Tuesday, January 5, 2021

2021 இன் விடைதெரியாத கேள்விகள்! உலகம் எதிர்நோக்கும் சவால்கள்!

இந்தியக்குடியரசு தினச் சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டிருந்த பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இந்திய விஜயத்தை ரத்து செய்திருக்கிறார். பிரிட்டனில் வெகுவேகமாகப் பரவிவரும் புதிய வகைக் கொரோனா, நாட்டின் பொருளாதாரத்தை அசைத்துப்பார்த்துக் கொண்டிருக்கிற நேரத்தில்,  இந்திய விஜயம் ரத்துசெய்யப் பட்டிருப்பது ஆச்சரியம் தருகிற செய்தி அல்ல.


ஆனால் உலகம் முழுக்க கொரோனா வைரசைப் பரப்பி லட்சக்கணக்கானவர்களுடைய உயிரைப் பறித்த சீனா, பொருளாதாரச் சீரழிவையும் ஏற்படுத்திவிட்டு, இந்த அவலத்தில் பலவிதமான ஆதாயங்களையும் அடைந்து இருக்கிறது. போதாக்குறைக்கு, ராணுவ மிரட்டல்களோடு இந்தியா, தைவான், ஜப்பான் ஆகிய நாடுகளை சீண்டிப்பார்த்துக் கொண்டும்  இருக்கிறது தட்டிக்கேட்க ஆளில்லேன்னா தம்பி சண்டப்ரசண்டன் என்றொரு திரைப்படப் பாடல் ஒன்றுண்டு. அமெரிக்க நாட்டாமையை அகற்றிவிட்டு, தாங்களே உலகத்தின் நாட்ட நடுநாயகம் என்று அறிவித்துக்கொள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும், அதிபர் ஷி ஜின்பிங்கும் மிகவும் அவசரப்படுவது தெரிகிறதா? 

ஒரேநேரத்தில் பலமுனைகளில் போரிடுவதைத் தவிர்க்க வேண்டுமென்பது யுத்த தந்திரங்களுள் முக்கியமானது. ஆனால் சீனக்  கட்சியும், அதிபர் ஷி ஜின்பிங்கும் அதைப் பற்றிய கவலை ஏதுமில்லாமல் அமெரிக்காவைச் சீண்டுகிறார்கள், ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள்! RCEP ஒப்பந்தத்தின் அங்கமான ஆஸ்திரேலியாவுடன் ஒரு நிழல் யுத்தத்தை நடத்துவதோடு, இந்தியா, தைவான், ஜப்பான் ஆகிய நாடுகள் மீது அப்பட்டமான ராணுவ மிரட்டல்களைத் தொடர்ந்து அரங்கேற்றவும் செய்கிறார்கள். உள்நாட்டில் ஒரு அச்சத்தை ஏற்படுத்துகிற மாதிரி, சீன வங்கிகளை வெறும் அடகுக்கடைகள் என்று உடைத்துப்பேசிய அலிபாபா குழுமத்தின் தலைவர் ஜாக் மா மீது கடும் நடவடிக்கைகளை எடுத்த்தில், இரண்டுமாதமாக மனிதர் எங்கே போனார் என்ன ஆனார் என்பதே தெரியவில்லை. இப்படி எட்டுத்திக்கிலும் மதம்பிடித்த யானைபோல சீன் அதிபர் ஷி ஜின்பிங்கின் செயல்பாடுகள் இருக்கின்றன.

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜோ பைடன் ஒரு இரண்டுங்கெட்டான். சீனா மீதான அவருடைய அபிப்பிராயங்கள் இதுவரை மிகவும் குழப்பமான ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. இனி வரும் நாட்களிலாவது அது மாறும் என்று நம்புவதற்குக் கொஞ்சமும் இடமில்லாதபடிதான் அமெரிக்க அரசியலில் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.




கேள்விகள் நிறைய இருக்கத்தான் செய்கின்றன.ஆனால் தெளிவான பதில் சொல்வாரைத்தான் காணோம்!

#2021 விடைதெரியாத கேள்விகளோடு பிறந்திருக்கிறது.  

4 comments:

  1. எரிகிற வீட்டில் பிடுங்கும் சுயநலமிகள்.  அதை அவர்கள் ராஜதந்திரம் என்று கருதக்கூடும்!

    ReplyDelete
    Replies
    1. சீனர்கள் என்னவேண்டுமானாலும் நினைத்துவிட்டுப் போகட்டும் ஸ்ரீராம்!

      நாம் என்ன செய்யப்போகிறோம்? சவால்களை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்?

      Delete
  2. Very much thought provoking. Why don't you start a you tube channel and shae your poitica views?

    ReplyDelete
    Replies
    1. எனது உடல்நலம், பொறுமையின்மை இன்னபிற காரணங்கள், அகலக்கால் வைக்கத் தடை போடுகின்றன அம்மா!

      Delete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை