இந்த இரண்டு படங்களையும் 2014 இல் வினீத் என்கிற ஐபிஎஸ் தேர்வுக்குத் தயார்செய்து 94கொண்டிருந்த இளைஞனுடைய பதிவாக இங்கே பார்த்தேன். சீனாவுடன் நேரு 1954 இல் செய்து கொண்ட பஞ்சசீலக் கொள்கை அப்படியே அணிசேரா இயக்கத்தின் கொள்கைகளாகவும்!
அப்படித்தான் இருந்ததா என்ன?
#ஓஅம்பேரிக்கா ன்னு குதிக்கவும் வேணாம்! #இதுதான்அம்பேரிக்கா ன்னு கொத்துக்கறி போடவும் வேணாம். எந்த ஒருநாடும் தன்னுடைய பொருளாதார நலன்களை முன்வைத்தே அரசியல், ராணுவம் முதலானவற்றைப் பயன் படுத்துகிறது என்பதைப் புரிந்துகொண்டு நாம் ஒரு தேசமாக என்ன செய்யவேண்டும் என்பதையும் பார்த்தாலேயே போதும்! #மதச்சார்பின்மை மாதிரியே #அணிசேராக்கொள்கை யும் நேரு காலத்திலிருந்து தொடரும் அபத்தம்
#இந்தியவெளியுறவுக்கொள்கை கொஞ்சம் முதிர்ச்சியோடு செயல் பட ஆரம்பித்திருப்பதை முன்னமே சில கூகிள் ப்ளஸ் பகிர்வுகளில் பகிர்ந்து கொண்டு வந்ததில் இது சென்ற அக்டோபரில் எழுதியது. ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரம், பொருளாதாரம், பாதுகாப்பு இவைகளை உள்ளடக்கியதன் நீட்சியாகவேதான் அந்தநாட்டின் #வெளியுறவுக்கொள்கை யாக இருக்கும் என்பது பாலபாடம்.
ஆனால் நேரு காலத்தில் அது அவருடைய #கற்பனாவாதநீட்சி யாக மட்டுமே இருந்தது #Secularism #மதச்சார்பின்மை காங்கிரஸ் கட்சியால் விபரீதமாக வியாக்கியானம் செய்யப்பட்டது போலவே #NonAlignment #அணிசேராக்கொள்கை என்பதும் கிறுக்குத் தனமாகக் கையாளப்பட்ட ஒன்றாகவே ஆனது.இதைப்பற்றிக் கொஞ்சம் எழுதவேண்டும் என்று கூட அங்கே எழுதியிருந்தேன்.
#மார்ஷல்டிட்டோ யூகோஸ்லாவியாவின் தன்னிகரற்ற ஆளுமையாக கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராக நாட்டின் அதிபராகவும் இருந்தவர். #ரஷ்யக்கம்யூனிஸ்ட்கட்சி #பெரியண்ணன் பாணியில் இதர நாட்டுக் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் தலைவர்களையும் அடக்கியாள முயன்றதில் #கம்யூனிசமாயை சாயம் வெளுக்க ஆரம்பித்தது. ஸ்டாலினுக்கு தான் எந்த வகையிலும் குறைந்தவரல்ல என்று துணிந்து நின்றவர்.
1953 இல் ஸ்டாலின் இறந்த பிறகு ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சவால்விடுகிற மாதிரி 1961இல் பெல்க்ரேட் நகரில் டிட்டோ,நேரு எகிப்தின் கமால் நாசர் கானாவின் என்குருமோ இந்தோனேஷியா வின் சுகர்னோ ஆகிய ஐந்து தலைவர்கள் கூடி டிட்டோவின் தலைமையில் #அணிசேராக்கொள்கை யை அறிவித்தார்கள்.
யாருடனும் அணிசேரமாட்டோம் என்று டிட்டோ சொன்னது ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு! #பெரியண்ணன் அதிகாரம் என்னிடம் செல்லாது என்று சொல்வதற்கு!
#சோஷலிசச்சிற்பி நேரு கம்யூனிஸ்ட் ரஷ்யாவின் மீதான அதிருப்தியில், உண்மையில் டிட்டோவுடன் போய் ஒட்டிக்கொண்டார் என்பதற்குமேல் வேறு விஷயமே இல்லை இது. ஆனால் அமெரிக்கா ரஷ்யா இரண்டு அணிகளாகப் பிரிந்து #பனிப்போர் நிலவிய காலத்தில் இந்த வெற்று கோஷத்தில் 125 நாடுகள் இந்த அணியில் அங்கத்தினர்களாக இருந்தார்கள் என்ற புள்ளிவிவரத்தைத் தவிர #அணிசேராக்கொள்கை உண்மையில் சாதித்தது தான் என்ன?
வேலைவெட்டி இல்லாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆசாமிகள் கூடி இதற்காக ஒரு பட்டிமண்டபமே நடத்தலாம்! இந்த விவரங்களை மாஸ்கோ பதிப்பகம் வெளியிட்ட ஒரு புத்தகத்திலேயே 1970களில் படித்த நினைவிருக்கிறது தேடியெடுத்து அவசியப்பட்டால் சம்பந்தப் பட்ட பக்கங்களை படமெடுத்து இங்கே போடவும் உத்தேசம்.
நிர்பந்தத்தின் பேரில் அமெரிக்கா ரஷ்யா ஈரான் இப்படி எந்தப் பக்கமும் சாயவேண்டிய அவசியமில்லாத,, உள்நாட்டு நலன்கள் சார்ந்து முடிவெடுக்கக் கூடிய பக்குவத்துக்கு நம்முடைய #வெளியுறவுக்கொள்கை இப்போதுதான் வந்திருக்கிறது.
ரஷ்யா ஈரான் இப்படி அடுத்தடுத்து அமெரிக்க மிரட்டல்களுக்குப் பணியாமல் அதே நேரம் அமெரிக்கர்களை உசுப்பிவிடுகிற மாதிரி அறிக்கைப்போர் எதையும் தொடங்காமல் ஒரு சமநிலையில் அரசு முடிவுகளை எடுத்திருப்பது #இந்தியவெளியுறவுக்கொள்கை முதிர்ச்சியடைய ஆரம்பித்திருப்பதல்லாமல் வேறென்ன?!