Showing posts with label வெளியுறவுக் கொள்கை. Show all posts
Showing posts with label வெளியுறவுக் கொள்கை. Show all posts

Tuesday, March 16, 2021

மிரட்டும் வட கொரியா! அடக்கி வாசிக்கும் அமெரிக்கா!

அமெரிக்க புது அதிபர் ஜோ பைடன் தொடுகிற எதுவுமே எதிர் பார்க்கும் அளவுக்கு பலனளிப்பதில்லை என்றாகிக் கொண்டு வருவதில், இன்றைக்கு வடகொரிய அதிபரின் தங்கை கிம் யோ ஜோங்கிடமிருந்தும் வாங்கிக்கட்டிக் கொள்ளும்படி ஆகியிருக்கிறது. அடுத்த  நான்காண்டுகள் நிம்மதியாகத் தூங்கவேண்டுமானால் எங்களைச் சீண்டாதே,அவ்வளவுதான்!  


இன்று டோக்யோ நாளை சியோல் என நேசநாடுகளான தென்கொரியா, ஜப்பான் இருநாடுகளுடன்     உறவுகளை பலப்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளில், Secretary of State அந்தோனி ப்ளிங்கனும் பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டினும் தங்களது முதலாவது பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், வடகொரியா இப்படி குறுக்கே புகுந்து கட்டையைக்  கொடுத்திருக்கிறது.


அந்தோனி ப்ளிங்கன் இதைப்பற்றி அலட்டிக் கொள்ளாத மாதிரி பதில் சொன்னதாக CBSNews நிருபர் கீச்சி இருக்கிறார். The Biden administration launched a behind-the-scenes push last month to reach out to North Korea through multiple channels, a senior administration official has told CNN, but thus far Pyongyang has been unresponsive.  The official did not provide further details of what the outreach entailed but noted the administration has been conducting its interagency review of the United States' policy towards North Korea, "including evaluation of all available options to address the increasing threat posed by North Korea to its neighbors and the broader international community."என்று ஜோ பைடன் நிர்வாகத்தின் பரிதாபகரமான நிலையைச் சொல்கிறது CNN  

இது போன மாதம்! இந்த மாதம் ......? 

When the Justice Department indicted three North Koreans on cybertheft charges in February and an assistant attorney general labeled North Korea "a criminal syndicate with a flag," some of President Joe Biden's top national security aides bristled, two senior administration officials said.The rhetoric, the aides complained to the Justice Department, wasn't the toned-down type that senior officials had agreed just days earlier to use when speaking publicly about North Korea, and it risked antagonizing Pyongyang.

A senior official said aides at the National Security Council "were not pleased with the choice of language" and expressed concern to the Justice Department that it was "going to provoke North Korea." The episode underscores concern within the White House about stirring up a looming crisis that the new president has so far not had to contend with publicly, and it exposes tensions within the government over whether it's best to confront or ignore the North Korean nuclear threat. என்கிறது இன்றைய NBC News  


அமெரிக்க அதிபர் மாளிகையின் இந்த ஜம்பமான அறிக்கைக்கு அர்த்தம் ஏதாவது இருக்கிறதா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

மீண்டும் சந்திப்போம்.   

Friday, February 5, 2021

#ஜோபைடன் பழைய பன்னீர்செல்வமா திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்றைக்கு தனது நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை குறித்தான முதலாவது அறிவிப்பை வெளியிட்டுப் பேசியிருக்கிறார் அமெரிக்கா திரும்பவந்துவிட்டது என்ற ஆர்ப்பரிக்கும் வார்த்தைகளில் அவர் சொல்லியிருப்பதெல்லாம் பழைய பன்னீர்செல்வம் பாரக் ஒபாமாவாக வந்துவிட்ட மாதிரித் தான் இருக்கிறது யேமன் மீது சவூதி அரேபியா நடத்தி வரும் போரிலிருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக அறிவித்திருக்கிறார். ஆயுத விற்பனையும் கிடையாது என்ற அறிவிப்பு வேறு! அடுத்து ரஷ்யா மீது பாய்ச்சல்! அதுவும் முந்தைய நிர்வாகத்தை விட மிகக்கடுமையாக இருக்குமென்கிற ஜம்பப்பேச்சு வேறு! சீனாவைப் பற்றி பெரிதாக பிரஸ்தாபம் எதுவும் இல்லை. ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா, ஜப்பான், ஜெர்மனி, மெக்சிகோ, தென்கொரியா, அப்புறம் நேட்டோ ராணுவக்கூட்டு இவைகளெல்லாம் இடம்பெற்ற கொள்கை முழக்கத்தில் இந்தியா பற்றிய பேச்சேகாணோம்  என்பது எனக்கு வியப்பாக இல்லை!


அமெரிக்க டெமாக்ரட்டுகளுக்கு பாகிஸ்தானை மிகவும் பிடிக்கும், இந்தியாவைப் பிடிக்காது என்பது மிகநீண்ட காலமாகத் தொடர்கிற விஷயம். ஒபாமா காலத்தில் கொஞ்சம் குறைவாக இருந்ததென்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். 

Former Secretary of State Mike Pompeo reacted Thursday to President Biden's declaration that "America is back" by asking if the commander-in-chief meant "back to when ISIS controlled a caliphate in Syria that was the size of Britain." "I hope not. President Trump and our team took that down," Pompeo told "Fox News Primetime" host Trey Gowdy. 

ஜோ பைடன் நிர்வாகத்தில் சீனா குறித்தான கொள்கை முடிவுகளில் தள்ளாட்டமும், டொனால்ட் ட்ரம்ப் செய்த எல்லாவற்றையும் மாற்றவேண்டும் என்கிற அவசரமும்  தெரிகிறது. வரும் நாட்களில் நம்பத்தகுந்த கூட்டாளி நாடாக ஜோ பைடனின் அமெரிக்கா இருக்கப் போவதில்லை என்பதை இஸ்ரேல், சவூதி அரேபியா உள்ளிட்ட பலநாடுகள் ஏற்கெனெவே புரிந்துகொண்டு தங்கள் நலனைப் பாதுகாத்துக்கொள்வதில் முனைந்து நிற்கின்றன.

இந்தியா என்ன செய்யப்போகிறது என்பது இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை.

மீண்டும் சந்திப்போம். 

Monday, February 1, 2021

#மியான்மர் ஆட்சிக்கவிழ்ப்பு! மாறிவரு!ம் சீனத்தந்திரங்கள்!

இன்று அதிகாலை மியான்மர் ராணுவத்தலைமை (Tatmadaw) தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூச்சி அரசை நீக்கிவிட்டு, ஆட்சியைத் தன்வசமே வைத்துக் கொண்டு இருக்கிறது .ஆங் சான் சூச்சியும் வேறுசிலரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப் பட்ட அரசு  என்றாலும் ராணுவத்தலைமையால் கட்டுப் படுத்தப்படுகிற அரசாகவே ஆங் சான் சூச்சி அரசு இருந்து வருகிற நிலையில் இந்த ஆட்சிக்கவிழ்ப்பு எதற்காக?  இப்போது நிகழக்காரணம் என்ன?  


ஆட்சிக்கவிழ்ப்புடன் ஓராண்டுக்கு நெருக்கடி நிலைமை அறிவிப்பும் சேர்ந்தே வந்திருக்கிறது. அரசு டிவி  சில தொழில்நுட்பக்கோளாறுகளால் ஒளிபரப்ப முடியாது என்று அறிவித்திருப்பது ஒருபக்கம் காமெடி! இன்னொரு பக்கம் மியான்மர் நீண்டகாலமாகவே வெளியுலகுடன் தொடர்புகளே இல்லாமல் தானே தன்னைத்தனிமைப் படுத்திக் கொண்ட  நாடாகவே இருந்தது. (மா சேதுங் காலத்துச் சீனாவும் கூட இப்படித்தான்  வெளியுலகுடன்  தொடர்பு இல்லாமல் இருந்தது)  மியான்மர் ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னால் சீனா இருப்பது உலகறிந்த ரகசியம்.

 

மியான்மரில் நடந்த ஆட்சிக்கவிழ்ப்புக்கு வழக்கம் போல கண்டனங்கள் எழுந்தாலும், அவைகளால் என்ன ஆகிவிடப்போகிறது? 

மியான்மர் விவகாரத்தில் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்களை இங்கே அவினாஷ் பாலிவால் சொல்கிறார்.  இவர் சொல்வது ராணுவத் தலைமைக்குள்ளேயே இரண்டுவிதமான பிரிவுகள் இருப்பதனால் தான் இப்படி என்கிற மாதிரி! 

Military Takeover Of Myanmar: China Suspected To Have Orchestrated Coup To Re-Establish Its Grip On The Country And Its Resources என எல்லாப்புகழும் சீனர்களுக்கே என்கிறார் ஜெய்தீப் ம.ஜூம்தார் 



செலானி வேறு இப்படிப் படுத்துகிறார்!! 

கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம். 

Friday, November 15, 2019

வெளியுறவுக் கொள்கை! புரிந்து கொள்ள உதவியாக .....

ஒரு நாட்டின் வெளியுறவுக்கொள்கை என்னென்ன அடிப்படைகளில் உருவாக்கப்படுகிறது? இந்த விஷயத்தை முந்தையபதிவுகளில் கொஞ்சம் பார்த்து இருக்கிறோம். இதையே கொஞ்சம் அனுபவமுள்ள ஒருவர் சொன்னால் எப்படியிருக்கும்?


இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில், நேற்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் Dr. S. ஜெய் சங்கர், புது டில்லியில் 4வது ராம்நாத் கோயங்கா உரை என்று, இந்த 48 நிமிட வீடியோவில், ஐந்து கட்டங்களாக உருமாற்றம் ஆன இந்திய வெளியுறவுக் கொள்கை பற்றிக் கொஞ்சம் விரிவாகவே பேசுகிறார். 


இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிலும் JNU விலும் பணியாற்றிய பிறகு தற்போது சிங்கப்பூரில் Institute of South Asian Studies, National University of Singapore இல் இயக்குனராக இருக்கும் C ராஜ மோகனுடன், பாகிஸ்தான், ஆர்டிகிள் 370. RCEPயில் சேருவதில்லை என்ற முடிவு இப்படி வெளியுறவு விவகாரங்களில் நடப்பு நிலவுரங்களைகுறித்தான கேள்விகளுக்குப் பதிலளித்து உரையாடுகிற இந்த வீடியோ 43 நிமிடம்.

கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் வெளியுறவு விவகாரங்கள் புரிந்துகொள்ளக் கடினமானதல்ல. என்று நான் இந்தப்பக்கங்களில் சொல்லிவருவது ஏனென்பது 90 நிமிடங்கள் செலவழித்து இந்த இரு வீடியோக்களைப் பார்த்தாலே புரியும்.

மீண்டும் சந்திப்போம்.
         

Wednesday, August 7, 2019

ஜம்மு காஷ்மீர்! தீராத தலைவலிக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது!

இந்திய சுதந்திரத்துக்குப் பின்னால் இந்திய வெளியுறவுக் கொள்கையின் பிரதான அம்சமாக என்று கூட அல்ல, ஒட்டு மொத்தமாகவே அது பாகிஸ்தானை மையப்படுத்தியே இருந்தது என்கிற ஒரு விஷயமே, இந்திய மக்களுக்குத் தெரியாது, தெரியப்படுத்தப் படவே இல்லை என்பதுதான் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த காலங்களில் தொடர்ந்து கொண்டே வந்த இந்திய அரசியலின் முதிர்ச்சிபெறாத மிகப்பெரிய ஜனநாயக சோகம்.

பிரிட்டிஷ்காரர்களிடம் பிரிவினை கேட்டு மல்லுக்கட்டி வந்த முஸ்லிம் லீக் கட்சி பாகிஸ்தான் என்று கேட்டது கிடைத்ததும் அமைதியாக இருந்தார்களா? ஜம்மு காஷ்மீர் அவர்களுடைய அடுத்த குறியாக இருந்தது. பிரிட்டிஷ்காரர்களும் மிகத் தந்திரமாக 560க்கும் மேற்பட்ட குட்டிக்குட்டி சமஸ்தானங்கள், அவரவர்களுடைய விருப்பப்படி இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ இணைந்து கொள்ளலாமென்கிற மாதிரி குட்டையை இன்னமும் குழப்பிவிட்டுப் போனார்கள். வெள்ளைத் துரைமார் குழப்பிவிட்டுப்போனதை உள்ளுர்த்துரை நேரு அவர்பங்குக்கு இன்னமும் குழப்பி விட்டுப் போனார் என்பதை இப்போது கூட முழுமையாக அறிந்திருக்கிறோமா? 

  இந்த விவாதம் ஒரு சாம்பிளுக்காக மட்டுமே! 

2019 ஆகஸ்ட் 5 அன்று மாநிலங்களவையில் ஜவஹர்லால் நேரு ஏற்படுத்திவிட்டுப் போன காஷ்மீர் குழப்பங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆர்டிகிள் 370, ஆர்டிகிள் 35A என்று காஷ்மீரை ஒருபிரச்சினையாகவே வளர்த்துவிட்ட தவறு சரி செய்யப்பட்டது, மூன்றில் இரு பங்குக்கும் மேலான ஆதரவு பெற்று J&K Reorganisation Bill 2019 மாநிலங்களவையிலும் மறு நாள் ஆகஸ்ட் 6 அன்று மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. ஆர்டிகிள் 370 இல் உள்ள exit route ஜப் பயன்படுத்தியே, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது, திரும்பவும் பெறப்பட்டது. ஆர்டிகிள் 35A ரத்து செய்யப்பட்டது. எல்லைகள் மறுசீரமைப்பு செய்யப்படக் கூடாதென இருந்ததும்  J&K Reorganisation Bill 2019 சட்ட மசோதாவால் உடைக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக, லடாக் பகுதி சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாக, அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் முக்கியமான அம்சமாக காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை ஒரே அரசியல் சட்டத்தின் கீழ் சம உரிமை உள்ளதாக, இந்தியச் சட்டங்களின் கீழ் ஜம்மு காஷ்மீரும் வருவதாக, உண்மையாகவே இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைக்கப்பட்டிருக்கிறது.  
காஷ்மீர் யாருக்கு சொந்தம்?
நேற்று வரை பலருக்கும் விடை தெரிந்த அதே நேரம் சிலரால் ஏற்கப்படாத இந்தக் கேள்விக்கு இன்று தெளிவான அரசியல் தீர்வு கிடைத்துவிட்டிருக்கிறது.
படேல், அம்பேத்கர் ஆகியோரின் எதிர்ப்பையும் மீறி மட்டுமல்ல இந்தியாவின் பிற மாநில மக்களைத் துளியும் கலந்தாலோசிக்காமல் காஷ்மீருக்கு என்று சிறப்பு சலுகையை நேரு தன்னிச்சையாக வழங்கினார்.
இன்று அந்த சலுகை திரும்பப் பெறப்பட்டுவிட்டிருக்கிறது.
ஒரு தேசத்தின் ஓர் அங்கமான காஷ்மீரில் அதே தேசத்தின் பிற அங்கங்களான பிற மாநிலத்தினர் நிலம் வாங்கவோ தொழில் தொடங்கவோ முடியாது என்பது தொடங்கி காஷ்மீருக்கு என்று தனி சட்டசபை; தனி கொடி; பாகிஸ்தானியருக்கு காஷ்மீரில் இருக்கும் சில உரிமைகள் கூட இந்தியர்களுக்குக் கிடையாது எனப் பல சலுகைகள் காஷ்மீருக்குத் தரப்பட்டதற்கு என்ன காரணம்?
உண்மையில் காஷ்மீர் யாருக்கு சொந்தம்? இந்தியாவுக்கா... பாகிஸ்தானுக்கா... அல்லது அது தனி நாடாக இருக்கவேண்டுமா? என்ற இந்தப் பிரச்னையின் தொடக்கப்புள்ளியைப்பற்றி எ மிஷன் இன் காஷ்மீர் (தமிழில்: காஷ்மீர் முதல் யுத்தம்) என்ற நூலை ஆண்ட்ரூ வொயிட்ஹெட் எழுதியிருக்கிறார்.
பி.பி.சி.யின் செய்தித் தொடர்பாளரான அவர் வெகு எச்சரிக்கையாக பி.பி.சி.க்கும் இந்தப் புத்தகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று முன்கூட்டியே சொல்லிவிட்டுத்தான் ஆரம்பிக்கிறார். ஒருவகையில் இந்தப் புத்தகம் எழுதும் வாய்ப்பு அவருக்கு மிகவும் எதேச்சையாகவே கிடைத்திருக்கிறது. சுய ஆர்வத்தின் பேரிலேயே இதை எழுதியிருக்கிறார்.
பிரிவினையின் போது நடந்த சம்பவங்களைத் தொகுக்க காஷ்மீருக்கு வந்தவர், தான் பேட்டி எடுக்க வேண்டிய நபர் கிடைக்காமல் போகவே சோர்வுடன் திரும்பிப் போகும் வழியில் ஒரு மடாலயத்தைப் பார்த்துவிட்டு மெதுவாக உள்ளே நுழைந்திருக்கிறார். ஒரு புதியதொரு உலகத்துக்குள் எடுத்து வைத்த முதல் காலடி அது என்பது அப்போது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
அந்த மடாலயத்தில்தான் காஷ்மீர் மீதான பாகிஸ்தானின் முதல் அத்துமீறலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த ஒருவர், கிட்டத்தட்ட அந்த வ்ரலாற்றைச் சொல்லிவிட்டு இந்த உலகில் இருந்து விடைபெற வேண்டும் என்று நினைத்ததுபோல், 91 வயதில் மரணத்தின் விளிம்பில் உயிரைக் கையில் பிடித்தபடி இருந்து வந்திருக்கிறார்.
அவர் சொன்ன விஷயங்களே ஆண்ட்ரூ வொயிட் ஹெட்டை இந்தப் புத்தகத்தை எழுதத் தூண்டியிருக்கின்றன. 1947 காலகட்டத்து காஷ்மீரின் சித்திரத்தை நம் மனக் கண் முன் கொண்டுவருவதில் கடும் சிரமத்தை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எல்லைக்கோடு என்ற ஒன்றை பிரிட்டிஷார் வரைந்து கொடுத்தார்கள் என்றாலும் எந்த சம்ஸ்தானத்தையும் இந்தியாவுக்கு சொந்தம்... பாகிஸ்தானுக்கு சொந்தமென்று பிரித்துக் கொடுக்கவில்லை. ஒவ்வொரு சமஸ்தானமும் அதனுடைய விருப்பத்துக்கு ஏற்ப எந்த தேசத்தில் சேர வேண்டுமோ சேர்ந்து கொள்ளலாம். அல்லது சேராமல் தனித்தும் இருந்து கொள்ளலாம் என்றுதான் பிரிட்டிஷார் சொல்லியிருந்தார்கள்.
பிரிட்டிஷாரால் அடிமைப்படுத்தப்பட்டிருந்த இந்துஸ்தானானது பாகிஸ்தான், இந்தியா என்ற இரண்டு தேசங்களாகப் பிரிக்கப்பட்டதில் யாருடன் சேர்வது என்ற பிரச்னை படேலின் பொறுப்பில் விடப்பட்ட 500 சொச்சம் சமஸ்தானங்களில் சில மாதங்களிலேயே சுமுகமாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. ஒரே ஒரு சமஸ்தானத்தைத் தவிர. அது நேருவின் கையில் விடப்பட்ட காஷ்மீர்.
காஷ்மீர் பிரச்னை ஏன் இவ்வளவு சிக்கலாக இருக்கிறது... உண்மையில் என்னதான் நடந்தது என்பதை ஆண்ட்ரூ வொயிட் ஹெட் தகுந்த ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்திய ராணுவக் குறிப்புகளில் ஆரம்பித்து காஷ்மீர் மீதான பாகிஸ்தான் கூலிப்படைகளின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களிடமிருந்து கிடைத்த கடிதங்கள் வரை அனைத்து அதிகாரபூர்வ, அதிகாரபூர்வமற்ற ஆவணங்களைக் கொண்டு காஷ்மீர் பிரச்னை குறித்த ஒரு விரிவான சித்திரத்தை முன்வைக்கிறார்.
காஷ்மீர் தொடர்பாக மூன்று முக்கியமான குற்றச்சாட்டுகள் இந்தியா மீது வைக்கப்படுவதுண்டு. அவற்றுக்கு இந்த நூலில் தரப்பட்டுள்ள ஆவணங்கள் ஒரு தெளிவான பதிலைத் தருகின்றன.
1. காஷ்மீரின் மன்னரான ஹரிசிங்கைக் கட்டாயப்படுத்தி இந்தியா ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிவிட்டது.
2. காஷ்மீர் இந்தியாவுடன் சேர்வது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாகவே இந்திய ராணுவம் காஷ்மீரில் கால்பதித்துவிட்டது. அதாவது, சட்டப்படிப் பார்த்தால் அது இன்னொரு நாடான காஷ்மீர் மீதான ஆக்கிரமிப்புதான்.
3. இந்தியாவுடன் சேர்வது தொடர்பான காஷ்மீர் மக்களின் எண்ணத்தை அறிந்துகொள்ளப் பொதுவாக்கெடுப்பு நடத்துவதாக வாக்கு கொடுக்கப்பட்டது. ஆனால், நடத்தப்படவில்லை.
ஆண்ட்ரூ வொயிட் ஹெட் தொகுத்துத் தந்திருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் மேலே சொன்ன குற்றச்சாட்டுகளை அலசிப் பார்ப்போம்.
ஒருவகையில் காஷ்மீர் பிரச்னையானது அன்று அதிகாரத்தில் இருந்த நான்கு பேரால் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
மத அடிப்படையில் ஒரு தேசத்தை உருவாக்கிய ஜின்னா...
சுதந்தர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு...
காஷ்மீரின் முதல் அமைச்சர் ஷேக் அப்துல்லா...
காஷ்மீரின் அப்போதைய மன்னர் ஹரி சிங்.
இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது, 1947-ல் காஷ்மீர் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தவேண்டும் என்ற ஜின்னாவின் வெறி நன்கு தெரியவருகிறது.
இந்தியாவுடன்தான் சேர வேண்டும். ஆனால், அதிகாரம் நம் வசமே இருக்க வேண்டும் என்ற மன்னர் ஹரிசிங்கின் விருப்பம் தெளிவாகப் புலனாகிறது (பதான் கூலிப்படையை காஷ்மீர் மீது ஜின்னா ஏவியதற்கு முக்கிய காரணமே ஹரிசிங் இந்தியாவுடன் சேர முடிவெடுத்ததுதான். சிலர் சொல்வதுபோல், பதான் கூலிப்படை தாக்கியதால் மன்னர் இந்தியாவுடன் சேர முடிவெடுத்திருக்கவில்லை. அவர்களின் தாக்குதலைப் பயன்படுத்தி இந்தியா வலுக்கட்டாயமாகவும் இணைத்துக் கொண்டிருக்கவும் இல்லை).
மன்னரின் அதிகாரம் பறிக்கப்பட்டு மக்கள் பிரதிநிதி ஒருவரிடம் தரப்பட வேண்டும் என்ற நேருவின் விருப்பம் விவரிக்கப்பட்டிருக்கிறது.
புதிய மக்கள் சக்தியாக உருவெடுத்திருந்த நேஷனல் கான்ஃப்ரன்ஸ் கட்சியின் தலைவர் ஷேக் அப்துல்லா, இந்தியாவுடன் சேர்வதுதான் காஷ்மீருக்கு நல்லது என்று கருதியது தெரியவருகிறது.
இந்த நால்வரில் காஷ்மீர் இந்தியாவுடன் சேரவேண்டும் என்ற முடிவையே ஜின்னா தவிர மூவரும் தன்னிச்சையாக எடுத்திருக்கிறார்கள் என்பது ஆண்ட்ரூ வொயிட் ஹெட் தொகுத்த ஆவணங்களில் இருந்து புலனாகிறது.
பாகிஸ்தானுடன்தான் காஷ்மீருக்கு நிறைய வர்த்தகத் தொடர்புகள் இருக்கின்றன. காஷ்மீரில் முஸ்லீம்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். எனவே, பாகிஸ்தானுடன்தான் சேர அதிக வாய்ப்பு இருப்பதாக பிரிட்டிஷ் அதிகாரிகள் எதிர்பார்த்ததாக அவர்கள் தொடர்பான ஆவணங்களில் இருந்து தெரிய வருகிறது.
ஆனால், மவுண்ட்பேட்டன் இந்தியாவுடன் சேர்வதுதான் காஷ்மீருக்கு நல்லது என்ற தொனியில் பேசியதாகவும் தெரியவருகிறது.
மன்னரைக் கட்டாயப்படுத்தி காஷ்மீரை இந்தியாவுடன் சேர்த்துக் கொண்டதாக பொதுவாகச் சொல்லப்படுவதை இந்த நூலில் தரப்பட்டிருக்கும் ஆவணங்கள் வெகுவாக மறுக்கின்றன.

காஷ்மீரின் அன்றைய பிரதமராக இருந்த ராமசந்திர கக் என்பவர் மன்னர் ஹரிசிங்கிடம் பாகிஸ்தானுடன் சேர வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், மன்னர் ஹரி சிங்கோ முதல் வேலையாக அவரை பணி நீக்கம் செய்துவிட்டு இந்தியச் சார்பாக இருக்கும் மெஹர் சந்த் மஹாஜனைப் பதவியில் அமர்த்தி இருக்கிறார் (மெஹர் சந்த் மஹாஜன், பஞ்சாபைப் பிரிக்கும் எல்லை வரைவுக் குழுவில், இந்தியாவுக்குச் சாதகமாக அதிகப் பகுதியை வென்றெடுக்க காங்கிரஸ் தரப்பில் உறுப்பினராக நியமிக்கப்பட்டவர்).
இந்தியத் தலைவர்களை காஷ்மீருக்கு வரும்படி ஹரிசிங் பலமுறை அழைத்திருக்கிறார். ஜின்னா காஷ்மீருக்கு வர விருப்பம் தெரிவித்தபோது வேண்டாம் என்று மறுத்திருக்கிறார்.
காஷ்மீர் ராணுவத்துக்குத் தலைவராக இருந்த பிரிட்டிஷ்காரர் ஒருவரை விலக்கிவிட்டு அந்தப் பொறுப்பை இந்தியர் ஒருவருக்குத் தந்திருக்கிறார். இந்திய அரசிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களை வாங்க விரும்பியிருக்கிறார். பிரிட்டிஷ் அரசு அதற்கு அனுமதி தரவில்லை என்பதால் அது முடியாமல் போய்விட்டிருக்கிறது.
மக்களாட்சி தொடர்பான சீர்திருத்தங்களைக் கொஞ்சம் தள்ளிப் போடும்படி நேருவிடம் ஹரிசிங் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இவையெல்லாம் பாகிஸ்தானின் கூலிப்படைகள் காஷ்மீர் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பாக, இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்படி மன்னரிடம் இந்தியா கேட்பதற்கு வெகு முன்பாகவே நடந்தவை என்பது ஆண்ட்ரூ வொயிட் ஹெட் தொகுத்த ஆவணங்கள் மூலம் தெள்ளத் தெளிவாகத் தெரிய வருகின்றன.
இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது, மன்னர் ஹரி சிங்குக்கு காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதில் முழு விருப்பம் இருந்திருக்கிறது. ஷேக் அப்துல்லாவை முன்னிலைப்படுத்துவதுதான் பிடிக்கவில்லை. அதனால்தான் நேருவிடம் கூட அவர் கொண்டு வர விரும்பிய மக்களாட்சி சார்ந்த சீர்திருத்தங்களைக் கொஞ்சம் தள்ளிப் போடும்படி மறைமுகமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்பது தெரியவருகிறது.
அடுத்த விஷயத்துக்கு வருவோம்.
காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதாக காஷ்மீர் மன்னர் எப்போது கையெழுத்திட்டுக் கொடுத்தார்? அவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த பிறகு இந்திய ராணுவம் அங்கு கால் பதித்ததா.... அல்லது அதற்கு முன்பாகவே களமிறங்கிவிட்டதா?
இந்த அட்சர லட்சம் பெறும் கேள்வியை மிகவும் விரிவாக அலசியிருக்கிறார்.
ஆண்ட்ரூ வொயிட் ஹெட்டின் கூற்றுப்படி பார்த்தால், 1947, அக் 27 அன்று காலை 9 மணி அளவில். இந்திய ராணுவம் காஷ்மீர் மன்னர் கேட்டுக் கொண்டதன் பேரில் காஷ்மீரில் இறங்கியது. இந்தியாவுடன் இணைவது தொடர்பான ஒப்பந்தம் அதற்கு முன் கையெழுத்தாகவில்லை. அநேகமாக சில மணி நேரங்கள் கழித்துத்தான் கையெழுத்தாகி இருக்கவேண்டும். ஆனால், அக்-26-லேயே கையெழுத்தானதாக தேதியை திருத்தி எழுதிவிட்டார்கள் என்று சொல்கிறார்.
ஒருவகையில் இந்திய ராணுவம் அக்-27-ல் கால் பதித்தாலும் அக்-28 அன்றுதான் இந்திய துப்பாக்கியில் இருந்து முதல் தோட்டா சீறிப் பாய்ந்திருக்கிறது. அதாவது முறையான ஒப்பந்தம் கையெழுத்தான பிறகுதான் அது தாக்குதலை ஆரம்பித்திருக்கிறது. எனினும் இந்திய ராணுவம் எப்போது காஷ்மீரில் கால் பதித்தது என்ற கேள்வி முக்கியமான ஒன்றுதான்.
அக்-24 லேயே மஹாராஜா தன் கைக்குக் கிடைத்த ஒரு காகிதத்தில் அரசாங்க முத்திரையிட்டு கையெழுத்தும் போட்டு, இணைப்புக்கு சம்மதம், ராணுவ உதவி தாருங்கள் என்று ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கிறார். அதைப்பற்றி அக் 24-ல் நேரு, வானொலியில் ஆற்றிய உரையில் தெளிவாகக் குறிப்பிட்டும் இருக்கிறார்.
ஆனால், இந்திய அரசு, சம்ஸ்தானங்களின் இணைப்பு தொடர்பாக தயாரித்த அதிகாரபூர்வ விண்ணப்பத்தில் மன்னர் கையெழுத்து போட்ட தேதிதான் சந்தேகத்துக்கு இடமானது என்று ஆண்ட்ரூ வொயிட் தெரிவிக்கிறார்.
அந்தவகையில் பார்க்கும்போது காஷ்மீரில் இந்திய ராணுவம் முதலில் கால் பதித்த விஷயம் சட்டரீதியில் விவாதத்துக்கு உரியது. தர்மத்தின் அடிப்படையில் எந்தக் குழப்பமும் அதில் இல்லை.
கோப்பை கொடுக்கும் நிகழ்வு நடந்து முடிந்தால்தான் அதிகாரபூர்வ சாம்பியன் ஆக முடியும் என்பது உண்மைதான். ஆனால், கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அல்லது விக்கெட் எடுத்து முடிப்பதோடே ஒரு அணியின் வெற்றி உறுதியாகிவிடுகிறது. அதன் பின் நடக்கும் கோப்பை வழங்கும் விழா என்பது வெறும் ஒரு சடங்குதான்.
அதுபோல்தான் ஹரி சிங் இந்தியாவுடன் இணைய தனது சம்மதத்தை ஒரு கடிதத்தில் எழுதிக் கொடுத்துவிட்டார். அதிகாரபூர்வ கையெழுத்து ஓரிரு நாட்கள் கழித்து போடப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான்.
அடுத்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு என்னவென்றால், காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்று உத்தரவாதம் தரப்பட்டது. ஆனால், அது பின்னர் மேற்கொள்ளப்படவில்லை என்பதுதான்.
இந்தப் புத்தகத்துக்கு வெளியில் இருந்து நமக்குக் கிடைக்கும் தகவல்களை வைத்துப் பார்த்தால் இந்த விஷயம் பற்றிய முழுமையான சித்திரம் நமக்குக் கிடைக்கும்.
பாகிஸ்தானிய பதான் படைகள், தாம் ஆக்கிரமித்திருக்கும் பகுதியில் இருந்து வெளியேறவேண்டும்; அதன் பிறகே பொது வாக்கெடுப்பு நடக்கவேண்டும் என்பது ஐ.நா. தீர்மானத்தின் முக்கிய நிபந்தனை. பாகிஸ்தான் அந்தப் பகுதியில் இருந்து இன்று வரை வெளியேறவில்லை. அதனால், இந்தியா பொது வாக்கெடுப்பை நடத்த முடிந்திருக்கவில்லை.
அடுத்ததாக, புதிதாகப் பதவி பெற்ற ஷேக் அப்துல்லா அடுத்து நடந்த தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். அவர் இந்தியாவுடன் தான் சேரவேண்டும் என்று சொல்லியவர்தான். முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருந்த அவருடைய கட்சிக்கு ஒட்டு மொத்த காஷ்மீர் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்றால் இந்தியாவுடன் சேர்ந்ததை அவர்கள் ஏக மனதாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.
அதோடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த அரசு சட்டசபையில் இந்தியாவுடன் காஷ்மீர் சேர்ந்ததை அங்கீகரித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. அந்தவகையில் காஷ்மீர் யாருடன் சேர வேண்டும் என்ற பெயரில் தனியான வாக்கெடுப்பு நடக்கவில்லையே தவிர அந்த விஷயத்துக்கு ஆதரவான மனநிலையில்தான் மக்களும் அவர்களுடைய தலைவர்களும் இருந்திருக்கிறார்கள் என்பதே புலனாகிறது.
அதன் பிறகு அங்கு சர்வ தேசக் கண்காணிப்பின் கீழ் இந்தியா ஏராளமான தேர்தல்களை நடத்தியிருக்கிறது. அனைத்திலும் மக்கள் வரிசையில் நின்று பெருமளவில் வாக்களித்திருக்கிறார்கள். எனவே இனியும் அவர்கள் யார் பக்கம் என்ற கேள்விக்கே இடமில்லை.
இந்த நூலை முடிக்கும்போது ஆண்ட்ரூ வொயிட் ஹெட் மிகுந்த கரிசனத்துடன் ஒரு விஷயம் சொல்கிறார். என்ன ஆனாலும் ஒரு பகுதியின் தலைவிதியைத் தீர்மானிக்கும் அதிகாரம் அவர்களிடமே விடப்பட வேண்டும் என்று முடிக்கிறார். இதை உலகை அடிமையாக்கி, அஸ்தமிக்காத சூரியனால் சுட்டெரித்த மேதகு விக்டோரியா மகாராணியாரிடம் யாராவது எடுத்துச் சொல்லியிருந்தால் உலகம் எவ்வளவோ முன்னேறியிருக்கும்.
இவையெல்லாவற்றையும்விட முக்கியமான இரண்டு விஷயங்கள் என்னவென்றால், ராஜ ஹரிசிங்கோ, ஷேக் அப்துல்லாவோ இந்தியாவுடன் சேரவேண்டுமானால் எங்களுக்கு விசேஷ சலுகை தரவேண்டும் என்று கேட்டிருக்கவே இல்லை. நேரு தாராளமாகத் தூக்கிக் கொடுத்த துயரம் அது.
அடுத்ததாக, பாக்-பதான் படைகள் இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியபோது, ராணுவ தளபதி, ஒரு வார கால அவகாசம் கொடுங்கள்; அந்த ஆக்கிரமிப்பாளர்களை இந்திய எல்லையைவிட்டு விரட்டிவிடுகிறோம் என்று கெஞ்சிக் கேட்டிருக்கிறார். நேருவோ அதைக் கேட்காமல் தானாகவே போர் நிறுத்தம் அறிவித்ததோடு விஷயத்தை ஐ.நா.வுக்கும் கொண்டுசென்றுவிட்டார்.
சீன விஷயத்திலும் இப்படித்தான், நம்மால் வெல்லவே முடியாது என்று ராணுவ தளபதிகள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காமல் முறையான தயாரிப்புகள் எதுவுமே இல்லாமல் சீனாவுடன் போரை ஆரம்பித்து தேசத்தைத் தோற்கவைத்தார்.
உண்மையில் அவர் இந்திய பாக் எல்லையில் காட்டிய அதிகப்படியான நிதானத்தை சீன எல்லையில் காட்டியிருக்கவேண்டும். சீன எல்லையில் காட்டிய அதி சாமர்த்தியத்தை பாக் எல்லையில் காட்டியிருக்கவேண்டும். என்ன செய்ய தேசம் மக்கள் தலைவரின் கையில் வந்து சேர்ந்திருக்கவில்லை. ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்டவரின் கைக்குப் போய் சேர்ந்துவிட்டது.
அன்று தொடங்கிய அந்த ஆங்கில-காலனியமயமாக்கத்தில் இருந்து விடுபட நாம் செய்யவேண்டிய முக்கியமான விஷயங்கள் பல இருக்கின்றன என்றாலும் ஆர்டிகிள் 370 நீக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றே.
Battle is won;
The War should go on. 

இப்படி BR மகாதேவன் முகநூலில் பகிர்ந்திருந்ததை நன்றியுடன் இங்கே, நண்பர்கள் புரிந்துகொள்வதற்காக, பகிர்கிறேன்.

பிபிசி மாதிரியே Andrew Whitehead என்கிற இந்த திடீர் சரித்திர எழுத்தாளருக்கும், சரித்திரத்தை நடந்தது நடந்தபடி சொல்ல வேண்டும் என்கிறமாதிரி இல்லை போலிருக்கிறது!

No Kashmiri politician will work with or alongside BJP after this:  இப்படி Historian Andrew Whitehead சொல்வதாக Caravan இதழில் ஒரு பேட்டி வெளியாகியிருக்கிறது.  இது மாற்றுக்கருத்தா விஷமக்கருத்தா என்பதை நீங்களே சுட்டியில் பார்த்து முடிவு செய்துகொள்ளலாம்!  கேரவன் இதழுக்கு பிஜேபி, நரேந்திர மோடி என்றால் எட்டிக்காயாகக் கசக்கும் என்பதையும் தெரிந்து வைத்துக் கொண்டு படிப்பது உசிதம்.  

வெளியுறவுக்கொள்கை என்பது உள்நாட்டு நலன்கள் சார்ந்ததாக இருக்கும் என்பது ஒரு பொதுவான கோட்பாடு. நேரு, மற்றும் VK கிருஷ்ணமேனன் இருவருமாக இந்தியாவின் வெளியுறவு விவகாரங்களை எப்படி முடிவெடுத்தார்கள் என்பதை முந்தைய பதிவொன்றில் பார்த்திருக்கிறோம்.  

 மீண்டும் சந்திப்போம்.
          

Friday, July 12, 2019

உலக அமைதியைக் கெடுக்க! டொனால்ட் ட்ரம்ப் ஒருவரே போதும்!

அனேகமாக டொனால்ட் ட்ரம்ப் அளவுக்கு உள்நாட்டிலும் சரி வெளிநாடுகளிலும் சரி எல்லோரையும் கதற விட்டவர்கள் உலகத்தலைவர்களில் வேறு எவருமில்லை என்றே சொல்கிற அளவுக்கு வாய் என்றால் அப்படி ஒரு வாய்! வாய்தான் அப்படி என்றால், ராஜீய உறவுகளில் இப்படித்தான் என்று கணிக்க முடியாதபடி அப்படி ஒரு முரண். 2020 இல் பதவிக்காலம் முடிகிற வரை சகித்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முன்பு ஈரானுக்கு அறிவுரை சொன்னதுண்டு. சீனாவும் கூட, ட்ரம்ப் பதவிக் காலம் முடிகிற வரை முட்டல் மோதல்களை வளர்த்துக் கொள்ளாமலும், அதே நேரம் ரஷ்யா உள்ளிட்ட எல்லா நாடுகளுடன் ஒரு சுமுகமான உறவை வளர்த்துக் கொள்வதிலும் அதிக அக்கறை காட்டுவதில் அர்த்தம் இல்லாமல் இல்லை,  


அமெரிக்காவோடு அதிகம் ஒட்டி இழைந்துகொண்டிருக்கும் ஒரே நாடு என்றால் அது பிரிட்டன் தான்!  கடந்த புதனன்று USA வுக்கான பிரிட்டிஷ் தூதர் சர் கிம் டர்ரக் ராஜினாமா செய்து இருப்பது இப்போது சர்வதேச அளவில் வெளியுறவு விவகாரங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படும் செய்தி! என்ன நடந்ததாம்? போன ஞாயிற்றுக் கிழமை, பிரிட்டிஷ் தூதர் தனது அரசுக்கு அனுப்பிய தகவல்கள் (பிரிட்டிஷார் இதை தந்தி / telegram என்கிறார்கள் அமெரிக்காவில் இதையே Cable என்று சொன்னாலும் இன்றைய சூழலில் இவை நமக்குப் பரிச்சயமான   மின்னஞ்சல்கள் தான்)  வெளியே கசியவிடப்பட்டதில், டர்ரக் அமெரிக்க அதிபரைப்பற்றிய தன்னுடைய அனுமானங்களைச் சொல்லியிருந்தது, இப்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது  


  • The wacky Ambassador that the U.K. foisted upon the United States is not someone we are thrilled with, a very stupid guy. He should speak to his country, and Prime Minister May, about their failed Brexit negotiation, and not be upset with my criticism of how badly it was...
    5:18 PM · Jul 9, 2019 · Twitter for iPhone

    Replying to
    ...handled. I told
    how to do that deal, but she went her own foolish way-was unable to get it done. A disaster! I don’t know the Ambassador but have been told he is a pompous fool. Tell him the USA now has the best Economy & Military anywhere in the World, by far...
    8K
    14.5K
    73.7K



    Replying to
    The UK Ambassador figured you out long ago. He knows you’re inept and incompetent, the world knows it and the voting electorate in this country knows it. You was laughed at by the entire world at the UN. You’re nothing but a Fools fool. You’re gone in 2020, then prison.
    144
    468
    3.7K

    Replying to
    These are the tweets of a truly disturbed imbecile, a pathetically insular man whose extreme delusions of grandeur are a profound threat to humanity. If u cared about this country, u'd shut down ur circus freak show and resign.
    மேலே இருக்கும் ட்வீட்டர் செய்திகளைக் கொஞ்சம் பாருங்கள். டொனால்ட் ட்ரம்ப் என்கிற மேதாவி எப்படி உலக நடப்பை விமரிசிக்கிறார், பதிலுக்கு விமரிசிக்கப்படுகிறார் என்பதை  மிகத் தெளிவாகவே புரிந்து கொள்ள முடியும். ஆனால் இந்த ரகசியத் தகவல்களைக் கசிய விட்டது, பிரிடிஷ் பிரதமராகக் காத்திருக்கும் போரிஸ் ஜான்சன் தான் என்றும் சொல்கிறார்கள்.


    சரி, இப்போது இந்தக் கதையெல்லாம் இப்போது எதற்கு? நமக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி இயல்பாகவே எழலாம். ஒரு நாட்டைப் பிடித்த ஏழரை, அதோடு மட்டும் முடிவதில்லை. இன்றைய உலகமானது வெறுமனே  பொருளாதாரம், ராணுவ சமபலம் தூதரக உறவுகள்  இவைகளால் மட்டுமல்ல, பொறுப்புள்ள அரசியல்வாதிகள் நாடாளத் தேர்ந்தெடுக்கப் படுவதிலும் சேர்ந்தே இருக்கிறது. ஒரு தவறான நபர் தகுதியில்லாத பொறுப்புக்கு வரும்போது, தன்னுடைய நாட்டை மட்டுமல்ல, உலக அமைதிக்குமே கூட ஊறு விளைவிக்கிறார்.  இந்தமாதிரி நபர்களால் ஏற்படும் சேதங்களை சரிசெய்ய எத்தனை தலைமுறைகள்  தேவைப்படும் என்பதை யாரால் சொல்ல முடியும்?  

    Kim Darroch was undone by the enemy within என்கிறார் கேத்தி ஷெரிடன் கொஞ்சம் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்களோடு!

    மீண்டும் சந்திப்போம்.   

                 
                   

    சமீபத்தைய பதிவு

    சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

    முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

    முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை