Sunday, September 29, 2019

எண்ணெய்க்கொழுப்பு அரசியலின் மீது இன்னொரு தாக்குதல்!

இந்தமாதத்தில் இரண்டாவது முறையாக, இரண்டே வார இடைவெளியில் சவூதி அரேபியா ஏமன் ஹவுத்தி கிளர்ச்சிப் படையினரால் நேற்று மீண்டும் தாக்கப்பட்டிருக்கிறது. 6800 கோடி டாலர்கள் வருடாந்திர பாதுகாப்பு பட்ஜெட், அதிநவீன அமெரிக்க விமானங்கள் மற்றும் ஆயுதங்கள் லேட்டஸ்ட் ட்ரோன்கள் இப்படி எல்லா வசதிகளோடும் இருக்கிற சவூதி ராணுவத்தால் 14 நாட்களுக்கு முன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீதும், எண்ணெய் வயல் மீதும்  ட்ரோன்கள் தாக்கியதில் அவை எங்கிருந்து ஏவப்பட்டது, ஏமனிலிருந்தா, ஈரானில் இருந்தா அல்லது ஈராக்கின் எல்லைப் பகுதியிலிருந்தா என்பதை நிர்ணயிக்கக் கூட முடியவில்லை!  ஏமன் ஹவுத்தி நிலைகள் மீது சவூதி அரேபியக் கூட்டுப்படை தாக்குதல் நடத்திவரும் நிலையில் அதிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் UAE  தனது படைகளை விலக்கிக் கொண்டிருக்கிறதென்ற தகவலை முந்தைய பதிவுகளில் பார்த்திருக்கிறோம். பதிலாக, அமீரகத்தில் உள்ள எந்தவொரு எண்ணெய் வயலும் தாக்கப்படவில்லை என்ற செய்தியும் வருகிறது.   
     

இப்போது The Houthis' military spokesman said in a statement that three “enemy military brigades had fallen” in the attack, which he said was launched 72 hours ago and supported by the group's drone, missile and air defence units.Yemen's Houthi movement said on Saturday it had carried out a major attack near the border with the southern Saudi region of Najran and captured many troops and vehicles, but there was no immediate confirmation from Saudi Arabian authorities என்று செய்திகள் வருவதில், சவூதி ராணுவம் ஒரு  போருக்கு சற்றும் லாயக்கானதில்லை என்பது மறுபடி நிரூபிக்கப் பட்டிருப்பதாகவே தெரிகிறது. இந்த இரண்டு தாக்குதல்களில், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையும் கூட நிறையவே பஞ்சர் ஆகியிருப்பதாக, இரு  செய்தி அலசல்களில் பார்த்தேன். 

  படத்துக்கு நன்றி thesun.co.uk  
பிரிட்டனின் சன் நாளிதழ் என்னமோ  அமெரிக்கா shock and awe என்று ஒரே முறையில் ஈரான் மீது தாக்குதல் நடத்தி நசுக்கிவிடத் தயாராக இருக்கிறது என்று தொடர்ந்து பீலா விட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் அமெரிக்க ஊடகங்களில் இந்தத் தாக்குதல் குறித்து எந்தவிதமான செய்தி, அரசு அறிக்கை என்று எதையுமே காணோம். நேற்று foreign policy dot com மற்றும் fpif dot org என்று அமெரிக்க வெளியுறவுக் கொள்கை பற்றி அலசும் இருதளங்களில் வெளியான, நேற்றைய தாக்குதலுக்கு முந்தி எழுதப்பட்ட செய்தி அலசல்களில் 1979 காலகட்டத்தில் உருவான Jimmy Carter doctrine ஐ   டொனால்ட் ட்ரம்ப்  அடியோடு கைவிட்டு விட்டதாக, ஈரான் மீது வர்த்தகத் தடைகளை அறிவித்துக் கொண்டே இருந்தாலும் அதற்குமேல் ஒருதுரும்பைக் கூடக் கிள்ளிப்போடத் தயாராக இல்லாத மாதிரி ஒரு சித்திரத்தைத் தருகிறார்கள்.

At the same time, however, the Iranian attacks have succeeded wildly in a way that Tehran probably never imagined. Because the United States has barely responded at all—only applying more fatuous sanctions and a single cyberattack that Iran seems to have shaken off—and because senior U.S. officials starting with the president have trumpeted that they will not employ force unless Iran attacks American citizens or property directly, the Iranian attacks have driven a lethal wedge between the United States and the GCC.

Although this has been part of a larger, longer process of the Sunni Arab states losing faith in their long-standing relationship with the United States, recent developments have had an outsized impact, dramatically accelerating that process. We may well have reached a tipping point, as Foreign Policy’s Steven A. Cook has insightfully argued என்கிறார் கென்னத் எம் பொல்லாக்.

எண்ணெய்க்கொழுப்பும் வஹாபி அரசியல் மப்பும் கரைக்கப் படுகிறதா அல்லது வீம்பும் வீராப்பும் அதிகரிக்கிறதா என்று தொடர்ந்து பார்க்கலாம்.

மீண்டும் சந்திப்போம்.        

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை