அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் விசேஷமான குணாதிசயமே எந்த நேரத்தில் என்னமாதிரி முடிவுகளை எடுப்பார் என்பதை எவராலுமே அனுமானிக்க முடியாதது தான்! பதவிக்கு வந்த இந்த மூன்றாண்டுகளில் எடுத்த திடீர் முடிவுகளோடு ஒத்துப்போக முடியாமல், கூட இருந்தவர்களே ஒவ்வொருவராக விலகினார்கள்! சிலரை ட்ரம்ப்பே நீக்கினார்! அமெரிக்காவை ஒரு நம்பகமான கூட்டாளியாக நேசநாடுகள் பார்க்க முடியாதபடி ஏகப்பட்ட குளறுபடிகள் ஒருபக்கம்! சீனாவே கூட இவரை எப்படி சமாளிப்பது என்று புரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறதென்றால், என்ன சொல்வது?
ஞாயிறு இரவு டொனால்ட் ட்ரம்ப் இன்னொரு அதிரடி முடிவை அறிவித்தருக்கிறார். துருக்கி அதிபர் எர்தோகனுடன் தொலைபேசியில் பேசியபிறகு, சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகளை உடனடியாக வாபஸ் பெறுவதாக அறிவித்திருப்பதில், மறுபடியும் ஒரு இஸ்லாமிய காலிபேட் அமைக்கிற கனவில் இருக்கும் துருக்கி, வடசிரியாவில் அதிரடி தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா மறைமுகமான ஒப்புதலை அளித்துவிட்டதான் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இந்த முடிவுக்கு ட்ரம்ப் நிர்வாகத்தில் இருப்பவர்களே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததையும் மீறி டொனால்ட் ட்ரம்ப் தன்னிச்சையாக இந்த முடிவை அறிவித்திருக்கிறார்.
Erdoğan’s collusion with the Islamic State goes much deeper. About 90% of foreign fighters entering Iraq and Syria to fight with al Qaeda or the Islamic State traversed the Turkish border, often with the facilitation of Turkish security forces. So too did weaponry. While the Washington Post appears intent to whitewash Erdoğan’s crimes against journalists, many of those in prison or exile are there for exposing collusion between Turkey and the Islamic State.
Trump considered dining with the Taliban on the week of Sept. 11 this year, but wisely canceled his summit. What he is doing in Syria is even worse, however, because he is ensuring the Islamists have a safe haven unlike any enjoyed by radical Islamists since the Clinton administration trusted Taliban promises to curtail promises two decades ago.Domestically, Trump’s legacy may be impeachment. Internationally, his Sunday night decision guarantees an Islamic State 2.0 and future attacks on Americans, American interests, and the homeland. இப்படி வாஷிங்டன் எக்ஸாமினரில் மைக்கேல் ரூபின் சொல்வது சரியான மதிப்பீடாகத்தான் இருக்கிறது.
இந்த 26 நிமிட வீடியோ 4 வருடப்பழையதுதான்! சிரியாவில் நடப்பது என்ன என்று சிரியா அதிபர் BBC க்கு அளித்த பேட்டி இது. ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நடக்கும் ஆதிக்கப்போரில் உள்நாட்டில் இஸ்லாமியத் தீவீரவாதிகள், ISIS இவர்களுடைய தாக்குதல்களும் சேர்ந்துகொண்டு, ஒரு இழுபறியாகவே நடந்துகொண்டிருந்ததை, சுருக்கமாகத் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
T
குர்து இன மக்கள் மக்கள் வசிக்கிற பிரதேசங்கள் துருக்கி, ஈராக்,சிரியா, ஈரான், ஆர்மீனியாவின் இருபுறமும்! ஈராக், சிரியாவில் குர்து மக்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகள் ஒரு தனிநாடாக ஆகிவிடலாம் என்ற அச்சமே துருக்கியை ஆட்டுவிப்பதாகச் சொன்னாலும் கூட பழைய ஒட்டோமான் சாம்ராஜ்ய கனவுகள் தான் (Ottoman Empire என்று தேடிப்பாருங்கள்) பிரதான காரணம்.டொனால்ட் ட்ரம்ப்பின் இந்த திடீர் முடிவைப்பற்றி பிரிட்டனின் டெய்லி மெயில் நாளிதழ் இப்படி சில உபதலைப்புக்களில் சுருங்கச் சொல்லியிருக்கிறது:
One official labelled the president 'spineless' and said his actions has left the US in 'a state of increased danger for decades to come'
The National Security Council source, who called Turkey 'playground bullies', told Newsweek President Trump 'was definitely out-negotiated'
Trump issued an order to withdraw to the United States Sunday evening. It's a move that marks a major shift in U.S. policy, and effectively abandons the Kurds, who were Washington's main ally in the years-old battle against ISIS
The White House statement is said to have 'stunned' the Pentagon, sources say.One said top officials at the Defense Department were 'completely blindsided'
Even Trump's staunchest allies have expressed outrage at the prospect of abandoning Syrian Kurds who had fought ISIS with American arms and advice
Turkey regards Kurdish forces within the SDF as a terror threat because it maintains ties to Kurdish militants inside Turkey, and has vowed to crush them.Ankara says it wants to establish a 'safe zone' on the Syrian side of the border where it could send back some of the 3.6 million refugees from the eight-year civil war.Kurds argue that Ankara's goal is to dilute their dominance in the region with an influx of mostly Sunni Arab refugees now living in southwestern Turkey.
துருக்கி குர்து இனமக்களை மனிதாபிமானமற்ற வகையில் நடத்தினால் அதன் பொருளாதாரத்தை அழித்து விடுவோம் என்று டொனால்ட் ட்ரம்ப் பேசியது சும்மா லுலுலாயிக்கு!
இது BBC விவாதம்! ட்ரம்பின் முடிவால் ISIS மீண்டும் உயிர்த்து எழுமா? அது உயிர்த்தெழுகிறதோ இல்லையோ அமெரிக்கா ஒரு நம்பகமான கூட்டாளியாக எவருக்கும் இருக்கமுடியாது என்பதை டொனால்ட் ட்ரம்ப் அழுத்தமாகப் பதிவுசெய்து விட்டார் என்பது மட்டும் தெளிவு.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!