Thursday, December 24, 2020

#பேராசைபெருநஷ்டம் துருக்கியின் எர்துவான் சரிவைச் சந்திக்கிறார்! அடுத்தது சீனாவிலா?

உலகத்தையே கட்டியாளவேண்டும் என்கிற பேராசை நிறையப் பேரைக் கவிழ்த்திருப்பதை வரலாறு திரும்பத் திரும்பச் சொன்னாலும் பாடம் கற்றுக் கொண்டதாக எவரும் இருந்ததில்லை. மிகச் சமீப காலத்தைய வரலாறு கூட ஹிட்லர், முசோலினியின் கனவுகள் எல்லாம் தரை மட்டமானதைத்தான் அழுத்தமாகச் சொல்கிறது. அவ்வளவு ஏன்? சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என்று மாற்ரதட்டிக் கொண்ட பிரிட்டனும் கூட இரண்டு உலகப் போர்களைத் தொடர்ந்து சாம்ராஜ்யத்தைத் தொலைத்ததுடன், கடலோடிக் கொள்ளையடித்த பெரும் செல்வத்தைத் தின்றே தீர்த்தது. 


துருக்கியின் எர்துவான் கூட இஸ்லாமியர்களின் caliph ஆகக் கனவுகண்டு, இருப்பதையும் கோட்டை விடுகிற பரிதாபத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். என்றோ கலைந்துபோன ஒட்டோமான் சாம்ராஜ்யத்தை மீண்டும் உயிர்ப்பிக்க எர்துவான் கண்ட கனவு அற்ப ஆயுளிலேயே கரைந்துபோய்க்கொண்டிருப்பது பேராசை பெருநஷ்டம் என்பதைத்தான் மீண்டுமொரு முறை படிப்பினையாக! முதலாம் உலகப்போர் முடிவில் ஒட்டோமான் சாம்ராஜ்யம் கரைந்து போனது போல, இரண்டாம் உலகப்போர் முடிவில் பிரிட்டனின் சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யமும் காணாமல் போனது.

Hitler dreamt of ruling the world, Mussolini wanted to be the leader of a new Roman empire. Saddam Hussein wanted to be the next Nebuchad Nezzar - the longest-ruling, and the most powerful leader of the neo-Babylonian empire, however, Saddam's life and regime ended tragically..  

Turkey's President Recep Tayyip Erdogan wants to be the Caliph - the ruler of the Muslim world. The Turkey president's stint too seems to be staring at an end.  என்கிறது WION செய்தி.அப்படி என்னதான் நடந்து கொண்டிருக்கிறது துருக்கியில்?

எர்துவான் வீழ்ச்சி தவிர்க்கமுடியாதது என்பதை நடப்பு நிலவரங்கள் தெளிவாகவே காட்டுகின்றன. அரசின் கஜானா அனேகமாகக் காலி! மெக்கா, மதீனா என இரு புனிதத்தலங்களின் காவலனாக சவூதி அரேபியா இஸ்லாமியர்களின் தலைமைப் பீடம் மாதிரி இருந்ததை எர்துவான் மாற்ற முயன்றார். அவர்களது  நம்பிக்கைக்குரிய caliph ஆக நினைத்ததில் ஐரோப்பிய நாடுகள், அமேரிக்கா என எல்லோரையும் பகைத்துக் கொண்டார். இதில் பாகிஸ்தான், மலேசியா என சில சில்லறைகளையும் சேர்த்துக் கொண்டார். இந்தியாவின் உள்விவகாரங்களில் மூக்கை நுழைத்து, காஷ்மீர் விவகாரத்தையும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஐநா சபையில் எழுப்பி, இந்தியாவையும் பகைத்துக் கொண்டார். உள்ளூரில் வாக்குகளுக்காக இஸ்தான்புல் நகரில் ஹேகியா சோபியா என்கிற, ஒருகாலத்தில் கிறித்தவ சர்ச்சாகவும் பின்.னர் மியூசியமாகவும் இருந்த இடத்தை மசூதியாக அறிவித்தார். ஆனால் எதிர்பார்த்த வாக்குகள், மதரீதியான ஆதரவு கிடைக்கவில்லை மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தன.  எர்துவான் கட்சியோடு கூட்டணி வைத்திருந்த இருபெரும் கூட்டாளிகள் பொருளாதார மந்தநிலையைக் காரணம் காட்டி ஒதுங்கி கொண்டதில்  அங்காரா, இஸ்தான்புல் இருபெரும் நகரங்களிலும் எர்துவான் கட்சி தோல்வியைத் தழுவ நேரிட்டது. 2020 ஜூலையில் அவருக்கு முன்னம் வாக்களித்தவர்களில் 18% ஆதரவு மட்டுமே இருந்ததாகக் கருத்துக் கணிப்புகள் சொன்னது கடந்த 5 மாதங்களில் மேலும் சரிவடைந்திருக்கிறது. 

சமீபத்தில் ரஷ்யாவிடமிருந்து S-400 ஏவுகணை எதிர்ப்புத் தொகுதிகளை வாங்க துருக்கி முனைப்பாக இருந்ததால் அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்தது, எர்துவான் கனவுகளின் மீது விழுந்த கடைசி அடியாகவும் இருந்ததில், கதற ஆரம்பித்திருக்கிறார்.

Turkey's currency, the Lira has tanked since the beginning of this year. The Lira has lost nearly 30 per cent of its value against the dollar and more than 30 per cent against the Euro.

According to reports, Turkey is spending far beyond its means. The pandemic has widened the cracks in the Turkish economy. It has exposed a $25 billion hole that the Erdogan government was trying to hide.

சீனத்துச் சண்டியர் ஷி ஜின்பிங்கின் கதை ஒன்றும் வித்தியாசமானதில்லை. எர்துவான் இஸ்லாமியர்களின் முடிசூடா மன்னனாக மட்டும்தான் விரும்பினார். ஆனால் சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் கனவோ இந்த உலகையே கட்டியாள வேண்டுமென்பது. (Tianxia என்ற குறியீட்டுச் சொல்லில் இந்தப்பக்கங்களில் தேடினால் மேலதிகத் தகவல்கள் கிடைக்கும்) 

யானையை ஒரே வாயில் மென்று விழுங்கிவிட வேண்டும் என்று எலி, (சீனாவைப் பெருச்சாளி என்றே வைத்துக் கொள்ளுங்களேன்!) விரும்பினால் முடியுமா? சீரணிக்க முடியுமா என்பது ஆதிக்கக்கனவுகளில் மிதந்து கொண்டிருக்கிற பெருச்சாளிகளுக்குக் காலம் முன்வைத்திருக்கிற கேள்வி!

மீண்டும் சந்திப்போம்.      

Saturday, December 12, 2020

#சீனப்பெருமிதம் CPEC போல வெறும் மாயை தானா?

நண்பர் ஸ்ரீராம் சிலமாதங்களுக்கு முன்னால் ஒரு வாட்சப் வீடியோவை என்னுடன் பகிர்ந்து கொண்டிருந்தார். அதில் ஒரு சீன வங்கி கணக்கில் இருப்பாகக் காட்டிய தங்கக் கட்டிகள் அனைத்துமே போலியானவை என்பது அதன் சாரம்! இங்கே சீனாவைப் பற்றி வெளிவரும் செய்திகளில் எவ்வளவு உண்மை அல்லது நம்பத்தகுந்தவை? எவ்வளவு சதவீதம் காசு கொடுத்து அடிக்கப்படும் வெட்டித் தம்பட்டம்? சீனப் பொருளாதாரம் உண்மையிலேயே காசு கொழிக்கிற ஒன்றுதானா? இந்தக்கேள்விகளுக்கு விடை காண்பது மிகக் கடினமானதுதான்! ஆனால் சில வாரங்களுக்கு முன்னால் Ant Group இன் ஜாக் மா சீன வங்கிகள் பெரும்பாலும் நகை அடகுக்கடைகள் போலத் தான் செயல்படுவதாக ஒரு கருத்தைப் பொதுவெளியில் வைத்தார். சர்வதேச நடைமுறைகள் எதுவுமே பின்பற்றப் படாத, நம்புவதற்கு எந்த அளவுகோலுமே இல்லாத most unprofessional ரகம் என்பதுதான்  ஜாக் மா சொன்னதன் பொருள்.  34 பில்லியன் டாலர் அளவுக்கு பங்குச் சந்தையில் IPO வெளியிட இருந்த Ant Group இன் முயற்சி சீன அரசால் தடுத்து நிறுத்தப்பட்டது. சீன அதிபர் ஷி ஜின்பெங்கின் நேரடித்தலையீடு அதிலிருந்தது என்று செய்திகளும் வெளிவந்ததை நம்மில் எத்தனை பேர் கவனித்திருப்போம்?   


இந்த 48 நிமிட வீடியோவில் முதல் ஒன்பதரை நிமிட தலைப்புச் செய்திகளைத் தள்ளிவிட்டால், 10வது நிமிடத்தில் இருந்து சீன அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் எவையெல்லாம் வாங்கிய கடனைத் திருப்பித் தர முடியாமல் தள்ளாடுகின்றன என விரிவாகச் சொல்வதைப் பார்க்கலாம் சீன அரசு இந்த நிறுவனங்களைக் கைகழுவ முடிவெடுத்து விட்டதாகவே செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.   இவைகளில் முதலீடு செய்திருக்கும் உள்நாட்டு /வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கதி என்ன? 



அதுவும் போக எதியோப்பியாவில் நடக்கும் உள்நாட்டுக் கலவரங்களில் டிக்ரே பகுதியில் #BRI ஒரே பெல்ட் ஒரே ரோடு திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட சீன முதலீடுகள் அநேகமாகக் காணாமல் போன மாதிரித்தான்! அங்கே வேலை செய்துகொண்டிருந்த சீன ஊழியர்கள் 600 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்கள் என்பது செய்தியின் ஒருபக்கம் மட்டுமே! மேலும் விரிவாக இந்தப் பிரச்சினையைத் தெரிந்துகொள்ள 

ஏற்கெனெவே பாகிஸ்தானில் #CPEC இந்த கீழ் செய்யப்பட்ட  செலவுகள், திட்டங்கள் அப்படியே அந்தரத்தில் நிற்கிற கதை தெரியுமில்லையா? பாகிஸ்தானுக்கு இந்தக் கடனை அடைக்கிற சக்தி அறவே இல்லை. மேலும் மேலும் சீனாவிடம் ரொக்கக் கடனுக்காக பாகிஸ்தான் கையேந்திநிற்பது தனிக்கதை. 

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கிரஸ் அடுத்த வருடம் ஜூனில் நடக்க இருக்கிறது. அதில் ஷி ஜின்பெங் என்ன செய்யப்போகிறார்? சேர்மன் மாவோ மாதிரி சேர்மன் ஷி ஜின்பெங் ஆக ஆயுட்காலத் தலைவராகப் போகிறாரா? அதிரடி மாற்றங்கள் ஏதேனும் வருமா என்பது ஒரு பக்கம்! சீன விவகாரங்களில் இதுவரை குழப்பமான நிலைபாட்டையே எடுத்து வந்திருக்கும் ஜோ பைடன் அமெரிக்க அதிபர் பொறுப்பேற்ற பிறகும் அதே மாதிரித் தான் இருக்கப்போகிறாரா?

மனிதர்களால் ஒரு சரியான தீர்வைக் காண முடியாத தருணங்களில் எல்லாம் காலம் தான் முடிவான   தீர்வைக் கொண்டு வந்திருக்கிறது. இந்தியா மட்டும் தான் சீனாவை எதிர்த்து நிற்க வேண்டுமென்று சீனர்களால் வெவ்வேறு வகையில் சீனாவால் பாதிக்கப் பட்ட தெற்காசிய நாடுகளும், அமெரிக்க ஒன்றியமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிற இந்த நிலையில் காலம் மட்டுமே ஒரு சரியான தீர்வைக் கொண்டு வர முடியுமோ என்னவோ?

மீண்டும் சந்திப்போம். 

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை