Showing posts with label சீன உதார்கள். Show all posts
Showing posts with label சீன உதார்கள். Show all posts

Thursday, April 22, 2021

சீனாவின் ஒரேபெல்ட் ஒரேரோடு கனவுத் திட்டம் அவ்வளவுதானா?

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது கலகக்காரர்கள்,  கம்யூனிஸ்டுகளுக்கு ரொம்பவுமே பொருத்தம் என்பதை சீனா இன்னுமொரு முறையும்  நிரூபித்திருக்கிறது. ஒரேபெல்ட்  ஒரேரோடு என்பது சீனாவின் கனவுத்திட்டமாக, ஆதிக்க விஸ்தரிப்புக்கு அடித்தளமாக இருந்தது, இப்போது உலகின் பலபகுதிகளிலும் நிராகரிக்கப்படுகிற ஒன்றாக ஆகிக் கொண்டிருப்பதில், ஆஸ்திரேலிய மாகாணம் ஒன்று சீனாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் ஃபெடரல் அரசால் நேற்றைக்கு தேசநலன் கருதி  ரத்து  செய்யப் பட்டிருப்பதில், மிகுந்த வன்மத்துடன் சீனா அதைக்குறித்து எதிர்வினையாற்றியிருப்பதில் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டிருக்கிறது.  

  

ஆஸ்திரேலிய விவகாரங்களைத் தொடர்ந்து கவனித்து வருகிறவர்களுக்கு, சீனக்கம்யூனிஸ்ட் எந்த அளவுக்கு ஆஸ்திரேலியாவின் அரசியல் விவகாரங்களில் ஊடுருவி இருந்தது, ஆதரவுக்குரல் கொடுப்பதற்காக உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு பணம்கொடுத்து போஷித்து வந்தது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியது இல்லை தான்! சீனா தனது ஆட்டத்தை ஓவராகவே ஆடியதற்கு முற்றுப்புள்ளி வைக்கிற நேரமும் வந்து விட்டது போலத் தெரிகிறது. OBOR / BRI திட்டம் உலகின் பலபகுதிகளிலும் முட்டுச்சந்தில் வந்து நிற்பதை என்ன என்று சொல்வது? China’s reaction to the cancelling of the dangerous Belt and Road agreement in a “wolf warrior fashion” will end up being a large “own goal” for Beijing, according to the Australian Strategic Policy Institute’s Michael Shoebridge.


ஷி ஜின்பிங்கின் கனவுத்திட்டம் கொஞ்சம் நிதானமாகச் செயல்படுத்தப்பட்டிருந்தால் நிறைவேறியிருக்கக் கூடிய சாத்தியம் உள்ளதுதான்! தனது ஆயுட்காலத்திலேயே நடத்திக் காட்டிவிட வேண்டுமென்கிற ஆத்திரமும் அவசரமும் ஷி ஜின்பிங்கை தோற்கடித்துவிடும் என்று தான் இப்போதைய நிகழ்வுகள் காட்டுகின்றன. China Belted and Roaded என்று தலைப்பிட்டு இந்தச் செய்தியை Daily Telegraph நாளிதழ் வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்துவரும், முட்டாள்தனங்கள் மட்டும்தான், இப்போது சீனாவுக்கு ஆதரவாகவும் ஆறுதலாகவும் இருக்கின்றன என்றால் அப்படி ஒரு அனுமானத்தில் தவறில்லை.

?

ஸ்ரீலங்காவிலும் சீனாவின் சாகசங்கள் கேள்வி கேட்பார் இல்லாமல் தொடர்ந்து வருவதில், கொஞ்சம் எதிர்ப்பு கிளம்பி வருவது சற்றே ஆறுதல். ஆனால் ராஜபட்ச சகோதரர்கள் ஆட்சியில் ஸ்ரீலங்கா சீனாவின் அடிமை நாடாக ஆக்கப்படுவதை இதுமாதிரி சிறு சலசலப்பு தடுத்து நிறுத்திவிடுமா?

மீண்டும் சந்திப்போம்.

     
  

Sunday, November 15, 2020

மீண்டும் #RCEP இன்றைய செய்தியும் அதன் பின்னணியும்!

The Regional Comprehensive Economic Partnership (RCEP) என்பது சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான ஒரு அமைப்பு இதில் தென்கிழக்காசிய நாடுகளான ப்ருனே, கம்போடியா, இந்தோனேஷியா , லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர்,  தாய்லாந்து, மற்றும் வியட்நாம் ஆகிய பத்து நாடுகளுடன்  ஏற்கெனெவே சுதந்திர வர்த்தக உடன்பாடு உள்ள ஐந்து நாடுகளான சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, மற்றும் நியூசிலாந்து ஆகியவையும் சேர்ந்த  இன்று ஒரு சுதந்திர வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திட்டிருக்கின்றன. வியட்நாம் ஏற்பாடு செய்திருந்த இணையவழி மாநாட்டில் இந்த வர்த்தக ஒப்பந்தம் எட்டப் பட்டிருக்கிறது என்பது கொரோனா வைரஸ் பரவலுக்குப் பின்னால் சீனாவுக்குக் கிடைத்த இன்னொரு வெற்றி என்றே சொல்ல வேண்டும். முதலாவதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோற்றிருப்பது  என்பதைத்  தனியாகச் சொல்லவும் வேண்டுமா?


ASEAN (முதலில் சொன்ன 10 தென்கிழக்காசிய நாடுகள்) உடன் இந்தியாவுக்கு FTA சுதந்திர வர்த்தக உடன்பாடு ஏற்கெனெவே இருந்து வருவதில் இந்தியாவும் RCEP பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க ஆரம்பித்தது. சென்று வருடம் இதே நவம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி  RCEP மாநாட்டுக்குச் சென்று வந்ததும், வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திட மறுத்துத் திரும்பியதும் நினைவிருக்கிறதா?


"Under the current global circumstances, the fact the RCEP has been signed after eight years of negotiations brings a ray of light and hope amid the clouds," said Chinese Premier Li Keqiang after the virtual signing."It clearly shows that multilateralism is the right way, and represents the right direction of the global economy and humanity's progress."

The agreement to lower tariffs and open up the services trade within the bloc does not include the United States and is viewed as a Chinese-led alternative to a now-defunct Washington trade initiative.

The RCEP "solidifies China's broader regional geopolitical ambitions around the Belt and Road initiative", said Alexander Capri, a trade expert at the National University of Singapore Business School, referring to Beijing's signature investment project that envisions Chinese infrastructure and influence spanning the globe."It's sort of a complementary element."

The agreement to lower tariffs and open up the services trade within the bloc does not include the United States and is viewed as a Chinese-led alternative to a now-defunct Washington trade initiative என்கிறது இன்றைய செய்தி 

இங்கே தமிழகத்தில் திருவள்ளுவரை வைத்து வெட்டி அக்கப்போர்கள் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் கூட பாங்காக்  நகரில் RCEP பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பின் வர்த்தக ஒப்பந்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட மறுத்துவிட்டு வந்திருப்பது குறித்தான விவாதங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த ஒப்பந்த விஷயத்தில் அரசு என்ன முடிவெடுக்கப் போகிறது என்பது தெரியாமலேயே ராகுல் காண்டி, சோனியா காண்டி பரிவாரங்களோடு இந்தியத் தொழில்துறையின் ஒரு பகுதியும் விவசாயிகளும் எதிர்ப்புக்குரல் எழுப்பிக் கொண்டிருந்ததை, முரண் பட்ட கருத்துக்களை, தேடிப்  படித்துக் கொண்டிருந்ததில் நேற்றைய பொழுதின் பெரும்பகுதி செலவானது. 

ஒரு அனுபவமுள்ள  ஊடகக்காரராக The Print தளத்தில் சேகர் குப்தா, பிரச்சினையின் ஆணிவேராக இருப்பது எது என்று சிலவிஷயங்களை இந்த 28 நிமிட வீடியோவில் தெளிவுபடுத்தியிருக்கிறார். அவர் சொல்வதில் கவனிக்க வேண்டிய விஷயமாக நம்முடைய தொழில் துறை competitive ஆக மாறவோ,  தரமான உற்பத்திக்குத் தயாராகவோ இல்லாமல், சர்வதேச சந்தைகளைப் பிடிப்பதற்கு லாயக்கில்லாதவையாக இருப்பது முக்கியமானது. அரசின் பாதுகாப்பில் அவர்கள் இப்போதிருக்கிற நிலையிலேயே நீடிக்க விரும்புகிறார்கள் என்பது பரிதாபம் Make in India இன்னும் வெறும் கனவாக இருப்பது ஏன் என்பதை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நேரம் இது.

Modi’s RCEP move shows sound political judgement. Don’t scoff, it’s rare these days. Pulling out of RCEP was not only an economic decision. It involved taking a call not just India’s foreign policy but also on India’s role in evolving world என்கிறார் யோகேந்திர யாதவ். ஆம் ஆத்மி கட்சியில் இருந்து, பின் வெளியே வந்து அரசியல் விமரிசகராகத் தொடரும் அதே யோகேந்திர யாதவ் தான்! 

மேலே பழைய பதிவில் மூன்று வீடியோக்கள்-கொஞ்சம் விரிவாக இந்தியா ஏன் இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தது என்பதை புரிந்துகொள்ள  மூன்று பார்வைகளை முன்வைக்கின்றன..


.
   

மீண்டும் சந்திப்போம்.    

Friday, May 22, 2020

ஹாங்காங் மீதான கெடுபிடி :: சீனா அழிவதன் தொடக்கமா?

தேசிய மக்கள் காங்கிரஸ்! (National People's Congress) இது சீனாவில் நம்மூர் நாடாளு மன்றம் போல்! ஒரே வித்தியாசம் என்னவென்றால், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சொல்வதற்கெல்லாம் ஆமாம் சாமி போடுவது மட்டுமே இதன்.வேலை என்பதனால்,  இந்த NPC யின் வருடாந்திரக் கூட்டத்துக்கெல்லாம் பெரிய அளவு முக்கியத்துவம் இருந்ததே இல்லை. இன்று மே 22 முதல் 28 ஆம் தேதி வரை கூடவிருக்கும் சீனாவின் NPC கூட்டம் வேறு சில காரணங்களுக்காக. மிகவும் கூர்ந்து கவனிக்கப்படுவதாக ஆகியிருக்கிறது. முதலாவதாக கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தில் சீனாவின் இமேஜ், நம்பகத்தன்மை, பொருளாதாரம் எல்லாமே செமத்தியாக அடிவாங்கி இருக்கிறது. அதைவிட சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் தலைமையும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுமே  கூடத்தான் மிகவுமே  கேள்விக்குரியதாக ஆகியிருக்கிற சூழலில் இந்த NPC கூட்டத்தில் எது பிரதானமான பேசுபொருளாக இருக்கும்?

  

கம்யூனிஸ்ட்  கட்சிகளே பொதுவாகப் பொய்யிலே  பிறந்து பிரசாரங்களிலேயே .வளர்ந்து காலத்தை ஒட்டுபவை தான்! சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் விதிவிலக்கா என்ன? கவனத்தை வேறு திசையில் திருப்புவதும், மாபெரும் தலைவர் ஷி ஜின்பிங்கின் இமேஜைத் தூக்கிப்பிடிப்பதும் அங்கே சர்வ சாதாரணம். ஹாங்காங்கில் அதிருப்திக்குரல்களை நெறிக்கும் விதமாகக் கடுமையான சட்டங்களை இயற்ற இந்த NPC கூட்டம் முடிவு செய்திருப்பதான தகவல், பலவிதமான எதிர்ப்புக்கு இடம் கொடுத்திருக்கிறது. முக்கியமான பிரச்சினையான சரிந்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பது பற்றிய பேச்சே இல்லை. 0முதல் முறையாக சீன அரசு, வருடாந்தர ஜிடிபி வளர்ச்சிக்கான இலக்கை தீர்மானிக்காமல் விட்டிருக்கிறது. 1990 இலிருந்து பின்பற்றப்படும் இலக்கை நிர்ணயிக்கிற நடைமுறையைக் கைவிட்டிருப்பது இந்த NPC கூட்டத்தின் விசித்திரம்.    

China's Path To Self Destruction Starts in Hong Kong "The real threat from China remains not its rise, but rather its collapse. Freedom is contagious. Xi’s actions against Hong Kong may, in hindsight, appear like treating a chest wound with a band-aid."  என்று ஹாங்காங்கில் கிவைப்பது சீனா முடிந்து போவதன் தொடக்கமாக இருக்கும் என்கிறார் மைக்கேல் ரூபின். "Xi is an ethnic supremacist, an imperialist, and a man antagonistic to basic freedoms. He may seek to crush Hong Kong’s 14-month-old protest movement but he himself was responsible for its outbreak when he directed the Hong Kong government to pass the Fugitive Offenders amendment which would have allowed the extradition of Hong Kong citizens to mainland China.

He may believe his latest move will restore order to Hong Kong and guarantee the Chinese Communist Party’s general security against dissent and criticism, but his actions may very well do the opposite" என்று மேலும் சொல்கிறார். முந்தின பாராவின் முதல்வரியில் முழுக்கட்டுரைக்கான சுட்டி இருக்கிறது. 
 

இந்த 3 நிமிட வீடியோவைப் பாருங்கள்! இந்தியாவுக்கு எதிராக நேபாளத்தைத் தூண்டிவிட்ட கையோடு சீனா வங்க தேசத்துக்கும் வலைவிரித்திருக்கிறதாம்! சீனாவின் இறங்கு முகத்துக்கு காரணமாக இருக்கப்போவது ஹாங்காங் மட்டுமே அல்ல! சீனாவின் விஸ்தரிப்புக் கனவுகளே அதன் அழிவுக்கு காரணமாக இருக்கும் என்று தான் தோன்றுகிறது.

மீண்டும் சந்திப்போம்.      

Monday, March 30, 2020

#சீனாவைரஸ் சீன அதிபரின் களிமண் கால்கள்!

ஒருபக்கம் உலகின் பலபகுதிகளிலும் சீனவைரஸ் தொற்று ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் சீனக் கம்யூனிஸ்ட்  கட்சிக்கும், சீன அதிபர் ஷி ஜின்பிங்குக்கும் செல்வாக்கு மிகவும் சரிந்து போயிருப்பதாக ANI செய்தித்தளம் இன்று பிற்பகல் ஒரு விரிவான செய்திக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது.
கட்டுரைக்கு வைத்திருக்கிற தலைப்பே Virus exposes Xi's feet of clay வடிவேலு காமெடியாக சொல்வதானால் கட்டடம் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்கு! ஆனால் தலைப்பு நேரடியாகச் சொல்வது மண் குதிர்!


  
இந்த 2 நிமிட வீடியோவில் சொல்கிற மாதிரி நாங்கள் வூஹான் வைரஸ் பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டு விட்டோம்! உலகத்தைக் காப்பாற்றவும் உதவி செய்யவும் தயாராக இருக்கிறோம் என்ற சவடால், பிரசாரம் எந்த அளவுக்கு உண்மை? எதற்கும் இந்த ட்வீட்டர் செய்தியைப் பார்த்துவிடுங்கள்! வூஹானில் வைரஸ் தொற்றால் இறந்தவர்களுடைய அஸ்தியைப் பெற்றுக் கொள்வதற்காக நீண்ட கூட்டம்.

Massive deliveries of urns in Wuhan have raised fresh skepticism of China’s coronavirus reporting.As families in the central Chinese city began picking up the cremated ashes of those who have died from the virus this week, photos began circulating on social media and local media outlets showing vast numbers of urns at Wuhan funeral homes.



China has reported 3,299 coronavirus-related deaths, with most taking place in Wuhan, the epicenter of the global pandemic. But one funeral home received two shipments of 5,000 urns over the course of two days, according to the Chinese media outlet Caixin.It’s not clear how many of the urns were filled.Workers at several funeral parlors declined to provide any details to Bloomberg as to how many urns were waiting to be collected, saying they either did not know or were not authorized to share the number. என்கிறது நியூயார்க் போஸ்ட் செய்தி.  ஆக, வைரஸ் தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கையை மட்டுமல்ல பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையையும் சீனா ஆரம்பத்திலிருந்தே குறைத்தே சொல்லிவருகிறது என்ற விஷயம் ஊர்ஜிதமாகியிருக்கிறது. ஆனால் இந்திய ஊடகங்களில் சிலநாட்களாகவே சீனா மீண்டு வந்த வெற்றிக்கதையைப் பற்றிய பிரசார தம்பட்டம் கொஞ்சம் கூடுதலாகவே அடிக்கப்பட்டு வருகிற வேளையில் ANI செய்திநிறுவனத்தின் இந்தச் செய்திக் கட்டுரை சீன அதிபரும் சீனக்கம்யூனிஸ்ட்  கட்சியும் மக்களிடையே பரவலாக செல்வாக்கிழந்து நிற்பதைப் படம்பிடித்துக் காட்டுகிறது. 

ஆஸ்திரேலியத்தலைநகர் கான்பெராவில் சீனா பாலிசி சென்டரின் இயக்குனரான ஆடம் நீ பிரச்சினையை இருவிதமாகப் புரிந்துகொள்ளலாம் என்கிறார். ஒன்று சீன அதிகாரிகளின் தவறான கையாளுதல். அடுத்தது பிரச்சினை பெரிதாகிக் கொண்டே போன காலத்தில் ஷி ஜின்பிங்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் மேல்மட்டத் தலைவர்களும் வெளியே வராமல் பாதுகாப்பாகப் பதுங்கிக் கொண்டது. இந்த இரண்டிலும் கம்யூனிஸ்ட் கட்சி, பாரமௌன்ட் லீடர் ஷி ஜின்பிங் இருதரப்புடைய இமேஜும் கணிசமாக அடிவாங்கியிருக்கிறது என்பது சாராம்சம். சீனாவுக்கு கடந்த ஒருவருடமாகவே பல்வேறு விஷயங்கள் பெரும் சவாலாக இருந்தன. பொருளாதார மந்தநிலை, அமெரிக்காவுடனான வர்த்தகப் போர், ஹாங்காங் போராட்டங்கள் வரிசையாக சமாளிக்க வேண்டியவைகளாக இருந்ததோடு வூஹான் வைரஸ் தொற்றும் சேர்ந்து கொண்டதில் அதுவரை கேள்வி கேட்க முடியாததாக இருந்த சீனாவின் அரசியல் தலைமை (ஒப்பாரும் மிக்காரும் இல்லாத paramount leader ஷி ஜின்பிங்) அத்தனை குளறுபடிகளுக்கும் பதில் சொல்லியாக வேண்டிய நிலைமை!

ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியின் எழுதப்படாத கோட்பாடுகளில் அடுத்தவர் மீது பழிசுமத்தி அதன் பின்னே ஒளிந்து கொள்வது, மிக முக்கியமானது! கோளாறுகளுக்குப் பதில் சொல்வதோ பொறுப்பேற்றுக் கொள்வதோ இல்லை! சித்தாந்தம் கோட்பாடு விமரிசனம் சுயவிமரிசனம் என்பதெல்லாம் ஏட்டளவோடு சரி! பிரசாரம் ஒன்றே இன்றைய கம்யூனிஸ்டுகளுக்கு முழுவேதம்! சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முந்தைய காலத்தில் மாசேதுங் ஒருவரே மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் இப்படி எல்லாமுமாக ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாபெரும் தலைவராக இருந்தார். அவருக்குப் பின் ஷி ஜின்பிங் தான் அந்த இடத்தைப் பிடித்தார் என்றாலும் சாயம் சீக்கிரமாகவே வெளுத்துப் போய் விட்டது.

ANI கட்டுரையைலிங்கில் முழுமையாகப் படித்துப் பாருங்களேன்! சீனத்து உதார்கள் எப்படிப்பட்டவை என்பதைக் கொஞ்சமாவது புரிந்துகொள்ள வேண்டாமா?

மீண்டும் சந்திப்போம்.              

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை