனான பொருளாதார, ராணுவப் போட்டியில் முந்த ஒரு காலக்கெடு 2049 என்பதாக 2019 இல் தீர்மானிக்கப்பட்டதையும் இங்கே பார்த்திருக்கிறோம்.
ஷி ஜின்பிங் சற்றே அவசரப்பட்டு விட்டாரோ? கனவு நனவாகும் கால அளவைக்குறைத்து வூஹான் வைரசைப் பரப்பியதில் சீனர்களுடைய ஆதிக்கக்கனவுகளும் தடை பட்டு நிற்கின்றன. அதேநேரம் அமெரிக்காவும் முன்னை விட இன்னும் அதிகமாகப் பலவீனப்பட்டு வருகிற மாதிரி இருக்கிறதே! மேலே 4 நிமிட வீடியோ, ஈரானின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற இப்ராஹிம் ரைசி அமெரிக்காவுக்குப் பெரும் தலைவலியாக உருவெடுக்கிறார். 60 வயதாகும் ரைசி தலைமை நீதிபதியாக இருந்த 1988 காலங்களில் 5000 நபர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படக் காரணம் என்று அம்னெஸ்டி இன்டர்நெஷனல் புழுங்குகிறது. அது மட்டுமா? அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்திக்க விருப்பமில்லை, ஈரானின் ஏவுகணைத்திட்டத்தைக் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தப்போவதுமில்லை என்றும் அதிரடியாக அறிவித்திருக்கிறார். அமெரிக்கா ஈரான் மீது விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகளை நீக்கியே ஆகவேண்டும் எனவும் முழங்கியிருக்கிறார்.
வீடியோ 2 நிமிடத்துக்கும் குறைவுதான்! காட்டம் அதிகம்! ஈரானின் ஏவுகணைத்திட்டம் குறித்தோ, சவூதி அரேபியா போன்ற பகைமை நாடுகளுக்கெதிராக பிராந்தியத்தில் ஹிஸ்பொல்லா போன்ற கிளர்ச்சி இயக்கங்களுக்கு ஆயுதம் மற்றும் பணவசதி அளிப்பது குறித்தோ நேற்றைக்கு நிருபர்களிடம் எதுவுமே பேச மறுத்துவிட்டார். இத்தனைக்கும் அதிபராக வருகிற ஆகஸ்ட் மாதத்தில்தான் பொறுப்பேற்றுக்கொள்ளப் போகிறார். அதற்கு முன்னதாகவே அமெரிக்காவுக்கு ஆப்பு, கடுப்பு அடிக்கிற வேலையில் இறங்கியாகி விட்டதென்றால், அமெரிக்கர்களுடைய பரிதாப நிலைமையைக் கொஞ்சம் கற்பனை செய்துதான் பாருங்களேன்!
ஆனால் ஈரானை அடக்குவதில் இஸ்ரேல் அதீத ஆர்வம் காட்டுகிறது. இப்ராஹிம் ரைசி நிருபர்களிடம் பேசிக் கொண்டிருந்த நேரத்திலேயே ஈரானின் அணுவுலை ஒன்றில் தீவிபத்தொன்று ஏற்பட்டிருக்கிறது. இது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்தான் என்று ஈரான் அநேகமாக அறிவிக்கவும் கூடும்.
பிரிட்டனைத் தவிர வேறெந்த NATO கூட்டாளியும் பக்கபலமாக நிற்கத்தயாராக இல்லாத அமெரிக்க சோகம் சீனாவின் லாபமாக மாறவில்லை என்பது சீனர்களுடைய சரிவர? கர்மாவா? வீடியோ 6 நிமிடம்தான்.
#Tianxia #AmericanTianxia #இதுசீனாவின்நூற்றாண்டா என்று சீனாவின் ஆதிக்கக் கனவுகளைப் பற்றி இந்தப்பக்கங்களில் எழுதி வந்த விஷயத்துக்கு காலமும் கொரோனா வைரசும் ஸ்பீட் ப்ரேக்கராக வந்திருக்கிறதோ? #சீனாஎழுபது என்று 2019 அக்டோபரில் ஷி ஜின்பிங் அடுத்த 30 ஆண்டுகளுக்குள் சீனா முழுவலிமையுள்ள நாடாகிவிடும் என்பதற்கான blue print போட்டுச் சொன்னதை இங்கேயே எழுதியிருந்ததை கொஞ்சம் நினைவு படுத்திக் கொண்டு, இன்றைக்கு நிலவரம் எப்படி சீனர்களுக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது என்பதைப் பார்க்கலாமா?
அல் ஜஸீராவின் இன்றைய 26 நிமிட வீடியோ சொல்வதென்ன? கொரோனா வைரஸ் தொற்றைக் குறித்து சீனா இதுவரை உண்மைகளை மறைத்தே வந்திருப்பதில் பல நாடுகளுக்கும் சீனாவின் மீதான நம்பிக்கை சுத்தமாகக் காலி! உலகெங்கும் கொரோனா வைரசுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிற இந்த சமயத்தில், அதற்கான விலையைச் சீனா கொடுத்தே ஆக வேண்டும் என்கிற குரல்கள் பெருக ஆரம்பித்திருக்கிறது
ப்ரம்ம செலானி மேற்கோள் காட்டுகிற இந்தச் செய்தியில் என்ன சொல்லியிருக்கிறார்கள்?
There are many lessons to be learned from the Wuhan coronavirus pandemic. But one is already clear: China needs to be isolated from the civilized world until its behavior improves. We are in the current situation, with deaths and economic devastation worldwide, because China handled this outbreak with its trademark mixture of dishonesty, incompetence and thuggery. Were China a more civilized nation, this outbreak would have been stopped early, and with far less harm, inside and outside of China.
As Marion Smith wrote in these pages on Sunday, China’s first response was to clamp down on reports of the then-new disease that had appeared in Wuhan. The brave doctor, Li Wenliang, who first reported the disease to fellow physicians was silenced by police. Chinese media reports of the disease were censored by the government. So were ordinary citizens reporting on social media.
As Smith writes: “Beijing denied until Jan. 20 that human to human transmission was occurring. Yet at the same time, Chinese officials and state-owned companies were urgently acquiring bulk medical supplies — especially personal protective equipment like masks and gloves — from Australia, Europe, and around the world. Put simply, Beijing hoarded the world’s life-saving resources while falsely claiming that people’s lives weren’t at risk.” இங்கே நீலவண்ணத்தில் இருப்பவை தொடர்புடைய சுட்டிகள். சீனாவில் வைரஸ் தொற்று பரவிக்கொண்டிருந்த தருணத்தில், அவர்கள் PPE என்கிற பாதுகாப்பு உபகரணங்களை வாங்கிப் பதுக்கிக் கொண்டிருந்தார்கள் என்றும் குற்றம் சாட்டுகிறார் மரியோன் ஸ்மித். சீனர்களுக்குப் பாடம் புகட்டியே ஆகவேண்டும் என்கிற ரீதியில் போகிற இந்தச் செய்திக் கட்டுரையைப் படிக்க.ஜப்பான் சீனாவிலிருந்து தனது உற்பத்திக் கூடங்களை வேறு நாடுகளுக்கு மாற்றுவதில் முதலடி எடுத்துவைத்துவிட்டது என்பது தற்போதைய நிலவரம். இதே முடிவுக்கு வேறு பல மேற்கத்திய நாடுகளும் வரலாம். சீனர்கள் மீதான trust deficit இன்னும் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவரப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அதிபர் ஷி ஜின்பிங் தலைமையின் பலவீனம், சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் சறுக்கல் என்று இந்தக் குளறுபடிகளுக்குப் பின்னால் நிறையக் காரணங்கள் இருக்கின்றன. ஒபாமாவின் எட்டு ஆண்டுகள், அதற்கப்புறம் டொனால்ட் ட்ரம்பின்நான்கு ஆண்டுகள் எனத்தொடர்ந்து 12 ஆண்டுகள் அமெரிக்கா சீனத்துச் சண்டியர்கள் எதிர்ப்பார் எவருமில்லாமல், கொம்புசீவி வளர விட்டுவிட்டது. இரண்டாம் உலகப்போருக்குப்பிந்தைய நூற்றாண்டு அமெரிக்காவுடையதாக இருந்தது, அடுத்து வருகிற நூற்றாண்டு சீனாவுடையதாகத் தானிருக்கும் என்கிற கற்பிதத்தின் மீதே ஷி ஜின்பிங் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிமீதும், சீனாமீதும் தன்னுடைய பிடியை இறுக்கிவைத்திருந்த நிலைமை மாறக் கூடியதான சூழ்நிலை இப்போது உருவாகியிருக்கிறதென்றே சொல்ல வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கைகள், திட்டங்கள் எல்லாம் கனவுகாண்பதற்கு வேண்டுமானால் உதவியாக இருக்கலாம்! நடைமுறைக்கு உதவுமா? நம்பிக்கரை சேர முடியாது என்பதை சோவியத் யூனியன் சிதறியதில் நிரூபணமானது நினைவிருக்கிறதா?
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட அதேமாதிரி நிரூபணத்தைத் தரப்போகிறதா என்ன?!
உள்நாட்டு அரசியலில் சிக்கலைச் சந்திக்கிற அமெரிக்க அதிபர்கள் பலரும் மத்தியகிழக்கில் ஏதோ ஒரு ராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம் பிரச்சினையைத் திசை திருப்புவது வாடிக்கையாகி விட்டது. இன்றைக்கு அமெரிக்கா டிரோன் தாக்குதல் மூலம் ஈரானிய ஜெனெரல் காசிம் சொலைமானி உட்பட 6 பேரைக் கொன்று போர்ப்பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உடனடி எதிர்விளைவாக கச்சா எண்ணெய் விலை 4% உயர்ந்திருக்கிறது
பிரிட்டிஷ் நாளிதழ் கார்டியனில் Donald Trump’s assassination of Qassem Suleimani will come back to haunt him என்று தலைப்பிட்டு மொகமது அலி ஷபானி எழுதியிருக்கிற செய்திக்கட்டுரை இப்படி ஆரம்பிக்கிறது: The US has assassinatedQassem Suleimani, the famed leader of Iran’s Quds force, alongside a senior commander of Iraq’s Popular Mobilisation Units, Abu Mahdi al-Muhandis. To grasp what may come next, it is vital to understand not only who these men were but also the system that produced them.
Nicknamed the “Shadow Commander” in the popular press, Suleimani spent his formative years on the battlefields of the Iran-Iraq war during the 1980s, when Saddam Hussein – who at the time enjoyed the support of western and Arab powers – was attempting to destroy the emerging Islamic Republic. But few remember that his first major mission as commander of the Quds force – the extraterritorial branch of Iran’s Revolutionary Guards – was involved in implicit coordination with the United States as it invaded Afghanistan in 2001. The Taliban were, and to some extent remain, a mutual enemy. That alliance of convenience ended in 2002 when US president George W Bush notoriously branded Iran a member of the “Axis of Evil”. காசிம் சொலைமானி படுகொலை செய்யப்பட்டு 12 மணி நேரத்திற்குள் அவரது இடத்தை இஸ்மாயில் கானி என்கிற நம்பிக்கைக்குரிய துணைவர் நிரப்பிவிட்டார் என்பது படுகொலைகளின் வழியாக ஒருசில விஷயங்களை அழிக்கவோ பலவீனப்படுத்தவோ முடியாது என்கிற பாடத்தை, அவர்கள் கற்றுக்கொள்ளத்தயாராக இல்லை என்றாலும், அமெரிக்கர்களுக்குப் புகட்டி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
Soleimani was an enemy of the United States. That’s not a question.
The question is this - as reports suggest, did America just assassinate, without any congressional authorization, the second most powerful person in Iran, knowingly setting off a potential massive regional war?
So what comes next? Predictably, the Iranian authorities have promised “severe retaliation”. How that unfolds in practice is anyone’s guess. There is certainly no shortage of US targets in the region. But Suleimani may have, with his death, already have achieved the greatest revenge of all, and without firing a single bullet: namely, his ultimate objective of ending the US military presence in Iraq என்று அபிப்பிராயப்படுகிறார் மொகமது அலி ஷபானி. டொனால்ட் ட்ரம்ப்பின் கடந்த கால ட்வீட்டுகள் இன்றைக்கு அவருக்கு எதிராகவே பல்லிளித்துக் கொண்டு நிற்கின்றன
விரும்பியோ விரும்பாமலோ, பாரக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் என அமெரிக்க அதிபர்கள் தங்களுடைய அரசியல் ஆதாயத்துக்காக இஸ்லாமிய நாடுகள் மீதான தாக்குதலை நடத்துவதன் மூலம், சீனாவைஒரு பெரிய சக்தியாக வளர்த்து விட்டிருக்கிறார்கள். அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் அடிக்கடி ஏற்படும் குழப்பங்களில், முன்னாள் கூட்டாளிகள் எவரும் அமெரிக்காவை ஒரு நம்பகமான கூட்டாளியாக ஏற்றுக்கொள்ளத் தயங்குவது மட்டும் தொடர்கிறது. சீனா மிகவும் நிதானமாகவும் கவனமாகவும் தன்னுடைய அரசியல், வர்த்தகப் போர்களை நடத்திக்கொண்டிருக்கிறது. அமெரிக்கர்களுடைய முட்டாள்தனத்தால் உலக நாடுகளுடைய நிம்மதி பறிபோய்க் கொண்டிருப்பது ஒன்றுதான் மிச்சம். சீன விவகாரங்களைக் கவனித்தால் சத்தமே இல்லாமல் அமெரிக்க டாலருக்கு அதிகமுக்கியத்துவம் கொடுப்பதைக் குறைத்திருக்கிறார்கள். இதுவரை basket of currencies weightage இல் அமெரிக்க டாலர் 22.4% இலிருந்து 21.59% ஆகக் குறைக்கப் பட்டிருக்கிறது. அமெரிக்க டாலரை நம்பியிருப்பதன் அளவு குறைக்கப் பட்டிருக்கிறது என்பது அதன் பொருள். அதே போல ஒரு அரசியல் பதிலடியாக ஹாங்காங் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுக்கும் லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுக்கும் இடையிலான தொடர்பை சஸ்பெண்ட் செய்திருப்பதில் HSBC வங்கியும் லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சும் பாதிக்கப்பட்டிருக்கின்றன
டொனால்ட் ட்ரம்ப் ஒருவரே உலக அமைதியை அழிக்கப் போதுமானவர் என்பதை ஏற்கெனெவே இந்தப் பக்கங்களில் சொல்லியிருந்தது நினைவிருக்கிறதா?