Wednesday, February 24, 2021

இந்தியா பாகிஸ்தான் சீனா ::: ஸ்ரீலங்காவும் சேர்ந்து கொள்கிறதா?

இந்திய சீன எல்லைப்பிரச்சினையில் உண்மையான தகவல்களை நம்மூர் ஊடகங்கள் வெளியிடுவதில்லை என்கிற ஆதங்கம் எனக்கு நிறையவே உண்டு முந்தைய ஆட்சியாளர்கள்'செய்துவிட்டுப்போன குளறுபடிகள், சிடுக்கல்களை சரிசெய்வதில் இப்போதைய அரசு மும்முரமாக இருந்தாலும், அரசிடமிருந்தும் கூட விரிவான விளக்கங்கள் எதுவுமில்லை. ஆனால் இந்திய ராணுவ அதிகாரிகள் தரப்பிலிருந்து, சில வெளிச்சங்கள் நமக்குக் கிடைத்து வருகின்றன.  



நமது ராணுவத்தின் வடக்குப்பகுதி கமாண்டர், லெப்டினன்ட் ஜெனெரல் யோகேஷ் குமார் ஜோஷி இந்திய சீன எல்லை உரசல்களில், களத்தில் இருக்கும் உயர் அதிகாரி! இருதரப்பும் தங்களது படைகளை சென்ற ஆண்டு நிலவரத்தில் இருந்தபடி, விலக்கிக் கொள்வது என்rறு ஏற்பட்ட ஒப்பந்தம் குறித்தும், அடுத்து பேச்சுவார்த்தையில் இருக்கும் இதர பகுதிகள் குறித்தும் பேசிய வீடியோக்கள் முந்தைய பதிவிலேயே இருக்கின்றன.அதில் டெப்சாங் பகுதி முந்தைய (ஆட்சியாளர்கள்) காலத்தில் இருந்து சுவீகரிக்கப்பட்டது legacy issue என்பதைத் தெளிவாகச் சொல்கிறார். விஷயத்தைப் புரிந்துகொள்ளக் கொஞ்சம் பொறுமையாகப் பார்க்க வேண்டிய விஷயம் இது.


டாக்டர் சுப்ரமணியன் சுவாமி இந்த tweet இல் சொல்கிற மாதிரி கொஞ்சம் சிக்கலானதுதான். இந்தக் கீச்சுக்கு வழி என்ன என்று ஒருவர் கேட்டதற்கு சுவாமியின் ஒரு வார்த்தை பதில்:: யுத்தம் இன்றைய நிலையில் உடனடி சாத்தியமா? தாங்கள் விட்டுவிட்டுப்போன சிடுக்கல் இன்னதென்று தெரிந்தே வயநாடு தொகுதி எம்பி, நாடாளுமன்றத்தில் பிரதமரைக் கோழை என்று அழைத்தார்.இவரைமாதிரியானவர்கள் தேசத்துக்கே பெரும் தலைகுனிவு என்பதை வருத்தப்பட்டுச் சொல்லி என்ன செய்ய?       


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசுமுறை விஜயமாக ஸ்ரீலங்காவுக்கு நேற்றைக்கு வந்து சேர்ந்து இருக்கிறார். இன்றைக்கு அங்கே நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தியாவின் அதிருப்திக்குள்ளாக நேரிடும் என்பதால் ரத்து செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. முடிந்துபோன (குழிதோண்டிப்புதைக்கப்பட்ட) காஷ்மீர் பிரச்சினை தவிர பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கு வேறு அஜெண்டா இல்லை என்பதை வந்த இடத்திலும்  இம்ரான் கான் பேசி நிரூபித்திருக்கிறார். ராஜபக்ச சகோதரர்கள் மிகவும் தந்திரமாகச் செயல் படுவதாக நினைத்துக்கொண்டு, சீனக்கடன் வலையில் விழுவதற்குத் தயாராக இருக்கிறார்கள். 

மீண்டும் சந்திப்போம்.      


          

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை