Saturday, February 27, 2021

அக்கம் பக்கம் என்ன சேதி? நம்மைச் சுற்றி நடப்பவை!

சீன அதிபர் ஷி ஜின்பிங் சீனாவில் வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக அறிவித்திருக்கிறார். நம்புகிற மாதிரி இருக்கிறதா? அந்தநாட்களில் இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காண்டி கரீபி ஹடோ வறுமையே வெளியேறு என்று கண்ணில் படுகிற இடங்களில் எல்லாம் ஸ்டிக்கர், போஸ்டர் ஒட்டியவுடன் வறுமை வெளியேறி விட்டது என்பதை நம்ப முடிந்த மாதிரி இருந்தால், இதுவும் கூட நம்பக்கூடியதுதான்!


சீனா கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளில் உலகின்  வலிமையான பொருளாதாரமாக உருவெடுத்திருப்பது நிஜம்தான் என்றாலும் கிராமப்புறங்களில் வறுமை அறவே ஒழிக்கப்பட்டுவிட்டதாகச் சொல்லிப் பெருமை கொள்ள முடியாது என்கிறார்கள்.


Practice what you preach', this is India's message to Turkey. Ankara at the behest of Islamabad raised the Kashmir issue once again at UNHRC. But this time India pulled no punches & responded without mincing any words என்கிறது செய்தி. இஸ்லாமியக் கலீஃபாகவே தன்னை நினைத்துக் கொண்டிருக்கிற துருக்கியின் எர்துவான் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பாகிஸ்தானுக்கு ஆதரவுக் குரல் எழுப்புவதும், காஷ்மீர் விவகாரத்தைக் குறித்துப் பேசுவதும் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். ஐநா மனித உரிமை ஆணையத்தில் இந்தியா துருக்கிக்கு சரியான மூக்குடைப்பைச் செய்து காட்டியிருக்கிறது.


சிரியாவின் சோகம் முடிவே இல்லாமல் தொடர்கிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முந்தைய மனநிலையில் ரஷ்யாவை மட்டுமே ஒரே எதிரியாகப் பார்க்கிற விதம் தெளிவாகி இருக்கிறது. சீனப்பூச்சாண்டி நிஜமாகவே பெரிதாக வளர்ந்து நிற்பது கண்ணுக்குத் தெரியவில்லை என்பது சர்வதேச அரசியலில் அமெரிக்காவின் ஆளுமை குறைந்து வருவது டெமாக்ரட்டுகளுக்கு உண்மையாகவே புரியவில்லையா அல்லது புரியாத மாதிரி நடிக்கிறார்களா?


2022 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளை நிராகரிப்பது சீனர்களுக்கு நல்லதொரு எச்சரிக்கையாக இருக்கும் என்று முந்தைய ட்ரம்ப் நிர்வாகத்தில் secretary of state ஆக இருந்த மைக் பாம்பியோ கருத்து தெரிவித்திருக்கிறார்.

மீண்டும் சந்திப்போம்;

Wednesday, February 24, 2021

இந்தியா பாகிஸ்தான் சீனா ::: ஸ்ரீலங்காவும் சேர்ந்து கொள்கிறதா?

இந்திய சீன எல்லைப்பிரச்சினையில் உண்மையான தகவல்களை நம்மூர் ஊடகங்கள் வெளியிடுவதில்லை என்கிற ஆதங்கம் எனக்கு நிறையவே உண்டு முந்தைய ஆட்சியாளர்கள்'செய்துவிட்டுப்போன குளறுபடிகள், சிடுக்கல்களை சரிசெய்வதில் இப்போதைய அரசு மும்முரமாக இருந்தாலும், அரசிடமிருந்தும் கூட விரிவான விளக்கங்கள் எதுவுமில்லை. ஆனால் இந்திய ராணுவ அதிகாரிகள் தரப்பிலிருந்து, சில வெளிச்சங்கள் நமக்குக் கிடைத்து வருகின்றன.  



நமது ராணுவத்தின் வடக்குப்பகுதி கமாண்டர், லெப்டினன்ட் ஜெனெரல் யோகேஷ் குமார் ஜோஷி இந்திய சீன எல்லை உரசல்களில், களத்தில் இருக்கும் உயர் அதிகாரி! இருதரப்பும் தங்களது படைகளை சென்ற ஆண்டு நிலவரத்தில் இருந்தபடி, விலக்கிக் கொள்வது என்rறு ஏற்பட்ட ஒப்பந்தம் குறித்தும், அடுத்து பேச்சுவார்த்தையில் இருக்கும் இதர பகுதிகள் குறித்தும் பேசிய வீடியோக்கள் முந்தைய பதிவிலேயே இருக்கின்றன.அதில் டெப்சாங் பகுதி முந்தைய (ஆட்சியாளர்கள்) காலத்தில் இருந்து சுவீகரிக்கப்பட்டது legacy issue என்பதைத் தெளிவாகச் சொல்கிறார். விஷயத்தைப் புரிந்துகொள்ளக் கொஞ்சம் பொறுமையாகப் பார்க்க வேண்டிய விஷயம் இது.


டாக்டர் சுப்ரமணியன் சுவாமி இந்த tweet இல் சொல்கிற மாதிரி கொஞ்சம் சிக்கலானதுதான். இந்தக் கீச்சுக்கு வழி என்ன என்று ஒருவர் கேட்டதற்கு சுவாமியின் ஒரு வார்த்தை பதில்:: யுத்தம் இன்றைய நிலையில் உடனடி சாத்தியமா? தாங்கள் விட்டுவிட்டுப்போன சிடுக்கல் இன்னதென்று தெரிந்தே வயநாடு தொகுதி எம்பி, நாடாளுமன்றத்தில் பிரதமரைக் கோழை என்று அழைத்தார்.இவரைமாதிரியானவர்கள் தேசத்துக்கே பெரும் தலைகுனிவு என்பதை வருத்தப்பட்டுச் சொல்லி என்ன செய்ய?       


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசுமுறை விஜயமாக ஸ்ரீலங்காவுக்கு நேற்றைக்கு வந்து சேர்ந்து இருக்கிறார். இன்றைக்கு அங்கே நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தியாவின் அதிருப்திக்குள்ளாக நேரிடும் என்பதால் ரத்து செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. முடிந்துபோன (குழிதோண்டிப்புதைக்கப்பட்ட) காஷ்மீர் பிரச்சினை தவிர பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கு வேறு அஜெண்டா இல்லை என்பதை வந்த இடத்திலும்  இம்ரான் கான் பேசி நிரூபித்திருக்கிறார். ராஜபக்ச சகோதரர்கள் மிகவும் தந்திரமாகச் செயல் படுவதாக நினைத்துக்கொண்டு, சீனக்கடன் வலையில் விழுவதற்குத் தயாராக இருக்கிறார்கள். 

மீண்டும் சந்திப்போம்.      


          

Monday, February 22, 2021

இந்தியா சீனா பாகிஸ்தான் ::: #CPEC #OBOR என்ன நிலையில் இருக்கிறது?

ஐந்தாண்டுகளுக்கு முன்னால் சீனா பாகிஸ்தான் எகனாமிக் காரிடார் CPEC, ஷி ஜின்பிங்கின் கனவுத் திட்டமான ஒரே பெல்ட் ஒரே ரோடு CPECஇன் முக்கியமான பகுதியாகத் தம்பட்டம் அடிக்கப்பட்டதே! நினைவிருக்கிறதா? இப்போது அந்தக்கனவுத் திட்டம் என்ன நிலையில் இருக்கிறது? 

  

The Khan government has been now striving hard to work hand in hand with their Chinese counterparts, hoping to overcome any damage done from past criticisms of CPEC. But unfortunately, more than the current ruling party’s unaddressed reservations about CPEC, it is their inefficiency and incompetence that is becoming the cause of bottlenecks in the implementation of the multibillion dollar projects, coming precisely at a time when Chinese investors are growing less interested in unprofitable but politically correct projects. This is why the road to CPEC becomes longer and longer by the day என்று டிப்ளமாட் தளத்தில் எழுதி இருக்கிறார் ஒரு லாகூர் பத்திரிகையாளர். காசுக்கு ஏங்கித் தவிக்கும் நாடாக, சீனாவை மட்டுமே எல்லாவற்றிற்கும் எதிர்பார்த்துக்கிடக்கும் client state ஆகக் குறுகிப்போனபிறகு பாகிஸ்தான் செய்வதற்கு வேறென்ன இருக்கிறது?


சீனா கந்துவட்டி ஏகாதிபத்தியமாக வளர்ந்து நிற்கிற  நிலையில், கடன்படுகிற நாடுகளின் கதி என்னவாகும்? ரொம்பதூரம் 
தேடவேண்டியதே இல்லை. வெகு அருகாமையிலேயே இருக்கிறது. 


ஸ்ரீலங்கா
 அனுபவம் கண்முன்னால் இருக்கவே இருக்கிறது. கெட்டபிறகும் கூட சீனாவின் காலடியில் விழுந்து கிடக்கவே விரும்புகிற ஸ்ரீலங்கா ராஜபட்சே சகோதரர்கள் போலவே, கிடப்பதைப் போல, மீள முடியாமல் கிடக்க வேண்டியதுதான்! இந்தியாவிடம் வாங்கிய 3000 கோடி ரூபாய் கடனை எங்கிருந்து வாங்கித் திருப்பிக் கொடுத்தார்களாம்? ராஜபட்சே சகோதரர்கள் கொஞ்சம் புத்திசாலித்தனமாக, சீனக் கடன் புதைகுழிக்குள் அவர்கள் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டுமானால், இந்தியா அதை இலவசமாகக் கொடுத்துவிட வேண்டுமென பேரம் பேசுவதைக் கூட சீனா சகித்துக் கொள்ள முடியாமல் எச்சரித்திருக்கிறது.

இன்னொருபக்கம் ....

அமெரிக்க வர்த்தகத் தடைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று சீனா கோரிவருவதன் பின்னணியில் ;;; ஹுவாவே: டிரம்ப் விதித்த அமெரிக்கத் தடைகளால் பன்றி வளர்ப்பில் கவனம் செலுத்தும் சீன செல்பேசி நிறுவனம் என்று பிபிசி தமிழ் செய்தித்தளம் சொல்கிறதே, அதையும் பார்த்துவிடலாமா?

மீண்டும் சந்திப்போம்.  

Saturday, February 20, 2021

இந்திய சீன எல்லைப் பிரச்சினை::: உடனடியாகத் தீர்வு காண முடிகிற விஷயம் தானா?

சேகர் குப்தா நிறைய அனுபவமுள்ள பத்திரிகையாளர் ஒரு பக்கச் சார்பாகவே பேசிவருபவர் என்றாலும்  கூட சீனா  உடனான எல்லைப்பிரச்சினைகள் குறித்த தனது பார்வையை இந்த 25 நிமிட வீடியோவில் பேசுவதைக் கவனமாகக் கேட்டேன்.


ஒரு முழு அளவிலான யுத்தத்தில் போய் முடிவதை இந்தியா விரும்பவில்லை, சீனாவும் கூட அதற்குத் தயாராக இல்லை என்பது அவர்களுடைய தம்பட்டம், ராணுவ ரீதியான பில்டப்புகள் எல்லாவற்றையும் தாண்டி 1962 இல் இருந்ததுபோல பலவீனமான அரசியல் தலைமை இப்போது இல்லை என்பதால், இந்திய ராணுவம் இந்த முறை சீனர்களை எதிர்கொள்ளத் தயாராகவே இருந்ததால், சர்வதேச அளவில் இந்தியா ஒரு வலுவான கூட்டணியை அமைத்திருக்கிறது என்பதால், சீனர்கள் தங்களுடைய அட்வென்ச்சரிலிருந்து பின்வாங்கவேண்டி வந்தது. இருமுனைப்போரை இந்தியா என்றில்லை, எந்த நாடுமே சமாளிக்க முடியாது என்று சேகர் குப்தா சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அதுஉருவான வும் இந்திய வெறுப்பிலேயே உருவான பாகிஸ்தான் ஏறத்தாழ  client state / சீனாவின் விருப்பத்துக்கேற்ப ஆட்டுவிக்கப்படுகிற பொம்மை அரசுதான் என்றாகிவிட்ட  நிலையில் அவர்களுடன் சமாதானமாகப்போவது சாத்தியமா?  

The Modi government is our most political of all. In the sense that it weighs all policy in electoral terms. If so, it would need hostility with Pakistan to persist. Because Pakistan and pan-Islamic terrorism are the warp and weft in which electoral polarisation at home comes gift-wrapped.That is the fundamental issue the Modi government will need to weigh. Will it let domestic political compulsions limit its strategic options, or have the confidence to change? இப்படி சேகர் குப்தா சொல்வது எந்த வகையில் சரியாக இருக்கும்? 


StratNewsGlobal தளத்தில் நிதின் கோகலே இந்த 12 நிமிட வீடியோவில் சொல்வதையும் கொஞ்சம் கேளுங்களேன்! எழுபது வருடங்களுக்கும் மேலாக, தீர்வு காணப்படாமல் ஒத்திபோடப்பட்டுக் கொண்டே வந்த ஒரு சிக்கல், இப்போது பிராந்தியத்தில் இருநாடுகளுமே வலிமையான சக்திகளாக வளர்ந்து நிற்கையில், யார்  யாருக்கு அடங்கிப்போவது என்பதாக மாறிவிடாமல் பார்த்துக்கொள்வதே முக்கியம் ஆட்டத்தில் எதிர்த் தரப்புடன் சேர்ந்து ஆட்டம்போடுகிற ஒரு சில்லறை உடன் இணக்கமாகப் போவது அல்ல பாகிஸ்தான் தரப்பில் உண்மையாகவே இணக்கமாகப்போகிற ஒரு சூழ்நிலை எழுமேயானால், அப்போது பார்த்துக் கொள்ள வேண்டிய விஷயம்! இப்போது அல்ல.

இந்த ஆட்டத்தில் சீனா, பாகிஸ்தான் மட்டுமே இல்லை. மியான்மர், ஸ்ரீலங்கா போன்ற நாடுகளும் இருக்கின்றன. முத்தண்ணன் அந்தஸ்தைப் பறிகொடுத்துவிட்ட அமெரிக்காவும் இருக்கிறதே!     

மீண்டும் சந்திப்போம்.  

Thursday, February 18, 2021

இந்திய சீன எல்லையில் போர்ப்பதற்றம் குறைகிறதா?

ராகுல் காண்டி மாதிரி முழு  மங்குணியாக இல்லாமல் கொஞ்சம் விவரங்களைத் தெரிந்து கொண்டு பேசலாம் என்று நினைக்கிறேன் என்று முந்தைய பதிவில் சொல்லி இருந்ததன் தொடர்ச்சியாக! இந்தியா சீனா இருநாடுகளும் தங்களுடைய படைகளை 1920 ஏப்ரலில் இருந்த மாதிரியே வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒப்புக்கொண்டதைப் பற்றிய அதிக விவரங்கள் இப்போது வெளிவரத் தொடங்கி இருக்கின்றன. 


இந்த 5 நிமிட வீடியோவில் சில தகவல்கள் இருக்கின்றன. China wanted to humiliate Modi, but was forced to withdraw as military stalemate was going nowhere' என்ற தலைப்பிட்டு The Print தளத்தின் ஜ்யோதி மல்ஹோத்ரா, StratNews Global தளத்தின் தலைமை ஆசிரியர் நிதின் கோகலே மற்றும் ஹிந்து நாளிதழின் சீனா கரெஸ்பாண்டென்ட் அனந்த் கிருஷ்ணன் இருவருடனும் உரையாடுகிற 36 நிமிட காணொளியில்   சீனத்துச் சண்டியர் தனது உதார்களை சுருட்டிக் கொண்டதன் பின்னணியை நிதின் கோகலே அழுத்திச் சொல்கிறார். 


வீடியோ 18 நிமிடம். இதில் இன்னும் விரிவான தகவல்கள் இருக்கின்றன. இப்போது நடந்து கொண்டிருப்பது படைகளை பழைய நிலைக்குக் கொண்டுபோவதான disengagement மட்டுமே,PLA’s gradual withdrawal from Galwan and other locations in eastern Ladakh is just the start of what is likely to be a long-winding complicated process, which from an Indian standpoint must end at complete de-escalation across the Line of Actual Control. De escalation  என்பதற்கும் disengagement என்பதற்கும் வித்தியாசம் இருப்பதைப் புரிந்து கொண்டால், அங்கே எல்லைப் பகுதியில் என்ன நடக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியும். 


அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா,ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளுடைய 
மந்திரிகள் அளவிலான  QUAD பேச்சுவார்த்தை இன்று மாலை நடந்து முடிந்திருக்கிறது. ஜோ பைடன் நிர்வாகம் எந்த அளவுக்கு இந்த முயற்சியை முன்னுக்கு எடுத்துச் செல்லும் என்பதில் இன்னமும் ஒரு தெளிவு இல்லை. அமெரிக்காவை நம்பிப் பயனில்லை என இஸ்ரேல்,சவூதி அரேபியா, பிரான்ஸ் முதலான நாடுகள் ஏற்கெனெவே தன் கையே தனக்குதவி என்று முடிவெடுத்துச் செயல்பட ஆரம்பித்திருப்பதையும் இந்தநேரத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.  
 
மீண்டும் சந்திப்போம்.    

Friday, February 12, 2021

#டொனால்ட்ட்ரம்ப் தகுதிநீக்க விசாரணை! #ராஜ்நாத்சிங் அறிக்கை! #சேகர்குப்தா !

அமெரிக்க டெமாக்ரட்டுகளின் கோமாளித்தனங்களில் மிகவும் உறுத்தலாக இருப்பது டொனால்ட் ட்ரம்ப் பதவி விலகிய பிறகும் கூட கடு, ம் வன்மத்துடன் இரண்டாவது முறையாக தகுதி நீக்கம் செய்கிற தீர்மானம், குற்றச் சாட்டுக்களை வரையறுத்து காங்கிரசில் நிறைவேற்றி செனெட்டுக்கு அனுப்பியிருப்பது 

வீடியோ 6 நிமிடம் 

இங்கே இதை வாசிக்கவரும் நண்பர்களுக்காக தகுதி நீக்கம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்ப.தைச் சுருக்கமாகச் சொல்லியாக வேண்டும்! அமெரிக்க காங்கிரஸ் என்பது நம்மூர் மக்களவை மாதிரி! என்ன என்ன குற்றச்சாட்டுகளின் பேரில் தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதைதீர்மானம்  வரையறுத்து, அதை செனேட் சபைக்கு ((நம்மூர் மாநிலங்களவை மாதிரி) அனுப்புகிற அதிகாரம் மட்டுமே உண்டு. அங்கே impeachment தீர்மானம் மெஜாரிடி உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டதால் மட்டுமே தகுதிநீக்கம் செய்யப்பட்டதாகி விடாது. செனேட் சபை உறுப்பினர்கள் ஜூரர்களாகவும், உச்ச நீதிமன்றத் தலைமைநீதிபதி, விசாரணை நீதிபதியாகவும் இருந்து ஒரு நீதிமன்றமாகவே செயல்பட்டு, வழக்கு விசாரணை நடந்து,  வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டுபங்கு செனேட் உறுப்பினர்கள் ஆதரித்து  வாக்களித்தால் மட்டுமே தகுதி நீக்கம் நிறைவேறும். டெமாக்ரட்டுகளுக்கு இது தெரியாதா? காங்கிரசின் ஸ்பீக்கர் நான்சி பெலோசி இது நிறைவேறாது என்று தெரியும் என வெளிப்படையாகவே சொன்னார் 

ஆனாலும் டொனால்ட் ட்ரம்ப் மீதான பயம், அவர் மறுபடியும் அதிபர் பதவிக்குப் போட்டியிடவே கூடாது என்கிற வன்மத்தில் டெமாக்ரட்டுகள் 16 மணிநேர விசாரணையில் ஒரு முழுமையான சாட்சியம் எதுவும் இல்லாமலேயே முடித்திருக்கிறார்கள் அடுத்து ட்ரம்ப் தரப்பு வாதங்கள், விசாரணை நடக்க வேண்டும்.. நாட்டைப் பிளவுபடுத்தி விட்டார் ட்ரம்ப் என்று கூவிக் கொண்டே டெமாக்ரட்டுகள் அந்த வேலையைத் தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.


2020 ஏப்ரல் மாதத்தில் இருந்தபடியே சீனா, இந்தியா இரு நாடுகளும் படைகளை வைத்திருக்கவேண்டும் என இரு தரப்பும் ஒப்புக்கொண்டு, அதன்படி படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் அறிவித்ததில், வழக்கம் போல ராகுல் காண்டி, விஷயத்தைப் புரிந்து கொள்ளாமலேயே பிரதமர் மோடியைக் கோழை என்று ஏசியிருக்கிறார்.     

 


சேகர் குப்தா நேற்றைக்குப் பேசியது. வீடியோ 26 நிமி. ரஷ்யாவின் இஸ்வேஸ்தியாவோடு Tass செய்தி நிறுவனத்தைப் போட்டுக் குழப்பிக்கொண்டது ஒரு சின்னச் சறுக்கல்.  ஆனாலும் ராஜ்நாத் சிங்கின் அறிக்கையைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகவே சொல்கிறார்.  

இந்த விவகாரத்தில் ராகுல் காண்டி மாதிரி முழு  மங்குணியாக இல்லாமல் கொஞ்சம் விவரங்களைத் தெரிந்து கொண்டு பேசலாம் என்று நினைக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.

Friday, February 5, 2021

#ஜோபைடன் பழைய பன்னீர்செல்வமா திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்றைக்கு தனது நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை குறித்தான முதலாவது அறிவிப்பை வெளியிட்டுப் பேசியிருக்கிறார் அமெரிக்கா திரும்பவந்துவிட்டது என்ற ஆர்ப்பரிக்கும் வார்த்தைகளில் அவர் சொல்லியிருப்பதெல்லாம் பழைய பன்னீர்செல்வம் பாரக் ஒபாமாவாக வந்துவிட்ட மாதிரித் தான் இருக்கிறது யேமன் மீது சவூதி அரேபியா நடத்தி வரும் போரிலிருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக அறிவித்திருக்கிறார். ஆயுத விற்பனையும் கிடையாது என்ற அறிவிப்பு வேறு! அடுத்து ரஷ்யா மீது பாய்ச்சல்! அதுவும் முந்தைய நிர்வாகத்தை விட மிகக்கடுமையாக இருக்குமென்கிற ஜம்பப்பேச்சு வேறு! சீனாவைப் பற்றி பெரிதாக பிரஸ்தாபம் எதுவும் இல்லை. ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா, ஜப்பான், ஜெர்மனி, மெக்சிகோ, தென்கொரியா, அப்புறம் நேட்டோ ராணுவக்கூட்டு இவைகளெல்லாம் இடம்பெற்ற கொள்கை முழக்கத்தில் இந்தியா பற்றிய பேச்சேகாணோம்  என்பது எனக்கு வியப்பாக இல்லை!


அமெரிக்க டெமாக்ரட்டுகளுக்கு பாகிஸ்தானை மிகவும் பிடிக்கும், இந்தியாவைப் பிடிக்காது என்பது மிகநீண்ட காலமாகத் தொடர்கிற விஷயம். ஒபாமா காலத்தில் கொஞ்சம் குறைவாக இருந்ததென்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். 

Former Secretary of State Mike Pompeo reacted Thursday to President Biden's declaration that "America is back" by asking if the commander-in-chief meant "back to when ISIS controlled a caliphate in Syria that was the size of Britain." "I hope not. President Trump and our team took that down," Pompeo told "Fox News Primetime" host Trey Gowdy. 

ஜோ பைடன் நிர்வாகத்தில் சீனா குறித்தான கொள்கை முடிவுகளில் தள்ளாட்டமும், டொனால்ட் ட்ரம்ப் செய்த எல்லாவற்றையும் மாற்றவேண்டும் என்கிற அவசரமும்  தெரிகிறது. வரும் நாட்களில் நம்பத்தகுந்த கூட்டாளி நாடாக ஜோ பைடனின் அமெரிக்கா இருக்கப் போவதில்லை என்பதை இஸ்ரேல், சவூதி அரேபியா உள்ளிட்ட பலநாடுகள் ஏற்கெனெவே புரிந்துகொண்டு தங்கள் நலனைப் பாதுகாத்துக்கொள்வதில் முனைந்து நிற்கின்றன.

இந்தியா என்ன செய்யப்போகிறது என்பது இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை.

மீண்டும் சந்திப்போம். 

Wednesday, February 3, 2021

#மியான்மர் ஆட்சிக்கவிழ்ப்பும் சீனர்களின் திருவிளையாடல்களும்!

இப்போதிருக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் முன்னால் முதல் உலகப்போரின் முடிவில் League of Nations என்றொரு அமைப்பு இருந்தது.போர் மூளாமல் இருப்பதற்கான செயல்பாடுகளே அதன் பிரதான குறிக்கோளாகக் கொண்டு ஜனவரி 10,1920 இல் ஆரம்பிக்கப்பட்டது என்றாலும் இரண்டாம் உலகப்போர் மூண்டதைத் தடுக்க அதனால் முடியவில்லை. இப்படி ஒரு அமைப்பைத் தோற்றுவிக்க காரணமாக இருந்த அன்றைய அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனுக்கு நோபல் பரிசு வாங்கிக் கொடுத்ததைத் தவிர அந்த அமைப்பால் போரைத் தடுக்கவோ உறுப்பு நாடுகளிடையே இணக்கமும் அமைதியும் ஏற்படச் செய்யவோ  முடியவே இல்லை. 1945 அக்டோபர் மாதம் இப்போதிருக்கும் ஐக்கிய நாடுகள் சபை செயல்பட ஆரம்பித்தபிறகு, செயலற்றுப்போயிருந்த League of Nations கலைக்கப்பட்ட கதைபோல இப்போதிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையும் ஆக்கப்படுமோ என்கிற ஐயம் எனக்கு நீண்ட நாட்களாகவே உண்டு.


ஆமை புகுந்தவீடு என்னவோ ஆகும் என்பார்களே, அது நிஜமோ பொய்யோ தெரியாது, ஆனால் சீனா புகுந்த எதுவும் தேறாது என்பதை ஐக்கிய   நாடுகள் சபையில் மியான்மர் ஆட்சிக்கவிழ்ப்புக்கெதிரான தீர்மானத்தை தனது Veto Power ஐ வைத்து சீனா தடை செய்திருப்பது இன்றைக்கு மறுபடியும் வெளிச்சமாக்கியிருக்கிறது. மியான்மர் ஆட்சிக்கவிழ்ப்பில் சீனாவின் பங்கு இருப்பதும் வெட்டவெளிச்சமாகியிருக்கிறது.  

சீனாவின் பிடியில் ஏற்கெனெவே ஐநா சபையின் உலக சுகாதார நிறுவனம் (WHO) போன்ற பல அமைப்புகள் சிக்கி இருப்பதில்  வூஹான் வைரஸ் பரவலில் சீனாவின் பங்கு குறித்த திரித்தல்கள் வெற்றிகரமாக நடந்தன. பாகிஸ்தான் சர்வதேச பயங்கரவாதிகளின் பயிற்சிக் கூடமாகவும் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிற களமாகவும் இருப்பதைக்குறித்து ஐநா விவாதம் செய்திருந்தாலும் சீனாவின் Veto Power தொடர்ந்து காப்பாற்றிக் கொண்டிருப்பதை, உலகநாடுகளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை..இதே.நிலைமை நீடிக்குமேயானால் ஐநா சபையும் அதன் நாட்களை எண்ண வேண்டியதுதான்! 


The Print தளத்தின் ஜ்யோதி மல்ஹோத்ரா இந்த 9 நிமிட வீடியோவின் தலைப்பில் சொல்கிற மாதிரி, மியான்மர் பாகிஸ்தானைப்போல சீனாவின் அடிமை நாடல்ல, மியான்மரின் ராணுவம் சீனாவுக்குத் தன்னை விற்று விடவுமில்லை என்பது உணமையாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொள்வதைத்தவிர வேறு வழி இல்லை. கொஞ்சம் பொறுத்திருக்கத்தான் வேண்டும்.

மீண்டும் சந்திப்போம்.

Monday, February 1, 2021

#மியான்மர் ஆட்சிக்கவிழ்ப்பு! மாறிவரு!ம் சீனத்தந்திரங்கள்!

இன்று அதிகாலை மியான்மர் ராணுவத்தலைமை (Tatmadaw) தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூச்சி அரசை நீக்கிவிட்டு, ஆட்சியைத் தன்வசமே வைத்துக் கொண்டு இருக்கிறது .ஆங் சான் சூச்சியும் வேறுசிலரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப் பட்ட அரசு  என்றாலும் ராணுவத்தலைமையால் கட்டுப் படுத்தப்படுகிற அரசாகவே ஆங் சான் சூச்சி அரசு இருந்து வருகிற நிலையில் இந்த ஆட்சிக்கவிழ்ப்பு எதற்காக?  இப்போது நிகழக்காரணம் என்ன?  


ஆட்சிக்கவிழ்ப்புடன் ஓராண்டுக்கு நெருக்கடி நிலைமை அறிவிப்பும் சேர்ந்தே வந்திருக்கிறது. அரசு டிவி  சில தொழில்நுட்பக்கோளாறுகளால் ஒளிபரப்ப முடியாது என்று அறிவித்திருப்பது ஒருபக்கம் காமெடி! இன்னொரு பக்கம் மியான்மர் நீண்டகாலமாகவே வெளியுலகுடன் தொடர்புகளே இல்லாமல் தானே தன்னைத்தனிமைப் படுத்திக் கொண்ட  நாடாகவே இருந்தது. (மா சேதுங் காலத்துச் சீனாவும் கூட இப்படித்தான்  வெளியுலகுடன்  தொடர்பு இல்லாமல் இருந்தது)  மியான்மர் ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னால் சீனா இருப்பது உலகறிந்த ரகசியம்.

 

மியான்மரில் நடந்த ஆட்சிக்கவிழ்ப்புக்கு வழக்கம் போல கண்டனங்கள் எழுந்தாலும், அவைகளால் என்ன ஆகிவிடப்போகிறது? 

மியான்மர் விவகாரத்தில் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்களை இங்கே அவினாஷ் பாலிவால் சொல்கிறார்.  இவர் சொல்வது ராணுவத் தலைமைக்குள்ளேயே இரண்டுவிதமான பிரிவுகள் இருப்பதனால் தான் இப்படி என்கிற மாதிரி! 

Military Takeover Of Myanmar: China Suspected To Have Orchestrated Coup To Re-Establish Its Grip On The Country And Its Resources என எல்லாப்புகழும் சீனர்களுக்கே என்கிறார் ஜெய்தீப் ம.ஜூம்தார் 



செலானி வேறு இப்படிப் படுத்துகிறார்!! 

கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம். 

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை