இன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வடக்கு சிரியாவில் மீதமிருக்கும் அமெரிக்கப் படைகளையும் வாபஸ் பெறுவதென்ற முடிவை அறிவித்திருக்கிறார். மத்திய கிழக்கில் முடிவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கும் போரில் அமெரிக்காவுக்கு என்ன வேலை என்பது அவருடைய வாதம்.
ISISக்கு எதிராக அமெரிக்கர்களோடு சேர்ந்து போராடிய குர்து இன மக்கள் ட்ரம்பின் இந்த முடிவை தங்களுக்கெதிராக இழைக்கப்பட்ட அநீதி, நம்பிக்கை துரோகமாகவே பார்ப்பதாக செய்திகள் சொல்கின்றன. ரஷ்யாவின் ஆதரவோடு சிரியாவின் அதிபராக இருக்கும் அசாதின் அரசோடு குர்துகள் ஒரு இணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, துருக்கியின் தாக்குதலை எதிர்கொள்ள சிரிய ராணுவத்துடன் கைகோர்த்து இருப்பதாகவும் தகவல்கள் சொல்வதில் அமெரிக்காவை ஒரு நம்பகமான கூட்டாளியாக இனிவரும் காலங்களில் எந்தவொரு நாடும் ஏற்றுக்கொள்ளத் தயங்கும் என்ற மாதிரியான கறை அழுத்தமாகப் படிந்திருக்கிறது. அமெரிக்கா, இனி மேல் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று பேசினால் கேலிக்குரியதாகத்தான் இருக்கும் போல!
300 கி.மீ. அகலம், 50 கி.மீ. ஆழமாக சிரியாவுக்குள் துருக்கி தனது ராணுவத் தாக்குதல்களைத் தொடங்கியிருப்பதில், சிரிய ராணுவம் வடக்கு எல்லைப்பகுதியில் துருக்கியப் படைகளை எதிர்கொள்ளத் தயாராகச் சென்று விட்டன.
4:44 PM · Oct 14, 2019
ஆனால் டொனால்ட் ட்ரம்ப் ட்வீட்டரிலேயே தனது யுத்தம் நடந்தால் போதுமென்ற முடிவுக்கு வந்துவிட்ட மாதிரித்தான் தெரிகிறது. Contrary to Trump's allegation, US officials have told CNN there are no indications that the Kurdish-led Syrian Democratic Forces have intentionally released any of the 10,000-plus ISIS prisoners in SDF custody as part of a bid to draw international support in the face of a Turkish assault on Kurdish areas in north Syria. என்கிறது CNN செய்தி.
The withdrawal of U.S. troops from northern Syria this week triggered two conversations in capitals across the region. The more immediate was about whether the U.S. government could be trusted as a partner, given its apparent abandonment of the Kurds. (Admittedly, Washington’s credibility deficit predates President Donald Trump’s surprise gambit.) என்று பிலால் பலோச் ஐந்துநாட்களுக்கு முன் foreign policy dot com தளத்தில் எழுதியதையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும். டொனால்ட் ட்ரம்ப் மட்டுமல்ல, மேற்கத்திய உலகு மொத்தமுமே குர்து மக்களைக் கைவிட்டுவிட்டதென்றும் CNN மேலும் ஒரு செய்தியில் சொல்கிறது. எட்டு ஆண்டுகளாக நடந்து வந்த போர்க்களத்தில் காட்சிகள் மாறியிருப்பதில் என்னென்ன நடக்கும் என்பதை கணிக்க முடியாமல் மேற்கத்திய ஊடகங்கள் தடுமாறுவது நன்றாகவே தெரிகிறது .
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்னாலேயே பிரிட்டன் ஒரு referendum நடத்தி முடிவு செய்துவிட்டாலும், வெளியேறுவதற்கான வழி முறைகள் எதையும் முடிவுசெய்யாமலேயே சண்டித்தனம் செய்து வருகிற மாதிரித்தான் தற்போதைய அரசியல் நிலவரங்கள் இருக்கின்றன. அக்டோபர் 31க்குள் டீலா நோ டீலா என்று முடிவெடுக்கப்போகிற மாதிரி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. இதுசம்பந்தமாக இன்றைக்கு நிறைய செய்திகளைப் படித்த பிறகும் கூட இதுதான் உண்மை நிலவரம் என்று எதையும் உறுதியாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை.
தலைப்பில் சொன்ன மாதிரி, தடுமாற்றங்கள் ஒன்று மட்டும் தான் நம்மைச் சுற்றிவரும் செய்திகளில் புலப்படுகின்றன.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!