அனேகமாக டொனால்ட் ட்ரம்ப் அளவுக்கு உள்நாட்டிலும் சரி வெளிநாடுகளிலும் சரி எல்லோரையும் கதற விட்டவர்கள் உலகத்தலைவர்களில் வேறு எவருமில்லை என்றே சொல்கிற அளவுக்கு வாய் என்றால் அப்படி ஒரு வாய்! வாய்தான் அப்படி என்றால், ராஜீய உறவுகளில் இப்படித்தான் என்று கணிக்க முடியாதபடி அப்படி ஒரு முரண். 2020 இல் பதவிக்காலம் முடிகிற வரை சகித்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முன்பு ஈரானுக்கு அறிவுரை சொன்னதுண்டு. சீனாவும் கூட, ட்ரம்ப் பதவிக் காலம் முடிகிற வரை முட்டல் மோதல்களை வளர்த்துக் கொள்ளாமலும், அதே நேரம் ரஷ்யா உள்ளிட்ட எல்லா நாடுகளுடன் ஒரு சுமுகமான உறவை வளர்த்துக் கொள்வதிலும் அதிக அக்கறை காட்டுவதில் அர்த்தம் இல்லாமல் இல்லை,
அமெரிக்காவோடு அதிகம் ஒட்டி இழைந்துகொண்டிருக்கும் ஒரே நாடு என்றால் அது பிரிட்டன் தான்! கடந்த புதனன்று USA வுக்கான பிரிட்டிஷ் தூதர் சர் கிம் டர்ரக் ராஜினாமா செய்து இருப்பது இப்போது சர்வதேச அளவில் வெளியுறவு விவகாரங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படும் செய்தி! என்ன நடந்ததாம்? போன ஞாயிற்றுக் கிழமை, பிரிட்டிஷ் தூதர் தனது அரசுக்கு அனுப்பிய தகவல்கள் (பிரிட்டிஷார் இதை தந்தி / telegram என்கிறார்கள் அமெரிக்காவில் இதையே Cable என்று சொன்னாலும் இன்றைய சூழலில் இவை நமக்குப் பரிச்சயமான மின்னஞ்சல்கள் தான்) வெளியே கசியவிடப்பட்டதில், டர்ரக் அமெரிக்க அதிபரைப்பற்றிய தன்னுடைய அனுமானங்களைச் சொல்லியிருந்தது, இப்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது
மேலே இருக்கும் ட்வீட்டர் செய்திகளைக் கொஞ்சம் பாருங்கள். டொனால்ட் ட்ரம்ப் என்கிற மேதாவி எப்படி உலக நடப்பை விமரிசிக்கிறார், பதிலுக்கு விமரிசிக்கப்படுகிறார் என்பதை மிகத் தெளிவாகவே புரிந்து கொள்ள முடியும். ஆனால் இந்த ரகசியத் தகவல்களைக் கசிய விட்டது, பிரிடிஷ் பிரதமராகக் காத்திருக்கும் போரிஸ் ஜான்சன் தான் என்றும் சொல்கிறார்கள்.
சரி, இப்போது இந்தக் கதையெல்லாம் இப்போது எதற்கு? நமக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி இயல்பாகவே எழலாம். ஒரு நாட்டைப் பிடித்த ஏழரை, அதோடு மட்டும் முடிவதில்லை. இன்றைய உலகமானது வெறுமனே பொருளாதாரம், ராணுவ சமபலம் தூதரக உறவுகள் இவைகளால் மட்டுமல்ல, பொறுப்புள்ள அரசியல்வாதிகள் நாடாளத் தேர்ந்தெடுக்கப் படுவதிலும் சேர்ந்தே இருக்கிறது. ஒரு தவறான நபர் தகுதியில்லாத பொறுப்புக்கு வரும்போது, தன்னுடைய நாட்டை மட்டுமல்ல, உலக அமைதிக்குமே கூட ஊறு விளைவிக்கிறார். இந்தமாதிரி நபர்களால் ஏற்படும் சேதங்களை சரிசெய்ய எத்தனை தலைமுறைகள் தேவைப்படும் என்பதை யாரால் சொல்ல முடியும்?
வாழ்த்துகள்.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நெல்லைத்தமிழன்!
Deleteநிம்மதி!..
ReplyDeleteசரியான நபர்களைத் தேர்ந்தெடுப்பது ஒன்று தான் நிம்மதிக்கு உத்தரவாதமான வழி துரை செல்வராஜூ சார்!
Deleteட்ரம்ப் அவர்களின் முக்கியமான தொழில் சூதாட்ட கிளப். அவர் ரியல் எஸ்டேட் பெருமையாகச் சொல்லிக் கொண்டாலும் சூதாட்டம் மூலம் தான் பல லட்சம் கோடிகள் தினமும் கொட்டுகின்றது. இப்படி செய்கின்ற தொழில் நபர்களிடம் என்ன கொள்கைகள் இருக்கும்?
ReplyDeleteஜோதிஜி! நம்மூர் நாடாளுமன்ற ஜனநாயகமுறைக்கும் அமெரிக்கர்களுடைய அதிபர் முறைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டென்றாலும் check and balance அங்கே அதிகம். அதிபருக்கு எல்லா அதிகாரங்களும் உண்டென்றாலும் தேச நலன் கருதி அந்த அதிகாரங்களை முடக்கிவைக்கிற வல்லமை செனேட், காங்கிரஸ் என்று இரு சபைகளுக்கு மட்டுமல்ல, அதிபரின் நிர்வாகத்துக்கும் இருக்கிறது (administration நம்மூரில் மந்திரிசபைக்கு நிகரானது)
Deleteஇங்கே இவருடைய நிர்வாகத்தில் இருந்தவர்களே நாற வாய் தாங்கமுடியாமல் விலகிப் போனார்கள் என்பதும் எதிர்க்கட்சியான டெமாக்ரட்டுகளும் வலிமைகுன்றி முழுவீச்சில் எதிர்க்க முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதில் ஐயா தட்டிக் கேட்க ஆளில்லாததால் சண்டப்பிரசண்டனாகத் திரிகிறார்.
வாயில்வந்ததைப் பேசி வாக்குகளை அள்ளும் மகானுபாவன். இன்னொமொரு முறை வரமலிருக்க என்ன செய்வது.
ReplyDeleteவாருங்கள் அம்மா!
Deleteஅமெரிக்க அரசியல் சாசனம் முதன்முதலில் வரையப்பட்டபோது ஒரு தலைவரிடம் ஒரு பெண்மணி கேட்டாராம் " எத்தகைய அரசை எங்களுக்கு அளித்திருக்கிறீர்கள்?" அதற்கு " ஒரு சுதந்திரமான, ஜனநாயக அரசைத் தந்திருக்கிறோம்! அதாவது உங்களால் அதைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தால்!" என்று பதில் வந்தது என்று சொல்வார்கள்.
சுதந்திரம், உரிமைகள் என்பதெல்லாம் அதைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரிந்தவர்களுக்கு மட்டும்தான் என்பதை அமெரிக்கர்கள் நினைவில் வைத்துக் கொள்கிறதருணத்தில் இந்த மாதிரி ஆசாமிகளால் வரும் இடைஞ்சல்களில் இருந்து விடுபடுகிற நேரமும் வரும்! மேலே ஜோதிஜிக்குச் சொன்ன பதிலோடு இன்னொரு விஷயத்தையும் சொல்லவேண்டும். கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரிபப்லிகன் கட்சி சார்பாக டொனால்ட் ட்ரம்ப்பும் டெமாக்ரட்டுகள் சார்பில் ஹிலாரி க்ளிண்டனும் என்று ஒன்றுக்கொன்று சளைக்காத மோசமான வேட்பாளர்களே நிறுத்தப்பட்டதில் மட்டத்தில் ஒசத்தி என்கிற சொலவடைக்கேற்ப ஹிலாரிக்கு ட்ரம்ப்பே தேவலை என்கிற சாய்ஸ் மட்டுமே இருந்தது என்பதையும் சேர்த்துப் புரிந்துகொள்ள வேண்டும்.
முடிவில் சொன்னது பொதுநலமான தொலைநோக்கு பார்வை சார்.
ReplyDeleteவாழ்த்துகளுடன்.... கில்லர்ஜி