Wednesday, October 2, 2019

சீனா எழுபது! சில குறிப்புக்கள்! #02

சீனா எழுபது என்று சொன்னாலும், அதன் கம்யூனிச சிந்தனைகளுக்கான அடித்தளம்  May Fourth Movement 1919 வாக்கிலேயே  போடப் பட்டுவிட்டது. 1921 இல் தான் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி முறைப்படி தொடங்கப்பட்டது. ஆரம்ப நிலையில் வெறும் 50 உறுப்பினர்களே இருந்தார்கள். குவோமின்டாங் கட்சிக்குள் இடதுசாரிகளாக ஆரம்பகாலத்தில் கம்யூனிஸ்டுகள் இருந்தார்கள், தலைவர் சன்யாட் சென் 1925 மார்ச் மாதம் இறந்தபிறகு  குவோமின்டாங் கட்சிதலைவராக சியாங் கே ஷேக் தலைவரானார். சியாங் கே ஷேக் தலைவரான பிறகு கம்யூனிஸ்டுகளும் ஆதரவாளர்களும் பல இடங்களில் வேட்டையாடப்பட்டார்கள் என்றாலும் கம்யூனிஸ்டுகள் குவோமின்டாங்குடன் (KMT) இணக்கமாக ஒரு அரசில் (Republic of China சுருக்கமாக ROC)   அங்கம் வகித்தார்கள். 1927 இல்  KMT கம்யூனிஸ்டுகளை கட்சியிலிருந்து வெளியேற்றிய பிறகு KMT அரசுக்கும் கம்யூனிஸ்டுகள் வசமிருந்த பகுதிகளுக்கும் இடையில் ஒரு உள்நாட்டு யுத்தம் தொடங்கியது. கம்யூனிஸ்டுகளிடம் தோற்று சியாங் கே ஷேக் தைவான் தீவுக்குத் தப்பியோடி அங்கே ROC தான் உண்மையான சீனக்குடியரசு என்று அறிவித்தார்.இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரணடைந்ததும் அமெரிக்கா சீனாவை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாததும் சீனக் கம்யூனிஸ்டுகளுக்கு வரலாற்று ரீதியாக, மிகவும் சாதகமாக அமைந்த விஷயங்கள். 1949 அக்டோபர் 1 அன்று  மாசேதுங் Peoples Republic of China  அமைக்கப்பட்டதாக  அறிவித்தது மட்டுமே தற்கால சீன வரலாறாகத் தொடங்குகிறது. 



1976 செப்டெம்பரில் மாவோ மரணமடைகிற வரையில், சீன மக்கள் அனுபவித்த துயரம் சந்தித்த பேரழிவு சொல்லி மாளாது.Great Leap Forward என்றும் கலாசாரப் புரட்சி என்று மாசேதுங் அடித்த கூத்துகளில் பலகோடி சீனர்கள் காவு கொடுக்கப் பட்டார்கள் என்பது ரஷ்யாவின் ஸ்டாலினை மிகவும் மிஞ்சிய சாதனை என்றால் தன்னுடைய அண்டைநாடுகள் அத்தனையோடும் எல்லைப் பிரச்சினைகளை சீனா இன்றும் உயிரோடு வைத்திருக்கிறது என்பது அண்டைநாடுகளைப் பிடித்த சோதனை! மற்றப்படி மாவோ காலத்தைய சீனா உலக அரசியலில் தலையிடவும் இல்லை, பெரிய சக்தியாகவும் அச்சுறுத்தலாகவும் வளரவில்லை என்பது சீனா எழுபது என்று சொல்வதில் முதல் 29 வருடகால சரித்திரச் சுருக்கம்!  


1978  முதல் 1992 வரையிலான டெங் சியாவோ பிங் காலம் தான் சீனா எழுபதில் பொற்காலம். ஏழை, விவசாயிகளுடைய பிரச்சினை எதுவும் தீராமல், தொழில்கள் எதுவும் வளராமல் வறுமையின் பிடிவிலகாமல் இருந்த  மாவோ காலத்தைய தேக்கங்களை உடைத்து, அன்னிய மூலதனத்தைச் சீனாவுக்குள் அனுமதித்து தொழில்மயமாக்கிய  காலம். வர்த்தக உபரியாக ஒன்றேமுக்கால் லட்சம் கோடி அமெரிக்க டாலர்களை அமெரிக்க அரசின் ட்ரஷரி பத்திரங்களிலேயே முதலீடு செய்கிற அளவுக்கு சீனப்பொருளாதாரம் மிகவேகமாகப் புலிப்பாய்ச்சலில் வளர்ந்தகாலம். சீனமக்களுக்கு  இதனால் பாலாறும் தேனாறுமாக ஓடிக்கொண்டு இருப்பதாக அர்த்தமல்ல. 1989 டியனான்மன் சதுக்கத்தில் மாணவர் போராட்டம் முப்பதாண்டுகளுக்கு முன்னால் நசுக்கப்பட்ட ஒற்றைச் சம்பவம் தவிர இந்த காலகட்டத்தில் வேறு கறைகள் இல்லை.கம்யூனிஸ்ட் கட்சி தொழில் விவகாரங்களில் தலையிடாமல் இருந்ததும் அடக்கியே வாசித்ததும் டெங் சியாவோ பிங் காலத்தின் மிகப் பெரிய சாதனை என்று சொல்லலாம். தவிர  மாவோ காலத்து கம்யூனிஸ்ட் கட்சி சீனமக்களுடைய அதிகபட்ச வெறுப்பைச் சம்பாதித்து வைத்திருந்ததும் கூட, அடக்கி வாசித்ததற்கான காரணமாக இருக்கலாம் என்பது சீனா எழுபதின் 2ஆம் கட்டம்! சுருக்கமாக. 

   
டெங் சியாவோ பிங் மறைவுக்குப் பிந்தைய சீனா எப்படி இருக்கும் என்ற கேள்வியோடு வெளியான டைம் இதழின் அட்டைப்படம்!  எப்படி இருக்கிறது என்று சீனா எழுபதின் 3வது கட்டமான   சமகால நிகழ்வுகளைப் பார்ப்பதற்கு முன்னால், டெங் சியாவோ பிங் இன்றைக்கு நினைக்கப்படுகிறாரா? மதிக்கப்படுகிறாரா? இந்தக் கேள்விகள் தற்போதைய அரசியல் தலைமைக்கு அத்தனை உகப்பானது இல்லை என்பது சில செய்திகளில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. சென்ற ஆகஸ்ட் 22 அன்று டெங் சியாவோ பிங்கின் 115 வது பிற்ந்த தினம்.அவருடைய பிறந்த ஊரில் அவரது வெண்கலச் சிலைக்கு மரியாதை செய்யப்பட்ட கையோடு சில ஊடகங்களிலும் wechat வழியாகவும்  சீன மக்கள் அவருடைய எழுத்துக்களைத் தேடிப்படிக்க ஆரம்பித்தது சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அத்தனை  உகப்பானதாக இல்லையாம்!

In some media, the birthday was an occasion to revisit Deng’s ideas and writings.But a discussion soon bloomed across social media that the authorities found unacceptable, and a hasty wave of deletions across WeChat, Weibo and other platforms ensued.

At issue was a post made to “People’s Reading” and “People’s Daily Press”  both official WeChat public accounts operated by the People’s Daily, the flagship newspaper of the Chinese Communist Party. That post, called “Deng Xiaoping Abolishes the Lifelong Tenure System for Leaders”  dealt with the now very sensitive issue of term limits for national leaders.  


Sensitive why? Because while Deng Xiaoping, still greatly respected as a reformer, had made it a priority to ensure that national leaders did not serve indefinitely and run the risk of over-concentrating power in their hands and sapping vitality from the system, Xi Jinping oversaw the removal of constitutional term limits in March 2018, which some within China regard as a dangerous slide back into the painful past முழுச்செய்தியும் இங்கே 

DF-41 ஏவுகணை பற்றி ஒரு வீடியோ 

சீனா எழுபது! நிகழ்ச்சியில் சீனா தனது ராணுவ வலிமையைப் பறை சாற்றிக் கொள்கிற விதமாகவே அமைந்திருந்தது. நேற்றைய நிகழ்ச்சியில் 12000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கக் கூடிய DF-41 கண்டம் வீட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையும்(ICBMs)   அதன் முந்தைய வெர்ஷன்களும் பங்கு  கொண்டது அமெரிக்காவுக்கு விடப்பட்ட சவாலா? 


இருக்கலாம்! சீனத்தின் சீடரான  வடகொரியச் சண்டியர் வேறு, அமெரிக்காவுடன் வருகிற 5ஆம் தேதி அடுத்த சுற்றுப்பேச்சுவார்த்தை என்று அறிவித்துவிட்டு நேற்று நீர்மூழ்கிக்கப்பல்களில் இருந்து ஏவக்  கூடிய  அணு ஆயுதங்களோடு கூடிய ஏவுகணை ஒன்றைப் பரிசோதனை செய்து பார்த்திருக்கிறார் .

சீனா எழுபது! பேசுவதற்கு நிறைய இருக்கிறது. தொடர்ந்து பார்க்கலாம்!

மீண்டும் சந்திப்போம்.    
      
    

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை