அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வந்தாலும் வந்தார்! நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம் என ராணுவக் கூட்டாளிகளும், சீனா முதலான வர்த்தகக் கூட்டாளிகளும் எப்போதடா இவருடைய பதவிக்காலம் முடியுமென்று விழிபிதுங்கிக் காத்திருக்கிறார்கள்! இந்த வரிகளில் ஒரு எழுத்து கூட மிகையில்லை!
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா திடுதிப்பென்று உருவிக்கொள்வது இந்தியாவுக்கு நல்லதா கெட்டதா?போதாக்குறைக்கு ஆப்கானிஸ்தான் அமைதிப்பேச்சு வார்த்தைகளில் இந்தியாவுக்கு இடமில்லையென்று பாகிஸ்தான் முந்திக் கொண்டு, தானே வழியும் ஜீவனுமாய் தாலிபான்களுக்கு எல்லாமுமாக இருப்பதாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிற சமீபத்தைய செய்திகளில் இந்தியாவுடைய நிலை என்ன?

அமெரிக்கர்களை அலுப்படைய வைத்திருக்கிற 17 ஆண்டுகாலமாய்த் தொடரும் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களோடு நடக்கும் போர் முடிகிற அறிகுறி தெரிவதாக பிபிசி செய்தி இன்று சொல்கிறது.
US and Taliban negotiators have agreed on a draft framework for a peace deal that would put an end to the 17-year conflict in Afghanistan, Washington's top negotiator has said.
US negotiators held six days of talks with the Taliban in Qatar, last week.The Taliban have so far refused to hold direct talks with Afghan officials, whom they dismiss as "puppets". இதென்ன புதிய செய்தியா? இல்லை! இப்படியாகுமென்று 2014 இலிருந்தே அமெரிக்கர்களுடைய தளர்ச்சியும், ராணுவக் கூட்டாளிகள் ஒவ்வொருவராக, ஆப்கானிஸ்தானில் இருந்து விலகிக்கொண்டபோதே அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன என்பதை World Economic Forum மாநாட்டில் கலந்து கொள்ள வந்த ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி சுட்டிக் காட்டி இருக்கிறார்.
Briefed President @ashrafghani last night on the progress we've made. Peace is America's highest priority in #Afghanistan, a goal we believe all Afghans share.
அமெரிக்கர்கள் நினைப்பது போல அமைதியோ, அமைதிப் பேச்சுவார்த்தைகளோ உறுதியான ஒரு வடிவத்தை எட்டப் போவதில்லை என்று விஷயம் தெரிந்த வல்லுநர்கள் அபிப்பிராயப்படுவதாக பிபிசி இன்னொரு செய்திக் கட்டுரையில் சொல்கிறது.
இது சென்ற அக்டோபரில் எழுதியதுதான்! ஆப்கன் நிலவரம் என்ன என்பதைக் கொஞ்சம் பரிச்சயம் செய்து கொள்ள உதவியாக இருக்கும்
.
#ப்ரதீக்ஜோஷி எழுதியிருக்கிற இந்தச் செய்திக்கட்டுரை இன்றைய
#அக்கம்பக்கம் நிகழ்பவை #ராஜீயஉறவுகளும்சிக்கல்களும் என்று வகைப்படுத்துகிற மாதிரி இருக்கிறதென்பதற்கு உதாரணமாய் இருக்கிறது. In one of latest spate of attacks, the Taliban killed Kandahar police chief Brigadier General Abdul Raziq Achakzai and the provincial chief of the National Directorate on Security (NDS) General Abdul Momin, besides leaving Kandahar governor Zalmai Wesa severely injured என்று செய்தி ஆரம்பிப்பதிலேயே ஆப்கானிஸ்தானில் #தாலிபான்கள் கொட்டம் அடக்க முடியாத அளவுக்கு வலுத்து வருவதைக் காட்டுகிறது
#தாலிபான் பற்றி சுருக்கமாகத் தெரிந்துகொள்ள இங்கே
https://en.wikipedia.org/wiki/Taliban 1989 இல் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியபிறகு அமெரிக்கா மறைமுகமாக ஆப்கானிஸ்தானில் செயல்பாடுகளைத் தொடர்ந்து கொண்டுதானிருந்தது. 2001 இலிருந்து இன்று வரை அமெரிக்கா தன் படைகளைப்போரில் களமிறக்கி #அல்கொய்தா #தாலிபான்பிடியிலிருந்து ஆப்கானிஸ்தானை வொடுவிப்பதாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டாலும் #எப்படிஎப்போதுவெளியேறுவோம் என்று தெரியாமல் முழிபிதுங்கிப்போய்க் கிடக்கிறது.அமெரிக்கர்களின் கிறுக்குத்தனத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு காசு பார்க்கத் தெரிகிற சாமர்த்தியம் இன்னமும் கூட பாகிஸ்தானிய ராணுவத்துக்கு அதன் உளவு அமைப்பான #ISIக்குத்தான் இருக்கிறது
தாலிபான்களை எதிர்த்துப் போராடிய பிரிகேடியர் ஜெனெரல் கொல்லப் பட்டிருக்கிறார். அவருடைய இடத்தை நிரப்பப் போகிறவர் யாரென்று கூட அறிவிக்க முடியாத நிலையில் அங்குள்ள அரசு நிர்வாகம் இருக்கிறது. #தாலிபான் க்ளிக் கட்டுக்குள் வைக்கிற சாக்கில் பாகிஸ்தானிய #ISI மறுபடியும் அமெரிக்க மானியங்கள் சலுகைகளில் கொழிக்கப்போகிற சூழல் உருவாகியிருக்கிறது என்பது நல்ல செய்திதானா என்பதோடு அமெரிக்கர்களை எந்த அளவுக்கு நம்புவது என்ற கேள்விக்கும் #இந்தியவெளியுறவுக்கொள்கை விடை கண்டுபிடித்தாக வேண்டும்.

No comments:
Post a Comment
உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!