Friday, May 21, 2021

இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் நிரந்தரமானதுதானா?

ஹமாஸ், இஸ்ரேல் இருதரப்பினரிடையே 11 நாட்களாக நடந்து வந்த தாக்குதல் எதிர்த்தாக்குதல்  நிபந்தனை எதுவுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருவதாக இருதரப்பும் ஒப்புக்கொண்டு இருப்பதில் உலகம் நிம்மதிப்பெருமூச்சுவிட ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது என்பதற்கு மேல் வேறு ஒன்றுமில்லை. ஹமாஸ் செமத்தியாக அடி வாங்கிய போதிலும் இந்த ceasefire தங்களுக்குக் கிடைத்த வெற்றி எனத்தம்பட்டம் அடித்துக்கொள்ள ஆரம்பித்து விட்டது. 


இஸ்ரேலியப்பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாஹு  தலைமையிலான பாதுகாப்புக்கானகேபினெட் கூடி எகிப்தியர்கள் முன்கையெடுத்த போர்நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்தது. உடனே ஹமாஸ் இயக்கமும் ஒப்புக் கொள்வதாக அறிவித்ததில் பாலஸ்தீனிய அரசின் பங்கு என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. Gaza பாலஸ்தீனத்தில் இருந்தாலும் அங்கே ஹமாஸின் ஆதிக்கம் மட்டுமே செல்லுபடியாகக்கூடியதாக இருப்பதே பிரச்சினை நீடிப்பதன் முழுக்காரணம். ஹமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கமாக மட்டுமே இருப்பதும் பாலஸ்தீன மக்களுடைய ஏகோபித்த பிரதிநிதியாக இருந்ததில்லை என்பதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம்.  In a rare public rift, Netanyahu on Wednesday briefly rebuffed a public call from President Joe Biden to wind things down, appearing determined to inflict maximum damage on Hamas in a war that could help save his political career.But late Thursday, Netanyahu’s office announced the cease-fire agreement. Hamas quickly followed suit. Militants continued to launch sporadic rocket at Israel early Friday, before the 2 am cease-fire took effect என்ற செய்தியிலேயே பிரச்சினையின் நுண்ணரசியலைப் புரிந்து கொள்ள முடிகிறதா? 


ஹமாஸுக்கு எங்கிருந்து பணமும் ஆதரவும் வருகிறது? கத்தார் ஈரான், துருக்கி என்று பலநாடுகள் வரிசைகட்டி நிற்கின்றன. உலக அளவில் மூன்றாவது பணக்கார பயங்கரவாத இயக்கம் ஹமாஸ், வருடாந்திர வருமானம் அல்லது நன்கொடை 70 கோடி அமெரிக்க டாலர்கள். இதில் ஒருசதவீதம் கூட காசா பகுதியில் வசிக்கும் ஏழை பாலஸ்தீனியர்களுக்காக செலவிடப்படுவதில்லை. ஆனால் ஹமாசின் 27% வரிச்சுமையை காசாவில் வசிக்கும் இருபது லட்சம் பாலஸ்தீனியர்கள் சுமந்தாக வேண்டும் என்றால் என்ன சொல்வீர்கள்?


1967 இல் இஸ்ரேலை விழுங்க எகிப்து, சிரியா, ஜோர்டான் என பல அரபுநாடுகள் ஒரு யுத்தத்தை ஆரம்பித்தன.மேலே 16 நிமிட வீடியோ ஆறே நாள் நடந்த யுத்தம் என்னவாயிற்று என்பதைச் சொல்கிறது.

இப்போது இருதரப்பும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிற போர் நிறுத்தம் நிரந்தரமானது இல்லை என்பது இங்கே எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான்! இந்தத் தருணத்தில் ஆட்டத்தில் ஈரான் தவிர துருக்கியும் ரஷ்யாவும் சேர்ந்து கொண்டிருன்றன. அதுபோக  சீனாவும் உள்ளே நுழையத் தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது.  

இஸ்ரேலின் Iron Dome மூன்றடுக்கு பாதுகாப்பையும் மீறி சிரியாவிலிருந்து ஏவப்பட்ட சில ஏவுகணைகள் இஸ்ரேலுக்குள் நுழைய முடிந்தது ரஷ்யத்தொழில் நுட்ப  சாமர்த்தியம் என்று நம்பவேண்டி இருக்கிறது.    

ஆக, போர்நிறுத்தம் தற்காலிகமானது தான்! புதிதாகக் களத்துக்குள் நுழைந்திருக்கிற ஆட்டக்காரர்களை அமெரிக்காவோ இஸ்ரேலோ விரும்பவில்லை. இஸ்ரேல் தனது யுத்ததந்திரங்களை மாற்றியமைத்துக் கொள்கிற வரை ஒரு நிழல் யுத்தத்தை நடத்திக்கொண்டே தான் இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

மீண்டும் சந்திப்போம்.  

Tuesday, May 18, 2021

ஹமாஸ் பயங்கரவாத இயக்கமும் பரிதாபத்துக்குரிய பாலஸ்தீனிய மக்களும்!

இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாத இயக்கம் ராக்கெட் மற்றும் ஏவுகணைத் தாக்குதத்தல்களைத் தொடங்கி இன்றோடு 10 நாட்களாகிறது. இதுவரை 3000+ ராக்கெட் கணைகள் வீசப்பட்டதற்கு  இஸ்ரேல் சரியான பதிலடி கொடுத்து வருவதில், ஹமாஸ் தீவீரவாதிகளுக்கும் இஸ்ரேலிய ராணுவத்துக்கும் இடையில் சிக்கி அல்லாடுவது  பாலஸ்தீனிய மக்கள் தான்!


இஸ்ரேல் - காஸா இடையிலான மோதல் தொடர்பாக விவாதிக்க ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சில் கூட்டம் நேற்று (மே 16) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஐ.நா.,வுக்கான இந்தியத் துாதர் டி.எஸ்.திருமூர்த்தி பேசியதாவது: இஸ்ரேல் - காஸா இடையிலான மோதலில் இந்தியத் தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறையில் உயிரிழந்த அனைவரின் மறைவுக்கும் இந்திய அரசு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது. இந்த மோதலால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை உடனடியாக தணிப்பது அவசியம். தற்போதைய மோதல் உச்சநிலையை எட்டாமல் தவிர்க்க அதைச் செய்தாக வேண்டும்.

இருநாடுகளுக்கும் இடையே நேரடியாகவும் அர்த்தமுள்ள முறையிலும் பேச்சுவார்த்தை நடைபெறாமல் இருப்பது இருதரப்பினருக்கும் இடையிலான அவநம்பிக்கையை அதிகரித்து வருகிறது. இது எதிர்காலத்திலும் தற்போது ஏற்பட்டுள்ளதை போன்ற மோதல் சம்பவங்களுக்கான வாய்ப்புகளை மட்டுமே அதிகரிக்கும்.இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான சாதகமான சூழலை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இருதரப்பினர் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவந்து அமைதியை நிலை நிறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கும்.என்பதாக இந்திய அரசின் நிலை தெளிவாக்கப்பட்டிருப்பதாக செய்திகள் சொல்கின்றன. ஒருதலைப்பட்சமாக பாலஸ்தீனத்துக்கு மட்டுமே ஆதரவு என்ற நிலையிலிருந்து மாறி, ஒரு சமநிலையுடனான பார்வை இந்திய வெளியுறவுக்கொள்கையில் ஏற்பட்டு வருவதை இங்கே கவனித்தாக வேண்டும். பாலஸ்தீன். இஸ்ரேல் என இருநாடுகளையுமே இந்தியா சமமாக  அங்கீகரித்து, நீராட்டிப்பேச்சுவார்த்தையில் மட்டுமே சுமுகத்தீர்வை எட்ட முடியும் என்பதையும் சொல்கிறது.    

ஆனால் பாலஸ்தீனியர்களும் இஸ்ரேலும் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தத் தடங்கலாக இருப்பது எது? யார்? என்ற கேள்விக்கான பதிலில் தான்இப்போதுவரை தொடரும் மோதல்களுக்கான காரணமும் இருக்கிறது. 1948 இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டதை சுற்றியிருந்த அரபுநாடுகள் எதுவும் ஏற்றுக்கொள்ளவில்லை. இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை எவரும் அங்கீகரிக்கவே இல்லை. 

The Palestine Question என்று தேடினால்  சுமார் 12,00,00,000 தேடல் முடிவுகள் இருப்பதாக கூகிள் தகவல் சொல்லும். சரியான தீர்வு கண்முன்னால் இருந்தும் நாடுவோரைத் தான் காணோம் என்பது பிரச்சினையின் சோகம்.

7ம.நே 

பாலஸ்தீனுக்காக ஆளாளுக்கு பொங்கினாலும் அந்த பாலஸ்தீன் தேசத்தில் அவர்களுக்கு முழு ஆதரவு கிடைக்கின்றதா என்றால் இல்லை. பாலஸ்தீன சிங்கம் யாசர் அராபத் அந்த பரிதாபத்துகுரிய மக்களின் பெரும் தலைவராக விளங்கினார், அவரின் ஒரு விரல் அசைவுக்கே பொத்த பாலஸ்தீனமும் "இண்டிபாதா" என உலகை உலுக்கும் விதமாக தெருக்களில் இறங்கி நடந்தது. அவர் சொன்னால் எல்லாம் சரியாக இருக்கும் என நம்பினார்கள், அவரும் அந்த நம்பிக்கையினை கடைசி வரை காப்பாற்றினார்



(ஆனால் இலங்கையில் அப்படி ஒரு தமிழர் எழுச்சி வரவே இல்லை, வெறும் துப்பாக்கிகளை தூக்கி கொண்டு புலிகள் திரிந்தார்களே தவிர, பெரும் மக்கள் எழுச்சி பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை)

அவரால்(அராபத்)  எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் போராடினார், சோவியத் இருந்தபொழுதே அமையாத பாலஸ்தீனம் அதன் பின் அமையுமா? என்ற அவநம்பிக்கை கொஞ்சமின்றி போராடினார்

அவரின் போராட்டத்தின் உச்சபட்ச வெற்றி அதுவரை பாலஸ்தீன் என்றொரு நாடே இல்லை என சொல்லிவந்த இஸ்ரேல் இறங்கி வந்து "பாலஸ்தீன் பகுதி" என ஒன்றை அறிவித்து அதற்கு சுயாட்சியும் கொடுத்தது

அரபாத்தின் மாபெரும் வெற்றி அது, அந்த அரக்கன் இஸ்ரேலை பணிய வைத்து தங்களுக்கு ஒரு இடமும் அடையாளமும் பெற்று கொடுத்தார்

ஓரளவு அமைதி திரும்பியிருந்தது. அராபத்துக்கும் நோபல் பரிசெல்லாம் கொடுத்தார்கள். ஆனால் ஹமாஸ் இலங்கை பிரபாகரன் பாணியில் ஆட்டம் போட்டது, அராபத் போராட்டத்தை விற்றுவிட்டார் என்றது, அதுவரை ஒரே அணியில் இருந்த பாலஸ்தீன் போராட்டம் ஹமாஸால் பிரிக்கபட்டது. அராபத் எவ்வளவோ சொல்லிபார்த்தார், இதெல்லாம் அழிவில் முடியும், நாங்களெல்லாம் பெரும் அழிவினை கண்டவர்கள், உலகில் எல்லோராலும் சக இஸ்லாமிய தேசங்களாலும் கைவிடபட்டவர்கள் நாம், இந்த முடிவினை கொண்டு சுயாட்சியாக வாழ ஆரம்பிப்போம் அதிலிருந்து பிரிதொருநாள் நமக்கு விடியும் என சொல்லி பார்தார்

ஹமாஸ் அடங்கவில்லை. ஹமாஸின் போக்கு அராபத்துக்கு பெரும் சந்தேகத்தை உண்டாக்கியது, இது தனக்கு எதிரான சதி என்பதை அவர் உணர்ந்தார்.

அவர் அச்சபட்டபடியே ஹமாஸ் பேயாட்டம் ஆட, இஸ்ரேல் அராபத்துக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கிற்று பாலஸ்தீனியர்களை கட்டுபடுத்த வேண்டியது அராபத் பொறுப்பு என அவருக்கு பெரும் நெருக்கடி கொடுத்தது. பாலஸ்தீனியரின் தலைவர் அராபத் அவர் ஒருவரைத்தான் அந்த மக்களின் பிரதிநியாக கருதுகின்றோம், துப்பாக்கி தூக்கும் எல்லோரையும் அவருக்கு சமமாக நினைத்து பேசமுடியாது என சொன்ன இஸ்ரேலின் ராஜதந்திர கருத்தில் சில தந்திர வரிகளும் இருந்தன‌. ஹமாஸ் செய்த அட்டகாசமெல்லாம் அராபத் தலையில் விழ அவரும் வீட்டுகாவலில் வைக்கபட பின் அவரும் காலமானார்

அவருக்கு பின் முகமது அப்பாஸ் பாலஸ்தீன ஆட்சியாளராக வந்தாலும் போராட்டம் ஹமாஸின் கரங்களுக்கு சென்றுவிட்டது. இப்பொழுது ஒரு பெரும் வல்லரசுக்கு இணையாக அதாவது விமானபடை கப்பல் படை மட்டும் இல்லாமல் பெரும்  ராக்கெட் தாக்குதலில் ஹமாஸ் இறங்கியிருக்கின்றது.ஆனால் அதனால் இஸ்ரேலை அசைத்து பார்க்க முடிகின்றதா என்றால் இல்லை , மாறாக இஸ்ரேல் தன் வான் தடுப்பு சாதனங்களை சோதித்து புதிது புதிதாக மேம்படுத்தி பலம்பெறுகின்றது.

ஹமாஸின் தாக்குதலும் இஸ்ரேலின் பதிலடியும் ஒருமாதிரி சந்தேகங்களை பாலஸ்தீனத்திலே ஏற்படுத்தியிருக்கின்றன என்பதுதான் நிஜம், முகமது அப்பாஸின் பேட்டி அதைத்தான் சொல்கின்றது

அராபத் ஆயுதமுனையில் பெறாத வெற்றியினை ஹமாஸ் பெற்றுவிடும் என்பது வெறும் கனவு, அதன் கடும்போக்கால் பாலஸ்தீனத்துக்கு அழிவு வருமே தவிர நன்மை ஏதும் விளையாது.

இலங்கையில் பிரபாகரன் கோஷ்டி செய்த அதே அடாவடியினை ஹமாஸ் செய்து கொண்டிருக்கின்றது

எந்த தீவிரவாத இயக்கமும் இன்னொரு நாட்டின் பின்னணியில்தான் செயல்படும் நேரம் வரும்பொழுது அந்நாட்டை பஞ்சாயத்துக்கு இழுத்தும் வரும். ஆனால் ஹமாஸ் தன் பின்னணி நாடுகள் எதையும் அமைதி பேச்சுவார்த்தைக்கு இழுத்து வருவதாகவும் தெரியவில்லை அல்லது அப்படி அழைக்கவுமில்லை

நிலமை மிக மோசமாக செல்கின்றது, இஸ்ரேலோ இனி தாக்குதலை நிறுத்தும் திட்டமில்லை என சொல்லியாயிற்று.

துருக்கி முதலான இஸ்லாமிய நாடுகள் பாலஸ்தீன அமைதிகாக ஐ.நா அமைதிபடையினை அனுப்ப வேண்டும் என்கின்றது இஸ்லாமிய நாடுகளும் அதை வரவேற்கின்றன‌. ஆனால் பாலஸ்தீன அதிபர் அப்பாஸோ, ஹமாஸோ இதுபற்றி ஒன்றும் சொல்லவில்லை என்பதுதான் உலகின் நெற்றியினை சுருக்கும் கேள்விகுறி.

புலிகள் இந்திய படைகளை கண்டு அஞ்சியது போல் அஞ்சுகின்றார்களா, அமைதிபடை நின்றால் தங்கள் போராட்டம் தொடராது என கருதுகின்றார்களா என்பதுதான் தெரியவில்லை.உலகில் பல விஷயங்கள் குழப்பமானவை, புரிந்து கொள்ளமுடியாதவை, யாரோ எங்கோ பலன் பெற தூண்டிவிடப் படுபவை

ஹமாஸால் இஸ்ரேலை ராணுவரீதியாக வெற்றிகொள்ள முடியாதபொழுது பாலஸ்தீன மக்கள் அமைதியாக வாழ ராஜதந்திரம், சக நாடுகள் மூலம் பாதுகாப்பு என எதையாவது செய்து அவர்கள் வாழ்வுக்கு உத்திரவாதம் கொடுக்க வேண்டும்

மாறாக வெல்லவும் மாட்டோம் அதே நேரம் அமைதியாகவும் மாட்டோம் என யுத்த முஸ்தீப்பிலே இருப்பது பாலஸ்தீன மக்களின் எதிர்காலத்துக்கு பெரும் ஆபத்து.பாலஸ்தீன மக்களுக்கு அந்த மக்களின் பெரும் காவலன் அராபத் என்ன தீர்வினை பெற்று கொடுத்தாரோ அதை முழுக்க பெற்றுகொடுத்து அவர்களை அச்சமின்றி காவல்காத்து உரிய காலம் வந்து பாலஸ்தீனம் விடுவிக்கபடும் வரை துணை இருக்க வேண்டியது இஸ்லாமிய நாடுகளின் கடமை.

அதை செய்தால் பாலதீனர்கள் வாழ்வில் வசந்தம் திரும்பும், அது அல்லாது ஹமாஸ் துப்பாக்கியினையும் ராக்கெட்டையும் மட்டும் நம்பி இருந்தால் இந்த கலவரங்கள் ஓயாது, காற்று இஸ்ரேலுக்கு சாதகமாகவே வீசும்

ஒரு தலைவன் உருவாகி அவன் பாலஸ்தீன மக்களின் பிரதிநிதியாக அறியபட்டு தங்கள் வலிகளை அராபத் போல் உலகுக்கு தெரிவிக்காமல் அங்கு அமைதி திரும்பாது.காலம் இன்னொரு அராபத்தை அவர்களுக்கு கொடுக்கட்டும், அந்த பெருமகன் திரும்பி வந்தாலொழிய அவர்களுக்கு அமைதி திரும்ப போவதில்லை   

ஸ்டேன்லி ராஜன் சொல்வதில் எனக்கு சில இடங்களில் உடன்பாடு இல்லை. உதாரணத்திற்கு மேலே கடைசி பாரா. இப்படி சில முரண்கள் இருந்தாலும் தமிழ் இணையச் சூழலில் இத்தனை நிதானமாகப் பிரச்சினையை எழுதுகிறவர்கள் மிகக்குறைவு என்பதால் மட்டுமே எங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். 

மேலும் விஷயங்களோடு தொடர்ந்து பேசுவோம். 

Sunday, May 16, 2021

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே என்னதான் பிரச்சினை?

இஸ்ரேல் உருவான விதத்தை, இரண்டாம் உலகப்போர் முடிவில் நாஜிகளால் வதைக்கப் பட்ட யூதர்கள் ஜெர்மனி, போலந்து, ரஷ்யா முதலான நாடுகளிலிருந்து புலம்பெயர  தங்களுக்கென்று ஒரு இடத்தைத் தேடியதில் இருந்து ஆரம்பிக்கலாம். அவர்களுடைய பூர்வீகமான இஸ்ரவேல், பாலஸ்தீனமாக இருந்ததைக் கண்டு தாயகம் திரும்ப ஆரம்பித்தார்கள் என்று சுருக்கமாகச் சொல்லிவிடலாம் தான்! ஆனால் கச்சா எண்ணெய் அரசியலும், பிரிட்டனின் குள்ளநரித்தனமும், கிறித்தவ அஃகுறும்புமாகச் சேர்ந்து இப்போதைய பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் வித்தாக இருக்கிறது.

யூதர்களும் பாலஸ்தீனியர்களும் ஏன் தொடர்ந்து சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறார்கள் என்பதற்கான காரணம் இந்த ஆறு நிமிட வீடியோவில், பிபிசி தமிழ் சொல்கிற மாதிரி எல்லாம் இல்லை. உலகப் போர் முடிந்தபின்னாலும் கூட, பிரிட்டன் தன்னுடைய ஆதிக்கத்தை விடுவதாயில்லை. கூடவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஒருபுறம், கலீஃபா காலத்தைய இஸ்லாமிய சாம்ராஜ்யக் கனவுகளில் இருந்த அரபு நாடுகளும் இவர்களுடன் ஒட்டிக்கொண்ட சோவியத் ஒன்றியமுமாக மறுபுறம் என்று ஆட்டம் ஆரம்பித்ததில், யூதர்களுக்கும் அரபிகளுக்குமான சண்டை என்றானது. 2வது உலகப்போருக்கு முந்தைய வரலாற்றைப் பார்த்தால் கிறித்தவர்களுக்கும் அரபி முஸ்லிம்களுக்கும் நிறைய சண்டைகள் இருந்தது, ஆனால் யூதர்கள் முஸ்லிம்களுக்கிடையே சண்டை ஒருபோதுமிருந்ததில்லை. 

எப்பொழுதுமே மேற்காசியாவில் இஸ்லாமியருக்கு ஒரு தலமை இப்பொழுது இருந்ததில்லை ஆனால் முன்பு இருந்தது கலீபாக்கள், அரசர்கள், சுல்தான்கள் என அவர்கள் வலுவாய் இருந்தவரை சிக்கல் இல்லை, பின்னாளில் சுமார் 400 வருட காலம் ஆட்டோமன் துருக்கியர் அப்படி இருந்தனர்

முதல் உலகபோரில் அவர்கள் வீழ்ச்சி அடைந்தபின்பு அதை தொடர்ந்து அரேபியாவில் எண்ணெய் கண்டறிய பட்ட பின்பே இவ்வளவு குழப்பங்கள்,

வரலாறு ஒரு உண்மையினை சொல்கின்றது, அதை நீங்களும் நானும் ஒப்புகொள்ளத்தான் வேண்டும்

நபிகள் காலம் முதல் ஆட்டோமன் காலம் வரை பாலஸ்தீனத்தில் யூதர்கள் வாழ்ந்தனர், அரேபியாவில் வாழ்ந்தனர், ஆனால் ஒரு யூதனும் தாக்கபடவில்லை இஸ்லாமியர் ஆட்சியில் யூதர்கள் பாதுகாப்பாகவே இருந்தனர்

ஆனால் கிறிஸ்தவ தேசங்களான ஸ்பெயின் முதல் ரஷ்யா வரை அவர்களை போட்டு சாத்தினார்கள், கடைசியில் போட்டு மிதித்து குத்தாட்டம் ஆடியவன் ஹிட்லர் அவனுக்கு முன் ஆடியவன் கிறிஸ்தவ புரட்சியாளன் மார்ட்டின் லுத்தர் ஆக இஸ்லாமிய ஆட்சியில் யூதர்கள் பாதுகாப்பாக இருந்ததும், இப்பொழுது யூதர்கள் ஆட்சியில் இஸ்லாமியர் கொல்லபடுவதெல்லாம் வரலாற்று முரண்

ஆட்டோமன் துருக்கியருக்கு பின் வலுவான இஸ்லாமிய தலைமை இல்லை, அந்த இடத்தை துருக்கியின் கமால் பாட்சா கூட முயற்சிக்கவில்லை.ஆனால் 1960களில் எகிப்தின் கர்ணல் நாசர் அதை கைபற்றினார், அரபுக்களின் தலைவராய் இருந்தார் ஆனால் அமெரிக்கா இஸ்ரேலை முன்னுறுத்தி செய்த விண்வெளி போரில் அவர் தோற்றார்.

அவருக்கு பின் சதாம் உசேனுக்கு அந்த வாய்ப்பு இருந்தது, ஆனால் எண்ணெய் பணத்துக்கு ஈராக் பணம், எண்ணெய் பணம் மக்களுக்கே என அவர் எழுந்தது பல அரேபிய அரசர்களுக்கு பிடிக்கவில்லை

அதே நேரம் கொமேனியின் எழுச்சி ஷியா சன்னி மோதலை உக்கிரமாக்கி விவகாரம் திசைமாறி சதாம் வீழ்த்தபட்டார்.லிபிய அதிபர் கடாபிக்கு அந்த அரபு தலைவர் ஆசை வந்தது, அவரையும் "புரட்சி" என சொல்லி ஒழித்து கட்டினார்கள்

இப்போது அரேபியாவில் வலுவான தலைமை  ஈரான் ஆனால் அவர்களிடம் பணமில்லை வலிமையான ஆயுதமில்லை. சவுதி மிக சக்திவாய்ந்த எண்ணெய் வளநாடு, ஆனால் இஸ்ரேலுடன் ஒரு ரகசிய புரிதலில் உள்ளது. இப்போதைக்கு ஒரு பலமான படைகொண்ட நாடு நிச்சயம் துருக்கி, நேட்டோவின் நாடு ஐரோப்பிய ஒன்றிய நாடு என பலம் அதிகம்.எர்டோகன் இஸ்லாமிய தலைவராக பழைய ஆட்டோமன் சாம்ராஜ்ய வாரிசாக கருதிகொள்கின்றார், துருக்கியின் ஆட்சியில் நீடிக்க மக்கள் ஆதரவை பெற அவருக்கு இது நல்ல வாய்ப்பு. உண்மையில் மக்கள் அவரை கொண்டாடுகின்றார்கள், அவர் சொல்லுக்கு துருக்கி கட்டுபடுகின்றது

காஷ்மீர் முதல் பல விஷயங்களில் அவர் இஸ்லாமிய நலன் பேசுகின்றார், இஸ்லாமுக்கு எதிரான நாடுகளை துணிச்சலுடன் எதிர்க்கின்றார்.ஆர்மேனியா அசர்பஜான் மோதலில் ரஷ்யாவினை தாண்டி அசர்பைஜான் எனும் இஸ்லாமிய நாட்டுக்கு வெற்றியினை கொடுத்தது துருக்கி. உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிராக நிற்கும் நாடு துருக்கி.சிரியாவில் அமெரிக்காவின் கனவு நிறைவேறாமல் இருக்க மிக பெரிய தடையாக தன் ராணுவத்தை நிறுத்தியிருப்பது துருக்கி.உய்குர் விவகாரத்தில் சீனாவினை கண்டித்த நாடு துருக்கி, பிரான்ஸ் அரசின் இஸ்லாமிய விரோதத்தை கண்டித்து மொத்தமாக பொங்கி எழுந்த நாடு துருக்கி.

அந்த துருக்கியின் எர்டோகன் பாலஸ்தீனத்துக்கு தன் துருக்கிய படைகள் செல்லும் என அறிவித்துவிட்டார், இதற்கு துருக்கி மக்களிடம் பெரும் ஆதரவு கிடைத்தாயிற்று.எகிப்தின் கர்ணல் நாசருக்கு அடுத்து இந்த அறிவிப்பை எழுப்பிய ஒரே தலைவர் அவர்தான். அல் அக்சா மசூதியினை காக்க துருக்கிய படைகள் அமைதி படையாக செல்ல தயார் என அவர் அறிவித்திருப்பது உலக நாடுகளை யோசிக்க வைத்திருக்கின்றது, இதுவரை அமைதிபடை அங்கு இல்லை.

ஆனால் துருக்கி அறிவித்ததே தவிர படை அனுப்ப முடியாது, காரணம் அது பல சிக்கல்கள்.முதலில் அந்த அல் அக்சா மசூதியின் அறங்காவலர் ஜோர்டான் மன்னர், அவர் இன்னும் வாய் திறக்கவில்லை. இரண்டாவது ஐ.நா சபை இதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் அவர்களும் அமைதி. இஸ்ரேலை மீறி அல் அக்சா பக்கம் ஐ.நா அமைதி படை அல்லது இஸ்லாமிய அமைதிபடை வருவது எவ்வளவு சாத்தியம் என்பது தெரியவில்லை

இவ்வளவு சீரியசான விஷயத்தை இஸ்ரேல் சும்மா விடுமா? அது நேற்றே அலறலை ஆரம்பித்துவிட்டது

"பாலஸ்தீன கலவர வன்முறைக்கும் தீவிரவாதிகளின் ஆயுதங்களுக்கும் துருக்கிதான் பொறுப்பு, அவர்கள்தான் தூண்டி விடுகின்றார்கள், எங்களிடம் ஆதாரம் உண்டு" விஷயம் சீரியசாகின்றது, துருக்கி அதிபர் ஒரு இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவராக எழ கூடாது என வல்லரசுகள் கண் வைக்கின்றன‌

நாசர் முதல் கடாபி வரை என்ன நடந்ததோ அதையே எர்டோகனுக்கும் என்பது போல் முறைக்கின்றன, ஆனால் எர்டோகன் இதை அறியாதவர் அல்ல‌.

நேட்டோவில் இருந்து பிரியுமானால் துருக்கி மிகபெரிய பொருளாதார சரிவை சந்திக்கும், ராணுவ பலமும் கிடைக்காது என்பதும் இன்னொரு கோணம்.எப்படியோ பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பெரும் குரல் கேட்க தொடங்கிவிட்டது, ஆனால் எர்டோகனால் வெல்ல முடியுமா என்பது பெரும் கேள்வி.

லிபிய கடாபியினை மக்கள்  தலைக்கு மேல் வைத்து கொண்டாடினார்கள், அவ்வளவு அழகான ஆட்சி அவருடையது, லிபியா பிரான்ஸுக்கு நிகரான பொருளாதார பலம் கொண்டிருந்தது.அனால் அந்த மக்களை வைத்தே அவரை விரட்டினார்கள். பாலஸ்தீனத்தில் தலையிட்டிருப்பதால் எர்டோகனோ இல்லை துருக்கியோ சிக்கல்களை சந்திக்க போவது நிஜம், 

ஆனால் அதையும் மீறிய தெய்வம் என ஒன்று உண்டல்லவா? அந்த தெய்வம் எது நியாயமோ, எது தர்மமோ, அதை செய்யட்டும்.யாருடைய கண்ணீரும் ரத்தமும் அனுதினமும் சிந்தபடுகின்றதோ அதை நிறுத்தட்டும்

சமநேரத்திலேயே இன்னொரு பகிர்வையும் ஸ்டேன்லி ராஜன் முகநூலில் பகிர்ந்திருக்கிறார்:  

ஒருவனுக்கு தலைவிதி நன்றாக இருந்தால் அவனுக்கு சூழல் ஒத்துழைக்குமாம் இது சாணக்கியன் சொன்னது, அலெக்ஸாண்டர் வாழ்வில் இருந்து தமிழக கருணாநிதி வாழ்வு வரை இதை காணலாம் இப்பொழுது அந்த யோகம் புட்டீனுக்கு.அவருக்கு உக்ரைன் பக்கம் மிகபெரிய சிக்கல் இருந்தது, அது இன்னமும் நீடிக்கின்றது. நேட்டோ என 29 நாடுகளை தனியே எதிர்க்கின்றது ரஷ்யா இந்த 29ல் துருக்கியும் உண்டு.இந்நிலையில்தான் வாய்ப்பு பாலஸ்தீனத்தில் ரஷ்யாவுக்கு வாய்ப்பு கிடைத்தது, தன் எல்லையில் நடந்த பரபரப்பை இஸ்ரேலிய எல்லைக்கு நகர்த்திவிட்டார் புட்டீன்

ஐ.நாவில் கடும் சத்தம், அவசர மசோதா என பந்தை அப்பக்கம் தள்ளி துருக்கியினை உள்ளே இழுத்து போட்டு ஆடுகின்றது ரஷ்யா. துருக்கியின் அமைவிடம் இலங்கை போல முக்கியமானது, கருங்கடல் மத்திய தரைகடல் அசோர் கடல் என ரஷ்யாவின் அருகிருக்கும் கடல் எல்லாம் அவர்களுடைய ஏரியா.நேட்டோ என துருக்கியினை சேர்த்து ஐரோப்பா படியளக்க அதுதான் காரணம்

துருக்கி சர்வதேச அமைதிபடை அல்லது இஸ்லாமிய படை ஜெருசலேமுக்கு செல்ல வேண்டும் என சொல்வதில் ரஷ்ய கரங்களும் இல்லாமல் இல்லை.தன் காலடியில் அமெரிக்கா தீயினை பற்றவைக்க முயல, இஸ்ரேல் பக்கம் தீயினை வைத்துவிட்டு ஒன்றும் அறியாதவர் போல் அமர்ந்திருக்கின்றார் புட்டீன்

காற்று இப்பொழுது அவருக்கு சாதகம், சிரியாவில் கடுமையாக நிலைகொண்ட ரஷ்யா இஸ்ரேலுக்கு மிகபெரிய சவால்.சர்வதேச அரசியல் சதுரங்கம் சுவாரஸ்யமாகத்தான் சென்று கொண்டிருகின்றது

இரண்டும் கொஞ்சம் முரண்படுகிற மாதிரித்தான் இருக்கிறது இல்லையா? ஒருவாரமாக இதுதொடர்பாக நிறைய வாசித்துக்கொண்டிருக்கிற எனக்கே இதை எங்கிருந்து ஆரம்பிப்பது, முடிப்பது என்பதில் ஏகப்பட்ட குழப்பம்!   

ஆனால் விஷயம் சிம்பிள். நீயா நானா என அமெரிக்கா+ ஒருபுறமும் ரஷ்யா மறுபுறமுமாக இந்தப் பிரச்சினையை வைத்து FootBall ஆடிக்கொண்டு இருப்பதில் உதைபந்தாக இருப்பது நிச்சயமாக இஸ்ரேல் இல்லை. அவர்கள் விளையாட்டே தனி!

இன்னும் கொஞ்சம் விவரங்களோடு தொடர்வோம்.  

Saturday, May 15, 2021

இஸ்ரேலிடம் ஒரண்டை இழுக்கும் ஹமாஸ்! மத்திய கிழக்கில் அமைதியைக்குலைப்பது யார்?

பாலஸ்தீனிய மக்களின் சோகம் முடிவே இல்லாமல் தொடர்வதற்கு, அவர்களுடைய ரட்சகனாக சொல்லிக் கொள்ளும் ஹமாஸ் தீவிரவாத இயக்கமே முழு முதல் காரணமாக இருப்பதை நம்மில் எத்தனை பேர் புரிந்து வைத்திருக்கிறோம்? இஸ்ரேல் பாலஸ்தீனியர் இடையே ஆன பிரச்சினையை நம்மூர் செகுலர், லிபரல்களிடம் அல்லாது இணையத்தில் தேடிப்பார்த்தாலே ஒருவாறு புரிந்து கொள்ள முடியும்.   


ரம்ஜான் நெருங்கும் நேரமாகப்பார்த்து Gaza பகுதியில் இருந்து இஸ்ரேலை வம்புச்சண்டைக்கு ஹமாஸ் இழுப்பது ஒன்றும் புதிய செய்தி அல்ல.5, 6 நாட்களுக்கு முன் இஸ்ரேல் மீது சுமார் 2000 ராக்கெட்டுகள் Gaza பகுதியில் இருந்து வீசப்பட்டதில் பெரும்பாலானவை Iron Dome என்கிற மூன்றடுக்குப் பாதுகாப்பு அமைப்பால் தடுக்கப்பட்டுவிட்டன. அதை மீறியும் சில ராக்கெட் வெடி குண்டுகள் இஸ்ரேலிய எல்லைக்குள் விழுந்து சேதம் விளைவித்திருக்கின்றன . பதிலுக்கு இஸ்ரேல் Gaza பகுதியில் ஹமாஸ் இயக்கத்தின் கட்டடம் ஒன்றைத் தகர்த்ததில் ஹமாஸ் இயக்கத்தின் பெரியதலைகள் சில உருண்டதோடு கதை முடியவில்லை. இஸ்ரேலை அழிப்பது தான் தங்களுடைய குறிக்கோள் என்று நீண்டநாட்களாகவே அறிவித்துச் செயல்படுகிற ஹமாஸ் இயக்கத்தை அடியோடு களைவதுதான் தங்களுடைய தலையாய பணி என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு தெரிவித்திருக்கிறார். 


அல் ஜசீரா, அசோசியேடட் பிரஸ் என்று பல ஊடகங்கள் காசா பகுதியில் இயங்கிவந்த கட்டடத்தை  இன்று இஸ்ரேல் முன்னவிப்புச் செய்து தகர்த்த காட்சி மேலே ஒருநிமிட வீடியோவாக. Gazaவில் என்ன நடக்கிறது என்பதை இனி உலகம் தெரிந்துகொள்ள முடியாது என  அசோசியேடட் பிரஸ் சொல்லியிருப்பதாக ஒரு செய்தி. Responding to the development, AP said in a statement: “This is an incredibly disturbing development. We narrowly avoided a terrible loss of life. A dozen AP journalists and freelancers were inside the building and thankfully we were able to evacuate them in time.” இவ்வளவு சொன்னவர்கள், இஸ்ரேலி ராணுவம் முன் அறிவிப்புக் கொடுத்து, பாதுகாப்பாக வெளியேறும்படி சொன்னதையும் சேர்த்தே சொல்லியிருக்கலாம்!

Replying to
According to reports, people inside the building were given one hour's notice to evacuate. Multiple roof knocks were fired ahead of the strike that demolished the building. Associated Press reports that there has been no immediate explanation for why the building was targeted.

மத்தியகிழக்கில் அமைதியை நிலைநாட்ட  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒரு சிறப்பு தூதரை அனுப்பி வைத்திருக்கிறாராம்! 

In recent days, the Biden administration has dispatched an envoy to the Middle East and engaged in a flurry of back-channel diplomacy to respond to the surge in violence between Israel and Hamas militants in the Gaza Strip. The big question is: Does the United States have the appetite, or even the political maneuvering room, to be an honest broker? ஜோ பைடன் அமைதியை நிலைநாட்ட என்ன செய்து விட முடியுமாம் என்ற கேள்வியோடு ForeignPolicy தளத்தில் ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது. 


அல் ஜசீராவின் ஒருமணிநேர ஒப்பாரி

மத்தியகிழக்கில் என்ன நடக்கிறது என்பதைத் தொடர்ந்து பார்ப்போம். 

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை