Showing posts with label CPEC. Show all posts
Showing posts with label CPEC. Show all posts

Monday, February 22, 2021

இந்தியா சீனா பாகிஸ்தான் ::: #CPEC #OBOR என்ன நிலையில் இருக்கிறது?

ஐந்தாண்டுகளுக்கு முன்னால் சீனா பாகிஸ்தான் எகனாமிக் காரிடார் CPEC, ஷி ஜின்பிங்கின் கனவுத் திட்டமான ஒரே பெல்ட் ஒரே ரோடு CPECஇன் முக்கியமான பகுதியாகத் தம்பட்டம் அடிக்கப்பட்டதே! நினைவிருக்கிறதா? இப்போது அந்தக்கனவுத் திட்டம் என்ன நிலையில் இருக்கிறது? 

  

The Khan government has been now striving hard to work hand in hand with their Chinese counterparts, hoping to overcome any damage done from past criticisms of CPEC. But unfortunately, more than the current ruling party’s unaddressed reservations about CPEC, it is their inefficiency and incompetence that is becoming the cause of bottlenecks in the implementation of the multibillion dollar projects, coming precisely at a time when Chinese investors are growing less interested in unprofitable but politically correct projects. This is why the road to CPEC becomes longer and longer by the day என்று டிப்ளமாட் தளத்தில் எழுதி இருக்கிறார் ஒரு லாகூர் பத்திரிகையாளர். காசுக்கு ஏங்கித் தவிக்கும் நாடாக, சீனாவை மட்டுமே எல்லாவற்றிற்கும் எதிர்பார்த்துக்கிடக்கும் client state ஆகக் குறுகிப்போனபிறகு பாகிஸ்தான் செய்வதற்கு வேறென்ன இருக்கிறது?


சீனா கந்துவட்டி ஏகாதிபத்தியமாக வளர்ந்து நிற்கிற  நிலையில், கடன்படுகிற நாடுகளின் கதி என்னவாகும்? ரொம்பதூரம் 
தேடவேண்டியதே இல்லை. வெகு அருகாமையிலேயே இருக்கிறது. 


ஸ்ரீலங்கா
 அனுபவம் கண்முன்னால் இருக்கவே இருக்கிறது. கெட்டபிறகும் கூட சீனாவின் காலடியில் விழுந்து கிடக்கவே விரும்புகிற ஸ்ரீலங்கா ராஜபட்சே சகோதரர்கள் போலவே, கிடப்பதைப் போல, மீள முடியாமல் கிடக்க வேண்டியதுதான்! இந்தியாவிடம் வாங்கிய 3000 கோடி ரூபாய் கடனை எங்கிருந்து வாங்கித் திருப்பிக் கொடுத்தார்களாம்? ராஜபட்சே சகோதரர்கள் கொஞ்சம் புத்திசாலித்தனமாக, சீனக் கடன் புதைகுழிக்குள் அவர்கள் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டுமானால், இந்தியா அதை இலவசமாகக் கொடுத்துவிட வேண்டுமென பேரம் பேசுவதைக் கூட சீனா சகித்துக் கொள்ள முடியாமல் எச்சரித்திருக்கிறது.

இன்னொருபக்கம் ....

அமெரிக்க வர்த்தகத் தடைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று சீனா கோரிவருவதன் பின்னணியில் ;;; ஹுவாவே: டிரம்ப் விதித்த அமெரிக்கத் தடைகளால் பன்றி வளர்ப்பில் கவனம் செலுத்தும் சீன செல்பேசி நிறுவனம் என்று பிபிசி தமிழ் செய்தித்தளம் சொல்கிறதே, அதையும் பார்த்துவிடலாமா?

மீண்டும் சந்திப்போம்.  

Saturday, December 12, 2020

#சீனப்பெருமிதம் CPEC போல வெறும் மாயை தானா?

நண்பர் ஸ்ரீராம் சிலமாதங்களுக்கு முன்னால் ஒரு வாட்சப் வீடியோவை என்னுடன் பகிர்ந்து கொண்டிருந்தார். அதில் ஒரு சீன வங்கி கணக்கில் இருப்பாகக் காட்டிய தங்கக் கட்டிகள் அனைத்துமே போலியானவை என்பது அதன் சாரம்! இங்கே சீனாவைப் பற்றி வெளிவரும் செய்திகளில் எவ்வளவு உண்மை அல்லது நம்பத்தகுந்தவை? எவ்வளவு சதவீதம் காசு கொடுத்து அடிக்கப்படும் வெட்டித் தம்பட்டம்? சீனப் பொருளாதாரம் உண்மையிலேயே காசு கொழிக்கிற ஒன்றுதானா? இந்தக்கேள்விகளுக்கு விடை காண்பது மிகக் கடினமானதுதான்! ஆனால் சில வாரங்களுக்கு முன்னால் Ant Group இன் ஜாக் மா சீன வங்கிகள் பெரும்பாலும் நகை அடகுக்கடைகள் போலத் தான் செயல்படுவதாக ஒரு கருத்தைப் பொதுவெளியில் வைத்தார். சர்வதேச நடைமுறைகள் எதுவுமே பின்பற்றப் படாத, நம்புவதற்கு எந்த அளவுகோலுமே இல்லாத most unprofessional ரகம் என்பதுதான்  ஜாக் மா சொன்னதன் பொருள்.  34 பில்லியன் டாலர் அளவுக்கு பங்குச் சந்தையில் IPO வெளியிட இருந்த Ant Group இன் முயற்சி சீன அரசால் தடுத்து நிறுத்தப்பட்டது. சீன அதிபர் ஷி ஜின்பெங்கின் நேரடித்தலையீடு அதிலிருந்தது என்று செய்திகளும் வெளிவந்ததை நம்மில் எத்தனை பேர் கவனித்திருப்போம்?   


இந்த 48 நிமிட வீடியோவில் முதல் ஒன்பதரை நிமிட தலைப்புச் செய்திகளைத் தள்ளிவிட்டால், 10வது நிமிடத்தில் இருந்து சீன அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் எவையெல்லாம் வாங்கிய கடனைத் திருப்பித் தர முடியாமல் தள்ளாடுகின்றன என விரிவாகச் சொல்வதைப் பார்க்கலாம் சீன அரசு இந்த நிறுவனங்களைக் கைகழுவ முடிவெடுத்து விட்டதாகவே செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.   இவைகளில் முதலீடு செய்திருக்கும் உள்நாட்டு /வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கதி என்ன? 



அதுவும் போக எதியோப்பியாவில் நடக்கும் உள்நாட்டுக் கலவரங்களில் டிக்ரே பகுதியில் #BRI ஒரே பெல்ட் ஒரே ரோடு திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட சீன முதலீடுகள் அநேகமாகக் காணாமல் போன மாதிரித்தான்! அங்கே வேலை செய்துகொண்டிருந்த சீன ஊழியர்கள் 600 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்கள் என்பது செய்தியின் ஒருபக்கம் மட்டுமே! மேலும் விரிவாக இந்தப் பிரச்சினையைத் தெரிந்துகொள்ள 

ஏற்கெனெவே பாகிஸ்தானில் #CPEC இந்த கீழ் செய்யப்பட்ட  செலவுகள், திட்டங்கள் அப்படியே அந்தரத்தில் நிற்கிற கதை தெரியுமில்லையா? பாகிஸ்தானுக்கு இந்தக் கடனை அடைக்கிற சக்தி அறவே இல்லை. மேலும் மேலும் சீனாவிடம் ரொக்கக் கடனுக்காக பாகிஸ்தான் கையேந்திநிற்பது தனிக்கதை. 

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கிரஸ் அடுத்த வருடம் ஜூனில் நடக்க இருக்கிறது. அதில் ஷி ஜின்பெங் என்ன செய்யப்போகிறார்? சேர்மன் மாவோ மாதிரி சேர்மன் ஷி ஜின்பெங் ஆக ஆயுட்காலத் தலைவராகப் போகிறாரா? அதிரடி மாற்றங்கள் ஏதேனும் வருமா என்பது ஒரு பக்கம்! சீன விவகாரங்களில் இதுவரை குழப்பமான நிலைபாட்டையே எடுத்து வந்திருக்கும் ஜோ பைடன் அமெரிக்க அதிபர் பொறுப்பேற்ற பிறகும் அதே மாதிரித் தான் இருக்கப்போகிறாரா?

மனிதர்களால் ஒரு சரியான தீர்வைக் காண முடியாத தருணங்களில் எல்லாம் காலம் தான் முடிவான   தீர்வைக் கொண்டு வந்திருக்கிறது. இந்தியா மட்டும் தான் சீனாவை எதிர்த்து நிற்க வேண்டுமென்று சீனர்களால் வெவ்வேறு வகையில் சீனாவால் பாதிக்கப் பட்ட தெற்காசிய நாடுகளும், அமெரிக்க ஒன்றியமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிற இந்த நிலையில் காலம் மட்டுமே ஒரு சரியான தீர்வைக் கொண்டு வர முடியுமோ என்னவோ?

மீண்டும் சந்திப்போம். 

Sunday, November 15, 2020

மீண்டும் #RCEP இன்றைய செய்தியும் அதன் பின்னணியும்!

The Regional Comprehensive Economic Partnership (RCEP) என்பது சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான ஒரு அமைப்பு இதில் தென்கிழக்காசிய நாடுகளான ப்ருனே, கம்போடியா, இந்தோனேஷியா , லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர்,  தாய்லாந்து, மற்றும் வியட்நாம் ஆகிய பத்து நாடுகளுடன்  ஏற்கெனெவே சுதந்திர வர்த்தக உடன்பாடு உள்ள ஐந்து நாடுகளான சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, மற்றும் நியூசிலாந்து ஆகியவையும் சேர்ந்த  இன்று ஒரு சுதந்திர வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திட்டிருக்கின்றன. வியட்நாம் ஏற்பாடு செய்திருந்த இணையவழி மாநாட்டில் இந்த வர்த்தக ஒப்பந்தம் எட்டப் பட்டிருக்கிறது என்பது கொரோனா வைரஸ் பரவலுக்குப் பின்னால் சீனாவுக்குக் கிடைத்த இன்னொரு வெற்றி என்றே சொல்ல வேண்டும். முதலாவதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோற்றிருப்பது  என்பதைத்  தனியாகச் சொல்லவும் வேண்டுமா?


ASEAN (முதலில் சொன்ன 10 தென்கிழக்காசிய நாடுகள்) உடன் இந்தியாவுக்கு FTA சுதந்திர வர்த்தக உடன்பாடு ஏற்கெனெவே இருந்து வருவதில் இந்தியாவும் RCEP பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க ஆரம்பித்தது. சென்று வருடம் இதே நவம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி  RCEP மாநாட்டுக்குச் சென்று வந்ததும், வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திட மறுத்துத் திரும்பியதும் நினைவிருக்கிறதா?


"Under the current global circumstances, the fact the RCEP has been signed after eight years of negotiations brings a ray of light and hope amid the clouds," said Chinese Premier Li Keqiang after the virtual signing."It clearly shows that multilateralism is the right way, and represents the right direction of the global economy and humanity's progress."

The agreement to lower tariffs and open up the services trade within the bloc does not include the United States and is viewed as a Chinese-led alternative to a now-defunct Washington trade initiative.

The RCEP "solidifies China's broader regional geopolitical ambitions around the Belt and Road initiative", said Alexander Capri, a trade expert at the National University of Singapore Business School, referring to Beijing's signature investment project that envisions Chinese infrastructure and influence spanning the globe."It's sort of a complementary element."

The agreement to lower tariffs and open up the services trade within the bloc does not include the United States and is viewed as a Chinese-led alternative to a now-defunct Washington trade initiative என்கிறது இன்றைய செய்தி 

இங்கே தமிழகத்தில் திருவள்ளுவரை வைத்து வெட்டி அக்கப்போர்கள் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் கூட பாங்காக்  நகரில் RCEP பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பின் வர்த்தக ஒப்பந்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட மறுத்துவிட்டு வந்திருப்பது குறித்தான விவாதங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த ஒப்பந்த விஷயத்தில் அரசு என்ன முடிவெடுக்கப் போகிறது என்பது தெரியாமலேயே ராகுல் காண்டி, சோனியா காண்டி பரிவாரங்களோடு இந்தியத் தொழில்துறையின் ஒரு பகுதியும் விவசாயிகளும் எதிர்ப்புக்குரல் எழுப்பிக் கொண்டிருந்ததை, முரண் பட்ட கருத்துக்களை, தேடிப்  படித்துக் கொண்டிருந்ததில் நேற்றைய பொழுதின் பெரும்பகுதி செலவானது. 

ஒரு அனுபவமுள்ள  ஊடகக்காரராக The Print தளத்தில் சேகர் குப்தா, பிரச்சினையின் ஆணிவேராக இருப்பது எது என்று சிலவிஷயங்களை இந்த 28 நிமிட வீடியோவில் தெளிவுபடுத்தியிருக்கிறார். அவர் சொல்வதில் கவனிக்க வேண்டிய விஷயமாக நம்முடைய தொழில் துறை competitive ஆக மாறவோ,  தரமான உற்பத்திக்குத் தயாராகவோ இல்லாமல், சர்வதேச சந்தைகளைப் பிடிப்பதற்கு லாயக்கில்லாதவையாக இருப்பது முக்கியமானது. அரசின் பாதுகாப்பில் அவர்கள் இப்போதிருக்கிற நிலையிலேயே நீடிக்க விரும்புகிறார்கள் என்பது பரிதாபம் Make in India இன்னும் வெறும் கனவாக இருப்பது ஏன் என்பதை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நேரம் இது.

Modi’s RCEP move shows sound political judgement. Don’t scoff, it’s rare these days. Pulling out of RCEP was not only an economic decision. It involved taking a call not just India’s foreign policy but also on India’s role in evolving world என்கிறார் யோகேந்திர யாதவ். ஆம் ஆத்மி கட்சியில் இருந்து, பின் வெளியே வந்து அரசியல் விமரிசகராகத் தொடரும் அதே யோகேந்திர யாதவ் தான்! 

மேலே பழைய பதிவில் மூன்று வீடியோக்கள்-கொஞ்சம் விரிவாக இந்தியா ஏன் இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தது என்பதை புரிந்துகொள்ள  மூன்று பார்வைகளை முன்வைக்கின்றன..


.
   

மீண்டும் சந்திப்போம்.    

Wednesday, March 4, 2020

முடங்கிப்போன #CPEC பாகிஸ்தான் #பொருளாதாரம் - 01

இன்றைக்கு NDTV இன்னொரு தளத்தில் (Bloomberg) இருந்து இரவல் வாங்கிப்போட்டிருக்கிற ஒரு செய்தி சீனா பாகிஸ்தான் எகனாமிக் காரிடார் என்கிற CPEC முற்றிலுமாக முடங்கிப்போயிருக்கிற கதையைக் கொஞ்சம் விரிவாகவே சொல்லியிருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. பெல்ட் & ரோடு இனிஷியேடிவ் சுருக்கமாக BRI சீனாவின் OBOR ஆதிக்கக் கனவுகளின் ஒருபகுதியாக மிகுந்த ஆரவாரத்துடன் ஆரம்பிக்கப் பட்ட CPEC, இன்று களையிழந்து அப்படியே அந்தரத்தில் நிற்கிறதாம்!

2018 சீனத் தம்பட்டம் என்னவானது? 
   
ஒரு விரிவாக்கப்பட்ட ஆழ்கடல் துறைமுகம், விமான நிலையம், சீனாவின் மேற்குப்புற மாகாணக்கடைசி வரை இணைக்கிற தரமான சாலைகள், ரயில்வே பாதைகள்,தொழிற்சாலைகள், பைப்லைன்கள், மின் உற்பத்தி நிலையங்கள் என்று கனவென்னவோ மிகப் பெரியதாகத்தான் இருந்தது. 62 பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு இது வரை 19 பில்லியன் டாலர்கள் வரை ஆகியிருக்கிறது என்பதில், பாகிஸ்தான் திரும்பிச் செலுத்தவேண்டிய தவணை, வட்டி எவ்வளவு என்கிற விவரம் அவ்வளவாக வெளியே வரவில்லை. கெஞ்சிக் கூத்தாடி சவூதி அரேபியாவிடமிருந்து கொஞ்சம், IMF இன் கடுமையான நிபந்தனைகளை ஏற்றபிறகு ஒரு 6 பில்லியன் டாலர் வாங்கி, அடுத்த தவணைக்கடனாக இன்னொரு 6 பில்லியன் டாலர் கடனுக்காகக் கையேந்திக் கொண்டு இருக்கிற பாகிஸ்தான் மீது சீனா நம்பிக்கை இழந்து விட்டதன் வெளிப்பாடா இது? CPEC ஆர்ப்பாட்டமாக ஆரம்பித்து ஏழாண்டுகளாகின்றன என்பதில்  எதனால் திட்டமிட்டபடி வேலைகள் மளமளவென்று நடக்காமல் அந்தரத்தில் தொங்கவிடப்பட்டிருக்கிறது.

திட்டத்தின் ஒரிஜினல் நோக்கப்படி, OBOR என்பது சீனாவின் புதிய பட்டுப்பாதை! சீனர்களுடைய கடலாதிக்கத்தை தங்குதடையில்லாமல் விரிவு படுத்துகிற கனவோடு ஆரம்பிக்கப்பட்டது தான்! தற்போதைய நாட்களில் குறுகிய மலாக்கா ஜலசந்தி வழியாகவே சீன வர்த்தகக் கப்பல்கள் பயணிக்கின்றன. இந்தக் கடல்பாதை, பல்வேறு தரப்புகளில் இருந்து மறிக்கப்படலாம் என்பதான சினேரியோவை மாற்றுவதோடு, தூரம் குறைவான அரேபியக்கடல் பிராந்தியம் சீன வணிகம் தங்குதடை இல்லாமல் நடப்பதற்கு தற்போதைக்கு பாகிஸ்தானில் இருக்கிற  க்வாடார் துறைமுகம் மிகவும் உதவியாக இருக்கும் என்பதோடு வர்த்தகத்தைப் பாதுகாக்கும் சாக்கில் இந்தியாவுக்கு மிக அருகே சீனக்கடற்படை உலாவலாம்! தேவைப்பட்டால் கடற்படை தளமாகவும் மாறலாம்! பொருளாதாரத்தில் போட்டியாக வளர்ந்துவரும் இந்திய நாட்டுக்கு  உபத்திரவமும் கொடுக்கலாம் என்பது அதன் கேந்திர முக்கியத்துவம்.


திட்டத்தில் ஒரு பழுதுமில்லை! ஆனால் பாகிஸ்தான் சீனாவுடன் அமைக்கவிருக்கும் க்வாடார் பகுதி முழுவதும் சர்ச்சைக்குரிய ஒரு பகுதி! 


பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரின் ஒருபகுதி வழியாக இந்த சாலை அமைக்கப்படுகிறது என்பது ஒருபக்கம். பலூச் இன மக்கள் வாழ்கிற பிராந்தியம். பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு எதிராகத் தொடர்ந்து போராடும் பலூச் மக்கள் பாகிஸ்தானிடமிருந்து விடுதலைவேண்டி வன்முறைகளில் இறங்கிவருவது சீனாவுக்குப் பெரும் தலைவலி! அந்த மக்களுக்கு மருத்துவமனைகள், கல்விக் கூடங்கள் அமைத்துத்தருகிறோம் என்று சீனா முயற்சித்தது கொஞ்சமும்  எடுபடவில்லை. 

அடுத்து வரும் பதிவுகளில் இன்னும் கொஞ்சம் விரிவாகப் பேசலாம்.

மீண்டும் சந்திப்போம்.                               

Sunday, October 6, 2019

சீனா எழுபது! கந்துவட்டி ஏகாதிபத்தியமாக மாறிய சீனா!

சீனர்களுடைய ஆதிக்க விஸ்தரிப்புக் கனவுகளின் செயல் வடிவமாக இருப்பது ஒரே பெல்ட் ஒரே ரோடு (OBOR)  என்கிற Belt Road Initiative (BRI). 2049 க்குள்ளாக சீனாவை முற்றிலும் வளர்ந்த நாடாக வளமான, வலுவான நாடாக மாற்றுவேன் என்று சீனா எழுபது கொண்டாட்டங்களில் ஜி ஜின்பிங் பேசியது, சராசரி அரசியல்வாதிகளைப்போல , வெறும் பேச்சோ கனவோ இல்லை. இந்த நூற்றாண்டு சீனாவுடையது தான் என்று அவர் உறுதியாக நம்புகிறார். 2013 வாக்கிலேயே அதன் செயல்வடிவம்  தொடங்கிவிட்டது என்று பார்த்திருக்கிறோம். 



ஒருலட்சம் கோடி டாலர் மதிப்பீட்டில் 65நாடுகளை இணைக்கும் சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டமாக BRI தொடங்கப்பட்டு பல ஆண்டுகளாகி விட்டது. மலாக்கா ஜலசந்தி வழியாகவே தன்னுடைய கடல்வழி வணிகம், போக்கு வரத்தை மேற்கொள்ள வேண்டியிருந்த பலவீனத்தை சீனா CPEC சீனா பாகிஸ்தானிய எகனாமிக் காரிடார் என்று பாகிஸ்தான் வசமுள்ள குவாடார் துறைமுகத்தை சாலைவழியாக சீனாவின் மையபகுதியுடன் இணைப்பதில் அரேபியக்கடல் வழியாகத் தனது கடல்வணிகம், கடற்படை வலிமையைப் பெருக்கிக் கொள்ள முனைந்திருக்கிறது.  



இந்த 43 நிமிட வீடியோ சீனாவின் கடல்வழி மற்றும் சாலைகள் வழியாக ஓர் புதிய வர்த்தகப்பாதையை அமைப்பதில் ஏழை நாடுகளை சீனா எப்படி வளைத்துப்போடுகிறது , ஊழலுக்கு இடம் கொடுக்கும் தலைவர்களை பயன்படுத்தி எப்படி உள்ளே நுழைகிறது என்பதைச்   சுருக்கமாக விவரிக்கிறார்கள். 

மேலே உள்ள டாக்குமென்டரியின் இரண்டாம் பகுதி இது. இதில் கிர்கிஸ்தானிலிருந்து வடமேற்கு ஜெர்மனியில் உள்ள டுயிஸ்பர்க் நகர் வரை இணைக்கிற திட்டத்தைப்பற்றிச் சொல்கிறார்கள்.

எப்படிச் செயல்படுத்தப்போகிறார்கள் என்பதில் தான் சீனத் தந்திரம், இன்றைய சீனாவில்   யார் யார் என்னென்ன வகையில் ஆதிக்க சக்திகளாக வளர்ந்திருக்கிறார்கள் என்ற விவரங்கள் எல்லாம் முக்கியமானதாக  இருக்கிறது. 
  
இதெல்லாம் வெறும் புள்ளிவிவரங்கள்! இதிலேயே மலைத்துப் போய் நின்று விடாதீர்கள்! டெங்  சியாவோ பிங் காலத்தைய தொழில் வளர்ச்சியில் சீனாவுக்கும் இதர நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தில் சீனாவுக்கே சாதகமாக இருந்தது என்பது ஒரு பெரிய ப்ளஸ். இதைப்பயன்படுத்திக் கொண்டு உள்நாட்டில் அடிப்படைக் கட்டுமான நிறுவனங்கள் அசுர வளர்ச்சி அடைந்திருந்தன. அடுத்தது கட்டுமானத்துறை! பழைய அடையாளங்களைத் துடைத்தெறிந்துவிட்டு, சீனாவில் புதுப்புது கட்டுமானங்கள், புதுப்புது நகரங்கள் வளர்ந்தன. மலிவான எலெக்ட்ரானிக் சாதனங்கள் தொலைதொடர்புக் கட்டுமானங்கள் என்று வளர்ந்தன. கூடவே இவைகளுக்கு நிதியுதவி செய்கிற வங்கிகளும்! இப்படி பல்வேறு துறைகளில் கொழுத்து வளர்ந்த நிறுவனங்கள் தான் சீனாவின் விஸ்தரிப்பு கனவுகளின் அடித்தளமாக, உள்நாட்டை விட்டு வெளியே வந்து வெளிநாடுகளிலும் கடை விரித்து. அங்குள்ள உள்ளூர்ப் பொருளாதாரத்தைக் கபளீகரம் செய்கிற அளவுக்கு ஒரு மிகப்பெரிய ஆக்டொபசாக, சீனா இன்றைக்கொரு கந்துவட்டி ஏகாதிபத்தியமாக வளர்ந்து நிற்பதில் வந்து முடிந்திருக்கிறது.

சீனவங்கிகளின் கடனுதவியில் கட்டப்பட்ட இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுகம், விமான நிலையம் எதுவுமே வெகுஜனப்பயன்பாட்டுக்கு வராமல், வாங்கிய கடனுக்கு வட்டி கூடக்  கட்டமுடியாத நிலையில் சீனாவுக்கு 99 வருடக் குத்தகைக்கு விட நேர்ந்தது நினைவிருக்கிறதா? வெறும் 110 டாலர் கோடி கடன் தான்! அதற்கே ஒருபகுதியைச் சீனாவுக்கு விட்டுக் கொடுக்க வேண்டிவந்தது.  

மாலத்தீவுகளும் கூட  இதேபோல சீனக்கடன்வலையில் சிக்கிக் கொண்டு தவித்ததும், இந்தியா றூறு கோடி டாலர்களைக் கொடுத்து உதவி அதை மீட்டதும் கூட சமீபத்தில் நடந்தது தான்! நினைவிருக்கிறதா? தெரிந்தே சீனக் கந்துவட்டிக் காரர்களிடம் சிக்கிக் கொள்வதற்குத் தயாராக இருக்கும் ஏழை ஆப்பிரிக்க நாடுகள் கதை கொஞ்சம் வித்தியாசமானது.அந்தக் கதையின் மையக்கருவாக கொழுத்த லஞ்சம் என்பதில் புதிதாக எதுவுமில்லை.

இங்கே கொஞ்சம் தேன்தடவி எட்டிக்கசப்பை மறைக்க முயற்சி செய்கிறார்கள்! படித்துப்பாருங்கள்!  

மீண்டும் சந்திப்போம். 
              

Sunday, January 27, 2019

சீன பாகிஸ்தானிய எகனாமிக் காரிடார்! CPEC




ஒரே பெல்ட் ஒரே ரோடு என்று சீனா தன்னுடைய ஆதிக்கத்தை, பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் வலுப்படுத்திக் கொள்ள தொடர்ந்து செய்து வரும் முயற்சிகளை இந்த ஹேஷ்டாகுகளில் எழுதிவரும் பகிர்வுகளில் இந்தச் செய்தி ஒரு வருடத்துக்கு முன்னால் பகிரப்பட்டது. ஆனால் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறதென்ற தகவலே தெரியாமல் இருப்பவர்கள் இங்கே ஏராளம்!

இப்போது தெரிந்துகொள்வதில் தவறில்லையே!
#OBOR #BRI #CPEC என #சீனவிஸ்தரிப்புக்கனவுகள் வேகவேகமாக செயல்வடிவம் பெற்றுவரும் நேரமிது. #IndoPacific பிராந்தியத்தில் தனக்குப் போட்டியாக என்று மட்டுமில்லை, தனக்கு அடுத்த இடத்திலும் கூட வேறெந்தநாடும் வந்துவிடக்கூடாதென்று #சீனா மிக்க கவனமாகக் காய்நகர்த்திவருகிறது.

#சீனத்துச்சண்டியர் இந்த அளவு வளர்ந்ததில் #ஒபாமாநிர்வாகத்தின்எட்டுஆண்டு அலட்சியம் முக்கியப்பங்குவகித்தது என்றால் பொய்யல்ல. இன்று #தென்சீனக்கடல் பகுதியில் #ஏழுசெயற்கைத்தீவுகள் உருவாக்கி அவற்றை #முழுஅளவுராணுவத்தளங்கள் ஆக மாற்றியிருப்பதை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தியிலிருக்கக் கூடிய வாய்ப்பை அன்றைய அமெரிக்க #அதிபர்ஒபாமா தவறவிட்டார்.

#மலாக்காஜலசந்தி வழியாகத்தான் சீன வர்த்தகக்கப்பல்கள் முக்கியமாகக் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களைக் கொண்டுவரவேண்டுமென்கிற நிலையில் #தென்சீனக்கடல் பிராந்தியம் முழுவதுமே தனக்குச்சொந்தம் என்று கிட்டத்தட்ட #போர்ப்பிரகடனமாகவே சீனா அறிவித்ததில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்துமே கதிகலங்கிப்போய்க்கிடக்கின்றன

#சீனத்துச்சண்டியர் பார்வை அரேபியக் கடல் இந்தியப்பெருங்கடல், என்று விழுந்ததில் நேரடியாக பொருளாதார, ராணுவ, கேந்திர ரீதியிலான அச்சுறுத்தல்கள் இந்தியாவுக்குத்தான் என்று தெளிவாகவே #BeltandRoadInitiative என்கிற #OBOR காட்டுகிறது.இது முழுக்க வர்த்தகத்துக்கானது தான் என்று சொல்லப் பட்டாலும். பொருளாதாரமும் அரசியலும் பிரிக்க முடியாதவை.

சீனாவின் #PLA #செஞ்சேனை நவீனப்படுத்தப் படுவதிலும், ஆயுதப்போட்டியிலும் அமெரிக்கா, ரஷ்யா இவைகளுக்கு அடுத்த நிலையில் முந்தி நிற்கிறது. ஐரோப்பியநாடுகள் சீனாவை மிஞ்சுகிற தொழில்நுட்பம், பயிற்சிபெற்ற ராணுவம் என்று வைத்திருந்தாலும் சந்தை, பொருளாதார ரீதியாக அமெரிக்கா அல்லது சீனாவை அண்டியிருக்க வேண்டியவைகளாக இருக்கின்றன.

இதுவரை சொன்னதை பின்னணியாக நினைவில் வைத்துக் கொண்டு இந்தமாதம் 1,2 தேதிகளில் #சுஷ்மாஸ்வராஜ் நேபாளம் சென்று புதிதாக அமையவிருக்கிற பல்வேறு கம்யூனிஸ்ட் கட்சிக்குழுக்களின் அவியல் கூட்டணி அரசுத்தலைவர்களைச் சந்தித்துப் பேசிவிட்டு வந்திருக்கிறார்.

இதைப்பற்றிக் காத்மண்டுவில் இருந்து நேபாளப்பத்திரிகையாளர் பட்டாராய் என்ன சொல்கிறார் என்பதை விரிவாக கீழே லிங்கில் படிக்கலாம்.கம்யூனிஸ்டுகளையும் சட்டாம்பிள்ளைத் தனத்தையும் பிரிக்க முடியாதென்பது #மார்க்சீயமெய்ஞானம் எந்த ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அல்லது குறுங்குழுவாக இருந்தாலும் ஒன்றோடொன்று ஒத்துப்போக மாட்டார்கள். இரண்டே தனிநபர் கம்யூனிஸ்ட்டாக இருந்தாலும் யார் சட்டாம்பிள்ளை என்பது முதலில் தெரிந்தாக வேண்டுமே! உள்ளூரிலேயே இப்படி என்றால் வெவ்வேறு நாடுகளின் கம்யூனிஸ்ட்கட்சிகள் எப்படி இருக்கும் என்பது கற்பனைக்கும் மிஞ்சியது
இதைப்புரிந்துகொள்ள முடிந்தால் வெளியுறவுத் துறை அமைச்சர் என்ன சாதித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் என்பதும் புரியும்!

===========================================
#பிரதமர்நரேந்திரமோடி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பெண் அமைச்சர்கள் மிகத்திறமையுடன் செயல்படுகிறவர்கள் என்று முந்தைய ப்ளஸ் ஒன்றில் சொல்லியிருந்தேன். மிகவும் பொதுப்படையான ஸ்டேட்மென்ட் என்றாலும் முழுக்க முழுக்க உண்மையானது அது. #பெண்அமைச்சர்கள் என்று சொல்லும் போது அதில் #நம்பர்1இடத்தைப்பிடிப்பவர் #சுஷ்மாஸ்வராஜ்
#வெளியுறவுத்துறைஅமைச்சகம் இவரது பொறுப்பின்கீழ் புதுப் பொலிவுடன் திறமையாகச் செயல்பட்டுவருகிறது



The Diplomat

thediplomat.com

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை