Friday, February 28, 2020

மீண்டும் முன்னுக்கு வரும் Quad Initiative! உயிர் பெறுமா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த மாதம் 24. 25 ஆகிய இருநாட்களில் இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணமாக வந்து போயிருப்பது பற்றி இந்தப்பக்கங்களில் எழுதுவதற்கு எதுவுமே இல்லையா என்று  இரண்டுநாட்களாகத் தகவல்களைத் தேடிச் சரி பார்த்துக் கொண்டிருந்தேன். இந்திய ஊடகங்களில் அதிகம் கண்டு கொள்ளப்படாமல் விடப்பட்ட பல விஷயங்கள் இருந்தன என்பது இந்திய ஊடகங்களின் போதாமை என்பதற்கு மேல் சொல்ல அதிகமில்லை, Quad Initiative என்பது அதில் ஒன்று. 


அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு குறித்த உரையாடல் Quadrilateral Security Dialogue (QSD, also known as the Quad நடக்கவேண்டும் என்பதை முதலில் 2007 இலேயே முன்மொழிந்தவர் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே. அமெரிக்கத் துணை அதிபர் டிக் செனி, ஆஸ்திரேலியப் பிரதமர் ஜான் ஹோவர்ட், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மூவரும் ஆரம்பத்தில் ஆதரவு நிலையெடுத்தார்கள். மலபார் கடற்பயிற்சி என்று இந்தியப்பெருங்கடல் பகுதியில் 1992 இல் இந்திய அமெரிக்க கடற்படைகளின் கூட்டுப்பயிற்சியாக ஆரம்பித்தது 2007 இல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய ஐந்து நாடுகளின் கூட்டுப் பயிற்சியாக வங்காள விரிகுடா பகுதியில் விரிவடைந்தது. இந்திய இடது சாரிகள் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்தையும் இந்த கடற்படைக் கூட்டுப்பயிற்சியையும் மிகக் கடுமையாக எதிர்த்தார்கள். சீனா இந்தப் பயிற்சிகளைக் குறித்து அதிகாரபூர்வமாக எந்தவொரு கருத்தையும் சொல்லவில்லை என்றாலும் வங்காள விரிகுடா பிராந்தியத்தில் காலையூன்ற வங்காள தேசம், மியன்மார் இருநாடுகளுடனும் அதிக நெருக்கத்தைக் காண்பித்தது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் நான்கு  நாடுகளுக்கும் Quadrilateral Initiative மீதான விளக்கம் கோருகிற demarche என்கிற கண்டனத்தை சீனா தெரிவித்ததில் ஆஸ்திரேலியா முதலில் அடுத்து இந்தியா இருநாடுகளும்  Quad விஷயத்தில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி கொண்டன என்பது பழைய கதை.

2017 ASEAN Summits மணிலாவில் நடந்தபோது மறுபடியும் இந்த நான்கு நாடுகளின் கூட்டணி மீதான பேச்சு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே ஆகிய நால்வருக்குள்ளும் நடந்ததில் இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை உயிர்ப்பிப்பது என்று முடிவானது. The initiation of an American, Japanese, Australian and Indian defense arrangement, modeled on the concept of a Democratic Peace, has been credited to Japanese Prime Minister Shinzo Abe.. The Quadrilateral was supposed to establish an "Asian Arc of Democracy," envisioned to ultimately include countries in central Asia, Mongolia, the Korean peninsula, and other countries in Southeast Asia: "virtually all the countries on China’s periphery, except for China itself  என்று சொல்லப் பட்டாலும் அதிகாரிகள் மட்டத்தில் 2017 - 2019 இரண்டு ஆண்டுகளில் ஐந்து முறை கூடிப்பேசி இருப்பது , கடந்த ஆண்டு செப்டம்பரில் அமைச்சர் மட்டத்தில் கூடிப்பேசியது என்ற அளவோடு நிற்கிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தன்னுடைய பேச்சில்  Quad Initiative பற்றிக் குறிப்பிட்டிருப்பது மிகவும் முக்கியமான விஷயமாகப் பார்க்க முடிகிறது.


“Together, the Prime Minister and I are revitalizing the Quad Initiative with the United States, India, Australia, and Japan,” Trump said, speaking after Modi at a joint press conference in New Delhi on the second day of his visit to India. “Since I took office, we have held the first Quad ministerial meeting — I guess you would call it a meeting, but it seems like so much more than that — and expanded cooperation on counterterrorism, cybersecurity, and maritime security to ensure a free and open Indo-Pacific,” he added. 
ஆசியாவின் NATO என்று ஈசியாகக் கடந்துபோய்விட முடியாதபடி, இந்த நான்கு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப் படுமானால், சீனாவின் கடலாதிக்கத் திட்டமான புதிய பட்டுப்பாதை BRI / OBOR திட்டத்துக்கு  செக் வைக்கக் கூடியதாகவிருக்கும் என்பது உறுதி.  

மீண்டும் சந்திப்போம். 

Tuesday, February 25, 2020

#அக்கம்பக்கம் மலேசியா! சிங்கப்பூர்! தென்கொரியா!

ஞாயிறு முதலே மலேசியாவில் ஒரு அரசியல் வெறுமை அடுத்து என்ன என்பது எவருக்கும் புரியாதபடி ஆட்டிப் படைக்கிறது. ஆளும் பகத்தான் ஹராப்பான் (நம்பிக்கை கூட்டணி)  சிதைந்து மலேசிய பிரதமர் மகாதிர் மொகமது தனது பிரதமர் பதவியை திங்களன்று  ராஜினாமா செய்ததை  மலேசிய மன்னரும் ஏற்றுக்கொண்டுவிட்டார்.



மன்னர் கேட்டுக்கொண்டதன் பேரில் கேபினெட் அமைச்சர்கள் இல்லாத இடைக்கால பிரதமராக மகாதிர் மட்டும் நீடிக்கிறார். அதாவது மகாதிர் எப்போது விரும்புகிறாரோ அப்போது தனது அமைச்சர்களை நியமித்துக் கொள்ள முடியுமாம்! அதற்கென்று எந்தக்காலவரையறையும் இல்லை என்பது மலேசிய அரசியல் சட்ட விசித்திரம்!

   
94 வயதாகும் மகாதிர் மொகமது தன்னுடைய சொந்தக்கட்சியிலிருந்தும் விலகிவிட்டார் என்பது இன்னும் கொஞ்சம் சஸ்பென்ஸ் கூட்டுகிறதோ? சிலகாலத்துக்கு முன்புதான் ஏற்கெனெவே ஒப்புக்கொண்டபடி இன்னொரு கூட்டணிக்கட்சித்தலைவர் அன்வர் இப்ராஹிமிமிடம் பிரதமர் பொறுப்பைக் கொடுத்து விட்டு ஒதுங்கிவிடுவேன் என்று சொல்லியிருந்தார்.



மகாதிர், அன்வர் இருவருடைய கட்சியிலிருந்தும் அன்வர் பிரதமராகிவிடக் கூடாதென்று கருதும் தரப்பே இந்தக் குழப்பங்களுக்குக் காரணம் என்று அன்வர் இப்ராஹிம் கருதுகிறார். இதன் பின்னணியில் மகாதிர் பங்கெதுவும் இல்லையென்றும் நம்புகிறாராம்! இந்த இருவருக்கிடையிலுமான உறவு-பிரிவு நீண்ட கதை.


ஆனால் நேற்றைக்கு முதலீட்டாளர்கள் வெளியேறியது மிக அதிகமாக இருந்த காரணத்தால் பர்சா மலேசியா என்கிற பங்கு வர்த்தகக்குறியீடு கடந்த எட்டாண்டுகளில் இல்லாத சரிவைச் சந்தித்திருக்கிறது. இன்று செவ்வாய்க்கிழமை கொஞ்சம் போல சரிவில் இருந்து மீண்டதாகச் செய்திகள் சொல்கின்றன. ஊழலை எதிர்க்கிறோமென்று அமைந்த கூட்டணி வேறு பொதுவான நோக்கமெதுவுமில்லாததால்  இரண்டே ஆண்டுகளில் கவிழ்ந்ததில் ஆச்சரியமில்லை தான்! அடுத்து அமைவதாவது நிலைக்குமா என்பது இப்போதைக்கு விடை தெரியாத கேள்விதான்!

   
சிங்கப்பூர் சீனாடவுனில் ஒரு பெண்ணுக்குக் காய்ச்சல் இருக்கிறதா என்று பரிசோதிக்கிறார்கள். கரோனா தொற்று இருக்கிறதா என்ற கவலையே இல்லாமல் காமெராவைப் பார்த்து போஸ் கொடுப்பதில்தான் அம்மணிக்கு கவனம் அதிகம் போல! அப்படியும் சொல்லலாம் Covid -19 தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க சிங்கப்பூர் அரசு எடுத்துவரும் முயற்சிகளில் முழு நம்பிக்கை என்றும் கூட! 


சீனாவுக்கு அடுத்தபடி கரோனா வைரஸ் தொற்று மிக அதிகமாக இருப்பது தென்கொரியாவில் தான்!  893 பேர் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள் என்பது 6 மணி நேரத்துக்கு முந்தைய நிலவரம். உயிர்க்கொல்லி என்பதோடு பல நாடுகளின் பொருளாதாரத்தையும் சரித்து விடக்கூடியது என்பதைக் கவலையோடு கவனிக்க வேண்டியிருக்கிறது. கரோனா தொற்றால் சாம்சங் தென்கொரியாவில் ஒரு தொழிற்கூடத்தையே மூடிவைக்கிற அளவுக்கு ஆகியிருக்கிறது.

சீனாவில் இரண்டுமாதங்களுக்கும் மேலாக ஆட்டிப் படைக்கும் கரோனா வைரஸ் ஏழரைக்  கோடி ஜனங்களை quarantine இல் முடக்கி வைத்திருக்கிறது. சிறு தொழில்கள், வணிகமும்  கூடத்தான்! 

மீண்டும் புதிய செய்திகளுடன் சந்திப்போம். 

Sunday, February 23, 2020

டொனால்ட் ட்ரம்ப் வருடங்கள்! #தாலிபான் #AmericaFirst

வெளியுறவு விவகாரங்களில் இன்னதென்று விவரிக்க முடியாத X factor ஏதாவது இருக்குமானால், இன்றைக்கு  அது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தானென்று தயங்காமல் சொல்லிவிடலாம்! முன்னெல்லாம் அது கம்யூனிச நாடுகளின் இரும்புத்திரைக்குப் பின்னால் என்னவாக இருக்கும் என்றிருந்த காலம் 1990 களிலேயே மலையேறி விட்டது. சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு சோவியத் முகாமுக்கும் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளுக்கும் இடையிலான பனிப்போர் முற்றிலும் முடிவுக்கு வந்து முப்பதாண்டுகள் ஆகிற நேரம் இது. ஆனாலும் இருமுகாம்களுக்கும் இடையில் நிலவிய பகைமை, அவநம்பிக்கையின் எச்சங்களாக ரஷ்யா சிக்கிக் கொண்டுதவித்து ஒருவழியாக வெளியே வந்த புதைகுழிகளுக்குள் அமெரிக்கா தேவையே இல்லாமல் சிக்கிக் கொண்டு தவிப்பது அமெரிக்கா தொடர்ந்து சறுக்கி வருவதன் அடையாளமாக முந்தின நாட்களில் வியட்நாம், இப்போது ஆப்கானிஸ்தான் இருக்கிறது. தான் ஆதரித்து வரும் உள்ளூர் அரசையும் ஒதுக்கிவிட்டு அங்கே எதிரிகளான தாலிபான்களோடு நேரடியாக சமாதானம் பேசி, அமெரிக்கப்படைகளை  முற்றிலும் விலக்கிக்கொள்ள இப்போதிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் முயற்சித்து வருவதை ஏற்கெனெவே இந்தப் பக்கங்களில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம்.

Feb 10, ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட  இரு 
அமெரிக்கப் போர்வீரர்களின் சவப்பெட்டிகள்
டோவல், டெலாவேர் விமானப்படை தளத்தில் 
வேனில் ஏற்றப்படுகிற காட்சி AFP Getty images   
       
பயங்கரவாதத்துக்கெதிரான போர் என்ற முழக்கத்தோடு  முதலில் அக்டோபர், 2001 இல் அமெரிக்கப்படைகள் ஆப்கானிஸ்தானில், அல்கொய்தாவுக்கு ஆதரவாகத் தளங்கள் அமைத்து உதவிக்கொண்டிருந்த  தாலிபான்களுக்கெதிராகப் போரில்  இறங்கியதென்று  ஆரம்பித்தது, அதற்கடுத்த 18 ஆண்டுகள் ஆப்கானிஸ்தான் புதைகுழிக்குள் சிக்கிக்கொண்டதாக ஆகிப்போனது.
On 11 September 2001, attacks in America killed nearly 3,000 people. Osama Bin Laden, the head of Islamist terror group al-Qaeda, was quickly identified as the man responsible. The Taliban, radical Islamists who ran Afghanistan and protected Bin Laden, refused to hand him over. So, a month after 9/11, the US launched air strikes against Afghanistan. As other countries joined the war, the Taliban were quickly removed from power. But they didn't just disappear - their influence grew back and they dug in. Since then, the US and its allies have struggled to stop Afghanistan's government collapsing, and to end deadly attacks by the Taliban என்று 100 வார்த்தைகளுக்குள் பிபிசி செய்தி இந்தப்பிரச்சினை ஆரம்பமான கதையைச்  சொன்னாலும் புதைகுழிக்குள் சிக்கிக்கொண்டவர்கள் அவஸ்தையை வெறும் வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியுமா? ஆனால் 100 வார்த்தைகள் என்று ஆரம்பித்து அப்புறம் 300, 600, 800 வார்த்தைகளில் அடுத்தடுத்து நிலவரத்தைக் கொஞ்சம் எளிமையாகச் சொல்ல மேலே இருக்கும் சுட்டியில் முயற்சித்திருக்கிறார்கள்.
டொனால்ட் ட்ரம்ப் தன்னுடைய 2016 அதிபர் தேர்தல் பிரசாரங்களில் அதிகம் பேசியது #AmericaFirst அமெரிக்க வெளியுறவுக்கொள்கையில் துருப்பிடித்தவைகளை அகற்றுவது.அப்புறம் முடிவே இல்லாத போர்களில் இருந்து அமெரிக்கப்படைகளை விலக்கிக் கொள்வது, சீனாவுடனான வர்த்தகம் அமெரிக்காவுக்கு சாதகமாக இல்லை, IPR அறிவுசார் சொத்துக்காப்புரிமை இப்படிப் பல. இதில் எல்லாவற்றிலும் கொஞ்சம்கொஞ்சம் வாயைவைத்து எதிலும் ஒரு முழுமை இல்லாமல் அரைகுறையாக அந்தரத்தில் தொங்கிக்கொண்டி ருப்பதுதான் டொனால்ட் ட்ரம்பின் முதல் நாலாண்டுகால ரிபோர்ட் கார்ட். வருகிற நவம்பரில் இன்னொருமுறையும் தானே அதிபர் வேட்பாளர் என்று களத்தில் இறங்கத் தயாராகவும் இருக்கிறார்.
அமெரிக்கா முதலில் என்கிற கொள்கை முழக்கம் என்ன நிலைமையில் இருக்கிறது? அமெரிக்கத் தொழில் நிறுவனங்களே அதில் அதிக ஆர்வமோ, நம்பிக்கையோ கொண்டு செயல்படுவதில்லை என்பது களயதார்த்தம்! கடும் சந்தைப்போட்டியில், லாபம் என்பது செலவினங்களை எந்த அளவுக்குத் திறமையாகக் குறைக்கிறோம் என்பதில் தான் உள்ளது. இதை அமெரிக்க நிறுவனங்கள் மிகத்தெளிவாகவே புரிந்து கொண்டிருக்கின்றன. இதனால் தான் சீனாவில் காப்புரிமை மீறல், ரிவர்ஸ் என்ஜினீயரிங்கில் சந்தையில் அதிக மதிப்புள்ள பொருட்களை அப்படியே காப்பியடித்துத் தயாரிப்பது, உள்ளூர்ச் சந்தை திறந்து விடப்படாதது என்று ஏகப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும் சீனாவில் தொழிற்சாலைகள் நிறுவித் தங்களுடைய உற்பத்தியை நடத்தி வருகின்றன. மிகக்குறைவான கூலியில் சீனத் தொழிலாளர்கள் கிடைக்கிற போது, அதிகச்செலவு பிடிக்கும் உள்ளூர்த் தொழிலாளிகள் எதற்கு? சீனாவுடன் வர்த்தகப்போர் என்று கொஞ்சநாள் உதார் காட்டிவிட்டு டொனால்ட் ட்ரம்ப் இப்போது இந்தியா,  தென்கொரியாவுடன் வார்த்தைப்போர் ஆரம்பித்து இருக்கிறார் என்பது நல்ல வேடிக்கை! 
Nobody seemed fully prepared, though, for Trump’s bull-in-a-china-shop approach to foreign relations — picking fights with allies, embracing Russia, announcing via Twitter an abrupt withdrawal of U.S. troops from Syria and rattling nuclear sabers with North Korea’s Kim Jong Un என்று ரத்தினச் சுருக்கமாக AP News தளத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு சொன்னது இன்றைக்கும் பொருத்தமாக இருக்கிறது. ஆனால் டொனால்ட் ட்ரம்ப் தன்னுடைய ஊசலாட்டங்களில் இருந்து கொஞ்சமும் மாறுவதாயில்லை! அதே பழைய பல்லவிகளை வைத்து இன்னுமொரு நாலாண்டுகள் தனக்குச் சான்ஸ் கொடுக்கவேண்டுமென்று அமெரிக்க ஜனங்களிடம் ஆரம்பித்துவிட்டார்! அப்படி அமெரிக்க ஜனங்களும் கொடுத்துவிடுவார்கள் போலத்தான் நிலவரங்கள் சொல்கின்றன என்பது அமெரிக்கர்களுடைய போதாத காலம்! அதற்குமேல் என்ன சொல்ல?  
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுடனான சமாதானப் பேச்சு வார்த்தை சென்ற வருடம் செப்டெம்பரில் மிகத் தீவீரமாக நடந்து கொண்டிருந்தபோது டொனால்ட் ட்ரம்ப் திடீரென சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் என்று அந்தப்பக்கம் திரும்பியதில் நின்றுபோனது. இப்போது விட்ட இடத்தில் இருந்து மறுபடியும் ஆரம்பித்திருக்கிறார்கள். தாலிபான்கள் ஒருவாரம் குறைவான வன்முறை என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்களாம்! மைக் பாம்பியோ சென்ற வெள்ளிக்கிழமை அறிவித்திருக்கிறார்.         

The most important task now is to start and generate traction in intra-Afghan negotiations, without getting distracted by those who might seek to capitalize on the fragility of the “reduction in violence” pledge or any cease-fire agreements that follow. It is nearly certain there will be continued violence during the talks.Patience is an absolute necessity. A peace process won’t be done as fast as long-suffering Afghans hope, nor quickly enough to produce a definitive political win before the American presidential election என்று இந்த பேச்சுவார்த்தையைக் குறித்து நியூ யார்க் டைம்ஸ் செய்தி சொல்வதென்னவோ வாஸ்தவம்.

பயங்கரவாதத்துக்கான நிதியைக் குறித்து ஆராயும் FATF பாகிஸ்தானுக்கு ஜூன் மாதம் வரை மறுபடியும் அவகாசம் கொடுத்து grey list இலேயே தொடர்வதன் பின்னணி என்ன என்பதை இந்தப்பக்கங்களுக்கு வரும் நண்பர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள் என்றே நினைக்கிறேன். தாலிபான்களுடன் பேசுவதில் அமெரிக்காவுக்கு பாகிஸ்தானுடைய உதவி தேவைப்படுகிறதென்பது தெளிவு. அதனால் இந்தியாவுக்கு எல்லைப்புறங்களில் கொஞ்சம் சிக்கல் தொடரலாம்! அமெரிக்க உறவு கசந்து விட்டது போல முடிவுசெய்ய வேண்டியதுமில்லை. 

ராஜீய உறவுகள் என்றாலே சிக்கல்களும் சிடுக்கல்களும் நிறைந்தது தான்! இங்கே காங்கிரஸ் கட்சியின் ரந்தீப் சிங் சுர்ஜீவாலா சவடால் பேசுவது போல எதையும் ஒரேயடியாகக் கத்தரித்துப் பேசுவது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. டொனால்ட் ட்ரம்ப் இந்திய வருகையைக் குறித்து மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம் இதுமட்டும் தான்! டொனால்ட் ட்ரம்ப் இன்னொரு முறை அதிபராக வருவதால் புதிதாக எதுவும் மாறிவிடாது. 

மீண்டும் சந்திப்போம். 
   

Tuesday, February 4, 2020

டொனால்ட் ட்ரம்ப்! புதிய கறைபடிந்த வரலாறு படைக்கிறார்!

அமெரிக்க ஜனநாயகத்தில் அதிபர்கள் தகுதிநீக்கம் impeachment செய்யப்படுவது  டொனால்ட் ட்ரம்புக்கு முன்னாலும்  நடந்திருக்கிறது. ஆனால் டொனால்ட் ட்ரம்ப் அளவுக்கு கறைபடிந்த வரலாறு படைத்தவர் எவருமில்லை என்பது பெரும் சோகம். ஆப்ரஹாம் லிங்கன் படுகொலை செய்யப்பட்ட பிறகு, துணை அதிபராக இருந்த ஆன்ட்ரூ ஜான்சன் அதிபரானார். அமெரிக்க பிரதிநிதிகள் சபையோடு முட்டலும் மோதலுமாக இருந்தது, ஒரு கட்டத்தில் அதிபருடைய அதிகாரங்களைக் கட்டுப்படுத்துகிற மாதிரி Tenure of Office Act என்று கொண்டுவரப்படுகிற அளவுக்கும் போனது.அதன்படி செனேட் ஒப்புதல் இல்லாமல் நிர்வாகத்தில் எவரையும் அதிபர் பதவி நீக்கம் செய்ய முடியாது.    


ஆன்டி ஜான்சன் 

1868 இல்அமெரிக்காவில் முதன்முறையாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட அதிபர் இவர் தான். ஆனால் இவரைத் தகுதி நீக்கம் செய்வதற்குச் சொல்லப்பட்ட காரணங்கள் இன்று நடப்பதோடு ஒப்பிட்டால் மிகவும் சப்பை!  இன்றுவரை  அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான அதிபர் என்று அழைக்கப்படும் ஆன்டி ஜான்சனையும் ட்ரம்ப் நல்லவராக்கிவிட்டார். இன்று அந்தப்பெருமை டொனால்ட் ட்ரம்ப்புக்கு வந்து சேர்ந்து விடும் போல இருக்கிறது.

  வீடியோ சொல்வதென்ன? பாருங்கள்  

நூறு ஆண்டுகளுக்கு அப்புறம் தகுதிநீக்கம் செய்யப் படுகிற அளவுக்குப்போன அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் எம் நிக்சன்! 1972 இல் Watergate Scandal பூதாகாரமாக வெடித்தது, அதற்குப்பிறகும் வெவ்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருந்தன.


1974 இல் பிரதிநிதிகள் சபை (காங்கிரஸ்) விவாதித்து தகுதிநீக்க நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு முன்னாடியே   ஆகஸ்ட் மாதம் நிக்சன் அமெரிக்க அதிபர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அப்படி பதவியை ராஜினாமா செய்த முதலாவது அமெரிக்க அதிபர் நிக்சன் தான்! 


Whitewater! 1994 முதலே  பில் க்ளின்டன் மீதான தகுதிநீக்க நடவடிக்கைக்கு, பல  நிதி முறைகேடுகள் குறித்த விசாரணை இருந்தாலும் 1998 வாக்கில் வெடித்த பாலியல் குற்றச்சாட்டுக்கள் தான் அதற்கு வலு சேர்த்தன. 

ஆன்டி ஜான்சன், பில் க்ளின்டன் இருவரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்கள் ஆனாலும் செனெட் சபை விசாரணையில்  மூன்றில் இருபங்கு வாக்குகள் இல்லாததால், தப்பித்தார்கள் என்ற வரிசையில் இன்று டொனா ல்ட் ட்ரம்ப் மூன்றாவது நபராகச் சேர்கிறார். முந்தைய இருவரை விட மிக வித்தியாசமான விபரீதமான விடுவிப்பு இது என்பதிலும் டொனால்ட் ட்ரம்ப் ஒரு புதிய கறைபடிந்த வரலாறு படைக்க இருக்கிறார்.

சென்ற வாரம் செனெட்டில் புதிய ஆவணங்கள்,புதுசாட்சிகள் எதையும் அனுமதிக்க முடியாது என்றான போதே, செனெட்டில் மூன்றில் இருபங்கு வாக்குகளோடு தகுதி நீக்கம் செய்யப்படுகிற வாய்ப்பும் இல்லாமல் போனது. டொனால்ட் ட்ரம்ப், முந்தைய இருவர் மாதிரியே தப்பிக்கிறார் என்பது அதிகாரபூர்வமாக இன்று தெரிய வரும்! 

கறைபடிந்த புதியவரலாறு படைக்க டொனால்ட் ட்ரம்ப் தயாராக இருக்கிறார்! அப்புறமென்ன?

மீண்டும் சந்திப்போம்.       

சமீபத்தைய பதிவு

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்!

முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய...

முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்டவை