Tuesday, March 19, 2019

பாகிஸ்தானை அடக்க ஒரேவழி! பிளாக்மெயிலுக்கு இடம் கொடுக்காமலிருப்பதே !

ஜெய்ஷ் ஏ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரை பயங்கரவாதியாக அறிவிப்பதில் ஐநா பாதுகாப்புசபையில் சீனா நான்காவது முறையாகத் தனது வீட்டோ அதிகாரத்தைப்பயன்படுத்தி முட்டுக்கட்டை போட்டிருப்பதில் இங்கே காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காண்டிக்கும், காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கும் ஏக மகிழ்ச்சி இப்படி முந்தைய பதிவில் எழுதியிருந்தது நினைவிருக்கிறதா?


பயங்கரவாதத்தைப் பயிற்சி கொடுத்து ஏற்றுமதி செய்கிற ஒரேநாடு பாகிஸ்தான் தான்! ஜெயிஷ் ஏ முகமது போல 48க்கும் மேலான  தீவீரவாத இயக்கங்களை பாகிஸ்தானிய ராணுவத்தின் ISI ஆயுதங்கள், பயிற்சி கொடுத்து அண்டைநாடுகளில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுத்துகிறது. இங்கே இந்தியாவில் பிப்ரவரி 14 அன்று புல்வாமாவில் CRPF வீரர்கள் சென்ற வாகனவரிசை மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தி 41 வீரர்கள் உயிரைக் காவு கொண்டது போலவே, ஈரானிலும் ஆப்கானிஸ்தானிலும் தாக்குதல்களைத் தூண்டி விட்ட செய்திகளும் வந்த பின்னணியில் பாகிஸ்தானை ஆதரிக்க சீனா, சவூதி அரேபியா உள்ளிட்ட அதன் நட்பு நாடுகள் எதுவும் முன்வரவில்லை. சென்ற 26 ஆம் தேதி பாலாகோட்  ஜெயிஷ் ஏ முகமது பயிற்சிக் கூடத்தின் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல், அதன்தொடர்ச்சியாக பாகிஸ்தான் விமானங்கள் இந்திய ராணுவ நிலைகளின் மீது நடத்திய misadventure அதில் இந்தியவிமானி அபிநந்தன் ஒரு F 16 விமானத்தைச் சுட்டு வீழ்த்தி, பிறகு சிறைபிடிக்கப்பட்டதில் சர்வதேச அழுத்தம் காரணமாக மூன்றே நாட்களில் விடுவிக்கப்பட்டதும் நிகழ்ந்தது. இப்படி ஒருவாரத்துக்கு முன் எழுதியிருந்த பதிவுடன் ஒரு படமும்!

  
பாகிஸ்தானுடைய பயங்கரவாதத்தாக்குதல்களுக்கு அடிக்கடி ஆளாகிற நாடுகளாக ஆப்கானிஸ்தான், இந்தியா, ஈரான் என்று மூன்று அண்டைநாடுகள் இருக்கிற அதே நேரம்,தாலிபான்களை அடக்க அல்லது அழிக்க பாகிஸ்தான்  உதவியை நாடிய அமெரிக்கா கோடிக்கணக்கான டாலர்களையும் நவீன ஆயுதங்களையும் பாகிஸ்தானுக்கு வழங்கியதில் பலன் பூஜ்யம்தான் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிகுந்த கசப்புடன்    வெளிப்படையாகவே சொன்னார்..

பாகிஸ்தான் பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற மாதிரி அமெரிக்கர்களிடம் டாலர்களைக் கறந்துகொண்டு அதேநேரம் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிற நாடாகவும் இருந்ததில் பாகிஸ்தானிய ராணுவம் கொழுத்து வளர்ந்ததே தவிர பாகிஸ்தானிய பொருளாதாரம் அதலபாதாளத்துக்குத் தள்ளப்பட்டது. ஜனங்களுடைய கோபத்தைத் திசை திருப்ப ஒரு ஜனநாயக முகமூடி தேவைப்பட்டதில் சிக்கியவர் .இம்ரான் கான். இதுவரை இருந்த பாகிஸ்தானிய பிரதமர்களிலேயே மிகவும் பலவீனமானவராகவும்  இருப்பவர் என்று ஊடகங்கள் சொல்கின்றன.  

Against this background, China again blocking UN action against Jaish-e-Mohammed (JeM) founder Masood Azhar was aimed at thwarting international pressure on Pakistan to take credible, irreversible anti-terror actions. That China still protects a terrorist, who reportedly is on his deathbed, undergirds the extent to which it shields Pakistan’s proxy war by terror against India.

It also helps highlight China’s own proxy war against India by employing Pakistan as a surrogate for containment. While reaping an ever-increasing trade surplus with India, China is systematically undermining Indian interests. Yet, since the Wuhan summit, India’s China policy has become more feckless than ever. என்று ப்ரம்ம செலானி நான்கு நாட்களுக்கு முன் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்காக ஒரு செய்தி அலசலை எழுதியிருக்கிறார்.  தொடர்ந்து அவர் சொல்வது தான் மிக முக்கியமானது. சீனாவின் முட்டுக்கட்டையை மீறவும், ஒரு போரைத் தவிர்க்கவும்  வேண்டுமானால் இதரநாடுகள் எல்லாம் சேர்ந்து பாகிஸ்தான் மீதான பொருளாதார ரீதியிலான பிடியை இறுக்குவதுதான் ஒரேவழி!  அதலபாதாளத்துக்குப் போய் விட்ட பாகிஸ்தான் பொருளாதாரம் காசு காசு உதவி உதவி என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறது. சவூதி அரேபியா அண்மையில் கொடுத்த 750 கோடி டாலர்கள் சுடுமணலில் தெளித்த நீர்போல பழைய கடன்களுக்கு தவணை, வட்டி கட்டுவதற்கே போய்விட்டது. இன்னமும் IMF இடம் 1200 கோடி டாலர்கள் கடன் கேட்டுக்   கெஞ்சிக் கொண்டிக்கிறது. கடந்த அறுபது வருடங்களில் இது 22வது முறையாகச் சிக்கலில் இருந்து மீள்வதற்குப் பாகிஸ்தான் கையேந்திக் கொண்டிருக்கிற நிலையை IMF உறுப்புநாடுகள் சரியாகக்  கையாண்டால், பாகிஸ்தான் தீவீரவாதவளர்ப்புப் பண்ணையாக இருப்பதைக் கட்டுப்படுத்த முடியும் என்று ப்ரம்ம செலானி சொல்கிறார்.
Pakistan has long employed not just nuclear blackmail but also fiscal blackmail — help us financially or face the perils of the country falling apart. If Pakistan is unwilling to sever its links with state-nurtured terrorists, it is better for the world to let it fail than to continue propping up its military-mullah-jihadist complex with aid and loans — the equivalent of giving more alcohol to an alcoholic, instead of treating the addiction. The treatment now must centre on making Pakistan take verifiable and unalterable anti-terror steps என்று முடித்திருப்பதைக் கொஞ்சம் வாசித்துப்பாருங்களேன்! அக்கம்பக்கம் நடப்பவை எதுவெல்லாம் நம்மை நேரடியாகப் பாதிப்பவை என்று புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்!   .         


Friday, March 15, 2019

இந்தியா பாகிஸ்தான் சீனா! புதிய சவால்கள் #2

ஜெய்ஷ் ஏ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரை பயங்கரவாதியாக அறிவிப்பதில் ஐநா பாதுகாப்புசபையில் சீனா நான்காவது முறையாகத் தனது வீட்டோ அதிகாரத்தைப்பயன்படுத்தி முட்டுக்கட்டை போட்டிருப்பதில் இங்கே காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காண்டிக்கும், காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கும் ஏக மகிழ்ச்சி.


அவர்கள் பார்வையில் இந்திய பிரதமர் சீனாவுக்கு முன்னால் பயந்து நிற்கிற பிரதமர், அவ்வளவுதான்! தேசத்தைவிட அவர்களுக்குக் கட்சி அரசியல் தான் முக்கியம். National Conference leader Omar Abdullah said on Thursday the BJP cannot claim to have been tough on terror as Prime Minister Narendra Modi "surrendered" to China on Masood Azhar இது News 18 செய்தி.  

ஆனால்  உண்மை நிலவரம் அப்படித் தானா?


The United States, France, and Britain were behind the most recent move (Russia has also been very supportive) and the "technical hold" means China has warded off the issue for three months. And then, if it wants a second "hold," more breathing space for another six months, after which a decision is mandatory. Then, China will have to say "Yes" or "No". Will it support the rest of the 15-member UNSC or will it support Pakistan's Masood Azhar? But are these countries, or for that matter, India, which is not a member of the UNSC, ready to wait? This time, they are not. என்கிறது டைம்ஸ் நவ் செய்தி.

பாகிஸ்தானோடு சேர்ந்து  சீனாவும் உலகின் இதர நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தப் படுகிற சூழல் இப்போது உருவாகி வருகிறது. இடதுசாரி வார இதழ் BLITZ இன் துணை ஆசிரியராக இருந்து, அப்புறம் வாஜ்பாய், அத்வானி இருவருக்கும் நெருக்கமாக இருந்து இப்போது பிஜேபி எதிர்ப்பாளராக ஆகியிருக்கும் சுதீந்த்ர குல்கர்னி NDTVயில் Best Way To Deal With China? Befriend Pakistan என்று நக்கலாகத் தலைப்பிட்டு உபதேசம் எழுதுகிறார். 

இப்படி இங்குள்ள ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் எதிர்மறையாய்ச் செயல்படுகிற விதம் குறித்து இங்கே இந்தியாவின் எதிரிகள் யார்? நமக்குள்ளேயே இருக்கிறார்களே! பதிவில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம். சீனா போட்டுவரும் முட்டுக்கட்டை குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் தலையங்கம் இப்படிச் சொல்கிறது. This episode is not the end of the matter for India. The listing definitely would have been a diplomatic victory, but the unsuccessful effort does not mean that Masood Azhar is not a terrorist in the eyes of the world. In fact, just the opposite, as seen from the number of countries that supported the proposal. Each of those non-permanent members is a representative of its region in the Security Council. No one doubts that the JeM is headquartered in Pakistan, and that Azhar is based there too. India has succeeded in making clear both the JeM’s role in the February 14 Kashmir bombing, and its own intention of not holding back on exercising a military option against terrorist groups based inside Pakistan. 


Masood gfx
    
இது டைம்ஸ்  ஆப் இந்தியா செய்தியில் இருக்கும் படம். சீனா தொடர்ந்துபோட்டுவரும் முட்டுக்கட்டை அதற்கே பாதகமாகக் கூட மாறலாம். சீனா தன்னுடைய சொந்தநலன்களைப் பாகிஸ்தானுக்காகக் காவு கொடுக்காது என்பது 1965 இந்தியா பாகிஸ்தான் போர் முதல் சென்றமாதம் பாலாகோட்  JeM பயிற்சிப்பட்டறை மீது இந்தியா எடுத்த நடவடிக்கைவரை வெளிப்பட்டதே!

Days after pledging to designate Pakistan-based Jaish-e-Mohammed chief Masood Azhar as a global terrorist at the United Nations, France has sanctioned him and frozen his assets on its soil. என்று முதலடியை இந்தியாவுக்கு ஆதரவாக பிரான்ஸ் எடுத்திருக்கிற செய்தியை இன்றைய Hindu நாளிதழ் வெளியிட்டிருக்கிறது.

அப்படியானால் பாகிஸ்தான்......?


கேசவ் இன்று வரைந்த கோடுகளே சொல்கிறதே!

Monday, March 11, 2019

இந்தியா பாகிஸ்தான் சீனா! புதிய சவால்கள்!

இன்றைக்கு எகனாமிக் டைம்ஸ் நாளிதழில் பிரணாப் தல் சமந்தா என்பவர் எழுதியிருக்கிற ஒரு செய்திக் கட்டுரை நிறைய if's and but's உடன் இருந்தாலுமே கூட கொஞ்சம் சுவாரசியமான சாத்தியக்கூறுகளை சுட்டிக் காட்டுகிறது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது, செய்தித் தலைப்பு View: India has a sudden chance to change China's Pakistan math forever


இந்த செய்திக்கட்டுரையைப் படித்ததும் Pgurus தளத்தில் வெளியாகியிருந்த இந்த கார்ட்டூன் தான் உடனடியாக நினைவுக்கு வந்தது. தெற்காசியாவின் முள்ளம்பன்றி என்று சரியாகத்தான் சொல்கிறார்கள்! 

பயங்கரவாதத்தைப் பயிற்சி கொடுத்து ஏற்றுமதி செய்கிற ஒரேநாடு பாகிஸ்தான் தான்! ஜெயிஷ் ஏ முகமது போல 48க்கும் மேலான    
தீவீரவாத இயக்கங்களை பாகிஸ்தானிய ராணுவத்தின் ISI ஆயுதங்கள், பயிற்சி கொடுத்து அண்டைநாடுகளில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுத்துகிறது. இங்கே இந்தியாவில் பிப்ரவரி 14 அன்று புல்வாமாவில் CRPF வீரர்கள் சென்ற வாகனவரிசை மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தி 41 வீரர்கள் உயிரைக் காவு கொண்டது போலவே, ஈரானிலும் ஆப்கானிஸ்தானிலும் தாக்குதல்களைத் தூண்டி விட்ட செய்திகளும் வந்த பின்னணியில் பாகிஸ்தானை ஆதரிக்க சீனா, சவூதி அரேபியா உள்ளிட்ட அதன் நட்பு நாடுகள் எதுவும் முன்வரவில்லை. சென்ற 26 ஆம் தேதி பாலாகோட்  ஜெயிஷ் ஏ முகமது பயிற்சிக் கூடத்தின் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல், அதன்தொடர்ச்சியாக பாகிஸ்தான் விமானங்கள் இந்திய ராணுவ நிலைகளின் மீது நடத்திய misadventure அதில் இந்தியவிமானி அபிநந்தன் ஒரு F 16 விமானத்தைச் சுட்டு வீழ்த்தி, பிறகு சிறைபிடிக்கப்பட்டதில் சர்வதேச அழுத்தம் காரணமாக மூன்றே நாட்களில் விடுவிக்கப்பட்டதும் நிகழ்ந்தது. 

CPEC என்று பாகிஸ்தானுடன் ஒரு வர்த்தக காரிடாரில் சீனா ஒரு கூட்டாளியாக இருந்தாலும் கூட, பாகிஸ்தான் செய்கிற அத்தனை அழும்புகளுக்கும் துணைநிற்க சீனா தயாராக இல்லை.

அதேபோல சவூதி அரேபியாவின் அரச குடும்பத்தின் பாதுகாவலர்களாகவும், சவூதிகளின் விமானப் படையிலும் பாகிஸ்தானிகளே இருக்கிற போதிலும் பாகிஸ்தானின் ரவுடித்தனத்தை சவூதிகள் வெளிப்படையாக ஆதரிக்கத் தயாராக இல்லை.

தாலிபான்களிடமே ஆப்கானிஸ்தானை ஒப்புக் கொடுத்துவிட்டு  ஆப்கானிஸ்தானில் இருந்து உருவிக்கொள்ளத் தயாராகி வரும் அமெரிக்காவும் கூட பாகிஸ்தானை ஆதரிக்கிற மூடில் இல்லை என்ற பின்னணியில் The Balakot air strikes have provided a big opening for India, which, if exploited effectively, have the potential to fundamentally alter the rules of play that have disadvantaged India in negotiations not just with Pakistan, but also China என்று ஆரம்பிக்கிற செய்திக் கட்டுரையை ஒருமுறை வாசித்து விடுங்கள்! நான் வாசித்தபோது 58 பின்னூட்டத் தாளிப்புகள் இருந்தன! 
Modi’s strong response to the terror strikes in Pulwama at the very end of his first term in office has made it clear that despite his critics, he has managed to change the fundamentals of Indian foreign and security policy in his five years in office. The use of air power to target terror camps deep inside Pakistani territory last week was the first such act after the 1971 war. It shattered the myth of Pakistan’s nuclear capability and has thrown open the possibility of India fighting a limited conventional war if need be. It has put the onus back on Pakistan for escalation. Modi’s message to Pakistan has been heard around the world and will have serious ramifications for India’s global engagement. India has not only defined these air strikes as “non-military pre-emptive” action, but has also taken Pakistan to the ICJ and worked with the Financial Action Task Force to turn the screws on Pakistan, thereby underlining the central difference between a “responsible” India and a “rogue” Pakistan. India’s Pakistan policy has been altered, perhaps unequivocally. என்று சிலாகிக்கிறது டிப்ளோமாட் தளத்தில் மார்ச் 2 ஆம் தேதி ஹர்ஷ் வி பந்த் என்பவரெழுதிய செய்திக் கட்டுரை. 

அதேநாளில் அதேதளத்தில் வெளியான இன்னொரு செய்திக் கட்டுரை Indian Air Strategy After Balakot: The China Factor
How is India’s air force placed to handle a potential war with Pakistan and a two-front war with Pakistan and China? என்ற கேள்வியை எடுத்துக் கொண்டு, பதிலை அலசுகிறது. இந்தியா, பாகிஸ்தான், சீனா மூன்று நாடுகளின் விமானப்படை வலிமை எத்தகையது? இரண்டுமுனைப்போருக்கு இந்தியா தயாராக இருக்கிறதா என்றெல்லாம் அலசியிருக்கிறார்கள்.     


5 ways India’s foreign policy has changed post-Balakot இங்கேயும் கொஞ்சம் பாருங்கள்! 


ஒரு போர் வருமா? வாய்ப்பே இல்லை என்பதுதான் கள யதார்த்தம்! தவிர ஒரு போரின் முடிவை வெறும் எண்ணிக்கை மட்டுமே தீர்மானிப்பதில்லை. முதலில்  பாகிஸ்தானுக்கு ஆதரவாக, சீனா களமிறங்குமா என்பதே 9 ரூபாய் நோட்டு மாதிரியான கேள்விதான்!
அப்படி இறங்குமானால் ......
சீனாவுடன் தங்கள் ஸ்கோரை செட்டில் செய்ய, அமெரிக்கா, ஜப்பான் முதலான நாடுகளும் களத்தில் இறங்கலாம்! வேறுபல நாடுகளும் இந்திய ஆதரவு நிலை எடுக்கலாம்!
போர் என்பது தமிழக அரசியல் வாதிகள் செய்வது போல வெறுமனே வாயால் சுடுகிற வடையல்ல!
          

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை