Friday, February 5, 2021

#ஜோபைடன் பழைய பன்னீர்செல்வமா திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்றைக்கு தனது நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை குறித்தான முதலாவது அறிவிப்பை வெளியிட்டுப் பேசியிருக்கிறார் அமெரிக்கா திரும்பவந்துவிட்டது என்ற ஆர்ப்பரிக்கும் வார்த்தைகளில் அவர் சொல்லியிருப்பதெல்லாம் பழைய பன்னீர்செல்வம் பாரக் ஒபாமாவாக வந்துவிட்ட மாதிரித் தான் இருக்கிறது யேமன் மீது சவூதி அரேபியா நடத்தி வரும் போரிலிருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக அறிவித்திருக்கிறார். ஆயுத விற்பனையும் கிடையாது என்ற அறிவிப்பு வேறு! அடுத்து ரஷ்யா மீது பாய்ச்சல்! அதுவும் முந்தைய நிர்வாகத்தை விட மிகக்கடுமையாக இருக்குமென்கிற ஜம்பப்பேச்சு வேறு! சீனாவைப் பற்றி பெரிதாக பிரஸ்தாபம் எதுவும் இல்லை. ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா, ஜப்பான், ஜெர்மனி, மெக்சிகோ, தென்கொரியா, அப்புறம் நேட்டோ ராணுவக்கூட்டு இவைகளெல்லாம் இடம்பெற்ற கொள்கை முழக்கத்தில் இந்தியா பற்றிய பேச்சேகாணோம்  என்பது எனக்கு வியப்பாக இல்லை!


அமெரிக்க டெமாக்ரட்டுகளுக்கு பாகிஸ்தானை மிகவும் பிடிக்கும், இந்தியாவைப் பிடிக்காது என்பது மிகநீண்ட காலமாகத் தொடர்கிற விஷயம். ஒபாமா காலத்தில் கொஞ்சம் குறைவாக இருந்ததென்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். 

Former Secretary of State Mike Pompeo reacted Thursday to President Biden's declaration that "America is back" by asking if the commander-in-chief meant "back to when ISIS controlled a caliphate in Syria that was the size of Britain." "I hope not. President Trump and our team took that down," Pompeo told "Fox News Primetime" host Trey Gowdy. 

ஜோ பைடன் நிர்வாகத்தில் சீனா குறித்தான கொள்கை முடிவுகளில் தள்ளாட்டமும், டொனால்ட் ட்ரம்ப் செய்த எல்லாவற்றையும் மாற்றவேண்டும் என்கிற அவசரமும்  தெரிகிறது. வரும் நாட்களில் நம்பத்தகுந்த கூட்டாளி நாடாக ஜோ பைடனின் அமெரிக்கா இருக்கப் போவதில்லை என்பதை இஸ்ரேல், சவூதி அரேபியா உள்ளிட்ட பலநாடுகள் ஏற்கெனெவே புரிந்துகொண்டு தங்கள் நலனைப் பாதுகாத்துக்கொள்வதில் முனைந்து நிற்கின்றன.

இந்தியா என்ன செய்யப்போகிறது என்பது இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை.

மீண்டும் சந்திப்போம். 

2 comments:

  1. நம்ப முடியாத நாடுகள்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஸ்ரீராம்!

      இன்றைய டெமாக்ரட்டுகள் நிலை இங்கே கழகங்கள் மாதிரி நீ செய்ததை நான் இல்லாததாக்குவேன் ரகம் அதனால் நிறையவே சந்தேகம் பழைய சரித்திரம் அப்படி.! இஸ்ரேல் மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட அரபுநாடுகள் தங்களுடைய முன்னேற்பாடுகளில் மும்முரமாக இருக்கிறார்கள்

      நம்முடைய வெளியுறவுக்கொள்கை தேவைக்கேற்றபடி தன்னை மாற்றிக்கொள்வதாக இப்போது இருக்கிறது பைடன் நிர்வாகம் நம்முடைய வெளியுறவுத்துறைக்கு சவாலாகத்தான் இருக்கும்

      Delete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை