Sunday, October 6, 2019

சீனா எழுபது! கந்துவட்டி ஏகாதிபத்தியமாக மாறிய சீனா!

சீனர்களுடைய ஆதிக்க விஸ்தரிப்புக் கனவுகளின் செயல் வடிவமாக இருப்பது ஒரே பெல்ட் ஒரே ரோடு (OBOR)  என்கிற Belt Road Initiative (BRI). 2049 க்குள்ளாக சீனாவை முற்றிலும் வளர்ந்த நாடாக வளமான, வலுவான நாடாக மாற்றுவேன் என்று சீனா எழுபது கொண்டாட்டங்களில் ஜி ஜின்பிங் பேசியது, சராசரி அரசியல்வாதிகளைப்போல , வெறும் பேச்சோ கனவோ இல்லை. இந்த நூற்றாண்டு சீனாவுடையது தான் என்று அவர் உறுதியாக நம்புகிறார். 2013 வாக்கிலேயே அதன் செயல்வடிவம்  தொடங்கிவிட்டது என்று பார்த்திருக்கிறோம். 



ஒருலட்சம் கோடி டாலர் மதிப்பீட்டில் 65நாடுகளை இணைக்கும் சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டமாக BRI தொடங்கப்பட்டு பல ஆண்டுகளாகி விட்டது. மலாக்கா ஜலசந்தி வழியாகவே தன்னுடைய கடல்வழி வணிகம், போக்கு வரத்தை மேற்கொள்ள வேண்டியிருந்த பலவீனத்தை சீனா CPEC சீனா பாகிஸ்தானிய எகனாமிக் காரிடார் என்று பாகிஸ்தான் வசமுள்ள குவாடார் துறைமுகத்தை சாலைவழியாக சீனாவின் மையபகுதியுடன் இணைப்பதில் அரேபியக்கடல் வழியாகத் தனது கடல்வணிகம், கடற்படை வலிமையைப் பெருக்கிக் கொள்ள முனைந்திருக்கிறது.  



இந்த 43 நிமிட வீடியோ சீனாவின் கடல்வழி மற்றும் சாலைகள் வழியாக ஓர் புதிய வர்த்தகப்பாதையை அமைப்பதில் ஏழை நாடுகளை சீனா எப்படி வளைத்துப்போடுகிறது , ஊழலுக்கு இடம் கொடுக்கும் தலைவர்களை பயன்படுத்தி எப்படி உள்ளே நுழைகிறது என்பதைச்   சுருக்கமாக விவரிக்கிறார்கள். 

மேலே உள்ள டாக்குமென்டரியின் இரண்டாம் பகுதி இது. இதில் கிர்கிஸ்தானிலிருந்து வடமேற்கு ஜெர்மனியில் உள்ள டுயிஸ்பர்க் நகர் வரை இணைக்கிற திட்டத்தைப்பற்றிச் சொல்கிறார்கள்.

எப்படிச் செயல்படுத்தப்போகிறார்கள் என்பதில் தான் சீனத் தந்திரம், இன்றைய சீனாவில்   யார் யார் என்னென்ன வகையில் ஆதிக்க சக்திகளாக வளர்ந்திருக்கிறார்கள் என்ற விவரங்கள் எல்லாம் முக்கியமானதாக  இருக்கிறது. 
  
இதெல்லாம் வெறும் புள்ளிவிவரங்கள்! இதிலேயே மலைத்துப் போய் நின்று விடாதீர்கள்! டெங்  சியாவோ பிங் காலத்தைய தொழில் வளர்ச்சியில் சீனாவுக்கும் இதர நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தில் சீனாவுக்கே சாதகமாக இருந்தது என்பது ஒரு பெரிய ப்ளஸ். இதைப்பயன்படுத்திக் கொண்டு உள்நாட்டில் அடிப்படைக் கட்டுமான நிறுவனங்கள் அசுர வளர்ச்சி அடைந்திருந்தன. அடுத்தது கட்டுமானத்துறை! பழைய அடையாளங்களைத் துடைத்தெறிந்துவிட்டு, சீனாவில் புதுப்புது கட்டுமானங்கள், புதுப்புது நகரங்கள் வளர்ந்தன. மலிவான எலெக்ட்ரானிக் சாதனங்கள் தொலைதொடர்புக் கட்டுமானங்கள் என்று வளர்ந்தன. கூடவே இவைகளுக்கு நிதியுதவி செய்கிற வங்கிகளும்! இப்படி பல்வேறு துறைகளில் கொழுத்து வளர்ந்த நிறுவனங்கள் தான் சீனாவின் விஸ்தரிப்பு கனவுகளின் அடித்தளமாக, உள்நாட்டை விட்டு வெளியே வந்து வெளிநாடுகளிலும் கடை விரித்து. அங்குள்ள உள்ளூர்ப் பொருளாதாரத்தைக் கபளீகரம் செய்கிற அளவுக்கு ஒரு மிகப்பெரிய ஆக்டொபசாக, சீனா இன்றைக்கொரு கந்துவட்டி ஏகாதிபத்தியமாக வளர்ந்து நிற்பதில் வந்து முடிந்திருக்கிறது.

சீனவங்கிகளின் கடனுதவியில் கட்டப்பட்ட இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுகம், விமான நிலையம் எதுவுமே வெகுஜனப்பயன்பாட்டுக்கு வராமல், வாங்கிய கடனுக்கு வட்டி கூடக்  கட்டமுடியாத நிலையில் சீனாவுக்கு 99 வருடக் குத்தகைக்கு விட நேர்ந்தது நினைவிருக்கிறதா? வெறும் 110 டாலர் கோடி கடன் தான்! அதற்கே ஒருபகுதியைச் சீனாவுக்கு விட்டுக் கொடுக்க வேண்டிவந்தது.  

மாலத்தீவுகளும் கூட  இதேபோல சீனக்கடன்வலையில் சிக்கிக் கொண்டு தவித்ததும், இந்தியா றூறு கோடி டாலர்களைக் கொடுத்து உதவி அதை மீட்டதும் கூட சமீபத்தில் நடந்தது தான்! நினைவிருக்கிறதா? தெரிந்தே சீனக் கந்துவட்டிக் காரர்களிடம் சிக்கிக் கொள்வதற்குத் தயாராக இருக்கும் ஏழை ஆப்பிரிக்க நாடுகள் கதை கொஞ்சம் வித்தியாசமானது.அந்தக் கதையின் மையக்கருவாக கொழுத்த லஞ்சம் என்பதில் புதிதாக எதுவுமில்லை.

இங்கே கொஞ்சம் தேன்தடவி எட்டிக்கசப்பை மறைக்க முயற்சி செய்கிறார்கள்! படித்துப்பாருங்கள்!  

மீண்டும் சந்திப்போம். 
              

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை