Tuesday, October 1, 2019

சீனா எழுபது! சில குறிப்புக்கள்! #01

சீனப் பூச்சாண்டி  என்று இந்தப்பக்கங்களில் ஒரு நான்கு பதிவுகளில் கொஞ்சம் எழுதியதைத் தொடர்ந்து இன்று ஐந்தாவதாக ஒன்றையும் எழுதவேண்டியிருக்கிறது. அக்டோபர் முதல் தேதியன்று  மக்கள் சீனக் குடியரசு (PRC) அமைக்கப்படுவதாக மாசேதுங் அறிவித்த நாளே இன்றைய சீனாவின் தேசிய நாளாக அனுசரிக்கப்பட்டு வருவதில் இன்று மக்கள் சீனாக குடியரசுக்கு 70 வயது ஆகிறது! #சீனாஎழுபது 

  
இது இன்று சீனத்தலைநகர் பெய்ஜிங்கில் டியனான்மன் சதுக்கத்தில் கொஞ்சம் மிரட்டலாகவே நடந்த நிகழ்ச்சியின் ஒரு 9 நிமிடச் சுருக்கமான காணொளி. முழுதும் பார்க்க ஒரு மூன்று மணிநேரக் காணொளியாக இங்கே    

மக்கள் சீனம், குடியரசு என்ற வார்த்தைகள் எல்லாம் வெறும் அலங்காரத்துக்குத் தான்! கம்யூனிஸ்ட் கட்சியும்(CPC) அதன் ஒருபிரிவான மக்கள் விடுதலை சேனையும் (PLA) தான் முழு அதிகாரத்தையும் கைகளில் வைத்துக் கொண்டிருக்கின்றன.Tiananmen என்ற சீன வார்த்தைக்கு தெய்வீக அமைதியின்   கதவு என்று அர்த்தமிருந்தாலும் இன்றைய சீனாவில் மாசேதுங் சமாதி இருக்கிற மிகப்பெரிய பொட்டல் வெளியின் மயான அமைதிக்கான கதவுதான் என்பது 30 ஆண்டுகளுக்கு முன்னால் இதே டியனான்மன் சதுக்கத்தில் ஜனாநாயகத்துக்காகக் கிளர்ந்தெழுந்த இளம் மாணவர்களைப்  படுகொலை செய்த  போதே நிரூபிக்கப்பட்டு விட்டது.              இன்றைய நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட விருந்தாளிகளுக்கு மட்டும்தான் அனுமதி, அருகாமையில் உள்ளவர்கள் தங்கள் வீட்டு ஜன்னல் திரைகளை மூடி வைத்து வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டுமென்ற உத்தரவு. டியனான்மன் சதுக்கத்தில் போராடிய இளைஞர்களின் தாய்தந்தையர் திடீரெனப் போராட்டத்தில் குதிக்கலாம் என்ற சந்தேகத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டது  முதலானவைகளை பிரிட்டனின் கார்டியன் தளச் செய்தி ஒன்று நேற்றே வெளியிட்டிருந்தது.

இருபதாம் நூற்றாண்டின் முதல் ஐம்பதாண்டுகளில் இரண்டு உலகப்போர்கள் நடந்த சமயத்தில்தான்    1911 முதல் 1958 வரையிலும் நடந்த குழப்பங்கள், உள்நாட்டுப் போராட்டங்கள் என்பதில்தான் இன்றைய சீனத்தின் வரலாறு தொடங்குகிறது.மாசேதுங் இருந்த  வரையில் சீனா உலக விவகாரங்களில் பெரிதாகத் தலையிட்டதுமில்லை, பெயர் அடிபட்டதுமில்லை.  இந்தியாவுடனான 1962 போரை உலகநாடுகள் எதுவும் கண்டுகொள்ளவில்லை என்பதற்கான காரணமும் அதுதான், ஆனால் உள்நாட்டில் Great Leap Forward  என்ற முன்னேற்றத்துக்கான பாய்ச்சலில் ஒருசில கோடி சீனர்கள் காவு வாங்கப்பட்டதும் அடுத்து கலாசாரப் புரட்சியில்  இன்னும் சிலகோடி சீனர்கள் பலியானதும் மாவோ காலத்து சாதனைகள். சீனக் கம்யூனிஸ்ட்  கட்சி, ரஷ்யாவைப் போல தொழிலாளர்கள் காட்சியாகத் தொடங்கி விவசாயிகளையும் சேர்த்துக் கொண்ட கட்சியாக அல்லாமல் முழுக்க முழுக்க குடியானவர்களின் கட்சியாகவே தொடங்கியது என்ற பின்னணியில் பார்த்தால் ஏழைகள் விவசாயிகளுடைய பிரச்சினைகள் எதுவும் முதல் முப்பது ஆண்டுகளில் தீர்க்கப்படவே இல்லை.


மாசேதுங்குக்கு அடுத்தபடியாக சீனாவின் மாபெரும் தலைவர் என்றழைக்கப்பட்ட டெங் சியாவோ பிங்!    மாவோ சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சேர்மனாக இருந்த நாட்களில் சூ என் லாயும் டெங் சியாவோ பிங்கும் வைஸ் சேர்மன்களாக இருந்தார்கள். கலாசாரப் புரட்சி சமயத்தில்  மாவோவின் சந்தேகத்துக்கு ஆளான டெங் சியாவோ பிங் கட்சிபி பொறுப்புகளில் இருந்து  நீக்கப்பட்டதோடு  அவரது  குடும்பம் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டதும் ஒரு சாதாரண தொழிலாளியாக 1969 முதல் 4 ஆண்டு  காலம் இருக்கவும்   வேண்டி வந்தது. பிரதமராக இருந்த சூ என்லாய் கேன்சர் நோய் தாக்கியதில் தனக்கடுத்து பொறுப்புக்கு வரவேண்டியவர் என்று மாசேதுங்கை கன்வின்ஸ் செய்தபிறகே 1974 இல் மீண்டும் திருப்பி அழைக்கப்பட்டார் First Vice Premier ஆனார் மறுவாழ்வு பெற்றார் Hua Guofeng wanted to rid the Party of extremists and successfully marginalised the Gang of Four. On 22 July 1977, Deng was restored to the posts of Vice-Chairman of the Central Committee, Vice-Chairman of the Military Commission and Chief of the General Staff of the People's Liberation Army என்பது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் எப்போதும் கண்டிராத அதிசயம்.  1976 இல் சூ என்லாய் மரணத்துக்குப் பிறகு மீண்டும்  மாவோவின் சந்தேகத்துக்கு ஆளானதில் கட்சியை விட்டே நீக்கப்பட்டார்.     1978 முதல் 1992 வரை தலைமைப்பொறுப்பில் இவர் இருந்த காலத்தில் தான் இன்றைக்கு சீனா ஒரு வலிமையான பொருளாதாரமாகவும், ராணுவ சக்தியாகவும் உருவானதன் அடித்தளமே போடப்பட்டது. 1989 டியனான்மன் சதுக்கத்தில் மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்கிய ஒரே விஷயம் மட்டும் இவர்காலத்தின் கறையாகச் சொல்லமுடியும். இவர் செய்த மாற்றங்களில் socialism with Chinese characteristics தான் சீனாவுக்குள் அன்னிய மூலதனம் அனுமதிக்கப்பட்டு, சீனா இன்றைக்கு ஒரு வலிமையான பொருளாதாரமாக ஆவதற்கு அடித்தளமாக இருந்தது. இவர்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தனது வறட்டுத் தத்துவங்களை முன்னிறுத்தியதில்லை என்பதோடு கட்சியின் தலையீடு அதிகமாக இல்லாமல் இருந்தது என்றே சொல்ல வேண்டும்.
     
நாளையும் தொடர்ந்து இந்த விஷயத்தைப் பார்க்கலாம்.          

   

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை