Friday, October 11, 2019

நோபல் பரிசுக் காமெடி! சிரியாவின் டிராஜெடி! கூடை நிறைய செய்தி!

அமைதிக்கான நோபல் பரிசு நியாயமாக வழங்கப்பட்டால் அது தனக்குத்தான் வழங்கப்பட வேண்டும், ஆனால் அது நியாயமாக வழங்கப்படுவதில்லை என்று டொனால்ட் ட்ரம்ப் எந்த நேரத்தில் சொன்னாரோ தெரியாது, நோபல் பரிசுத் தேர்வுக்குழு அமைதிக்கான நோபல் பரிசை எதியோப்பிய பிரதமர் அபி அஹமதுக்கு வழங்கி ட்ரம்ப் மூக்கை உடைத்து விட்டதென்றே சொல்ல வேண்டும். நோபல் பரிசுத் தேர்வுக் குழு ஒன்றும் அத்தனை நியாயமாக அமைதிக்கான நோபல் பரிசை அறிவிப்பதில்லை! பராக் ஒபாமா ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற 11 நாட்களிலேயே பரிசுக்காகப் பரிந்துரை செய்கிற கெடு முடிந்து, அடுத்த ஒன்பது மாதங்களிலேயே   2009 இல் அவருக்கு நோபல் பரிசை “for his extraordinary efforts to strengthen international diplomacy and cooperation between peoples” என்று அறிவித்ததில் என்ன நியாயம் இருந்தது?  


BREAKING NEWS: The Norwegian Nobel Committee has decided to award the Nobel Peace Prize for 2019 to Ethiopian Prime Minister Abiy Ahmed Ali. #NobelPrize #NobelPeacePrize
2:30 PM · Oct 11, 2019

The Nobel Peace Prize has been awarded to Abiy Ahmed, the Ethiopian Prime Minister who helped end his country's 20-year war with Eritrea. Announcing the prize in Oslo, the Norwegian Nobel Committee said Abiy's "efforts deserve recognition and need encouragement." The conflict between Ethiopia and Eritrea over disputed border territory came at a huge financial and humanitarian cost for both countries.என்கிறது CNN செய்தி. சரி ஆனால் ஜனாதிபதியாக ஆவதற்கு முன்னால் உலகத்துக்கு அறிமுகமே ஆகியிராத பராக் ஒபாமா, சமாதானத்துக்காக என்ன செய்து விட்டாராம்? 
Hours after the news broke, Obama said, “To be honest, I do not feel that I deserve to be in the company of so many of the transformative figures who've been honored by this prize.” Trump noted this, too, 10 years later, saying, “They gave one to Obama immediately after his ascent to the presidency, and he had no idea why he got it. You know what, that was the only thing I agreed with him on.”  என்று இன்றைக்கு சர்வதேச அளவில்  காமெடியாகிப் போன செய்தியை முடித்துக் கொள்ளலாம். நல்லவேளை டொனால்ட் ட்ரம்ப்புக்கு பரிசை அறிவிக்காமல் நோபல் பரிசுக்கமிட்டி தப்பித்துக் கொண்டது. 



இன்றைக்கு வாஷிங்டன் போஸ்ட் தளத்தில் இஷான் தரூர் எழுதியிருக்கிற ஒரு செய்திக்கட்டுரையை வாசித்தேன். (ஆமாம் நம்மூர் சசி தரூரின் மகனே தான்!) டொனால்ட் ட்ரம்ப் போரை விரும்பாதவரா? தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பானேன் என்று பெரும்பாலான அமெரிக்கர்கள் நினைப்பதை ட்ரம்ப் பிரதி பலிக்கிறாரா? கொஞ்சம் சுவாரசியமான அலசல். அதற்காக? எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவெடுப்பதை அப்படியும் சொல்லலாமா? அது சரிவருமா?     

The United States has spent EIGHT TRILLION DOLLARS fighting and policing in the Middle East. Thousands of our Great Soldiers have died or been badly wounded. Millions of people have died on the other side. GOING INTO THE MIDDLE EAST IS THE WORST DECISION EVER MADE.....
....IN THE HISTORY OF OUR COUNTRY! We went to war under a false & now disproven premise, WEAPONS OF MASS DESTRUCTION. There were NONE! Now we are slowly & carefully bringing our great soldiers & military home. Our focus is on the BIG PICTURE! THE USA IS GREATER THAN EVER BEFORE!

We defeated 100% of the ISIS Caliphate and no longer have any troops in the area under attack by Turkey, in Syria. We did our job perfectly! Now Turkey is attacking the Kurds, who have been fighting each other for 200 years....

42.2K people are talking about this


We defeated 100% of the ISIS Caliphate and no longer have any troops in the area under attack by Turkey, in Syria. We did our job perfectly! Now Turkey is attacking the Kurds, who have been fighting each other for 200 years....
....We have one of three choices: Send in thousands of troops and win Militarily, hit Turkey very hard Financially and with Sanctions, or mediate a deal between Turkey and the Kurds!
சிரியாவில் ஈரானின் ஆதிக்கத்தை முறியடிக்க இதுவே சரியான வழியாக இருக்கும் என்று டொனால்ட் ட்ரம்ப் நினைப்பது சரியாகக் கூட இருக்கலாம். ஆனால் சிரியாவில் டாங்குகள் சாரைசாரையாக நுழைவதும்  குண்டுமாரி பொழிவதும்  தொடர்கதையாகத்தான் இருக்கும் என்று ஒரு கசப்பான யதார்த்தத்தைச் சொல்கிறார் இஷான் தரூர். 

சீன அதிபர் ஜி ஜின்பிங் இருநாள் பயணமாக மாமல்லபுரம் வந்திருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியுடன் கேஷுவலாக சில சுற்றுக்கள் பேசவும், பரஸ்பர நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும் இந்த வருகை அமையும். ஆனால் ஹிந்து ஆங்கில நாளிதழ் சீன அதிபர் என்னவோ ஒரு கூடை நிறைய செய்திகளைக் கொண்டுவந்திருப்பதாக ஒரு பில்டப் கொடுத்துப் பார்த்திருக்கிறது. ஆனால், அது யாருக்காக?
மீண்டும் சந்திப்போம்.     

2 comments:

  1. நோபல் பரிசு பற்றி சரியாகச் சொல்லியிருக்கீங்க. அந்த கமிட்டி தேர்வுகளே நகைப்பிற்குரியவை. பிற்காலத்தில் ஒபாமா சமாதானத்தை முன்னெடுத்துச் செல்லலாம் என்று ஜோசியம் பார்த்து நோபல் பரிசு கொடுத்தாங்க. இவங்க டிரம்புக்குக் கொடுக்கலைனாத்தான் ஆச்சர்யம். வரலாற்றுல பார்த்தா ஹிட்லருக்கு கொடுத்திருக்கிறார்களா? இருந்தாலும் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நெ,த. சார்!

      நோபல் பரிசுக்குளறுபடிகளைப் பற்றித் தமிழில் ஒரு புத்தகமே எழுதலாம் என்ற அளவுக்குத் தகவல்கள் இருக்கின்றன. ஆனால் யார் படிப்பது? கொஞ்சம் சீரியசாக இந்தப்பக்கங்களில் எழுதிய பதிவுகளில் யாரும் எதுவும் சொல்வதில்லையே என்று பதிவைக் கொஞ்சம் வித்தியாசமாக ஆரம்பிக்க இந்தச் செய்தி உதவியது என்பது மட்டும் உண்மை. சிரியா சிக்கிக் கொண்டிருக்கிற விஷயமும் சீன அதிபர் விஜயமும் தான் நான் தொட விரும்பிய செய்திகள்.

      Delete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை