Monday, January 28, 2019

இந்தியா பாகிஸ்தான்! முட்டலும் மோதலும் தீராதா?

இது எழுதியது இரண்டுமாதங்கள் முன்பு! ஆனால் கேள்வி மட்டும் எழுபதாண்டுகளுக்கும் மேலாய்!
விளையாட்டில் கூட வன்மமும் பகையும் என்பதைத் தாண்டி வர முடியாதா?

#இம்ரான்கான் பேச்சு மேலோட்டமாகப் பார்த்தால் நியாயமாகத் தான் தெரியும்! யார் யாரோ சமாதானத்துடன் வாழும்போது இந்தியா பாகிஸ்தான் இருநாடுகளும் ஒற்றுமையாக வாழ முடியாதா என்று கேட்டதோடு நிறுத்திக் கொண்டிருந்தால் கூடப் பரவாயில்லை பஞ்நடந்த நிகழ்ச்சியில் சாப் காங்கிரஸ் மந்திரியும் முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரருமான #நவ்ஜோத்சிங்சிது இந்தியப் பிரதமரானால் இந்தியாபாகிஸ்தான் ஒற்றுமை நிச்சயமென புகழ்ந்து தள்ளியிருக்கிறார்! #நவ்ஜோத்சிங்சிது பாகிஸ்தானில் ரொம்பப் பிரபலமாம்! அவர் அங்கே எந்தத் தொகுதியில் தேர்தலுக்கு நின்றாலும் ஜெயித்துவிடுவாராம்! இதே மேடையில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஒருவருக்கும் ஏக மரியாதை!

#இம்ரான்கான் இப்படிப் பேசுவதன் காரணத்தைக் கொஞ்சம் ஆராய்வதற்கு முன்னால் எந்த சந்தர்ப்பத்தில் அப்படிப் பேசினார் என்பதைக் கொஞ்சம் பார்த்துவிடலாம்.குர்தாஸ்புர்(இந்தியா) கர்த்தார்புர் (பாகிஸ்தான்) இடையே சீக்கியவழிபாட்டுக்கான பாதை இரு நாடுகளாலும் திறந்து வைக்கப் படுவதன் முன்னோட்டமாக நேற்று பாகிஸ்தான் கர்த்தார்புரில் நடந்த நிகழ்ச்சியில் தான் #இம்ரான்கான் சக கிரிக்கெட் ஆட்டக்காரரை இப்படி வானளாவாப் புகழ்ந்திருக்கிறார். குர்தாஸ்புரில் இருந்து #குருநானக் இயற்கை எய்திய இடமான கர்த்தாபுரில் அவரை அடுத்து வந்த சீக்கிய குரு ஒரு வழிபாட்டுத்தலத்தை உருவாக்கினார். இப்போது பஞ்சாபின் காங்கிரஸ் முதல்வராக இருக்கும் #அமரீந்தர்சிங் கின் பாட்டனார் 1921க்கும் 1929க்கும் இடையில் அங்கே ஒரு #குருத்வாரா காட்டும்படி ஏற்பாடு செய்திருக்கிறார். #அமரீந்தர்சிங் பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களைக் காரணம் காட்டி கர்த்தாபூர் வரும்படி வந்த அழைப்பை நிராகரித்துவிட்டார். ஆனால் அவருடைய #மந்திரிசகா
#நவ்ஜோத்சிங்சிது விழாவின் நாயகனாக்கப் பட்டிருக்கிறார்!
#காங்கிரசின்இரட்டைநிலை நன்றாக வெளிப்பட்டிருக்கிறது.

#இம்ரான்கான் மேலும் பேசுகையில் #காஷ்மீர் ஒன்று மட்டும்தான் இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையிலான பிரச்சினை என்றும் சொல்லியிருக்கிறார்.

#வெறுப்பில்எரியும்மனங்கள் #அவநம்பிக்கை இவைகளோடு பிறந்த நாடு #பாகிஸ்தான் #காஷ்மீர் பிரதேசத்தை ரத்தக்களரி ஆக்கி நாசம் செய்து வருவதும் எதற்கெடுத்தாலும் இந்தியாவோடு போட்டிபோட்டுக் கொண்டிருப்பதிலும் #திவாலானதேசம் இன்று #சமாதானம்பேசுவது வேடிக்கைதான் இல்லையா?

கடந்தகாலங்களோடு ஒப்பிடுகையில் இந்த நான்காண்டுகளில் #பாகிஸ்தான் மிகவும் தனிமைப்பட்டுக் கிடக்கிறது. அமெரிக்க டாலர்களில் கொழுத்து வளர்ந்த #பாகிஸ்தானியராணுவம் இன்று அந்த ஊட்டம் கிடைக்காமல் சோர்ந்திருக்கிறது. இஸ்லாத்தின் பெயரால் #பிரிந்துபோனதேசம் பாகிஸ்தான்! #ஜனங்களுடையகொந்தளிப்பு க்கு முன்னால் மதம் மொழி இவை மட்டும் போதாது என இன்று சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்ள #சமாதானம் பேசுகிறது.


#ராஜீயஉறவுகளும்சிக்கல்களும் #அக்கம்பக்கம் #CPEC #BRI

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை