Friday, February 12, 2021

#டொனால்ட்ட்ரம்ப் தகுதிநீக்க விசாரணை! #ராஜ்நாத்சிங் அறிக்கை! #சேகர்குப்தா !

அமெரிக்க டெமாக்ரட்டுகளின் கோமாளித்தனங்களில் மிகவும் உறுத்தலாக இருப்பது டொனால்ட் ட்ரம்ப் பதவி விலகிய பிறகும் கூட கடு, ம் வன்மத்துடன் இரண்டாவது முறையாக தகுதி நீக்கம் செய்கிற தீர்மானம், குற்றச் சாட்டுக்களை வரையறுத்து காங்கிரசில் நிறைவேற்றி செனெட்டுக்கு அனுப்பியிருப்பது 

வீடியோ 6 நிமிடம் 

இங்கே இதை வாசிக்கவரும் நண்பர்களுக்காக தகுதி நீக்கம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்ப.தைச் சுருக்கமாகச் சொல்லியாக வேண்டும்! அமெரிக்க காங்கிரஸ் என்பது நம்மூர் மக்களவை மாதிரி! என்ன என்ன குற்றச்சாட்டுகளின் பேரில் தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதைதீர்மானம்  வரையறுத்து, அதை செனேட் சபைக்கு ((நம்மூர் மாநிலங்களவை மாதிரி) அனுப்புகிற அதிகாரம் மட்டுமே உண்டு. அங்கே impeachment தீர்மானம் மெஜாரிடி உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டதால் மட்டுமே தகுதிநீக்கம் செய்யப்பட்டதாகி விடாது. செனேட் சபை உறுப்பினர்கள் ஜூரர்களாகவும், உச்ச நீதிமன்றத் தலைமைநீதிபதி, விசாரணை நீதிபதியாகவும் இருந்து ஒரு நீதிமன்றமாகவே செயல்பட்டு, வழக்கு விசாரணை நடந்து,  வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டுபங்கு செனேட் உறுப்பினர்கள் ஆதரித்து  வாக்களித்தால் மட்டுமே தகுதி நீக்கம் நிறைவேறும். டெமாக்ரட்டுகளுக்கு இது தெரியாதா? காங்கிரசின் ஸ்பீக்கர் நான்சி பெலோசி இது நிறைவேறாது என்று தெரியும் என வெளிப்படையாகவே சொன்னார் 

ஆனாலும் டொனால்ட் ட்ரம்ப் மீதான பயம், அவர் மறுபடியும் அதிபர் பதவிக்குப் போட்டியிடவே கூடாது என்கிற வன்மத்தில் டெமாக்ரட்டுகள் 16 மணிநேர விசாரணையில் ஒரு முழுமையான சாட்சியம் எதுவும் இல்லாமலேயே முடித்திருக்கிறார்கள் அடுத்து ட்ரம்ப் தரப்பு வாதங்கள், விசாரணை நடக்க வேண்டும்.. நாட்டைப் பிளவுபடுத்தி விட்டார் ட்ரம்ப் என்று கூவிக் கொண்டே டெமாக்ரட்டுகள் அந்த வேலையைத் தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.


2020 ஏப்ரல் மாதத்தில் இருந்தபடியே சீனா, இந்தியா இரு நாடுகளும் படைகளை வைத்திருக்கவேண்டும் என இரு தரப்பும் ஒப்புக்கொண்டு, அதன்படி படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் அறிவித்ததில், வழக்கம் போல ராகுல் காண்டி, விஷயத்தைப் புரிந்து கொள்ளாமலேயே பிரதமர் மோடியைக் கோழை என்று ஏசியிருக்கிறார்.     

 


சேகர் குப்தா நேற்றைக்குப் பேசியது. வீடியோ 26 நிமி. ரஷ்யாவின் இஸ்வேஸ்தியாவோடு Tass செய்தி நிறுவனத்தைப் போட்டுக் குழப்பிக்கொண்டது ஒரு சின்னச் சறுக்கல்.  ஆனாலும் ராஜ்நாத் சிங்கின் அறிக்கையைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகவே சொல்கிறார்.  

இந்த விவகாரத்தில் ராகுல் காண்டி மாதிரி முழு  மங்குணியாக இல்லாமல் கொஞ்சம் விவரங்களைத் தெரிந்து கொண்டு பேசலாம் என்று நினைக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை