இப்போதிருக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் முன்னால் முதல் உலகப்போரின் முடிவில் League of Nations என்றொரு அமைப்பு இருந்தது.போர் மூளாமல் இருப்பதற்கான செயல்பாடுகளே அதன் பிரதான குறிக்கோளாகக் கொண்டு ஜனவரி 10,1920 இல் ஆரம்பிக்கப்பட்டது என்றாலும் இரண்டாம் உலகப்போர் மூண்டதைத் தடுக்க அதனால் முடியவில்லை. இப்படி ஒரு அமைப்பைத் தோற்றுவிக்க காரணமாக இருந்த அன்றைய அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனுக்கு நோபல் பரிசு வாங்கிக் கொடுத்ததைத் தவிர அந்த அமைப்பால் போரைத் தடுக்கவோ உறுப்பு நாடுகளிடையே இணக்கமும் அமைதியும் ஏற்படச் செய்யவோ முடியவே இல்லை. 1945 அக்டோபர் மாதம் இப்போதிருக்கும் ஐக்கிய நாடுகள் சபை செயல்பட ஆரம்பித்தபிறகு, செயலற்றுப்போயிருந்த League of Nations கலைக்கப்பட்ட கதைபோல இப்போதிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையும் ஆக்கப்படுமோ என்கிற ஐயம் எனக்கு நீண்ட நாட்களாகவே உண்டு.
ஆமை புகுந்தவீடு என்னவோ ஆகும் என்பார்களே, அது நிஜமோ பொய்யோ தெரியாது, ஆனால் சீனா புகுந்த எதுவும் தேறாது என்பதை ஐக்கிய நாடுகள் சபையில் மியான்மர் ஆட்சிக்கவிழ்ப்புக்கெதிரான தீர்மானத்தை தனது Veto Power ஐ வைத்து சீனா தடை செய்திருப்பது இன்றைக்கு மறுபடியும் வெளிச்சமாக்கியிருக்கிறது. மியான்மர் ஆட்சிக்கவிழ்ப்பில் சீனாவின் பங்கு இருப்பதும் வெட்டவெளிச்சமாகியிருக்கிறது.
சீனாவின் பிடியில் ஏற்கெனெவே ஐநா சபையின் உலக சுகாதார நிறுவனம் (WHO) போன்ற பல அமைப்புகள் சிக்கி இருப்பதில் வூஹான் வைரஸ் பரவலில் சீனாவின் பங்கு குறித்த திரித்தல்கள் வெற்றிகரமாக நடந்தன. பாகிஸ்தான் சர்வதேச பயங்கரவாதிகளின் பயிற்சிக் கூடமாகவும் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிற களமாகவும் இருப்பதைக்குறித்து ஐநா விவாதம் செய்திருந்தாலும் சீனாவின் Veto Power தொடர்ந்து காப்பாற்றிக் கொண்டிருப்பதை, உலகநாடுகளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை..இதே.நிலைமை நீடிக்குமேயானால் ஐநா சபையும் அதன் நாட்களை எண்ண வேண்டியதுதான்!
The Print தளத்தின் ஜ்யோதி மல்ஹோத்ரா இந்த 9 நிமிட வீடியோவின் தலைப்பில் சொல்கிற மாதிரி, மியான்மர் பாகிஸ்தானைப்போல சீனாவின் அடிமை நாடல்ல, மியான்மரின் ராணுவம் சீனாவுக்குத் தன்னை விற்று விடவுமில்லை என்பது உணமையாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொள்வதைத்தவிர வேறு வழி இல்லை. கொஞ்சம் பொறுத்திருக்கத்தான் வேண்டும்.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!