Monday, January 28, 2019

அணி சேராக் கொள்கை! ஆரம்பமான கதை

நேற்றைய நாட்களின் மிகப்பெரிய தம்பட்டமாக, வெற்று கோஷமாக இருந்த ஒரு இயக்கம் Non Aligned Movement அணிசேரா (நாடுகள்) இயக்கம் உருவான விதம், எப்படி அன்றைய பிரதமர் நேருவின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் மீது உருவானதே அன்றி, நாட்டின் நலன்களை முன்னிறுத்தி உருவாக்கப்படாததாக, வெளியுறவுக் கொள்கையின் ஒரு அம்சமாகவே இருந்த கதையைக் கொஞ்சம் பார்க்கலாமா?

விமல் சிங் ராத்தோர் என்ன சொல்கிறார் என்பது ஹிந்தியில் யூட்யூபில் கிடைத்தாலும், மொழி தெரியாத காரணத்தால் இங்கே பகிரவில்லை. 

ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் கூகிள் பிளஸ்சில் எழுதிய சிறு குறிப்பு இங்கே கொஞ்சம் உதவியாக  

இந்த #அணிசேராக்கொள்கை  அணிசேரா நாடுகள் உருவான விதமே கொஞ்சம் வேடிக்கையானது. யூகோஸ்லாவியா (தற்போது சிதறிவிட்டது) நாட்டின் செல்வாக்கு மிகுந்த தலைவராக இருந்தவர் #மார்ஷல்டிட்டோ   இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் ரஷ்யாவின் ஸ்டாலினோடு கருத்து வேறுபாடுகள் அதிகரித்த நிலையில் டிட்டோவைக் கொல்லவும் முயற்சிகள் நடந்தன. அப்போது டிட்டோ ஸ்டாலினுக்கு அனுப்பியதாகச் சொல்லப்படும் செய்தி மிகவும் பிரபலம்.

Stop sending people to kill me. We've already captured five of them, one of them with a bomb and another with a rifle. (...) If you don't stop sending killers, I'll send one to Moscow, and I won't have to send a second.

— Josip Broz Tito

கம்யூனிசத்தின் ஏகபோக உரிமையாளர்களாகத் தங்களை நினைத்துக் கொண்டு பிற சகோதர நாடுகளை ஆட்டுவித்த ரஷ்யாவின் போக்குக்கு எதிராக மார்ஷல் டிட்டோ கையில் எடுத்த ஆயுதம் தான் #அணிசேராக்கொள்கை  ஆரம்ப நாட்களில் ரஷ்யாவின் சோஷலிஸக் கொள்கைகளில் அபிமானம் கொண்டிருந்த நேரு ஸ்டாலின் மீது நம்பிக்கை இழந்திருந்த தருணம். சோஷலிசம் மீது மட்டும் கொஞ்சம் பிடிப்பு என்ற நிலையில் மார்ஷல் டிட்டோவுடன் சேர்ந்து கொண்டார் 

அமெரிக்கா ரஷ்யா என்று உலகம் இரண்டாகப் பிரிந்திருந்த சமயம், இவர்களில் எவரோடும் அணி சேர்வதில்லை என்று உருவானது தான் அணிசேரா நாடுகள் அமைப்பு. இந்திய அரசியலில் எப்படி மூன்றாவது அணி என்பது unstable elements இன் கலவை என்றிருக்கிறதோ, அதே போல சர்வதேச அரசியலில் அணிசேராதவை என்பது ஒரு வினோதமான கலவையாக, இரண்டு தரப்போடும் உறவா இல்லையா என்று குழம்பி, குழப்பிக் கொண்டிருந்த நாடுகளின் கூட்டமாக மட்டுமே இன்றைக்கு முக்கியமிழந்து போன ஒரு விஷயம்.

டிட்டோ ஸ்டாலின் இருவருக்கும் இடையிலான யார் பெரியவன் என்ற போட்டி ஆரம்பநாட்களில் டிட்டோவுக்குக் கொஞ்சம் சாதகமாக இருந்தது.

1961 இல் உருவான அணிசெராக் கொள்கையில் ஐந்து முக்கியமான தலைவர்களாக டிட்டோ, நேரு, எகிப்தின் நாசர், இந்தோனேஷியாவின் சுகர்னோ, கானா நாட்டின் என்க்ருமோ ஆகிய ஐவர் இருந்தனர்.
(மேலே படத்தில் இடது ஓரம் நேரு வலது ஓரம் மார்ஷல் டிட்டோ)  

நேருவுக்கு ஒரு விளம்பரமாக இருந்ததைத் தவிர இந்த #அணிசேராக்கொள்கை  இந்தியாவுக்கு எந்த விதத்திலும் உதவியாக இருந்ததில்லை 

#நேருபாரம்பரியம்  எவ்வளவு அபத்தமானது என்பதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் இந்த வரலாற்று நிகழ்விலிருந்தே நிறைய சொல்ல முடியும்.
இந்திய இடதுசாரிகளும் பத்திரிக்கையாளர்களும் எவ்வளவு லூசுத்தனமாக எழுதுகிறார்கள் என புரிந்து கொள்ள, போன அணிசேரா மாநாட்டுக்கு மோடி கலந்து கொள்ளவில்லையே என நீலிக்கண்ணீர் வடித்ததை பார்க்கவேண்டும்.

வெனிசுவேலாவிலே நடந்த மாநாட்டிலே கலந்து கொண்ட நாட்டு தலைவர்களின் எண்ணிக்கை 8 பேர் மட்டுமே. கடந்த முறை தெஹ்ரானிலே நடந்த மாநாட்டிலே கலந்து கொண்ட தலைவர்களின் எண்ணிக்கை 35. அணி சேரா அமைப்பிலே இருக்கும் நாடுகளின் எண்ணிக்கை 120.

உலக நாடுகளே கைவிட்ட அணிசேரா அமைப்பை நேரு நிறுவினார் என்பதாலே தூக்கிபிடித்துக் கொண்டு திரிந்தது என்பது மட்டுமே கான்கிரஸின் சாதனை.

அதிலேயும் இந்தியாவுக்கு முழு ஆதரவு இருக்குமாறு கான்கிரஸ் பார்த்துக்கொண்டாத இல்லையா என்றால் கிடையாது. அணி சேரா அமைப்பிலேயும் தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியாவால் தீர்மானம் கொண்டு வரமுடியவில்லை. பாக் அதை தடுத்துவிட்டது.

இப்படி வேலைக்கே ஆகாத அமைப்புக்கு மோடி வெனிசுவேலா வரை போகவில்லை என எத்தனை கட்டுரைகள்? எவ்வளவு கண்டங்கள்?
நடைமுறைக்கும் இந்த லூசு இடதுசாரிகளுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதற்கு இந்த அணிசேரா மாநாடும் அதையொட்டி கருத்துக்களும் ஒரு உதாரணம் என்கிறார் ராஜசங்கர்.

ICSE பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்புப் பாடமாக இந்த விஷயம் இருக்கிறது போல! ஒரு வீடியோ பகிர்வு இங்கே
 

   

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை