இந்த flow chart சொல்கிற மாதிரித்தான் வெளியுறவுக் கொள்கை இருக்குமா?
#சோஷலிசச்சிற்பி #எல்லாம்தெரிந்தஏகாம்பரம் நேருவும் சகாவு விகே கிருஷ்ணமேனனும் சேர்ந்து உருவாக்கிய குளறுபடிகளே இந்தியவெளியுறவுக் கொள்கையாக அறிவிக்கப்பட்டது. நேரு மிகப்பெரிய கற்பனாவாதி என்பதும் அவருடைய கற்பிதங்கள் நடைமுறைக்கு உதவாதவை என்பதும் நேருவின் வாழ்நாளிலேயே பலமுறை வெளிச்சத்துக்கு வந்தது.
Under the leadership of Nehru, INDIA convened the Asian Relations Conference in New Delhi in 1947 to forge the idea of Asian solidarity. ஆசிய ஒற்றுமை ஐடியா என்னாயிற்று?
#வெறும்வாய்ப்பேச்சு தாண்டி நேரு சாதித்தது என்ன? #நேரு என்றவுடன் #பஞ்சசீலக்கொள்கை என்பதும் சேர்ந்தே பாடங்களில் வரும். சீனாவுடன் ஏப்ரல் 28, 1954 இல் கையெழுத்தான அமைதி ஒப்பந்தம் அது. அது என்ன பஞ்ச சீலங்கள்?
Mutual respect for each other’s territorial integrity and sovereignty.
Non-aggression against each other.
Non-interference in each other’s affairs.
Equality and mutual benefit.
Peaceful co-existence.
என்று பாடங்களில் சொல்கிறார்கள். அதிலிருந்து நேரு ஏதாவது பாடம் படித்தாரா? இல்லையென்று தான் 1956 இல் சீனப்பிரதமர் சூ என் லாய் எல்லைப் பிரச்சினையை பரஸ்பரம் வீட்டுக் கொடுத்து சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளலாம் என்று இந்தியாவுக்கே வந்து சொன்னபோது உதாசீனப் படுத்திய விதம் சொல்கிறது இதை சீன தூதராகவும், பின்னாட்களில் மத்திய மந்திரிசபையிலும் இருந்த கே நட்வர் சிங்கும் தான் எழுதிய புத்தகத்தில் சொல்லியிருக்கிறார்.
ஆக #நோஞ்சான்நேரு உதிர்த்த பன்ச் டயலாக் எல்லாம் வடிவேலு காமெடி மாதிரியே முடிந்துபோனதுதான் #நேருபாரம்பரியம் அந்த #அணிசேராக்கொள்கை அதைப் பற்றி விரிவாகத் தனிப்பகிர்வாக எழுத வேண்டும்.
ஜம்மு காஷ்மீரில் மூன்று போலீசாரைக் கடத்திக் கொலை செய்து விட்டு #QuitorDie என்று பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவீர வாதிகள் கொக்கரித்திருக்கிறார்கள். இந்தியாவுக்குள் புகுந்து பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் இருபது பேருக்குத் தபால் தலைகள் வெளியிட்டு பாகிஸ்தானிய அரசு கௌரவப்படுத்தியிருக்கிற பின்னணியில் பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பை இந்திய அரசு ரத்து செய்திருக்கிறது
India calls off talks with Pakistan after J&K cops killing, says PM Imran Khan’s ‘true face’ exposed
"It's obvious that behind Pakistan's proposal for talks to make a fresh beginning, evil agenda of Pakistan stands exposed and the true face of new Prime Minister of Pakistan has been revealed to the world in his first few months in the office," the MEA said. இப்படி ஒரு சிறு குறிப்பாக எழுதியது 2018 செப்டெம்பரில். ஆனால் 2014 வாக்கிலேயே இந்த சப்ஜெக்டைப் பற்றி
இது ரொம்ப அக்கிரமம்! #காங்கிரஸ்கட்சி க்கே #வெளியுறவு
என்றால் #வெளியேவரவு என்ற அளவுக்குத் தான் #வெளியுறவுக்கொள்கை இருந்தது என்ற நிலையில் #டம்மிப்பீசுக்கு மட்டும் அது இல்லை என்று சொல்வது ரொம்பவே அக்கிரமம்!
மன்மோகன் அரசாங்கத்தில் அமெரிக்காவின் அணுஆயுத ஒப்பந்தம் நிறைவேற தனிப்பட்ட முறையில் மன்மோகன் எந்த அளவுக்கு கீழ் இறங்கி செயல்பட்டார் என்பதனை அந்த சமயங்களில் வாசித்த போது தான் நம் நாட்டில் உள்ள பெரிய தலைகள் யாருக்காக இந்த அரசாங்கம் நடத்துகின்றார்கள்? என்பதனையும் அப்போது தான் வெளியுறவு கொள்கை என்றால் என்ன? என்ற புரிதலும் எனக்கு உருவானது.
ReplyDeleteThe Civil Liability for Nuclear Damage Bill 2010 இடதுசாரிகளுடைய கடுமையான எதிர்ப்பை மீறி ஐந்தே மாதங்களில் இரு அவைகளிலும் ஐ மு கூட்டணி அரசு நிறைவேற்றிய அவசரம், பின்னணி என்ன என்பதை இங்கே இன்னமும் நினைவு வைத்திருக்கிறீர்களா ஜோதி ஜி? வெளியுறவுக் கொள்கைக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. ஊழல் மலிந்த ஒரு பலவீனமான அரசைக் கையைப் பிடித்து முறுக்குவது எப்படி என்பதில் அமெரிக்கர்கள் தெளிவாக இருந்தார்கள்! பிஜேபி போன்ற வலதுசாரிகள் ஆதரவும் இருந்தது.
Deleteஅன்றைய நிலவரத்தில் வேறு வழியும் இல்லாதபடி செய்து உதயகுமார்கள் கிறித்தவத் திருச்சபை எல்லாம் கைகோர்த்து நின்றார்கள்.