உலகத்தையே கட்டியாளவேண்டும் என்கிற பேராசை நிறையப் பேரைக் கவிழ்த்திருப்பதை வரலாறு திரும்பத் திரும்பச் சொன்னாலும் பாடம் கற்றுக் கொண்டதாக எவரும் இருந்ததில்லை. மிகச் சமீப காலத்தைய வரலாறு கூட ஹிட்லர், முசோலினியின் கனவுகள் எல்லாம் தரை மட்டமானதைத்தான் அழுத்தமாகச் சொல்கிறது. அவ்வளவு ஏன்? சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என்று மாற்ரதட்டிக் கொண்ட பிரிட்டனும் கூட இரண்டு உலகப் போர்களைத் தொடர்ந்து சாம்ராஜ்யத்தைத் தொலைத்ததுடன், கடலோடிக் கொள்ளையடித்த பெரும் செல்வத்தைத் தின்றே தீர்த்தது.
துருக்கியின் எர்துவான் கூட இஸ்லாமியர்களின் caliph ஆகக் கனவுகண்டு, இருப்பதையும் கோட்டை விடுகிற பரிதாபத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். என்றோ கலைந்துபோன ஒட்டோமான் சாம்ராஜ்யத்தை மீண்டும் உயிர்ப்பிக்க எர்துவான் கண்ட கனவு அற்ப ஆயுளிலேயே கரைந்துபோய்க்கொண்டிருப்பது பேராசை பெருநஷ்டம் என்பதைத்தான் மீண்டுமொரு முறை படிப்பினையாக! முதலாம் உலகப்போர் முடிவில் ஒட்டோமான் சாம்ராஜ்யம் கரைந்து போனது போல, இரண்டாம் உலகப்போர் முடிவில் பிரிட்டனின் சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யமும் காணாமல் போனது.
Hitler dreamt of ruling the world, Mussolini wanted to be the leader of a new Roman empire. Saddam Hussein wanted to be the next Nebuchad Nezzar - the longest-ruling, and the most powerful leader of the neo-Babylonian empire, however, Saddam's life and regime ended tragically..
Turkey's President Recep Tayyip Erdogan wants to be the Caliph - the ruler of the Muslim world. The Turkey president's stint too seems to be staring at an end. என்கிறது WION செய்தி.அப்படி என்னதான் நடந்து கொண்டிருக்கிறது துருக்கியில்?
எர்துவான் வீழ்ச்சி தவிர்க்கமுடியாதது என்பதை நடப்பு நிலவரங்கள் தெளிவாகவே காட்டுகின்றன. அரசின் கஜானா அனேகமாகக் காலி! மெக்கா, மதீனா என இரு புனிதத்தலங்களின் காவலனாக சவூதி அரேபியா இஸ்லாமியர்களின் தலைமைப் பீடம் மாதிரி இருந்ததை எர்துவான் மாற்ற முயன்றார். அவர்களது நம்பிக்கைக்குரிய caliph ஆக நினைத்ததில் ஐரோப்பிய நாடுகள், அமேரிக்கா என எல்லோரையும் பகைத்துக் கொண்டார். இதில் பாகிஸ்தான், மலேசியா என சில சில்லறைகளையும் சேர்த்துக் கொண்டார். இந்தியாவின் உள்விவகாரங்களில் மூக்கை நுழைத்து, காஷ்மீர் விவகாரத்தையும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஐநா சபையில் எழுப்பி, இந்தியாவையும் பகைத்துக் கொண்டார். உள்ளூரில் வாக்குகளுக்காக இஸ்தான்புல் நகரில் ஹேகியா சோபியா என்கிற, ஒருகாலத்தில் கிறித்தவ சர்ச்சாகவும் பின்.னர் மியூசியமாகவும் இருந்த இடத்தை மசூதியாக அறிவித்தார். ஆனால் எதிர்பார்த்த வாக்குகள், மதரீதியான ஆதரவு கிடைக்கவில்லை மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தன. எர்துவான் கட்சியோடு கூட்டணி வைத்திருந்த இருபெரும் கூட்டாளிகள் பொருளாதார மந்தநிலையைக் காரணம் காட்டி ஒதுங்கி கொண்டதில் அங்காரா, இஸ்தான்புல் இருபெரும் நகரங்களிலும் எர்துவான் கட்சி தோல்வியைத் தழுவ நேரிட்டது. 2020 ஜூலையில் அவருக்கு முன்னம் வாக்களித்தவர்களில் 18% ஆதரவு மட்டுமே இருந்ததாகக் கருத்துக் கணிப்புகள் சொன்னது கடந்த 5 மாதங்களில் மேலும் சரிவடைந்திருக்கிறது.
சமீபத்தில் ரஷ்யாவிடமிருந்து S-400 ஏவுகணை எதிர்ப்புத் தொகுதிகளை வாங்க துருக்கி முனைப்பாக இருந்ததால் அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்தது, எர்துவான் கனவுகளின் மீது விழுந்த கடைசி அடியாகவும் இருந்ததில், கதற ஆரம்பித்திருக்கிறார்.
Turkey's currency, the Lira has tanked since the beginning of this year. The Lira has lost nearly 30 per cent of its value against the dollar and more than 30 per cent against the Euro.
According to reports, Turkey is spending far beyond its means. The pandemic has widened the cracks in the Turkish economy. It has exposed a $25 billion hole that the Erdogan government was trying to hide.
சீனத்துச் சண்டியர் ஷி ஜின்பிங்கின் கதை ஒன்றும் வித்தியாசமானதில்லை. எர்துவான் இஸ்லாமியர்களின் முடிசூடா மன்னனாக மட்டும்தான் விரும்பினார். ஆனால் சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் கனவோ இந்த உலகையே கட்டியாள வேண்டுமென்பது. (Tianxia என்ற குறியீட்டுச் சொல்லில் இந்தப்பக்கங்களில் தேடினால் மேலதிகத் தகவல்கள் கிடைக்கும்)
யானையை ஒரே வாயில் மென்று விழுங்கிவிட வேண்டும் என்று எலி, (சீனாவைப் பெருச்சாளி என்றே வைத்துக் கொள்ளுங்களேன்!) விரும்பினால் முடியுமா? சீரணிக்க முடியுமா என்பது ஆதிக்கக்கனவுகளில் மிதந்து கொண்டிருக்கிற பெருச்சாளிகளுக்குக் காலம் முன்வைத்திருக்கிற கேள்வி!
மீண்டும் சந்திப்போம்.
இதைத் தான்
ReplyDeleteகெடுவான் கேடு நினைப்பான் -
விநாச காலத்தில் விபரீத புத்தி .. என்றெல்லாம் சொல்லி வைத்தார்கள் நம் முன்னோர்கள்...
விதைத்ததைத்தான் அறுவடை செய்ய முடியுமென்கிற அனுபவ ஞானம் இல்லஸ்ப்ப்ஸ்க்க்ஸ்ங்களிலும் உண்டு துரை செல்வராஜூ சார்! ஆனால் ஆதிக்க விஸ்தரிப்பு என்கிற பேராசை அதையெல்லாம் தூரத்தள்ளிவிட்டு தலைவிரித்தாடும் என்பதையும் வரலாறு சொல்கிறதே!
Delete