Monday, October 21, 2019

சீனப் பூச்சாண்டி! ஒரு பகுதி நிஜம் தான்! ஆனால் ......?

கொஞ்சம் சொல்லுங்கள்! சீனாவைப் பற்றி எந்த அளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறோம்? கம்யூனிஸ்ட் நாடாகச் சொல்லிக் கொண்டாலும், நம்மூரில் கம்யூனிஸ்ட்கள் மிகக் கடுமையாக எதிர்த்த WTO, Globalisation இவைகளைப் பயன் படுத்திக் கொண்டு சீனா, இன்றைக்கு உலகத்தில் உள்ள முதலாளித்துவ நாடுகளைத் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு, பகாசுர நிறுவனங்களை வளர்த்துக் கொண்டிருப்பதை பற்றிக் கொஞ்சமாவது அறிந்திருக்கிறோமா? ஒரு சாம்பிளுக்கு....  
    

இந்த ஆண்டுத் துவக்கம் முதலே அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப்போரில் முதலில் சிக்கிக் கொண்டது சீனாவின் Huawei வாவே தொலைத் தொடர்பு நிறுவனம் தான்!  ஸ்மார்ட் போன்களைத் தயாரிப்பதில் உலகின் இரண்டாவது பெரிய நிறுவனம் என்று சொல்வதை விட 5G தொலைத்தொடர்பு கட்டுமான  சாதனங்களை தயாரிப்பதில் உலகிலேயே முதல் பெரிய நிறுவனமாகவும் இருக்கிறது! வருட வருமானம் நூறு பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 7 லட்சம் கோடிரூபாய்கள்!) அமெரிக்க வர்த்தகத்தடைகளுக்குப் பின்னாலும் கூட இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் 86 பில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டியிருக்கிறது என்பதோடு உள்நாட்டுச் சந்தையிலும் 40% என விற்பனையில் முதலிடம் பிடித்திருக்கிறது. 


இந்த 24 நிமிட வீடியோவைக் கொஞ்சம் கவனமாகப் பாருங்கள் ஐந்தாம் தலைமுறை தொலைதொடர்பு சாதனங்களை உற்பத்தி செய்வதில் மட்டுமல்ல, 5G சேவைகளுக்கான கட்டுமானம், தொழில்நுட்பம் இவைகளிலும் வாவே உலகின் முதல் இடத்தில் இருக்கிறது. அதுவும் போக ஆறாம் தலைமுறை தொலைத்தொடர்பு குறித்தும் இப்போதே தீவீர ஆராய்ச்சியிலும் வாவே முன்னிலை வகிக்கிறது. Backdoor பின்வாசல் வழியாக வாவே சீன அரசுக்காக உளவுபார்க்கிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வாவே  நிறுவனத்துக்குத் தடைவிதித்திருக்கிறது! (கூகிள் முதற் கொண்டு அமெரிக்க நிறுவனங்களும் அதைத்தான் ஆரம்பத்திலிருந்தே செய்து கொண்டிருக்கின்றன என்பதைக் கொஞ்சம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!) ஆஸ்திரேலியா, தைவான் போன்ற நாடுகளும்  கூட Huawei நிறுவனத்தின் தயாரிப்புகளுக்குத் தடை விதித்திருக்கின்றன.
  

மலிவான எலெக்ட்ரானிக்ஸ். செல்போன் தயாரிப்பு, இவை தான் சீனா என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? இந்த 13 நிமிட வீடியோவை அவசியம் பார்த்தே ஆக வேண்டும்.

சீனப் பூச்சாண்டி என்றே எப்போது பார்த்தாலும் பயம் காட்டிக் கொண்டே இருப்பதாக, அலுப்பாக இருக்கிறதா?

சீனா எழுபது! நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. சிறிது சிறிதாகவாவது பார்க்கலாம் இல்லையா? மீண்டும் சந்திப்போம்.   
  

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை