Saturday, December 12, 2020

#சீனப்பெருமிதம் CPEC போல வெறும் மாயை தானா?

நண்பர் ஸ்ரீராம் சிலமாதங்களுக்கு முன்னால் ஒரு வாட்சப் வீடியோவை என்னுடன் பகிர்ந்து கொண்டிருந்தார். அதில் ஒரு சீன வங்கி கணக்கில் இருப்பாகக் காட்டிய தங்கக் கட்டிகள் அனைத்துமே போலியானவை என்பது அதன் சாரம்! இங்கே சீனாவைப் பற்றி வெளிவரும் செய்திகளில் எவ்வளவு உண்மை அல்லது நம்பத்தகுந்தவை? எவ்வளவு சதவீதம் காசு கொடுத்து அடிக்கப்படும் வெட்டித் தம்பட்டம்? சீனப் பொருளாதாரம் உண்மையிலேயே காசு கொழிக்கிற ஒன்றுதானா? இந்தக்கேள்விகளுக்கு விடை காண்பது மிகக் கடினமானதுதான்! ஆனால் சில வாரங்களுக்கு முன்னால் Ant Group இன் ஜாக் மா சீன வங்கிகள் பெரும்பாலும் நகை அடகுக்கடைகள் போலத் தான் செயல்படுவதாக ஒரு கருத்தைப் பொதுவெளியில் வைத்தார். சர்வதேச நடைமுறைகள் எதுவுமே பின்பற்றப் படாத, நம்புவதற்கு எந்த அளவுகோலுமே இல்லாத most unprofessional ரகம் என்பதுதான்  ஜாக் மா சொன்னதன் பொருள்.  34 பில்லியன் டாலர் அளவுக்கு பங்குச் சந்தையில் IPO வெளியிட இருந்த Ant Group இன் முயற்சி சீன அரசால் தடுத்து நிறுத்தப்பட்டது. சீன அதிபர் ஷி ஜின்பெங்கின் நேரடித்தலையீடு அதிலிருந்தது என்று செய்திகளும் வெளிவந்ததை நம்மில் எத்தனை பேர் கவனித்திருப்போம்?   


இந்த 48 நிமிட வீடியோவில் முதல் ஒன்பதரை நிமிட தலைப்புச் செய்திகளைத் தள்ளிவிட்டால், 10வது நிமிடத்தில் இருந்து சீன அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் எவையெல்லாம் வாங்கிய கடனைத் திருப்பித் தர முடியாமல் தள்ளாடுகின்றன என விரிவாகச் சொல்வதைப் பார்க்கலாம் சீன அரசு இந்த நிறுவனங்களைக் கைகழுவ முடிவெடுத்து விட்டதாகவே செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.   இவைகளில் முதலீடு செய்திருக்கும் உள்நாட்டு /வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கதி என்ன? 



அதுவும் போக எதியோப்பியாவில் நடக்கும் உள்நாட்டுக் கலவரங்களில் டிக்ரே பகுதியில் #BRI ஒரே பெல்ட் ஒரே ரோடு திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட சீன முதலீடுகள் அநேகமாகக் காணாமல் போன மாதிரித்தான்! அங்கே வேலை செய்துகொண்டிருந்த சீன ஊழியர்கள் 600 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்கள் என்பது செய்தியின் ஒருபக்கம் மட்டுமே! மேலும் விரிவாக இந்தப் பிரச்சினையைத் தெரிந்துகொள்ள 

ஏற்கெனெவே பாகிஸ்தானில் #CPEC இந்த கீழ் செய்யப்பட்ட  செலவுகள், திட்டங்கள் அப்படியே அந்தரத்தில் நிற்கிற கதை தெரியுமில்லையா? பாகிஸ்தானுக்கு இந்தக் கடனை அடைக்கிற சக்தி அறவே இல்லை. மேலும் மேலும் சீனாவிடம் ரொக்கக் கடனுக்காக பாகிஸ்தான் கையேந்திநிற்பது தனிக்கதை. 

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கிரஸ் அடுத்த வருடம் ஜூனில் நடக்க இருக்கிறது. அதில் ஷி ஜின்பெங் என்ன செய்யப்போகிறார்? சேர்மன் மாவோ மாதிரி சேர்மன் ஷி ஜின்பெங் ஆக ஆயுட்காலத் தலைவராகப் போகிறாரா? அதிரடி மாற்றங்கள் ஏதேனும் வருமா என்பது ஒரு பக்கம்! சீன விவகாரங்களில் இதுவரை குழப்பமான நிலைபாட்டையே எடுத்து வந்திருக்கும் ஜோ பைடன் அமெரிக்க அதிபர் பொறுப்பேற்ற பிறகும் அதே மாதிரித் தான் இருக்கப்போகிறாரா?

மனிதர்களால் ஒரு சரியான தீர்வைக் காண முடியாத தருணங்களில் எல்லாம் காலம் தான் முடிவான   தீர்வைக் கொண்டு வந்திருக்கிறது. இந்தியா மட்டும் தான் சீனாவை எதிர்த்து நிற்க வேண்டுமென்று சீனர்களால் வெவ்வேறு வகையில் சீனாவால் பாதிக்கப் பட்ட தெற்காசிய நாடுகளும், அமெரிக்க ஒன்றியமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிற இந்த நிலையில் காலம் மட்டுமே ஒரு சரியான தீர்வைக் கொண்டு வர முடியுமோ என்னவோ?

மீண்டும் சந்திப்போம். 

2 comments:

  1. I really hope that this does not come true! Another pandemic from China will wreck the world!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் பந்து!

      டெமாக்ரட்டுகள் அதிலும் குறிப்பாக ஜோ பைடன் மீது எனக்கு அறவே நம்பிக்கையில்லை. ஐரோப்பிய ஒன்றியம் சீன முதலீடுகளுக்காக நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு அலைகிறது. ஈமானுவேல் மாக்ரோன் மட்டுமே கொஞ்சம் வித்தியாசமாகச் செயல்படுகிறார்.

      இந்தச் சூழலில் சீனாவை தனித்தே நின்று சமாளிக்க வேண்டிய நிலைமையில் இருக்கிறது. இன்னொரு pandemic...! இப்போதிருக்கிற அரசியல் சூழலில், சீனா இன்னொரு வைரஸைத் தள்ளி விடுமா விடமுடியுமா என்பது மில்லியன் டாலர் பைசுக் கேள்வி.

      Delete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை