கி.பி 1850 -1950, 1950-2050, என முந்தைய இரண்டு நூற்றாண்டுகளும் எவர் எவருடைய ஆதிக்கத்தில் இருந்தன, இருக்கின்றன என்பதை நினைவு படுத்திக் கொள்ள வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். Tianxia என்கிற சீன வார்த்தை கோடிட்டுக் காட்டுவதும் கூட அதைத்தான் என்பதை இங்கேவரும் நண்பர்கள் நினைவில் வைத்திருப்பார்கள் என்றே நம்புகிறேன். முந்தைய நூற்றாண்டில் பிரிட்டன் காலனியாதிக்க நாடாகவும் ராணுவம், பொருளாதார வலிமை மிக்க நாடாகவும் தொழிற் புரட்சியின் முழுப்பலனையும் அனுபவித்த வரலாறு நினைவிருக்கிறதா? அந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் நிகழ்ந்த இரு உலகப்போர்களில் பிரிட்டன் பவிசிழந்து அமெரிக்கா நிகழ் நூற்றாண்டின் வலிமையான ஆதிக்க நாடாக இருப்பதும் கூட நடப்பு வரலாறு தான்! American Tianxia என்றொரு சொல்லாடலை சீனர்கள் 2013 இல் தான் உருவாக்கினார்கள், அதுவும் 2050 தொடங்கி வரும் இந்த நூற்றாண்டு சீனாவுடையதுதான் என்ற கருத்தாக்கத்தை சொல்வதற்காக மட்டுமே என்பது முந்தைய பதிவுகளில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம்! வரலாறு பிடிக்கவில்லை என்றாலும் அதிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக்கொள்ளாத வரை அது நம்மை விடப்போவதில்லை என்பதையும் கொஞ்சம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டியிருக்கிறதே!
ஷி ஜின்பிங்கும் பிளாக்செயின் டெக்னாலஜியும்! என்று இன்னொரு வலைப்பக்கத்தில் எழுதிய போது, சீனர்கள் எப்படி வருகிற நூற்றாண்டு தங்களுடையது தான் என்பதில் உறுதியாகச் செயல்படுகிறார்கள் என நண்பர்கள் தெரிந்துகொள்ள விரும்புவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.
மத்திய கிழக்கு நாடுகளில், குறிப்பாக சிரியாவில் சமீப நாட்களில் நடக்கும் விவகாரங்களைக் கவனித்தால் டொனால்ட் ட்ரம்ப்பே, சீனர்களிடம் நீங்கள் தான் உலகத்தின் நடுநாயகம் என்று இருப்பை விட்டுக் கொடுத்து விடுவாரோ என்கிற சந்தேகம் வலுக்கிறது. என்னதான் டொனால்ட் ட்ரம்ப் ISIS தலைவர் அபு பக்கர் அல் பக்தாதியும் அவனது நம்பர் 2வும் அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டதை மிகப்பெரிய சாதனை என்று காட்டிக் கொள்ள விரும்பினாலும் சிரியாவை மையமாக வைத்து அமெரிக்காவும் ரஷ்யாவும் 8 ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியகிழக்கு பிராந்தியத்தில் நடத்திவரும் இழுபறிப்போராட்டத்தில் ரஷ்யாவை ஜெயிக்க விட்டு விட்டார் என்பது தான் பெரும்பாலான அமெரிக்கர்களின் கருத்தாகவும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. மத்திய கிழக்கில் ரஷ்யா ஜெயித்திருக்கலாம்! ஆனால் பழைய காலம் மாதிரி வலிமையான நாடாக ஆகிவிடமுடியாது என்ற மாதிரியான பொருமல்களை நிறையப் பார்க்க முடிகிறது.
Foreign Policy டாட் காம் தளத்தில் Russia Is the Only Winner in Syria என்று தலைப்பிட்டு REESE ERLICH எழுதியிருக்கிற ஒரு அலசல் டொனால்ட் ட்ரம்ப் அதிபராக சொதப்பியிருப்பது அமெரிக்க வெளியுறவுக் கொள்கை முடிவுகளில் ஏகப்பட்ட குழப்பங்களை உண்டாயிருக்கிறது அமெரிக்க NATO கூட்டாளியாக இன்னமும் இருக்கிற துருக்கியின் எர்துவான் ரஷ்யர்களின் வளையத்துக்குள் போய்விட்டார் என்று ஆரம்பித்து அங்கே என்ன நடக்கிறது என்பதை விவரிக்கிறார். கொஞ்சம் படித்துப் பாருங்கள்!
Russia’s resurgence in the region comes as Turkey, long a NATO member and Western ally, is realigning—and appears to be tilting toward Russia. Turkey purchased and recently took delivery of the Russian-made S-400 missile defense system, which caused outrage in Washington. The first part of a new Russia-Turkey natural gas pipeline is complete, and Russia plans to build four nuclear power plants in Turkey.
Russia, like the United States, pursues its own economic and military interests in the Middle East. Both powers promote highly profitable sales by their respective arms manufacturers. Both seek to control oil prices, with Russia selling to countries such as Turkey and Israel, while the United States is buying from Gulf countries. And both are apparently willing to throw Kurds under the bus when necessary to ally with the powerful and geostrategically important government in Ankara.
சிரிய விவகாரங்களில் டொனால்ட் ட்ரம்ப் சாதித்ததென்ன? எட்டாண்டுகளாக கூட்டாளிகளாக இருந்த குர்து மக்களைக் கைகழுவி விட்டதில், அமெரிக்காவை ஒரு நம்பகமான கூட்டாளி என்று எவரும் நினைக்க முடியாதபடி, அதன் நம்பகத் தன்மையைச் சிதைத்துவிட்டார்.அல் பக்தாதியைக் கொன்றதனால் அவருக்கு எந்தவிதத்திலும் அரசியல் ரீதியான பலனும் கிடைக்கப்போவதில்லை. 2016 தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னபடி அவரால் அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொள்ளவும் முடியவில்லை. ஒரு காலத்தில் உலகப் போலீஸ், உலகத்தின் காவலன் என்றிருந்த நிலைமை மாறி வெறும் சிரிப்புப் போலீசாகி நிற்பது காலத்தின் கோலம்.
ரஷ்யா பழைய காலத்து சோவியத் யூனியன் மாதிரி மீண்டெழுந்து விடுமா என்ற கேள்வியே இப்போது இல்லை. ஆனாலும், புறக்கணித்துவிட முடியாத ஒரு நாடாகத்தான் இருக்கிறது. சீனாவுடன் பலவிதப் பிரச்சினைகள் இருந்தாலும், கூடியவரை சீனாவுடன் இணக்கமாகவே இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஒரு பத்துப் பதினோரு ஆண்டுகாலத்துக்கு முன்பு வரை உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இருந்த ஜப்பான், இன்று அமெரிக்காவையே முழுக்க நம்பியிருக்க முடியாது என்கிற சூழ்நிலையில், சீனாவுடன் கூடியவரை அனுசரித்துப் போக வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறது.
இப்படி சூழ்நிலைகள் சீனாவுக்கே அதிக சாதகமாக இருந்தாலும் கூட, இன்றைய காலகட்டத்தில் அமெரிக்கா தான் உலகின் மிகவலிமையான பொருளாதாரமாகவும், ராணுவ சக்தியாகவும் இருக்கிறது. சீனா எழுபது என்று இந்தமாதம் ஆரம்பித்த முதல்பதிவில் சொன்னபடி, சீன அதிபர் 2049 இல் சீனாவை ஒரு முழுதும் வளர்ந்த நாடாக, பொருளாதார சுபிட்சம் நிறைந்த நாடாக்குவோம் என்று சூளுரைத்திருப்பது நடக்குமா? வரவிருக்கும் நூற்றாண்டு சீனாவுடையதுதானா என்ற கேள்விகளுக்கெல்லாம் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
மீண்டும் சந்திப்போம்.