Saturday, September 14, 2019

சீனப் பூச்சாண்டிகளில் எந்த அளவு உதார்? எந்த அளவு உண்மை?

சீனாவைக் குறித்து நான் படித்த முதல் புத்தகம் வெ.சாமிநாத சர்மா எழுதிய சீனாவின் வரலாறு தான்! என்னுடைய பள்ளிப் பருவ வாசிப்பு அது. அந்தப்புத்தகமும் கூட 1949 சீனப்புரட்சி உடன் முற்றுப்பெறுவதாக! முந்தைய காலகட்டங்களைப் பற்றி உபயோகமான வரலாற்றுக்கு குறிப்புக்களுடன் இருந்ததா என்பது இன்றைக்கு எனக்கு நினைவில் இல்லை. சரித்திரக் கதைகளில் சீனக்  கடற்கொள்ளைக்காரர்கள் பற்றியும் கொஞ்சம் படித்ததுண்டு. இன்றைக்கும் சீனக்  கம்யூனிஸ்ட் கட்சி, தன்னுடைய ஆதிக்கக் கனவுகளுக்காக கடற் கொள்ளையர் என்று சொல்ல முடியாத சண்டியர்களை பயன்படுத்திவருவதைப் பற்றி எந்த சரித்திர புத்தகம் நமக்கு சொல்லிக் கொடுக்கப் போகிறது?


இணையத்தைவிட மிகச் சிறந்த உபாயம் இருக்கிறதா? இந்த 8 நிமிட வீடியோவில், வழக்கமான கடற்படை, கம்யூனிஸ்ட் கட்சியின் சென்ட்ரல் மிலிட்டரி கமிஷன் கீழ் இயங்கும் coast guard மாதிரி ஒரு படை, அதுபோக ஒரு விதமான கடல் பிராந்திய சண்டியர்களையும் பயன்படுத்திவருவதை சுருங்கச் சொல்வதைப் பாருங்கள்!  இவர்களுடைய பிரதான வேலையே சீன போடுவது, வம்புச்சண்டைக்கு வலிய இழுப்பது மட்டும் தான்! இப்போதைக்கு சீனத்துச் சண்டியர் வெட்டி உதார் விடுவதாய்ப் புரிந்துகொள்ள முடிந்தாலும்,அது  எப்படி எப்போது மாறும் என்பதைக் கணிக்க முடியாது இல்லையா?

  
Soldiers of the Indian Army and People’s Liberation Army (PLA) of China, on Wednesday, were engaged in a confrontation near the border in Ladakh. The faceoff between the soldiers of the two armies occurred near the northern bank of the Pangong lake, reported the news agency ANI.
The tensions, however, eased after the delegation-level talks between two sides there. De-escalated and disengaged fully after delegation-level talks yesterday. சீனா இப்படி அத்துமீறி நடந்து கொள்வது ஒன்றும் புதிதல்ல. இந்தோ சீனி பாய் பாய் என்று கோஷம் எழுப்பிக் கொண்டிருந்த நேரு காலத்தில் இருந்தே தொடர்வதுதான்! இங்கே ஒரிஜினல் ராணுவத்தினருடன் கைகலப்பு என்றிருப்பது எல்லா இடங்களிலும் அப்படியே இருப்பதில்லை. சீனர்கள் எங்கிருந்தாலும் அவர்களைத் தங்களுடைய கைப்பாவையாக ஆட்டிப்படைப்பதில் சீன அரசுக்கு இருக்கிற சௌகரியம் உலகில் வேறெந்த நாட்டிற்காவது இருக்குமா என்பதும்  சந்தேகமே! வரலாற்று ரீதியாக கிழக்கத்திய நாடுகளில் ஒரு பொதுவான அம்சம், முன்னோர்களுக்கு கட்டுப்படுவது, அரசுக்கு கட்டுப்படுவது என்பது. சீனர்களிடம் 2 வது குணம் கொஞ்சம் தூக்கல் என்று வைத்துக் கொள்ளலாமா?  

இன்றைய சீனா எப்படி ஒரு கந்துவட்டி ஏகாதிபத்தியம் என்று  மாறியிருக்கிறது என்பதை ஒரு சின்னப் பதிவில் சொல்லி முடித்து விடமுடியாது. #BRI ஒரேபெல்ட் ஒரே ரோடு என்கிற #OBOR ஒருலட்சம் கோடி டாலர் கனவுத்திட்டம் முட்டுச் சந்தில் நிற்கிற கதையைக் கொஞ்சம் தெரிந்து கொண்டால், ஒரு மாதிரிக் குன்சாவாக புரிந்துகொள்ள முடியலாம். இந்த 44 நிமிட வீடியோவில் ஸ்டீவ் பானன் சீன டிராகனின் கொடூரமான நகங்கள் “Claws of the Red Dragon” என்று அவர் எடுத்திருக்கிற படத்தைப்பற்றி பேசுகிறார். சிலகாலத்துக்கு முன்னால் Huawei  நிறுவன நிர்வாகி கனடாவில் கைது செய்யப் பட்டது, அதைத்தொடர்ந்து சீன அரசு செய்த அடாவடி என்னவென்று நினைவிருக்கிறதா? மேரி ஷெல்லி எழுதிய நாவல் Frankenstein (புதுமைப்பித்தனின் அற்புதமான மொழிபெயர்ப்பில் பிரேதமனிதன் ஆக வந்தது) கதையில் வருகிற மாதிரி கிளிண்டன், ஒபாமா,  என்று தொடர்ச்சியாக அமெரிக்கா வளர்த்துவிட்ட  பூதமாக சீனா இன்றைக்கு வளர்ந்திருக்கிறது என்கிறார் ஸ்டீவ் பானன்!
இன்று அமெரிக்காவுக்கு  மட்டுமல்ல, ஆசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக சீனத்துச் சண்டியர் உதார் மேல் உதாராக வீட்டுக் கொண்டிருக்கிறார். ஆனாலும் ஸ்டீவ் பானன் சீனக்  கம்யூனிஸ்ட் கட்சியும், சீன அரசும் காகிதப்புலி தான் என்கிறார்! டொனால்ட் ட்ரம்ப்பை ஆதரிக்கிற மாதிரிப் பேசினாலும், இந்த விவகாரங்களில் பரிச்சயமும் அனுபவமும் உள்ளவர் என்பதால் கொஞ்சம் கவனித்துக் கேளுங்களேன்!
மீண்டும் சந்திப்போம்.         

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை