Showing posts with label ராஜீய உறவுகளும் சிக்கல்களும். Show all posts
Showing posts with label ராஜீய உறவுகளும் சிக்கல்களும். Show all posts

Thursday, March 18, 2021

ஜோ பைடன் தள்ளாடுகிறார்! சீனாவுக்கு ஈடு கொடுக்க அமெரிக்காவால் முடியுமா?

அமெரிக்காவின் புது அதிபர் ஜோ பைடன் வாயைத் திறந்தால் ஏழரையைக் கூட்டிக் கொள்வது என்று கொள்கை முடிவோடு இருப்பார் போல. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை ஒரு கொலைகாரர், அதற்கான விலையை அவர் கொடுத்தே ஆகவேண்டும் என்று ஒரு பேட்டியில் சொன்னது பெரும் சர்ச்சையை மட்டுமல்ல, ராஜீய உறவுகளில் சிக்கலையும் ஏற்படுத்தியிருக்கிறது.


பாம்பின் கால் பாம்பறியும் என்று புடின் பதிலடி கொடுத்ததோடு நிறுத்திக் கொள்ளவில்லை, அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதரையும் திருப்பி அழைத்திருக்கிறார்.


Russia called its US ambassador back to Moscow for consultations on Wednesday after Joe Biden described Vladimir Putin as a "killer" who would "pay a price" for election meddling, prompting the first major diplomatic crisis for the new American president. என்கிறது AFP.. முந்தைய பனிப்போர் நாட்களில் சோவியத் யூனியனை பிரதான எதிரியாகக் கருதிய பழைய நினைப்பிலேயே ஜோ பைடன் நிர்வாகம், ரஷ்யாவின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்திருப்பது மோசமான ஒரு துவக்கம் என்றால் அதிபரின் பொறுப்பற்ற பேச்சு சிக்கலை இன்னும் பெரிதாக்கியிருக்கிறது.QUAD அமைப்பை முன்னெடுத்துச் செல்கிற மாதிரி கடந்த வாரம் ஜோ பைடன் ஒரு ஷோ காட்டியிருந்தாலும், சீனாவை எதிர்கொள்வதில் ஒரு இரண்டும்கெட்டான் நிலையைக் கடைப்பிடிக்கிற தோற்றமும் இருக்கிறது. இன்றைக்கு அலாஸ்காவில்  சீனர்களோடு பேச்சு வார்த்தையை நடத்தவிருக்கிறார்கள். முந்தைய பதிவில் வட கொரியா தனது எரிச்சலைப் பகிரங்கமாக வெளிப் படுத்தியிருந்ததையும், சீனர்களோடு பேசுவார்களாம்!

“Beijing has an interest, a clear self-interest in helping to pursue denuclearisation of [North Korea] because it is a source of instability. It is a source of danger and obviously a threat to us and our partners,” Blinken told reporters in Seoul after he and the US defence secretary, Lloyd Austin, had met their South Korean counterparts.As a permanent member of the UN security council, China was also duty-bound to fully enforce sanctions imposed on North Korea in response to its nuclear weapon and ballistic missile programmes, Blinken said.என்கிறது இந்தச் செய்தி.   


சீனாவைக் கையாளுவதில் டொனால்ட் ட்ரம்பின் அணுகு முறையை ஜோ பைடனும்  அப்படியே பின்பற்றுகிற மாதிரி ஒரு தோற்றம் இருந்தாலும், மேலே ஒரு 25 நிமிட விவாதத்தில் ஜோ பைடனின் சீனாவுக்கெதிரான QUAD கூட்டணி எடுபடுமா என்பதை அலசுகிறார்கள்.

வடகொரியாவை அடக்கி வைக்கும்படி சீனர்களிடம் மன்றாடுவதிலிருந்தே ஜோ பைடன் நிர்வாகத்தின் china policy ஒரு தெளிவில்லாமல் தள்ளாடுவதும் வெளிப்பட்டிருக்கிறது. நேசநாடுகளின் நம்பிக்கையை மீட்டெடுப்பதில் இதுவரை உருப்படியான செயல்திட்டம் எதுவும் இருப்பதாகவும் தெரியவில்லை. மிகவும் பலவீனமான அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இருக்கப்போகிறாரா என்பதைக் காலம்தான் தெளிவு படுத்தவேண்டும்.  

மீண்டும் சந்திப்போம்.

Tuesday, February 4, 2020

டொனால்ட் ட்ரம்ப்! புதிய கறைபடிந்த வரலாறு படைக்கிறார்!

அமெரிக்க ஜனநாயகத்தில் அதிபர்கள் தகுதிநீக்கம் impeachment செய்யப்படுவது  டொனால்ட் ட்ரம்புக்கு முன்னாலும்  நடந்திருக்கிறது. ஆனால் டொனால்ட் ட்ரம்ப் அளவுக்கு கறைபடிந்த வரலாறு படைத்தவர் எவருமில்லை என்பது பெரும் சோகம். ஆப்ரஹாம் லிங்கன் படுகொலை செய்யப்பட்ட பிறகு, துணை அதிபராக இருந்த ஆன்ட்ரூ ஜான்சன் அதிபரானார். அமெரிக்க பிரதிநிதிகள் சபையோடு முட்டலும் மோதலுமாக இருந்தது, ஒரு கட்டத்தில் அதிபருடைய அதிகாரங்களைக் கட்டுப்படுத்துகிற மாதிரி Tenure of Office Act என்று கொண்டுவரப்படுகிற அளவுக்கும் போனது.அதன்படி செனேட் ஒப்புதல் இல்லாமல் நிர்வாகத்தில் எவரையும் அதிபர் பதவி நீக்கம் செய்ய முடியாது.    


ஆன்டி ஜான்சன் 

1868 இல்அமெரிக்காவில் முதன்முறையாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட அதிபர் இவர் தான். ஆனால் இவரைத் தகுதி நீக்கம் செய்வதற்குச் சொல்லப்பட்ட காரணங்கள் இன்று நடப்பதோடு ஒப்பிட்டால் மிகவும் சப்பை!  இன்றுவரை  அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான அதிபர் என்று அழைக்கப்படும் ஆன்டி ஜான்சனையும் ட்ரம்ப் நல்லவராக்கிவிட்டார். இன்று அந்தப்பெருமை டொனால்ட் ட்ரம்ப்புக்கு வந்து சேர்ந்து விடும் போல இருக்கிறது.

  வீடியோ சொல்வதென்ன? பாருங்கள்  

நூறு ஆண்டுகளுக்கு அப்புறம் தகுதிநீக்கம் செய்யப் படுகிற அளவுக்குப்போன அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் எம் நிக்சன்! 1972 இல் Watergate Scandal பூதாகாரமாக வெடித்தது, அதற்குப்பிறகும் வெவ்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருந்தன.


1974 இல் பிரதிநிதிகள் சபை (காங்கிரஸ்) விவாதித்து தகுதிநீக்க நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு முன்னாடியே   ஆகஸ்ட் மாதம் நிக்சன் அமெரிக்க அதிபர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அப்படி பதவியை ராஜினாமா செய்த முதலாவது அமெரிக்க அதிபர் நிக்சன் தான்! 


Whitewater! 1994 முதலே  பில் க்ளின்டன் மீதான தகுதிநீக்க நடவடிக்கைக்கு, பல  நிதி முறைகேடுகள் குறித்த விசாரணை இருந்தாலும் 1998 வாக்கில் வெடித்த பாலியல் குற்றச்சாட்டுக்கள் தான் அதற்கு வலு சேர்த்தன. 

ஆன்டி ஜான்சன், பில் க்ளின்டன் இருவரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்கள் ஆனாலும் செனெட் சபை விசாரணையில்  மூன்றில் இருபங்கு வாக்குகள் இல்லாததால், தப்பித்தார்கள் என்ற வரிசையில் இன்று டொனா ல்ட் ட்ரம்ப் மூன்றாவது நபராகச் சேர்கிறார். முந்தைய இருவரை விட மிக வித்தியாசமான விபரீதமான விடுவிப்பு இது என்பதிலும் டொனால்ட் ட்ரம்ப் ஒரு புதிய கறைபடிந்த வரலாறு படைக்க இருக்கிறார்.

சென்ற வாரம் செனெட்டில் புதிய ஆவணங்கள்,புதுசாட்சிகள் எதையும் அனுமதிக்க முடியாது என்றான போதே, செனெட்டில் மூன்றில் இருபங்கு வாக்குகளோடு தகுதி நீக்கம் செய்யப்படுகிற வாய்ப்பும் இல்லாமல் போனது. டொனால்ட் ட்ரம்ப், முந்தைய இருவர் மாதிரியே தப்பிக்கிறார் என்பது அதிகாரபூர்வமாக இன்று தெரிய வரும்! 

கறைபடிந்த புதியவரலாறு படைக்க டொனால்ட் ட்ரம்ப் தயாராக இருக்கிறார்! அப்புறமென்ன?

மீண்டும் சந்திப்போம்.       

Wednesday, January 1, 2020

இன்று கவனிக்க வேண்டிய செய்திகள்!

How Pakistan's foreign policy pendulum swung in 2019 இப்படி ஒரு வேடிக்கையான செய்திக்கட்டுரை ஒன்றை பாகிஸ்தானிய நாளிதழ் ட்ரிபியூனில் வாசித்ததில் கொஞ்சம் வேடிக்கையாகப் பொழுது போனது. வெளியுறவுக்கொள்கை என்பது கடிகாரப் பெண்டுலம் போல ஒரே சீராக இங்கும் அங்கும் ஆடிக் கொண்டிருப்பதல்ல என்ற ஒரு அடிப்படையைச் சுட்டிக் காட்டுவதற்காக மட்டுமே மேற்கோள் காட்ட விரும்பினேன். For former ambassador Abdul Basit, the biggest gains Pakistan made in 2019 were with regards to ties with Gulf states and the UN summit. “It is very difficult to measure foreign policy success. Especially, in a year’s time frame, you can’t see any tangible results. But the two main gains that we made this year are regaining Saudi and UAE trust, which we lost somewhat after our decision not to support the Yemen intervention, and Imran Khan’s UN speech. Both of these have helped Pakistan gain some space.”


Shamshad also suggested Imran and his government have had a positive impact on the China-Pakistan Economic Corridor and by extension, ties with Beijing. “Previous rulers tried to milk CPEC for political dividends. It was also initially confined to energy and infrastructure, but Imran has broadened it to incorporate schemes in Pakistani public interest, such as those that would generate employment.” என்று சொல்வதெல்லாம் நகைப்பதற்காக மட்டுமே என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.  

த்ஸ் 


சேகர் குப்தா இந்த 16 நிமிட வீடியோவில் துருக்கியின் எர்துகானும் மலேசியப்பிரதமர் மஹாதிரும் கோலாலம்பூரில் OICக்குப் போட்டியாக இன்னொரு இஸ்லாமிய அமைப்பை உருவாக்க முனைந்ததில் பாகிஸ்தானும் ஆவலாக உள்ளேநுழைந்தது.  சவூதி அரேபியா பின்னாலிருந்து கையை முறுக்கவும் பாகிஸ்தான் வாலறுந்த நரி கதையாக  கோலாலம்பூர் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தவிர்த்ததை சேகர் குப்தா கொஞ்சம் விரிவாகவே விளக்குகிறார். 

   

ஜெனெரல் பிபின் ராவத் இந்தியாவின் முப்படைகளின் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டு இருக்கிறார். வழக்கம்போல காங்கிரஸ் கட்சி இதற்கும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது என்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

   
ராஜ்யசபா டிவியில் கடந்த 25 ஆம் தேதியன்று Chief of Defence Staff என்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெறும் யோசனை பேச்சாகவே இருந்த விஷயத்துக்கு 2019 சுதந்திரதின உரையின் போது பிரதமர் நரேந்திர மோடி செயல் வடிவம் கொடுத்துப் பேசியதை அடுத்து, அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல், பதவிக் காலம் மூன்றாண்டுகள்/ அல்லது 65 வயது நிறைவு என விதிகளில் திருத்தம் என்பதோடு தலைமைத் தளபதியின் பணி என்ன என்பதும் தெளிவாக வரையறை செய்யப்பட்டது. இந்த விஷயங்களைக் குறித்து ஒரு தெளிவான விவாதம், பாதுகாப்பு விவகாரங்களில் அனுபவம் உள்ளவர்களோடு நடத்தப் பட்டது என்றால் அது ராஜ்ய சபா டிவியில் மட்டுமே. விவாதநேரம் 26 நிமிடங்கள்.

உலக அளவில் 4வது பெரிய ராணுவத்தை வைத்திருக்கும் நாடு இந்தியா. முப்படைகளை காலத்துக்கேற்றபடி நவீனப்படுத்தவேண்டும், செயல் திறனை மேம்படுத்தவேண்டும் என்பதன் முன்னோட்டமாக சில பரீட்சார்த்த முயற்சிகள் ஏற்கெனெவே தொடங்கி விட்டன அதன் ஒருபகுதி தான் CDS என்றொரு பதவி, ராணுவ விவகாரத்துறை என்று ஏற்கெனெவே இருக்கும் 4 துறைகளோடு 5வதாக உருவாக்கப்பட்டிருப்பது.

வெளியுறவுத்துறை விவகாரங்களைப் பேசுகிற இந்தப் பக்கங்களில் ராணுவ விவகாரங்களைப் பேசுவானேன்? ஒரு அரசு, நிர்வாகம், பொருளாதாரம், உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதி  என்றெல்லாம் பேசுகிற இடங்களில் ராணுவம் செயல்திறனுடன் தயார்நிலையில் இருக்க வேண்டியதைப்  பேசாமல் இருக்க முடியாது. ஏன் என்று காரணங்களை யோசித்து வையுங்கள், தொடர்ந்து பேசலாம்.

மீண்டும் சந்திப்போம்.            

Wednesday, December 4, 2019

டொனால்ட் ட்ரம்ப்பாக இருப்பது மெத்தக் கடினம்தான்!

ஒரு அரசியல்வாதியாகப் பேசுவதென்பது வேறு! அதே நபர்  ஒரு நாட்டின் அதிபராக இருந்து பேசுவதென்பது வேறு! டொனால்ட் ட்ரம்ப்புக்கு மட்டும் அந்த நுண்ணிய வேறுபாடெல்லாம் பொருந்தாது போல இருக்கிறது! அமெரிக்க அதிபராக இருப்பதால் யாரையும், என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று டொனால்ட் ட்ரம்ப் நினைத்துக் கொண்டிருக்கிற மாதிரித்தான் போகிற இடங்களில் எல்லாம் ஒரண்டையை இழுத்துக் கொண்டு வருகிறார். NATO ராணுவக்கூட்டின் 70வது பிறந்த தினத்துக்காக லண்டனுக்குப் போன டொனால்ட் ட்ரம்ப் அங்கே பிரெஞ்சு அதிபர் எம்மானுவேல் மேக்ரோனுடன் ஒரண்டையை இழுத்திருக்கிறார். கேலிப்பொருளாகவும் மாறியிருக்கிறார்!


This happens at every NATO summit with Trump. Every G7. Every G20. The US President is mocked by US allies behind his back.

ட்ரம்ப் எங்கேபோனாலும் இதே கதைதான்!  முதுகுக்குப் பின்னால் கேலிசெய்யப்படுவது மட்டும்தான் மிச்சம்!
 

CNN சேனலுக்கும் டொனால்ட் ட்ரம்புக்கும் ஏற்கெனெவே ஏழரை. இப்போது கொண்டாடாமல் வேறு எப்போது கொண்டாடுவது?அதனால்  ஜெர்மன் சேனல் இதை எப்படிச் சொல்கிறார்கள் என்று பார்த்து விடலாம். வீடியோ 7 நிமிடம் 


In one moment of unscripted exasperation at Nato, Macron showed Trump what the whole world thinks of him now என்று தலைப்பிட்டு கிளெமென்ஸ் மிஷல்லோன் The Independent இல் எழுதியிருக்கிற விமரிசனம் தலைப்பிலேயே விஷயத்தைச் சொல்லி விடுகிறது. 


ராபர்ட் டி நிரோ டொனால்ட் ட்ரம்ப்பை போலி என்று சொல்லி முடித்துவிடுவதைப் பார்க்காமல் பதிவை முடிக்க முடியுமா? டொனால்ட் ட்ரம்ப்பாக இருப்பது மெத்தக் கடினம்தான்! மறுக்க முடியாது! டொனால்ட் ட்ரம்ப்பை சகித்துக் கொள்ளமுடிவது முடியவே முடியாத அளவுக்குக் கடினம் தான்!

ராஜீய உறவுகளில் ஒரு நாசூக்கு, கண்ணியமான வார்த்தைகள், ஏற்றுக்கொள்ள முடிகிற அளவுக்குக் கண்ணியமான வார்த்தைகள் அவசியமே இல்லை என்ற புதுவிதமான விஷயத்துக்கு  டொனால்ட் ட்ரம்ப் முன்னோடியாக இருக்கிறார் என்பது அமெரிக்காவின் பரிதாபம்!

மீண்டும் சந்திப்போம்.        
  

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை