Friday, January 25, 2019

நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது? செய்திகள், விமரிசனங்களுடன்!

நம்மைச் சுற்றி என்ன நடக்கிறதென்று செய்திகளைச் சிறு விமரிசனக் குறிப்புகளுடன் கூகிள் பிளஸ்சில் எழுதிக் கொண்டிருந்தது இங்கே இனிமேல் விரிவாக எழுதும் முனைப்புடன்! இது சோதனைப்பதிவாக .

#அக்கம்பக்கம் பார்த்துப் பேசவேண்டிய அவசியம் அமெரிக்க அதிபருக்கு வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம்! ஆனால் பாகிஸ்தான் பிரதமருக்கு அது பொருந்துமா? ராஜீய உறவுகளில் சிடுக்கல்கள் எப்படியெல்லாம் வந்துவிழுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் இந்த இரண்டு படங்களையும் க்ளிக் செய்து பாருங்களேன்! #இம்ரான்கான் டக் அவுட் ஆக வேண்டுமென்றே முயற்சிக்கிறாரோ என்று சந்தேகம் கூட லேசாக வருகிறதே! #ஒசாமாபின்லேடன் செத்தும் கூட பாகிஸ்தானைக் கெடுக்காமல் விடமாட்டாரோ?




என்னவென்று பார்த்தால் இப்படி!





அமெரிக்க டாலர்களில் கொழித்துக் கொண்டிருந்த பாகிஸ்தானிய ராணுவம், இப்போது அந்தச் செழிப்பில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. சீனர்களோ காசைக் கண்ணில் காட்டவே மாட்டேன் என்கிறார்கள். சவூதி அரேபியா,மலேசியா என்று இஸ்லாமிய நாடுகளிடம் கையேந்தியும் பயனில்லாமல் பாகிஸ்தானிய பொருளாதாரம் அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிறது. ஆனாலும் இந்தியாவுடனான பகை கொஞ்சமும் குறையவில்லை.

நம்மைச் சுற்றி என்ன நடக்கிறதென்று செய்திகளோடு உலா வரலாமா? சொல்லுங்களேன்!

4 comments:

  1. பக்கவாட்டு செட்டிங் ஏதோ மாறியுள்ளது. தொடர்ந்து எழுதுங்க.

    ReplyDelete
  2. சுவாரஸ்யமான உலாவாக இருந்தால் சந்தோஷம்தான். வாழ்த்துகள். தொடருங்கள்.

    பாகிஸ்தானும் அமெரிக்காவும் இப்படி அடித்துக்கொண்டால் ஒவ்வொரு ஏற்கெனவே பேசப்பட்டு வரும் பல உண்மையாக வெளிவரும்.

    ReplyDelete
  3. பொதுவாக பக்கத்து நாட்டில் என்ன நடக்கிறது, அதனால் நமக்கு என்ன பாதிப்பு வரும், என்று தெரிவதில்லை. இப்படி இருக்கும்போது உங்கள் பதிவு மிக மகிழ்ச்சியை அளிக்கிறது. தொடருங்கள்.

    ReplyDelete
  4. G+ மூடப் போறாங்களாம். அதனாலே இங்கே எழுதி ஒரு கீச் சத்தம் போடுங்க. சாப்பாட்டுக்கு வந்திடுவோம்! பாக்கிஸ்தான் ஒரு Black hole ங்கறது அமெரிக்காவுக்கு புரிஞ்சா சரி. சீனாவுக்குத் தெரியும். அதனால்தான் அவங்களை எவ்வளவு பயன்படுத்திகணுமோ அவ்வளவு பயன்படுத்திக்கிறாங்க!

    ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை