சீனாவைப் பற்றி இங்கே நமக்குத் பலவிதமான கற்பிதங்கள் இருக்கின்றன. ஆனால் சீனாவைப் பற்றி இங்கே எந்த அளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறோம் என்று பார்த்தால் அனேகமாக, சொல்லிக் கொள்கிற மாதிரி எதுவுமில்லை என்பது நமக்கே புரியும். #சீனப்பூச்சாண்டி என்னவென்று கொஞ்சம் பார்க்கலாம், வாருங்கள்!
இந்த மூன்றரை நிமிட வீடியோ, சீனா நாம் நினைத்துக் கொண்டிருப்பது போல அத்தனை பலசாலி அல்ல என்று சொல்கிறது. எந்த அடிப்படையில் என்று கொஞ்சம் பாருங்கள்!
சீனா என்பது நிலப்பரப்பை வைத்துப் பார்த்தால் ஒரே நாடல்ல, பல நாடுகளின் தொகுப்பு தான்! அங்கே அரசியல் கூட ஒரேமாதிரி எல்லாப்பகுதிகளிலும் இல்லை என்பது மிகப் பெரிய பலவீனம்! ஹான் எனப்படும் சீனர்களே மற்றப்பகுதி மக்களையும் அவர்களது விருப்பத்துக்கு மாறாக அடக்கு முறைகளில் ஒடுக்கி வைத்து, ஆள்கிறார்கள் என்பது சீனக் கம்யூனிசத்தின், ஆட்சியின் மிகப்பெரிய பலவீனம்.. லாமா பௌத்தத்தைப் பின்பற்றுகிற திபெத், ஜின்ஜியாங் என்ற துருக்கிய வம்சாவளியினரான உய்கர் முஸ்லிம்கள் வாழ்கிற பிரதேசம், மங்கோலியாவின் உட்பகுதி. மஞ்சுரியா இப்படி பல்வேறு இனங்கள் வாழ்ந்தாலும், ஆளப்பிறந்தவர்கள் அல்லது வாழப்பிறந்தவர்கள் ஹான்ஸ் சீனர்களே என்பதுதான் வருகிற அக்டோபர் மாதம் 70 ஆண்டுகளை நிறைவு செய்யப் போகிற சீனப்பெருமிதம் என்றால் சுருக்கமாக சீனாவின் வரலாறு புரிந்துகொள்ள முடிகிறதா? ஜின்ஜியாங் பகுதியில் உய்கர் முஸ்லிம்கள் மீது சீன அரசு அவிழ்த்து விட்டிருக்கிற அடக்குமுறை, இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலத்தில், கலாசாரப்புரட்சி என்று மாவோ காலத்தில் நடந்த இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம் கதையை விட மிக மோசம்! அரசுக்கு எதிராக எதுவும் செய்யாமலேயே உய்கர் முஸ்லிம்கள் கைது செய்யப்படுவதும், சீன அரசு புதிது புதிதாகக் கட்டிவரும் சிறைச்சாலைகளில் அடைக்கப் படுவதும் ஜி ஜின்பெங் அதிபரான பிறகு பத்து லட்சம் என்ற எண்ணிக்கையைத் தாண்டியிருக்கிறது. இத்தனைக்கும் உய்கர் முஸ்லிம்களுடைய மொத்த ஜனத்தொகையே 85 லட்சம்தான்!
எப்படி உலகவரைபடத்தில் சீனாவின் இருப்பு நிறையப் பிரச்சினைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது என்பதை இந்த 11 நிமிட வீடியோவில் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். சீனத்துச் சண்டியர் எதற்காக முந்திக்கொண்டு அக்கம்பக்கம் உள்ள நாடுகளோடு எல்லைப்பிரச்சினை முதற்கொண்டு வர்த்தகப் போர் முதல் எல்லாவிதமான அக்கப்போர்களையும் இழுத்துவிட்டுக் கொள்கிறார் என்பதற்கான உளவியல் காரணமும் புரிகிறதா?
அல் ஜசீரா சேனலை நான் அவ்வளவாக விரும்புவதில்லை. ஆனால் சீன விவகாரங்களைக் குறித்த பல உபயோகமான டாகுமெண்டரிகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். அந்தவகையில் திடீர்ப் பணக்காரனாகவும் கந்துவட்டி ஏகாதிபத்தியமாகவும் மாறிப்போன சீனப் பொருளாதாரம், அகலக்கால் விரித்து, இப்போது தடுமாறிக் கொண்டு சரிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறதோ? வீடியோ 25 நிமிடம் தான்! சீனாவின் பொருளாதார வலிமை என்பது 1980களுக்குப் பிறகு வந்ததுதான்! ஆயுத வணிகத்தைத் தவிர மற்ற துறைகளில் ஜப்பானிடம் தோற்றுக் கொண்டிருந்த அமெரிக்கா, நிக்சன் அதிபராக இருந்த நாட்களில் சீனாவுக்குள் தனது கடையை விரித்தது. டெங் சியாவோ பிங் எப்படி மாவோ காலத்து வறட்டுக் கம்யூனிசத்தை உதறியெறிந்து விட்டு, சீனாவின் இன்றைய நிலைமைக்கு காரணமாக இருந்தார் என்று ஒரு 52 நிமிட வீடியோ இங்கே
அமெரிக்க சீன வர்த்தகப் போர் என்பது சும்மா லுலுலாயிக்கு என்று நக்கலடித்திருக்கிறது Foreign Policy தளம். டொனால்ட் ட்ரம்பும் ஜி ஜின்பிங்கும் பரஸ்பரம் முறுக்கிக் கொள்கிற நிலையில் இருந்து இறங்கி வந்திருக்கிறார்கள் என்பதும் ஹாங்காங் போராட்டங்கள் முடிவுக்கு வருவதாயில்லை என்பதும் தற்போதைய செய்திகள்.
ராணுவ வலிமையைப் பொருளாதாரமே தீர்மானிக்கிறது என்பதைக் கொஞ்சம் புரிந்துகொண்டு சீனப்பூச்சாண்டியைத் தொடர்ந்து கொஞ்சம் பார்க்கலாம்.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!