அமெரிக்க ஜனநாயகத்தில் அதிபர்கள் தகுதிநீக்கம் impeachment செய்யப்படுவது டொனால்ட் ட்ரம்புக்கு முன்னாலும் நடந்திருக்கிறது. ஆனால் டொனால்ட் ட்ரம்ப் அளவுக்கு கறைபடிந்த வரலாறு படைத்தவர் எவருமில்லை என்பது பெரும் சோகம். ஆப்ரஹாம் லிங்கன் படுகொலை செய்யப்பட்ட பிறகு, துணை அதிபராக இருந்த ஆன்ட்ரூ ஜான்சன் அதிபரானார். அமெரிக்க பிரதிநிதிகள் சபையோடு முட்டலும் மோதலுமாக இருந்தது, ஒரு கட்டத்தில் அதிபருடைய அதிகாரங்களைக் கட்டுப்படுத்துகிற மாதிரி Tenure of Office Act என்று கொண்டுவரப்படுகிற அளவுக்கும் போனது.அதன்படி செனேட் ஒப்புதல் இல்லாமல் நிர்வாகத்தில் எவரையும் அதிபர் பதவி நீக்கம் செய்ய முடியாது.
1868 இல்அமெரிக்காவில் முதன்முறையாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட அதிபர் இவர் தான். ஆனால் இவரைத் தகுதி நீக்கம் செய்வதற்குச் சொல்லப்பட்ட காரணங்கள் இன்று நடப்பதோடு ஒப்பிட்டால் மிகவும் சப்பை! இன்றுவரை அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான அதிபர் என்று அழைக்கப்படும் ஆன்டி ஜான்சனையும் ட்ரம்ப் நல்லவராக்கிவிட்டார். இன்று அந்தப்பெருமை டொனால்ட் ட்ரம்ப்புக்கு வந்து சேர்ந்து விடும் போல இருக்கிறது.
ஆன்டி ஜான்சன்
வீடியோ சொல்வதென்ன? பாருங்கள்
நூறு ஆண்டுகளுக்கு அப்புறம் தகுதிநீக்கம் செய்யப் படுகிற அளவுக்குப்போன அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் எம் நிக்சன்! 1972 இல் Watergate Scandal பூதாகாரமாக வெடித்தது, அதற்குப்பிறகும் வெவ்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருந்தன.
1974 இல் பிரதிநிதிகள் சபை (காங்கிரஸ்) விவாதித்து தகுதிநீக்க நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு முன்னாடியே ஆகஸ்ட் மாதம் நிக்சன் அமெரிக்க அதிபர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அப்படி பதவியை ராஜினாமா செய்த முதலாவது அமெரிக்க அதிபர் நிக்சன் தான்!
Whitewater! 1994 முதலே பில் க்ளின்டன் மீதான தகுதிநீக்க நடவடிக்கைக்கு, பல நிதி முறைகேடுகள் குறித்த விசாரணை இருந்தாலும் 1998 வாக்கில் வெடித்த பாலியல் குற்றச்சாட்டுக்கள் தான் அதற்கு வலு சேர்த்தன.
ஆன்டி ஜான்சன், பில் க்ளின்டன் இருவரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்கள் ஆனாலும் செனெட் சபை விசாரணையில் மூன்றில் இருபங்கு வாக்குகள் இல்லாததால், தப்பித்தார்கள் என்ற வரிசையில் இன்று டொனா ல்ட் ட்ரம்ப் மூன்றாவது நபராகச் சேர்கிறார். முந்தைய இருவரை விட மிக வித்தியாசமான விபரீதமான விடுவிப்பு இது என்பதிலும் டொனால்ட் ட்ரம்ப் ஒரு புதிய கறைபடிந்த வரலாறு படைக்க இருக்கிறார்.
சென்ற வாரம் செனெட்டில் புதிய ஆவணங்கள்,புதுசாட்சிகள் எதையும் அனுமதிக்க முடியாது என்றான போதே, செனெட்டில் மூன்றில் இருபங்கு வாக்குகளோடு தகுதி நீக்கம் செய்யப்படுகிற வாய்ப்பும் இல்லாமல் போனது. டொனால்ட் ட்ரம்ப், முந்தைய இருவர் மாதிரியே தப்பிக்கிறார் என்பது அதிகாரபூர்வமாக இன்று தெரிய வரும்!
கறைபடிந்த புதியவரலாறு படைக்க டொனால்ட் ட்ரம்ப் தயாராக இருக்கிறார்! அப்புறமென்ன?
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!