ராகுல் காண்டி மாதிரி முழு மங்குணியாக இல்லாமல் கொஞ்சம் விவரங்களைத் தெரிந்து கொண்டு பேசலாம் என்று நினைக்கிறேன் என்று முந்தைய பதிவில் சொல்லி இருந்ததன் தொடர்ச்சியாக! இந்தியா சீனா இருநாடுகளும் தங்களுடைய படைகளை 1920 ஏப்ரலில் இருந்த மாதிரியே வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒப்புக்கொண்டதைப் பற்றிய அதிக விவரங்கள் இப்போது வெளிவரத் தொடங்கி இருக்கின்றன.
இந்த 5 நிமிட வீடியோவில் சில தகவல்கள் இருக்கின்றன. China wanted to humiliate Modi, but was forced to withdraw as military stalemate was going nowhere' என்ற தலைப்பிட்டு The Print தளத்தின் ஜ்யோதி மல்ஹோத்ரா, StratNews Global தளத்தின் தலைமை ஆசிரியர் நிதின் கோகலே மற்றும் ஹிந்து நாளிதழின் சீனா கரெஸ்பாண்டென்ட் அனந்த் கிருஷ்ணன் இருவருடனும் உரையாடுகிற 36 நிமிட காணொளியில் சீனத்துச் சண்டியர் தனது உதார்களை சுருட்டிக் கொண்டதன் பின்னணியை நிதின் கோகலே அழுத்திச் சொல்கிறார்.
வீடியோ 18 நிமிடம். இதில் இன்னும் விரிவான தகவல்கள் இருக்கின்றன. இப்போது நடந்து கொண்டிருப்பது படைகளை பழைய நிலைக்குக் கொண்டுபோவதான disengagement மட்டுமே,PLA’s gradual withdrawal from Galwan and other locations in eastern Ladakh is just the start of what is likely to be a long-winding complicated process, which from an Indian standpoint must end at complete de-escalation across the Line of Actual Control. De escalation என்பதற்கும் disengagement என்பதற்கும் வித்தியாசம் இருப்பதைப் புரிந்து கொண்டால், அங்கே எல்லைப் பகுதியில் என்ன நடக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.
,
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா,ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளுடைய மந்திரிகள் அளவிலான QUAD பேச்சுவார்த்தை இன்று மாலை நடந்து முடிந்திருக்கிறது. ஜோ பைடன் நிர்வாகம் எந்த அளவுக்கு இந்த முயற்சியை முன்னுக்கு எடுத்துச் செல்லும் என்பதில் இன்னமும் ஒரு தெளிவு இல்லை. அமெரிக்காவை நம்பிப் பயனில்லை என இஸ்ரேல்,சவூதி அரேபியா, பிரான்ஸ் முதலான நாடுகள் ஏற்கெனெவே தன் கையே தனக்குதவி என்று முடிவெடுத்துச் செயல்பட ஆரம்பித்திருப்பதையும் இந்தநேரத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மீண்டும் சந்திப்போம்.
சைனா படைகளை உட்பக்கம் நகர்த்தியருப்பதன் காரணம், குளிர் காலத்தினால் தங்கள் படையில் ஏற்பட்ட பத்தாயிரத்துக்கும் அதிகமான உயிரிழப்பு. இல்லாவிட்டால் இத்தனை நாளும் இல்லாத விதமாக வாபஸ் சென்றிருக்காது. வெயில்காலம் வரும்போது நிச்சயம் வாலாட்டும்.
ReplyDeleteராகுல்காண்டி பாவம்... இதெல்லாம் அவருக்கு எங்க தெரியும். அவருக்குத் தெரிந்ததெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சியுடன் போட்ட தனிப்பட்ட புரிந்துணர்வு, அதில் பெற்ற வரவு
இப்போது சீனாவோ இந்தியாவோ செய்திருப்பது ஒரு tactical move என்பதைத்தாண்டி வேறொன்றுமில்லை நெல்லைத்தமிழன் சார்! கரண் தாப்பருடன் முன்னாள் NSA சிவசங்கர் மேனன் கொடுத்த பேட்டியில் இப்போது எதையும் முன்கூட்டியே அனுமானிக்கக்கூடாது என்ற ரீதியில் சொல்லியிருக்கிறார்.
Deleteராகுலைப்பற்றி என்ன சொல்ல?