Showing posts with label மத்திய கிழக்கு. Show all posts
Showing posts with label மத்திய கிழக்கு. Show all posts

Sunday, May 16, 2021

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே என்னதான் பிரச்சினை?

இஸ்ரேல் உருவான விதத்தை, இரண்டாம் உலகப்போர் முடிவில் நாஜிகளால் வதைக்கப் பட்ட யூதர்கள் ஜெர்மனி, போலந்து, ரஷ்யா முதலான நாடுகளிலிருந்து புலம்பெயர  தங்களுக்கென்று ஒரு இடத்தைத் தேடியதில் இருந்து ஆரம்பிக்கலாம். அவர்களுடைய பூர்வீகமான இஸ்ரவேல், பாலஸ்தீனமாக இருந்ததைக் கண்டு தாயகம் திரும்ப ஆரம்பித்தார்கள் என்று சுருக்கமாகச் சொல்லிவிடலாம் தான்! ஆனால் கச்சா எண்ணெய் அரசியலும், பிரிட்டனின் குள்ளநரித்தனமும், கிறித்தவ அஃகுறும்புமாகச் சேர்ந்து இப்போதைய பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் வித்தாக இருக்கிறது.

யூதர்களும் பாலஸ்தீனியர்களும் ஏன் தொடர்ந்து சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறார்கள் என்பதற்கான காரணம் இந்த ஆறு நிமிட வீடியோவில், பிபிசி தமிழ் சொல்கிற மாதிரி எல்லாம் இல்லை. உலகப் போர் முடிந்தபின்னாலும் கூட, பிரிட்டன் தன்னுடைய ஆதிக்கத்தை விடுவதாயில்லை. கூடவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஒருபுறம், கலீஃபா காலத்தைய இஸ்லாமிய சாம்ராஜ்யக் கனவுகளில் இருந்த அரபு நாடுகளும் இவர்களுடன் ஒட்டிக்கொண்ட சோவியத் ஒன்றியமுமாக மறுபுறம் என்று ஆட்டம் ஆரம்பித்ததில், யூதர்களுக்கும் அரபிகளுக்குமான சண்டை என்றானது. 2வது உலகப்போருக்கு முந்தைய வரலாற்றைப் பார்த்தால் கிறித்தவர்களுக்கும் அரபி முஸ்லிம்களுக்கும் நிறைய சண்டைகள் இருந்தது, ஆனால் யூதர்கள் முஸ்லிம்களுக்கிடையே சண்டை ஒருபோதுமிருந்ததில்லை. 

எப்பொழுதுமே மேற்காசியாவில் இஸ்லாமியருக்கு ஒரு தலமை இப்பொழுது இருந்ததில்லை ஆனால் முன்பு இருந்தது கலீபாக்கள், அரசர்கள், சுல்தான்கள் என அவர்கள் வலுவாய் இருந்தவரை சிக்கல் இல்லை, பின்னாளில் சுமார் 400 வருட காலம் ஆட்டோமன் துருக்கியர் அப்படி இருந்தனர்

முதல் உலகபோரில் அவர்கள் வீழ்ச்சி அடைந்தபின்பு அதை தொடர்ந்து அரேபியாவில் எண்ணெய் கண்டறிய பட்ட பின்பே இவ்வளவு குழப்பங்கள்,

வரலாறு ஒரு உண்மையினை சொல்கின்றது, அதை நீங்களும் நானும் ஒப்புகொள்ளத்தான் வேண்டும்

நபிகள் காலம் முதல் ஆட்டோமன் காலம் வரை பாலஸ்தீனத்தில் யூதர்கள் வாழ்ந்தனர், அரேபியாவில் வாழ்ந்தனர், ஆனால் ஒரு யூதனும் தாக்கபடவில்லை இஸ்லாமியர் ஆட்சியில் யூதர்கள் பாதுகாப்பாகவே இருந்தனர்

ஆனால் கிறிஸ்தவ தேசங்களான ஸ்பெயின் முதல் ரஷ்யா வரை அவர்களை போட்டு சாத்தினார்கள், கடைசியில் போட்டு மிதித்து குத்தாட்டம் ஆடியவன் ஹிட்லர் அவனுக்கு முன் ஆடியவன் கிறிஸ்தவ புரட்சியாளன் மார்ட்டின் லுத்தர் ஆக இஸ்லாமிய ஆட்சியில் யூதர்கள் பாதுகாப்பாக இருந்ததும், இப்பொழுது யூதர்கள் ஆட்சியில் இஸ்லாமியர் கொல்லபடுவதெல்லாம் வரலாற்று முரண்

ஆட்டோமன் துருக்கியருக்கு பின் வலுவான இஸ்லாமிய தலைமை இல்லை, அந்த இடத்தை துருக்கியின் கமால் பாட்சா கூட முயற்சிக்கவில்லை.ஆனால் 1960களில் எகிப்தின் கர்ணல் நாசர் அதை கைபற்றினார், அரபுக்களின் தலைவராய் இருந்தார் ஆனால் அமெரிக்கா இஸ்ரேலை முன்னுறுத்தி செய்த விண்வெளி போரில் அவர் தோற்றார்.

அவருக்கு பின் சதாம் உசேனுக்கு அந்த வாய்ப்பு இருந்தது, ஆனால் எண்ணெய் பணத்துக்கு ஈராக் பணம், எண்ணெய் பணம் மக்களுக்கே என அவர் எழுந்தது பல அரேபிய அரசர்களுக்கு பிடிக்கவில்லை

அதே நேரம் கொமேனியின் எழுச்சி ஷியா சன்னி மோதலை உக்கிரமாக்கி விவகாரம் திசைமாறி சதாம் வீழ்த்தபட்டார்.லிபிய அதிபர் கடாபிக்கு அந்த அரபு தலைவர் ஆசை வந்தது, அவரையும் "புரட்சி" என சொல்லி ஒழித்து கட்டினார்கள்

இப்போது அரேபியாவில் வலுவான தலைமை  ஈரான் ஆனால் அவர்களிடம் பணமில்லை வலிமையான ஆயுதமில்லை. சவுதி மிக சக்திவாய்ந்த எண்ணெய் வளநாடு, ஆனால் இஸ்ரேலுடன் ஒரு ரகசிய புரிதலில் உள்ளது. இப்போதைக்கு ஒரு பலமான படைகொண்ட நாடு நிச்சயம் துருக்கி, நேட்டோவின் நாடு ஐரோப்பிய ஒன்றிய நாடு என பலம் அதிகம்.எர்டோகன் இஸ்லாமிய தலைவராக பழைய ஆட்டோமன் சாம்ராஜ்ய வாரிசாக கருதிகொள்கின்றார், துருக்கியின் ஆட்சியில் நீடிக்க மக்கள் ஆதரவை பெற அவருக்கு இது நல்ல வாய்ப்பு. உண்மையில் மக்கள் அவரை கொண்டாடுகின்றார்கள், அவர் சொல்லுக்கு துருக்கி கட்டுபடுகின்றது

காஷ்மீர் முதல் பல விஷயங்களில் அவர் இஸ்லாமிய நலன் பேசுகின்றார், இஸ்லாமுக்கு எதிரான நாடுகளை துணிச்சலுடன் எதிர்க்கின்றார்.ஆர்மேனியா அசர்பஜான் மோதலில் ரஷ்யாவினை தாண்டி அசர்பைஜான் எனும் இஸ்லாமிய நாட்டுக்கு வெற்றியினை கொடுத்தது துருக்கி. உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிராக நிற்கும் நாடு துருக்கி.சிரியாவில் அமெரிக்காவின் கனவு நிறைவேறாமல் இருக்க மிக பெரிய தடையாக தன் ராணுவத்தை நிறுத்தியிருப்பது துருக்கி.உய்குர் விவகாரத்தில் சீனாவினை கண்டித்த நாடு துருக்கி, பிரான்ஸ் அரசின் இஸ்லாமிய விரோதத்தை கண்டித்து மொத்தமாக பொங்கி எழுந்த நாடு துருக்கி.

அந்த துருக்கியின் எர்டோகன் பாலஸ்தீனத்துக்கு தன் துருக்கிய படைகள் செல்லும் என அறிவித்துவிட்டார், இதற்கு துருக்கி மக்களிடம் பெரும் ஆதரவு கிடைத்தாயிற்று.எகிப்தின் கர்ணல் நாசருக்கு அடுத்து இந்த அறிவிப்பை எழுப்பிய ஒரே தலைவர் அவர்தான். அல் அக்சா மசூதியினை காக்க துருக்கிய படைகள் அமைதி படையாக செல்ல தயார் என அவர் அறிவித்திருப்பது உலக நாடுகளை யோசிக்க வைத்திருக்கின்றது, இதுவரை அமைதிபடை அங்கு இல்லை.

ஆனால் துருக்கி அறிவித்ததே தவிர படை அனுப்ப முடியாது, காரணம் அது பல சிக்கல்கள்.முதலில் அந்த அல் அக்சா மசூதியின் அறங்காவலர் ஜோர்டான் மன்னர், அவர் இன்னும் வாய் திறக்கவில்லை. இரண்டாவது ஐ.நா சபை இதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் அவர்களும் அமைதி. இஸ்ரேலை மீறி அல் அக்சா பக்கம் ஐ.நா அமைதி படை அல்லது இஸ்லாமிய அமைதிபடை வருவது எவ்வளவு சாத்தியம் என்பது தெரியவில்லை

இவ்வளவு சீரியசான விஷயத்தை இஸ்ரேல் சும்மா விடுமா? அது நேற்றே அலறலை ஆரம்பித்துவிட்டது

"பாலஸ்தீன கலவர வன்முறைக்கும் தீவிரவாதிகளின் ஆயுதங்களுக்கும் துருக்கிதான் பொறுப்பு, அவர்கள்தான் தூண்டி விடுகின்றார்கள், எங்களிடம் ஆதாரம் உண்டு" விஷயம் சீரியசாகின்றது, துருக்கி அதிபர் ஒரு இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவராக எழ கூடாது என வல்லரசுகள் கண் வைக்கின்றன‌

நாசர் முதல் கடாபி வரை என்ன நடந்ததோ அதையே எர்டோகனுக்கும் என்பது போல் முறைக்கின்றன, ஆனால் எர்டோகன் இதை அறியாதவர் அல்ல‌.

நேட்டோவில் இருந்து பிரியுமானால் துருக்கி மிகபெரிய பொருளாதார சரிவை சந்திக்கும், ராணுவ பலமும் கிடைக்காது என்பதும் இன்னொரு கோணம்.எப்படியோ பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பெரும் குரல் கேட்க தொடங்கிவிட்டது, ஆனால் எர்டோகனால் வெல்ல முடியுமா என்பது பெரும் கேள்வி.

லிபிய கடாபியினை மக்கள்  தலைக்கு மேல் வைத்து கொண்டாடினார்கள், அவ்வளவு அழகான ஆட்சி அவருடையது, லிபியா பிரான்ஸுக்கு நிகரான பொருளாதார பலம் கொண்டிருந்தது.அனால் அந்த மக்களை வைத்தே அவரை விரட்டினார்கள். பாலஸ்தீனத்தில் தலையிட்டிருப்பதால் எர்டோகனோ இல்லை துருக்கியோ சிக்கல்களை சந்திக்க போவது நிஜம், 

ஆனால் அதையும் மீறிய தெய்வம் என ஒன்று உண்டல்லவா? அந்த தெய்வம் எது நியாயமோ, எது தர்மமோ, அதை செய்யட்டும்.யாருடைய கண்ணீரும் ரத்தமும் அனுதினமும் சிந்தபடுகின்றதோ அதை நிறுத்தட்டும்

சமநேரத்திலேயே இன்னொரு பகிர்வையும் ஸ்டேன்லி ராஜன் முகநூலில் பகிர்ந்திருக்கிறார்:  

ஒருவனுக்கு தலைவிதி நன்றாக இருந்தால் அவனுக்கு சூழல் ஒத்துழைக்குமாம் இது சாணக்கியன் சொன்னது, அலெக்ஸாண்டர் வாழ்வில் இருந்து தமிழக கருணாநிதி வாழ்வு வரை இதை காணலாம் இப்பொழுது அந்த யோகம் புட்டீனுக்கு.அவருக்கு உக்ரைன் பக்கம் மிகபெரிய சிக்கல் இருந்தது, அது இன்னமும் நீடிக்கின்றது. நேட்டோ என 29 நாடுகளை தனியே எதிர்க்கின்றது ரஷ்யா இந்த 29ல் துருக்கியும் உண்டு.இந்நிலையில்தான் வாய்ப்பு பாலஸ்தீனத்தில் ரஷ்யாவுக்கு வாய்ப்பு கிடைத்தது, தன் எல்லையில் நடந்த பரபரப்பை இஸ்ரேலிய எல்லைக்கு நகர்த்திவிட்டார் புட்டீன்

ஐ.நாவில் கடும் சத்தம், அவசர மசோதா என பந்தை அப்பக்கம் தள்ளி துருக்கியினை உள்ளே இழுத்து போட்டு ஆடுகின்றது ரஷ்யா. துருக்கியின் அமைவிடம் இலங்கை போல முக்கியமானது, கருங்கடல் மத்திய தரைகடல் அசோர் கடல் என ரஷ்யாவின் அருகிருக்கும் கடல் எல்லாம் அவர்களுடைய ஏரியா.நேட்டோ என துருக்கியினை சேர்த்து ஐரோப்பா படியளக்க அதுதான் காரணம்

துருக்கி சர்வதேச அமைதிபடை அல்லது இஸ்லாமிய படை ஜெருசலேமுக்கு செல்ல வேண்டும் என சொல்வதில் ரஷ்ய கரங்களும் இல்லாமல் இல்லை.தன் காலடியில் அமெரிக்கா தீயினை பற்றவைக்க முயல, இஸ்ரேல் பக்கம் தீயினை வைத்துவிட்டு ஒன்றும் அறியாதவர் போல் அமர்ந்திருக்கின்றார் புட்டீன்

காற்று இப்பொழுது அவருக்கு சாதகம், சிரியாவில் கடுமையாக நிலைகொண்ட ரஷ்யா இஸ்ரேலுக்கு மிகபெரிய சவால்.சர்வதேச அரசியல் சதுரங்கம் சுவாரஸ்யமாகத்தான் சென்று கொண்டிருகின்றது

இரண்டும் கொஞ்சம் முரண்படுகிற மாதிரித்தான் இருக்கிறது இல்லையா? ஒருவாரமாக இதுதொடர்பாக நிறைய வாசித்துக்கொண்டிருக்கிற எனக்கே இதை எங்கிருந்து ஆரம்பிப்பது, முடிப்பது என்பதில் ஏகப்பட்ட குழப்பம்!   

ஆனால் விஷயம் சிம்பிள். நீயா நானா என அமெரிக்கா+ ஒருபுறமும் ரஷ்யா மறுபுறமுமாக இந்தப் பிரச்சினையை வைத்து FootBall ஆடிக்கொண்டு இருப்பதில் உதைபந்தாக இருப்பது நிச்சயமாக இஸ்ரேல் இல்லை. அவர்கள் விளையாட்டே தனி!

இன்னும் கொஞ்சம் விவரங்களோடு தொடர்வோம்.  

Saturday, May 15, 2021

இஸ்ரேலிடம் ஒரண்டை இழுக்கும் ஹமாஸ்! மத்திய கிழக்கில் அமைதியைக்குலைப்பது யார்?

பாலஸ்தீனிய மக்களின் சோகம் முடிவே இல்லாமல் தொடர்வதற்கு, அவர்களுடைய ரட்சகனாக சொல்லிக் கொள்ளும் ஹமாஸ் தீவிரவாத இயக்கமே முழு முதல் காரணமாக இருப்பதை நம்மில் எத்தனை பேர் புரிந்து வைத்திருக்கிறோம்? இஸ்ரேல் பாலஸ்தீனியர் இடையே ஆன பிரச்சினையை நம்மூர் செகுலர், லிபரல்களிடம் அல்லாது இணையத்தில் தேடிப்பார்த்தாலே ஒருவாறு புரிந்து கொள்ள முடியும்.   


ரம்ஜான் நெருங்கும் நேரமாகப்பார்த்து Gaza பகுதியில் இருந்து இஸ்ரேலை வம்புச்சண்டைக்கு ஹமாஸ் இழுப்பது ஒன்றும் புதிய செய்தி அல்ல.5, 6 நாட்களுக்கு முன் இஸ்ரேல் மீது சுமார் 2000 ராக்கெட்டுகள் Gaza பகுதியில் இருந்து வீசப்பட்டதில் பெரும்பாலானவை Iron Dome என்கிற மூன்றடுக்குப் பாதுகாப்பு அமைப்பால் தடுக்கப்பட்டுவிட்டன. அதை மீறியும் சில ராக்கெட் வெடி குண்டுகள் இஸ்ரேலிய எல்லைக்குள் விழுந்து சேதம் விளைவித்திருக்கின்றன . பதிலுக்கு இஸ்ரேல் Gaza பகுதியில் ஹமாஸ் இயக்கத்தின் கட்டடம் ஒன்றைத் தகர்த்ததில் ஹமாஸ் இயக்கத்தின் பெரியதலைகள் சில உருண்டதோடு கதை முடியவில்லை. இஸ்ரேலை அழிப்பது தான் தங்களுடைய குறிக்கோள் என்று நீண்டநாட்களாகவே அறிவித்துச் செயல்படுகிற ஹமாஸ் இயக்கத்தை அடியோடு களைவதுதான் தங்களுடைய தலையாய பணி என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு தெரிவித்திருக்கிறார். 


அல் ஜசீரா, அசோசியேடட் பிரஸ் என்று பல ஊடகங்கள் காசா பகுதியில் இயங்கிவந்த கட்டடத்தை  இன்று இஸ்ரேல் முன்னவிப்புச் செய்து தகர்த்த காட்சி மேலே ஒருநிமிட வீடியோவாக. Gazaவில் என்ன நடக்கிறது என்பதை இனி உலகம் தெரிந்துகொள்ள முடியாது என  அசோசியேடட் பிரஸ் சொல்லியிருப்பதாக ஒரு செய்தி. Responding to the development, AP said in a statement: “This is an incredibly disturbing development. We narrowly avoided a terrible loss of life. A dozen AP journalists and freelancers were inside the building and thankfully we were able to evacuate them in time.” இவ்வளவு சொன்னவர்கள், இஸ்ரேலி ராணுவம் முன் அறிவிப்புக் கொடுத்து, பாதுகாப்பாக வெளியேறும்படி சொன்னதையும் சேர்த்தே சொல்லியிருக்கலாம்!

Replying to
According to reports, people inside the building were given one hour's notice to evacuate. Multiple roof knocks were fired ahead of the strike that demolished the building. Associated Press reports that there has been no immediate explanation for why the building was targeted.

மத்தியகிழக்கில் அமைதியை நிலைநாட்ட  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒரு சிறப்பு தூதரை அனுப்பி வைத்திருக்கிறாராம்! 

In recent days, the Biden administration has dispatched an envoy to the Middle East and engaged in a flurry of back-channel diplomacy to respond to the surge in violence between Israel and Hamas militants in the Gaza Strip. The big question is: Does the United States have the appetite, or even the political maneuvering room, to be an honest broker? ஜோ பைடன் அமைதியை நிலைநாட்ட என்ன செய்து விட முடியுமாம் என்ற கேள்வியோடு ForeignPolicy தளத்தில் ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது. 


அல் ஜசீராவின் ஒருமணிநேர ஒப்பாரி

மத்தியகிழக்கில் என்ன நடக்கிறது என்பதைத் தொடர்ந்து பார்ப்போம். 

Wednesday, March 31, 2021

சீனா நாட்டாமை செய்ய அமெரிக்காவே வலிந்து இடம் கொடுக்கிறதா?

மேற்கு ஆசியாவில் சீனா தனது பணபலத்தை வைத்து நுழைந்திருக்கிறது. பாரக் ஒபாமா அதிபராக இருந்த நாட்களில் ஈரானுடன் ஏற்படுத்திக் கொண்ட அணு ஒப்பந்தத்திலிருந்து முந்தைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியேறியதுடன் பொருளாதாரத்தடைகளையும் விதித்தார். இப்போது டெமாக்ரட்டுகள் மீண்டும் பதவிக்கு வந்திருப்பதால் ஈரானுடனான அணு ஒப்பந்தத்தில் மறுபடி நுழைய விரும்புகிறார்கள்.



அடுத்துவரும் 25 ஆண்டுகளில்  400 பில்லியன் டாலர்கள் முதலீடு என்ற கவர்ச்சிகரமான அறிவிப்புடன் ஈரானுடன் சீனா ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டிருக்கிறது. "இந்த ஒப்பந்தம் குறித்த தகவல்கள் வெளிவரவில்லை. இருப்பினும் அமெரிக்காவின் தடைகளை மீறும் வண்ணம் சீனா இரானிடமிருந்து எண்ணெய் வாங்கும் என்று ஊகிக்கப்படுகிறது.இரான் மீது விதிக்கப்பட்ட தடையால் இரான் வெளிநாட்டு முதலீடுகள் இல்லாமல் தடுமாறியது. சர்வதேச வல்லமை பெறுவதற்கான சீனாவின் 70 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளில் முதலீடு செய்யும் திட்டத்தின் ஒரு விரிவாக்கமாகவே இந்த ஒப்பந்தம் உள்ளது.

கடந்த வருடம் இந்த ஒப்பந்தத்தின் வரைவு கசிந்த பிறகு சீனாவின் எண்ணம் குறித்து இரானியர்கள் சிலர் சந்தேகித்தனர். சீனாவின் `பெல்ட் அண்ட் ரோட்` திட்டம் சீனாவுக்கே அதிகம் பயனளிக்கக்கூடியது. இதில் சில சிறிய மற்றும் ஏழை நாடுகள் ஏமாற்றம் அடைந்தன. (அதில் இடம்பெற்றுள்ள நாடுகள் பல சீனாவைக் காட்டிலும் சிறிய மற்றும் ஏழை நாடுகள் ஆகும்.) " என்று பிபிசி தனது செய்தியில் சொல்கிறது

இதில் வேடிக்கையான அம்சம் என்னவென்றால் அதிக ஆரவாரத்துடன் ஆரம்பிக்கப்படும் சீன முதலீடுகள், திட்டம் எதுவும் இதுவரை முழுமையாக நிறைவேறியது இல்லை என்பதுதான். ஆனாலும் சீனவலையில் ஈரான் போன்ற பலநாடுகளும் வலுவில் வந்து விழுவது குறையவே இல்லை.   


ஏற்கெனெவே ஈரானுடன் சபஹர் துறைமுகத்தை  நவீனமயமாக்கும் ஒப்பந்தம் செத்துக்கொண்டிருக்கும் இந்தியா எதிர்நோக்கும் சவால்கள் என்ன என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டியிருக்கிறது.

அமெரிக்கர்களுடைய நம்பர் 1 இடத்தைப்பிடிக்கும் சீன முயற்சிகளுக்கு, அமெரிக்காவே இடம் கொடுக்கும் விசித்திரத்தைப் பார்க்கப்போகிறோமா என்ன?

மீண்டும் சந்திப்போம்.      


Saturday, January 4, 2020

எண்ணெய் அரசியலும் அமெரிக்க அரசியலும்!

டொனால்ட் ட்ரம்ப்பைப் பற்றி இந்தப்பக்கங்களில் பேசுகிற போது வெறும் கோமாளியாகவே சித்தரிக்கப் படுவதாக நண்பர்கள் யாரேனும் நினைத்தால், அப்படி இல்லை என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். ஜிம்மி கார்ட்டர் ஆக இருக்கட்டும்,  ஜார்ஜ் W புஷ் ஆக இருக்கட்டும், அமெரிக்க அதிபர்களுக்கு, மத்திய கிழக்கு நாடுகளின் உள்ளரசியலில் தலையிடுவதென்பது வெறும் பொழுதுபோக்காக இருந்ததில்லை. அங்கே உள்ள எண்ணெய் வளத்தை தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவருவதான ஆதிக்க அரசியல், சுயநலம் பிரதானமாக இன்றும் கூட இருந்து வருகிறது என்பதை மனதில் தெளிவாக வைத்துக் கொள்ள வேண்டுகிறேன். எண்ணெய் அரசியலை அமெரிக்கா தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள ஆரம்பித்தது இரண்டாவது உலகப் போரின் முடிவில் தான் என்பதில் ரஷ்யாவின் ஆதிக்கமும் அதே அளவுக்கு இல்லாவிட்டாலும், கணிசமாக அதே காலகட்டத்திலிருந்து இருக்கிறது.



சீனா எண்ணெய் ஆதிக்க அரசியலில் இன்றுவரை நேரடியாக இறங்கவில்லை என்றாலும் தங்களுடைய எண்ணெய்த் தேவைகளை சிக்கல் எதுவுமில்லாமல் இன்றுவரை பூர்த்தி செய்துகொண்டுவருகிறார்கள்.


மேலே சொன்னவற்றோடு இஸ்லாமிய நாடுகளுக்கு இடையிலான ஆதிக்கப்போட்டியில் முக்கியமாக இருப்பது சன்னி, ஷியா என்ற இருபிரிவுகளுக்கு இடையில் இருக்கும் மோதல்கள்தான்! சன்னி பிரிவு முஸ்லிம்கள் தான் பெரும்பாலானவர்கள் என்றாலும் ஈரான் ஈராக் இந்த இரண்டு நாடுகளிலும் ஷியா பிரிவு முஸ்லிம்கள் முறையே 95% 65% என்று பெரும்பான்மையாக இருப்பது இப்போதைய பிரச்சினைகளுக்கு மூலகாரணம். சன்னி முஸ்லிம்களுடைய ஏகபோகத்தலைமையாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயலும் சவூதி அரேபியா, (ஈரானை) பாம்பின் தலையை அறுத்துவிட வேண்டும் என்று தொடர்ந்து அமெரிக்காவிடம் வலியுறுத்தி வருவதை இந்த நேரத்தில் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். சேகர் குப்தா இந்த 18 நிமிட வீடியோவில், வெள்ளிக்கிழமையன்று பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்கா டிரோன் தாக்குதலில் ஈரானிய ஜெனெரல் காசிம் சொலைமானியை தீர்த்துக் கட்டியது, அதன் பின்னணி பற்றிக் கொஞ்சம் விளக்குகிறார். ஊடகங்களில் படித்துத் தெரிந்து கொள்ளக் கூடிய விஷயங்களுக்கும் மேலதிகத் தகவல் இந்த வீடியோவில் கிடைக்கிறது. பாருங்கள்!


இங்கே தனியார் சேனல்களின் விவாதக் கூச்சல்களுக்கு நடுவே,  வெற்றுப்பரபரப்புச் செய்திகளையே  பேசாமல், முக்கியமான செய்திகளின் பேரில் அர்த்தமுள்ள விவாதங்களை நம்முடைய ராஜ்யசபா டிவி நடத்திக் கொண்டிருப்பதை அறிவீர்களா? பார்த்திருக்கிறீர்களா? 

ஈரான் அமெரிக்கா இருநாடுகளுக்கிடையில் காசிம் சொலைமானி தீர்த்துக்கட்டப்பட்ட விவகாரம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியிருப்பதன் பின்னணியில் ஒரு விவாதம்.  26 நிமிடங்கள். விஷயம் இன்னதென்று புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்  என்று பரிந்துரை சொல்கிறேன்.

மீண்டும் சந்திப்போம். 
             

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை