Sunday, September 15, 2019

சவூதி வஹாபிகளும்! கச்சா எண்ணெய் அரசியலும்!

வூதி அரேபியாவின் எனெர்ஜி துறை  அமைச்சர் நீக்கப்பட்டு அவருடைய இடத்தில் சவூதி பட்டத்து இளவரசருடைய சகோதரர் நியமிக்கப்பட்ட செய்தி போன வாரத்துப் பழசு என்றாலும் கொஞ்சம் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம்.


ண்ணெய் வியாபாரம் சவூதி அரேபியாவின் பொருளாதாரத்தில் 40%, அரசின் வருமானத்தில் 70%, ஏற்றுமதியில் சுமார் 80% என்றிருக்கும் நிலைமையில் அரசுக்கு மிக விசுவாசமாக இருந்த அல் ஃபைத் எனெர்ஜி அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருப்பதும், அந்த இடத்தில் முதல் முறையாக சவூதி அரச குடும்பத்திலிருந்து ஒருவர் நியமிக்கப் பட்டிருப்பதும், சவூதி பட்டத்து இளவரசர் MBS தனது அதிகாரத்தை இறுகப் பிடிக்கிற செயலாகவே பார்க்கப் படுகிறது என்கிறார்கள்.  
     
நேற்று சவூதி அரேபியாவில் அப்கைக் என்ற இடத்தில் உள்ள ஆராம்கோவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, மற்றும் அருகிலிருந்த எண்ணெய் வயல் மீது ஏமனிலிருந்து ஏவப்பட்ட இரு டிரோன்கள்  தாக்குதலில், பலத்த சேதமும் நாசமும் விளைந்திருப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன. 
   

வழக்கம்போல ஈரான் மீது பழியைப் போட்டிருக்கிறது அமெரிக்கா என்பதில், ஈரான் மீதான தடைகளை அமெரிக்கா விலக்கிக் கொள்ளப்போவதில்லை என்பதற்கு மேல் விசேஷமான தகவல் எதுவுமில்லை  Saudi Arabia started its devastating bombing campaign in Yemen in 2015 – with some U.S. backing and weaponry – after the Houthis took control of the capital and other parts of the country. Despite thousands of civilian deaths, terrible human rights abuses on both sides and a humanitarian catastrophe, the war has settled into an ugly stalemate. Saturday’s attack, along with previous drone strikes, shows the Houthis’ effectiveness in inflicting damage well beyond Yemen (if indeed it was them). என்று இந்த விவகாரத்தின் ஏமன் தொடர்பைப் போகிறபோக்கில் சொல்கிறது ப்ளூம்பெர்க் 

The marriage between Saudi Arabia and the UAE has long been on solid ground, but like any marriage, issues develop over time என்று இந்த விவகாரத்தில் சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபு எமிரேட்டும் அவரவர் சொந்த ஆதாயத்துக்காக ஏமனில் நடத்தும் நீயா நானா போட்டி பற்றி இங்கே கொஞ்சம் சுவாரசியமான பின்னணியைச் சொல்கிறார்கள். சவூதியில் இருந்து வஹாபி அரசியல் (சன்னி இஸ்லாம்) மற்றும் ஈரானிலிருந்து ஷியா இஸ்லாமிய அரசியல் என்று இருகூறுகளாகப் பிரிந்து மோதிக் கொண்டிருப்பதில் சிரியா, ஏமன் இரு இஸ்லாமிய நாடுகளுமே பிளவு பட்டிருப்பதோடு ஏகப்பட்ட உயிர்ச்சேதம் பொருட் சேதமென்று பரிதாபகரமான நிலையில் இருப்பதைக் கண்டு கவலைப்படுவார் எவரையும் காணோம்!

அரபு அரசியல் எண்ணெய்க்கொழுப்பில் எப்படி மிதப்புடன் நடந்து கொண்டிருக்கிறதென்ற  விவகாரங்களை வருகிற நாட்களில் தொடர்ந்து பார்க்கலாம்.

மீண்டும் சந்திப்போம். 
     

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை