Wednesday, March 4, 2020

முடங்கிப்போன #CPEC பாகிஸ்தான் #பொருளாதாரம் - 01

இன்றைக்கு NDTV இன்னொரு தளத்தில் (Bloomberg) இருந்து இரவல் வாங்கிப்போட்டிருக்கிற ஒரு செய்தி சீனா பாகிஸ்தான் எகனாமிக் காரிடார் என்கிற CPEC முற்றிலுமாக முடங்கிப்போயிருக்கிற கதையைக் கொஞ்சம் விரிவாகவே சொல்லியிருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. பெல்ட் & ரோடு இனிஷியேடிவ் சுருக்கமாக BRI சீனாவின் OBOR ஆதிக்கக் கனவுகளின் ஒருபகுதியாக மிகுந்த ஆரவாரத்துடன் ஆரம்பிக்கப் பட்ட CPEC, இன்று களையிழந்து அப்படியே அந்தரத்தில் நிற்கிறதாம்!

2018 சீனத் தம்பட்டம் என்னவானது? 
   
ஒரு விரிவாக்கப்பட்ட ஆழ்கடல் துறைமுகம், விமான நிலையம், சீனாவின் மேற்குப்புற மாகாணக்கடைசி வரை இணைக்கிற தரமான சாலைகள், ரயில்வே பாதைகள்,தொழிற்சாலைகள், பைப்லைன்கள், மின் உற்பத்தி நிலையங்கள் என்று கனவென்னவோ மிகப் பெரியதாகத்தான் இருந்தது. 62 பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு இது வரை 19 பில்லியன் டாலர்கள் வரை ஆகியிருக்கிறது என்பதில், பாகிஸ்தான் திரும்பிச் செலுத்தவேண்டிய தவணை, வட்டி எவ்வளவு என்கிற விவரம் அவ்வளவாக வெளியே வரவில்லை. கெஞ்சிக் கூத்தாடி சவூதி அரேபியாவிடமிருந்து கொஞ்சம், IMF இன் கடுமையான நிபந்தனைகளை ஏற்றபிறகு ஒரு 6 பில்லியன் டாலர் வாங்கி, அடுத்த தவணைக்கடனாக இன்னொரு 6 பில்லியன் டாலர் கடனுக்காகக் கையேந்திக் கொண்டு இருக்கிற பாகிஸ்தான் மீது சீனா நம்பிக்கை இழந்து விட்டதன் வெளிப்பாடா இது? CPEC ஆர்ப்பாட்டமாக ஆரம்பித்து ஏழாண்டுகளாகின்றன என்பதில்  எதனால் திட்டமிட்டபடி வேலைகள் மளமளவென்று நடக்காமல் அந்தரத்தில் தொங்கவிடப்பட்டிருக்கிறது.

திட்டத்தின் ஒரிஜினல் நோக்கப்படி, OBOR என்பது சீனாவின் புதிய பட்டுப்பாதை! சீனர்களுடைய கடலாதிக்கத்தை தங்குதடையில்லாமல் விரிவு படுத்துகிற கனவோடு ஆரம்பிக்கப்பட்டது தான்! தற்போதைய நாட்களில் குறுகிய மலாக்கா ஜலசந்தி வழியாகவே சீன வர்த்தகக் கப்பல்கள் பயணிக்கின்றன. இந்தக் கடல்பாதை, பல்வேறு தரப்புகளில் இருந்து மறிக்கப்படலாம் என்பதான சினேரியோவை மாற்றுவதோடு, தூரம் குறைவான அரேபியக்கடல் பிராந்தியம் சீன வணிகம் தங்குதடை இல்லாமல் நடப்பதற்கு தற்போதைக்கு பாகிஸ்தானில் இருக்கிற  க்வாடார் துறைமுகம் மிகவும் உதவியாக இருக்கும் என்பதோடு வர்த்தகத்தைப் பாதுகாக்கும் சாக்கில் இந்தியாவுக்கு மிக அருகே சீனக்கடற்படை உலாவலாம்! தேவைப்பட்டால் கடற்படை தளமாகவும் மாறலாம்! பொருளாதாரத்தில் போட்டியாக வளர்ந்துவரும் இந்திய நாட்டுக்கு  உபத்திரவமும் கொடுக்கலாம் என்பது அதன் கேந்திர முக்கியத்துவம்.


திட்டத்தில் ஒரு பழுதுமில்லை! ஆனால் பாகிஸ்தான் சீனாவுடன் அமைக்கவிருக்கும் க்வாடார் பகுதி முழுவதும் சர்ச்சைக்குரிய ஒரு பகுதி! 


பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரின் ஒருபகுதி வழியாக இந்த சாலை அமைக்கப்படுகிறது என்பது ஒருபக்கம். பலூச் இன மக்கள் வாழ்கிற பிராந்தியம். பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு எதிராகத் தொடர்ந்து போராடும் பலூச் மக்கள் பாகிஸ்தானிடமிருந்து விடுதலைவேண்டி வன்முறைகளில் இறங்கிவருவது சீனாவுக்குப் பெரும் தலைவலி! அந்த மக்களுக்கு மருத்துவமனைகள், கல்விக் கூடங்கள் அமைத்துத்தருகிறோம் என்று சீனா முயற்சித்தது கொஞ்சமும்  எடுபடவில்லை. 

அடுத்து வரும் பதிவுகளில் இன்னும் கொஞ்சம் விரிவாகப் பேசலாம்.

மீண்டும் சந்திப்போம்.                               

1 comment:

  1. முதலில் காஷ்மீர் இந்தியாவின் மாநிலமாகிவிட்டது (சட்டபூர்வமாக). பழைய மேப்பை வைத்து இடுகை போட்டிருக்கீங்களே

    ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை