Thursday, August 29, 2019

சீனப்பூச்சாண்டி! அமெரிக்கப் பூச்சாண்டி! எது பெஸ்ட்?

ராஜீய உறவுகள் என்பது என்னமோ வெறுமனே போட்டோவுக்கு போஸ் கொடுத்துச் சிரிப்பதோடோ  கை குலுக்கிக் கட்டிப்பிடிப்பதோடோ முடிந்துவிடுகிற சமாசாரமில்லை! பலசமயங்களில் கீசிடுவேன் என்று பட்டணத்து ரவுடிகள் சும்மா உதார் கொடுப்பது மாதிரி, சில சமயங்களில் நிஜமாகவே கீசிவிடுகிற மாதிரிக் கூட ஆகிவிடுவதுமுண்டு! External Affairs என்று நம் பக்கத்திலும் Foreign Affairs என்று வேறு சில நாடுகளிலும் அழைக்கப் படுகிற வெளியுறவு சமாசாரங்கள்  கொஞ்சம் சிக்கலானவை என்று ஒருவிதத்தில் சொன்னாலும், முக்கியமாக art of negotiations  என்கிற ரகம்தான்! ஒரேயடியாகக் கிராக்கி அல்லது வீம்பு பிடித்துக் கொண்டே இருக்க முடியாது. நீ எவ்வளவு இறங்கி வருவாய் சொல்லு! நான் எவ்வளவு இறங்கிவருவேன் என்று சொல்கிறேன்! மாதிரியான பேரங்கள் தான்! இதை மனதில் வைத்துக் கொண்டீர்களானால், வெளியுறவு விவகாரங்கள் புரிந்துகொள்வதற்கு சிரமமானவை அல்ல!


காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா இறங்கிவிடுமோ என்று சில உள்ளூர் அரசியல்வாதிகள் கவலைப் படுகிற மாதிரி, சீனப்பூச்சாண்டி ஒன்றும் சமாளிக்க முடியாத அச்சுறுத்தலே அல்ல! அவர்கள் காஷ்மீர் விஷயத்தைக் கையிலெடுத்தால் நாமும் ஹாங்காங் விஷயத்தை கையிலெடுக்க முடியும் என்பது அவர்களுக்கும் தெரியும்! அதனால் சீனத்து உதார் வெற்று எச்சரிக்கைகள், ஐநா பாதுகாப்பு சபையில் எழுப்ப முயன்று பலனற்றுப் போனது என்பதைப் பார்த்திருக்கிறோம், இல்லையா? டோக்லாம் பகுதியிலும் இதற்குமுன்னால்  ஒரு மல்லுக்கட்டு நடந்ததே, நினைவுக்கு வருகிறதா? இது ஒருவிதம்! 


ல்ஜசீரா! பாகிஸ்தான் குரலாகவே கத்தாரிலிருந்து ஒலிக்கும் ஒருபக்கச்சார்புள்ள சேனல் என்பதை ஞாபகம் வைத்துக் கொண்டு என்ன சொல்கிறார்கள் என்பதை இந்த 24 நிமிட வீடியோவில் பாருங்கள்! பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிலாவல் புட்டோ இம்ரான் கானுக்கு என்ன சொல்கிறார் என்று தெரிந்து கொள்ள முடிவதில், போர், யுத்தம் ஒரு தீர்வல்ல என்ற ஞானோதயம் வந்து  ஆக்கிரமித்து வைத்துக் கொண்டிருக்கிற காஷ்மீரையாவது காப்பாற்றிக் கொள்ள முடிகிறதா பாருங்கள் என்று பாகிஸ்தானின் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகிற செய்தியும் தெரிய வருகிறது. இம்ரான் கான் தவிக்கிறார், குமுறுகிறார் தனித்து விடப்பட்டாலும் காஷ்மீருக்காக நாடுதழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த ஒரு வேண்டுகோள் விடுத்திருப்பதாக ஒரு மணி நேரத்துக்கு முந்தைய (1750hrs IST)செய்தி சொல்கிறது.  இவர்களுக்காக ஒரு போரில் இறங்க சீனர்களுக்கு என்ன, பைத்தியமா பிடித்திருக்கிறது? 

மூன்று மாதங்களாக, ஹாங்காங்கில் போராட்டங்கள் வலுத்து வருவதில், சீனர்களுக்குப் புதிய தலைவலி பெரிதாகிக் கொண்டே வருகிறது. டியநான்மன் சதுக்கத்தில் முந்தையநாட்களில் மாணவர் போராட்டத்தை நசுக்கிய மாதிரி இப்போது ஹாங்காங் போராட்டத்தையும் நசுக்க சீன ராணுவம் தயார்நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது.ஆனாலும் சர்வதேச அளவில் வர்த்தகம் முதலானவற்றைப் பாதிக்குமே என்று கொஞ்சம் பொறுமையாக இருக்கிறார்கள் போல!  ஹாங்காங் மேற்கத்திய உலகை இணைக்கும் பாலமாக இருந்ததாகச் சொல்வார்கள்!இன்றைய நிலையில் மேற்கத்திய உலகோடு இணைக்கும் புதிய பாலத்தைத் தேடவேண்டி வந்து விட்டதாக ஒரு செய்தி.

China is using Shenzhen to hedge its bets and reduce its reliance on Hong Kong, the gateway to the West that is caught up in political turmoil, according to Mr Water Cheung, Asia-Pacific chief executive for Storm Harbour Securities, a global markets and financial advisory firm.“If I am Beijing, I would definitely try to hedge this situation, in terms of promoting Shenzhen as another international city,” said Mr Cheung, who has 30 years of experience in investment banking. “I think they have no choice [but to reduce reliance on Hong Kong] – this is still the door to the Western world”.

Hong Kong will, however, remain an Asian financial hub that cannot be replicated by Shenzhen, argued Mr Cheung. என்கிறது டுடே ஆன்லைன் தளச்செய்தி  ஷென்ஜென் நகரம் 40 ஆண்டுகளுக்கு முன்பே பொருளாதார மாற்றங்களுக்குத் தயார் செய்யப்பட்டு சீனாவின் 18 சுதந்திரமான வர்த்தகப் பிரதேசங்களில் ஒன்றாக வளர்ந்திருக்கிறது வர்த்தகரீதியில் டிரோன்களைத் தயார் செய்கிற DJI, உலகிலேயே பெரிய கேம்ஸ் தயாரிப்பாளரான Tencent, முக்கியமாக அமெரிக்காவோடு முட்டல் மோதலுக்கு மையப்புள்ளியாக ஆகி இருக்கிற  டெலிகாம் சாதனங்களின் மிகப்பெரிய சப்ளையரான Huawei (வாவே ) நிறுவனம் எல்லாம் இந்த ஷென்ஜென்னில் தான் இருக்கின்றன. ஆக,  அமெரிக்காவும்  வந்தாச்சா?


Conversation

Hong Kong protests have crossed the 80-day mark, officially surpassing the 2014 Umbrella Movement in length.
8:10 PM · Aug 28, 2019   


Thursday China rotates new troops into Hong Kong amid mass protests
HONG KONG (AP) — Chinese state media has published photos of the country's Hong Kong-based troops' armored carriers and a patrol boat
   
டொனால்ட் ட்ரம்ப்புக்குப் பிடித்தமான அரசியல் பொழுது போக்கு, சீனாவுடன் மட்டுமல்ல, எல்லாநாடுகளுடனும் ஒரு வர்த்தகப் போரில் இறங்குவதுதான்! America First என்ற தேர்தல் கோஷத்தை இன்னமும் விடாமல் பிடித்துக்கொண்டு மல்லுக கட்டிக்கொண்டே இருக்கிறார். சீனா வருகிற  செப்டெம்பரில் அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையைப்பற்றி விவாதித்துக் கொண்டிருக்கையில் The US trade agency has confirmed President Donald Trump's higher tariffs on $US300 billion worth of Chinese goods will proceed as previously announced.என்ற செய்தியும் வந்தால் என்ன செய்வார்கள்? சீனத்துச் சண்டியர் யார் யாரிடம் தன்னுடைய உதார் எடுபடும் அல்லது எடுபடாது என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்! வெட்டி உதாரெல்லாம் அமெரிக்காவிடம் பலிக்காது என்பதால் மிகவும் பொறுமையாகப் போகிறமாதிரியே போக்குக்காட்டி அப்புறம் வாய்ப்புக் கிடைக்கிற நேரத்தில் நிதானமாக வைத்துச் செய்வார் .பூச்சாண்டி காட்டுவதில் அமெரிக்கர்களை விடச் சீனர்கள் அனுபவசாலிகள் என்பதை மறந்துவிட வேண்டாம்!

எந்தப்பூச்சாண்டி பெஸ்ட் என்று இதற்குமேலும் விவரித்துச் சொல்லவேண்டுமா என்ன? !!

மீண்டும் சந்திப்போம்.

                    

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை