Saturday, February 27, 2021

அக்கம் பக்கம் என்ன சேதி? நம்மைச் சுற்றி நடப்பவை!

சீன அதிபர் ஷி ஜின்பிங் சீனாவில் வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக அறிவித்திருக்கிறார். நம்புகிற மாதிரி இருக்கிறதா? அந்தநாட்களில் இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காண்டி கரீபி ஹடோ வறுமையே வெளியேறு என்று கண்ணில் படுகிற இடங்களில் எல்லாம் ஸ்டிக்கர், போஸ்டர் ஒட்டியவுடன் வறுமை வெளியேறி விட்டது என்பதை நம்ப முடிந்த மாதிரி இருந்தால், இதுவும் கூட நம்பக்கூடியதுதான்!


சீனா கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளில் உலகின்  வலிமையான பொருளாதாரமாக உருவெடுத்திருப்பது நிஜம்தான் என்றாலும் கிராமப்புறங்களில் வறுமை அறவே ஒழிக்கப்பட்டுவிட்டதாகச் சொல்லிப் பெருமை கொள்ள முடியாது என்கிறார்கள்.


Practice what you preach', this is India's message to Turkey. Ankara at the behest of Islamabad raised the Kashmir issue once again at UNHRC. But this time India pulled no punches & responded without mincing any words என்கிறது செய்தி. இஸ்லாமியக் கலீஃபாகவே தன்னை நினைத்துக் கொண்டிருக்கிற துருக்கியின் எர்துவான் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பாகிஸ்தானுக்கு ஆதரவுக் குரல் எழுப்புவதும், காஷ்மீர் விவகாரத்தைக் குறித்துப் பேசுவதும் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். ஐநா மனித உரிமை ஆணையத்தில் இந்தியா துருக்கிக்கு சரியான மூக்குடைப்பைச் செய்து காட்டியிருக்கிறது.


சிரியாவின் சோகம் முடிவே இல்லாமல் தொடர்கிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முந்தைய மனநிலையில் ரஷ்யாவை மட்டுமே ஒரே எதிரியாகப் பார்க்கிற விதம் தெளிவாகி இருக்கிறது. சீனப்பூச்சாண்டி நிஜமாகவே பெரிதாக வளர்ந்து நிற்பது கண்ணுக்குத் தெரியவில்லை என்பது சர்வதேச அரசியலில் அமெரிக்காவின் ஆளுமை குறைந்து வருவது டெமாக்ரட்டுகளுக்கு உண்மையாகவே புரியவில்லையா அல்லது புரியாத மாதிரி நடிக்கிறார்களா?


2022 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளை நிராகரிப்பது சீனர்களுக்கு நல்லதொரு எச்சரிக்கையாக இருக்கும் என்று முந்தைய ட்ரம்ப் நிர்வாகத்தில் secretary of state ஆக இருந்த மைக் பாம்பியோ கருத்து தெரிவித்திருக்கிறார்.

மீண்டும் சந்திப்போம்;

4 comments:

  1. வெளங்க மாட்டானுங்க..
    வெளங்க விட மாட்டானுங்க!..

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு விரக்தி எதற்காக துரை செல்வராஜூ சார்?

      ஜி ஜின்பிங்கின் அவசரமே சீனக்கம்யூனிஸ்ட் கட்சியை, சீனாவை எதிரி நம்பர் ஒன எனப்பார்க்கும் அளவுக்குக் கொண்டுபோய்விட்டிருக்கிறது. காலம் எல்லாவற்றுக்கும் தீர்வு சொல்லும்

      Delete
  2. கரீபி ஹட்டோ..வ்!..

    அந்தப் பாழாப் போன வறுமை எங்கே போய்த் தொலைஞ்சதோ தெரியலை!..

    ReplyDelete
    Replies
    1. சோனியா பின்னாலிருந்து இயக்கிய நாட்களில் ஒரு சுவாரசியமான அளவுகோலை வைத்து வறுமையை ஒழித்தார்களே , ஞாபகம் வருகிறதா? ஒருநாளைக்கு 32 ரூபாய் வருமானமிருந்தாலே வறுமைக்கோட்டுக்கு வெளியே வந்துவிடுவார்கள் என்றொரு கணக்கு! வறுமையைக் காங்கிரஸ் ஒழித்தது அப்படித்தான்!

      Delete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை